Published:Updated:

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

Published:Updated:
மோட்டார் நியூஸ்

விலை குறையும் ஹோண்டா சிட்டி!

மோட்டார் நியூஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விலை குறைந்த புதிய சிட்டி காரை அறிமுகப்படுத்த இருக்கிறது ஹோண்டா. இரண்டு மாதங்களுக்கு முன்பு ஹோண்டா சிட்டியின் விலையில் சுமார் 50 ஆயிரம் ரூபாய் வரை குறைக்கப்பட்டது. இப்போது சிட்டி கார் தயாரிப்புக்கான உதிரி பாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவதால், மேலும் விலையைக் குறைக்க இருக்கிறது ஹோண்டா. விலை குறைவதோடு, காரில் புதிய வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. புது ஹோண்டா சிட்டி, டிசம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வர இருக்கிறது!

வருகிறது டிரையம்ப்!

மோட்டார் நியூஸ்

ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்குக் கடும் போட்டியை ஏற்படுத்த வருகிறது டிரையம்ப். இங்கிலாந்தின் டூரிங் பைக் தயாரிப்பாளரான டிரையம்ப் நிறுவனம், இந்தியாவில் வரும் ஜனவரி மாதம் முதல் பைக்குகளை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கிறது. முதல் கட்டமாக டிரையம்ப் ராக்கெட் 3, டேடோனா, போனவில், ஸ்பிரின்ட் ST என நான்கு பைக்குகள் விற்பனைக்கு வர இருக்கின்றன. இந்த பைக்குகளின் விலை 7 லட்ச ரூபாயில் இருந்து ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கலாம்!

மாற்றங்களுடன் டாடா நானோ!

மோட்டார் நியூஸ்

முதன்முதலாக 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் விற்பனைக்கு வந்தது டாடா நானோ. இரண்டு ஆண்டுகளாக மாற்றங்கள் எதுவும் இல்லாமல் இருந்த நானோவில், இப்போது கூடுதல் சிறப்பம்சங்களைச் சேர்த்து புதிய நானோவை வெளியிட்டிருக்கிறது டாடா. புதிய சீட், ஹெட் ரெஸ்ட், பீஜ் வண்ண டேஷ் போர்டு, இடது பக்க சைடு வியூ மிரர் ஆகியவை புதிய நானோவில் இடம் பெற்றிருக்கின்றன. இது தவிர, மெக்கானிக்கல் மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது. பழைய நானோவில் ஸ்டீயரிங் கையாள்வதற்கு மிகவும் சிரமமாக இருந்தது. அந்தக் குறை புதிய நானோவில் சரி செய்யப்பட்டிருக்கிறது. சஸ்பென்ஷனிலும் மாற்றங்கள் தெரிகின்றன. அதேபோல், 35 தீலீஜீ சக்தி கொண்டதாக இருந்த நானோ, இப்போது 38 தீலீஜீ சக்தியுடன் வெளிவந்திருக்கிறது. வசதிகள் கூடியிருந்தாலும், புதிய நானோவின் விலையில் மாற்றங்கள் எதுவும் இல்லை!

வருகிறது ரெனோ டஸ்ட்டர்!

மோட்டார் நியூஸ்
 ##~##

ஐந்து வேரியன்ட்டுகளுடன் டஸ்ட்டர் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது ரெனோ! 1.6 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் என இன்ஜின் ஆப்ஷன்களோடு வர இருக்கும் ரெனோ டஸ்ட்டரின் விலை, 7 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கும். இதில் டீசல் இன்ஜின் 85 bhp, 110 bhp என இரண்டு பவர் கொண்ட இன்ஜின்களுடன் விற்பனைக்கு வர இருக்கிறது. லோகனை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் எஸ்யூவி கார்தான் ரெனோ டஸ்ட்டர். ஆனால், லோகனில் செய்த தவறுகளை எல்லாம் இதில் திருத்திஇருக்கிறது ரெனோ. உதாரணத்துக்கு, லோகனில் பின் பக்க கண்ணாடிகளுக்கான பவர் விண்டோஸ் சுவிட்ச் டேஷ் போர்டில் இருந்தது. ஆனால், இப்போது பின் பக்க பயணிகளுக்கு வசதியாக, டஸ்ட்டரில் பின் பக்கக் கதவிலேயே பவர் விண்டோஸ் சுவிட்ச் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனால், நான்கு மீட்டருக்கும்  மேல் நீளமான எஸ்யூவி என்பதால், சின்ன கார் வரையறைக்குள் டஸ்ட்டர் வராது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாக இருக்கிறது டஸ்ட்டர்!

வருகிறது புது பல்ஸர்!

ஜனவரி 2012 முதல் விற்பனைக்கு வர இருக்கிறது புதிய பல்ஸர் பைக். புனேவில் உள்ள பஜாஜ் தொழிற்சாலைக்கு அருகில் டெஸ்ட் டிரைவ் செய்யப்பட்டு வரும் இந்த பைக்தான், ஸ்பை போட்டோகிராபர்களின் டார்கெட்! கேடிஎம் 200 சிசி பைக்கில் இருக்கும் அதே இன்ஜின்தான் புது பல்ஸரிலும் பொருத்தப்பட இருக்கிறது. இது அதிகபட்சமாக 24 bhp சக்தியை வெளிப்படுத்தும் எனத் தெரிகிறது. இது தவிர, 10 ஸ்போக் அலாய் வீல், ஒற்றை முன் பக்க டிஸ்க் பிரேக், மோனோ ஷாக் சஸ்பென்ஷன், அகலமான பின் பக்க டயர் என பல மாற்றங்கள் புது பல்ஸரில் இடம் பிடித்திருக்கின்றன. புதிய பல்ஸரின் பின் பக்க வீலில் டிஸ்க் பிரேக் இல்¬ல!

ரெனோவின் சின்ன கார் பல்ஸ்!

மோட்டார் நியூஸ்

ரெனோ கார் நிறுவனம், இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கும் சின்ன கார் இதுதான். 'பல்ஸ்’ எனப் பெயரிடப்பட்டு இருக்கும் இந்த காரில், நிஸான் மைக்ராவில் இருக்கும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் விற்பனைக்கு வர இருக்கும் இந்த காரின் விலை, 5 லட்சத்தில் இருந்தும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கலாம்!

மோட்டார் நியூஸ்
மோட்டார் நியூஸ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism