Published:Updated:

KTM - ஸ்டைல் மன்னன்!

KTM - ஸ்டைல் மன்னன்!

சார்லஸ் 

ரண்டு ஆண்டுகளாக நீண்டு கொண்டே போன கேடிஎம் பைக்குகளின் அறிமுகத்துக்கு, முகூர்த்தம் குறித்து விட்டது பஜாஜ்! 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் டெல்லியில் நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகிறது கேடிஎம் டியூக்.

KTM - ஸ்டைல் மன்னன்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதிரடி ஸ்டைலுக்குப் பெயர் பெற்றவை கேடிஎம் பைக்குகள். வித்தியாசமான டிசைனில் அசத்தும் இந்த பைக்குகளுக்கு வரவேற்பு அதிகம். 690 சிசி, 990 சிசி பவர்ஃபுல் பைக்குகளுக்குப் பதில் இந்தியாவுக்கென ஸ்பெஷலாகத் தயாரிக்கப்பட்ட 200 சிசி இன்ஜினுடன் களமிறங்குகிறது கேடிஎம்.

லிக்விட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர், 200 சிசி ஃப்யூல் இன்ஜெக்ஷன் இன்ஜின், அதிகபட்சமாக 25 bhp சக்தியை வெளிப்படுத்தும். 6-ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்ட இந்த பைக்கின் எடை 137 கிலோ. 17 இன்ச் வீல்களில் இரண்டு பக்கமும் பவர்ஃபுல் டிஸ்க் பிரேக்குகள் இருக்கும். கறுப்பு அலாய் வீல்களுடன் மின்னும் கேடிஎம் பைக்கில் ட்யூப்லெஸ் டயர்கள் இருக்கும். ஆனால், பெட்ரோல் டேங்கின் கொள்ளளவுதான் குறைவு. வெறும் 10.5 லிட்டர். 'கேடிஎம் டியூக் 200’ பைக்கின் விலை 1.5 லட்ச ரூபாய்க்குள் இருக்கலாம்!