Published:Updated:

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்

Published:Updated:
மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

ரமேஷ் கண்ணன், சேலம்.  

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நான் புதிதாக ஸ்விஃப்ட் டீசல் VDi மாடல் கார் வாங்கியிருக்கிறேன். இதில் 165/80-ஸி14 இன்ச் டயர்கள் உள்ளன. ஆனால், ZDi  மாடலில் 185/60&R15 இன்ச் டயர்கள் உள்ளன. அகலமான டயர்கள் இருந்தால், ரோடு கிரிப் நன்றாக இருக்கும் என 15 இன்ச் டயரைப் பொருத்தலாம் என திட்டமிட்டிருக்கிறேன். டயர் சைஸை மாற்றுவதால், ஏதாவது பிரச்னைகள் வருமா?

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

பெரிய டயர்கள் ரோடு கிரிப்புக்குச் சிறந்ததாக இருக்கும் என்றாலும், அகலமான டயர்கள் பொருத்தும் போது மைலேஜ் குறையும். மேலும், இந்த டயர்கள் காரின் ஓட்டுதல் தரத்தையும் குறைத்துவிடும். அதனால், உங்கள் காரில் ஏற்கெனவே இருக்கும் 14 இன்ச் டயர்களுடனேயே காரைப் பயன் படுத்துவது நல்லது!

யோகேஸ்வரன், பவானி.

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

150 சிசி பைக் வாங்க வேண்டும். மைலேஜைப் பற்றிக் கவலையில்லை. ஸ்டைலான, அதே சமயம் சர்வீஸ் செலவுகள் அதிகம் வைக்காத பைக் வேண்டும். என்ன பைக் வாங்கலாம்?

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

150 சிசி பைக்குகளில் கையாளுமையில் சிறந்த, அதிகமாக சர்வீஸ் செலவுகள் வைக்காத, பர்ஃபாமென்ஸிலும் சிறந்த பைக் யமஹா FZ 16 பைக்தான். ஆனால், பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 40 கி.மீ-க்குள்தான் இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!

ஃபைஸல், பெரம்பூர்.

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

நான் டொயோட்டா இனோவா காரை, கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறேன். கிட்டத்தட்ட கார் 1.5 லட்சம் கி.மீ கடந்துவிட்டது. அதனால், இப்போது புதிதாக ஒரு எம்யூவி அல்லது எஸ்யூவி கார் வாங்கலாமென இருக்கிறேன். இனோவாவை ஐந்து ஆண்டுகள் பயன்படுத்திய போதும், எந்த ஒரு பெரிய பிரச்னையும் காரில் வரவில்லை. அதனால், இதேபோல் தரமான கார் வேண்டும். மஹிந்திரா XUV500 கார் பார்ப்பதற்கு ஸ்டைலாக இருக்கிறது. இதை வாங்கலாமா அல்லது மீண்டும் இனோவாவையே வாங்கலாமா?

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

மஹிந்திரா தயாரித்திருக்கும் கார்களிலேயே ஸ்டைலானது XUV500  என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இனோவாவைவிட பவர்ஃபுல்லான கார் என்பது இதன் கூடுதல் பலம். ஓட்டுவதற்கும் சிறப்பாக இருக்கிறது. ஆனால், இனோவாவின் தரத்துக்கு இணையாக XUV500 இருக்குமா என்பதை இப்போது சொல்ல முடியாது. இந்தப் புது கார், சாலைகளில் ஓட ஆரம்பித்து ஆறு மாதங்கள் கழித்துதான் நம்பகத்தன்மையை எடை போட முடியும். மஹிந்திராவின் ஸைலோ, ஸ்கார்ப்பியோ போன்ற கார்கள் தரமான கார்களாக இருந்தாலும், இனோவா அளவுக்கு அவை இல்லை.

ஜெயபால், மதுரை.

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

நான் சிறிய டீசல் கார் வாங்கலாமென இருக்கிறேன். செவர்லே பீட் வாங்கலாமா அல்லது ஃபோர்டு ஃபிகோ வாங்கலாமா?

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்
 ##~##

இரண்டு கார்களுமே சிறந்த கார்கள். இரண்டில் எதை வாங்குவது என்பது உங்கள் பயன்பாட்டைப் பொறுத்தது. நீங்கள் நகருக்குள்தான் பயன்படுத்துவீர்கள் என்றால், நகரின் சந்து பொந்துகளுக்குள் போய் வர சின்ன காரான செவர்லே பீட் டீசல் சரியாக இருக்கும். அடிக்கடி வெளியூர்களுக்குப் பயணம் சென்று வருவீர்கள் என்றால், ஃபோர்டு ஃபிகோ வாங்குவதுதான் நல்லது. ஆனால், பீட்டைவிட ஃபிகோவின் விலை கொஞ்சம் அதிகம் என்பதை மறந்து விடாதீர்கள்.

விஜயகுமார், கோவை.

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

நான் யமஹா FZ 16 கறுப்பு நிற பைக் வைத்திருக்கிறேன். இதன் பேனல்கள் சிவப்பு, சில்வர் வண்ணங்களில் யமஹா ஷோ ரூம்களில் கிடைக்கிறது. இதனை வாங்கிப் பொருத்தி விட்டால், பைக் வேறு வண்ணத்துக்கு மாறி விடுகிறது. இப்படி கலரை மாற்றினால் இன்ஷூரன்ஸில் எதாவது பாதிப்பு வருமா?

நிச்சயமாக வரும். பொதுவாக, இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீட்டுத் தொகை வழங்கும்போது, உங்கள் பக்கம் என்ன ஓட்டை இருக்கிறது என்றுதான் தேடுவார்கள். அதனால், இப்படி நிறத்தை மாற்றும்போது அதை ஆர்.சி பேப்பரில் பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால், இன்ஷூரன்ஸ் பணம் கிடைக்காது!

காயத்ரி தேவி, திருச்சி.

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

நான் கல்லூரி மாணவி. வீட்டில் இருந்து என்னுடைய கல்லூரி 15 கி.மீ தொலைவில் இருக்கிறது. தினமும் கல்லூரி சென்று வர வசதியான, கொஞ்சம் பவர் அதிகமான ஸ்கூட்டர் வாங்க வேண்டும். மைலேஜும் அதிகம் இருக்க வேண்டும். ஹோண்டா ஆக்டிவா வாங்கலாமா அல்லது டிவிஎஸ் வீகோ வாங்கலாமா?

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

ஹோண்டா ஆக்டிவாவுடன் ஒப்பிடும் போது வசதிகளிலும், பர்ஃபாமென்ஸிலும் டிவிஎஸ் வீகோ சிறந்த ஸ்கூட்டர். மைலேஜைப் பொறுத்தவரை இரண்டு ஸ்கூட்டர்களுமே கிட்டத்தட்ட ஒன்றுதான். ஆனால் டிவிஎஸ் வீகோ, ஹோண்டா ஆக்டிவாவை விட கிட்டத்தட்ட 3 ஆயிரம் ரூபாய் விலை அதிகம்.

ராஜ்மோகன், காஞ்சிபுரம்.

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

ஸ்போர்ட்ஸ் பைக் வாங்கலாமென இருக்கிறேன். ஹீரோ ஹோண்டா கரீஸ்மா ZMR , யமஹா R-15இரண்டில் எது சிறந்த பைக்?

நீங்கள் சொல்லும் லிஸ்ட்டில் ஹோண்டா சிபிஆர் 250 ஆர் பைக்கையும் சேர்த்துக் கொள்ளுங்கள். மூன்று பைக்குகளில் ஹோண்டா சிபிஆர் 250 ஆர் தான் சிறந்த பைக். ஸ்டைல், பர்ஃபாமென்ஸ், மைலேஜ் என அனைத்திலும் சிறந்த பைக்காக இருக்கிறது சிபிஆர் 250 ஆர். ஆனால், இதன் விலைதான் அதிகம்.

மணிகண்டன், மேலூர்.

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

நான் தினமும் 100 கி.மீ-க்கு மேல் பயணம் செய்வேன். கரடு முரடான, சாலையே இல்லாத பாதைகளில் கூட பயணம் செய்ய வேண்டியிருக்கும். அதனால், சூப்பர் சஸ்பென்ஷன் கொண்ட பைக் வேண்டும். மைலேஜும் அதிகமாக இருக்க வேண்டும். ஹீரோ ஸ்ப்ளெண்டர் வாங்கலாமா அல்லது வேறு சாய்ஸ் சொல்லுங்கள்?

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

தினமும் நீங்கள் அதிக தூரம் பயன்படுத்துவதால், பைக்கின் பில்டு குவாலிட்டி சிறப்பாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். ஹோண்டா சிபி டிவிஸ்ட்டர் பைக் வாங்குங்கள். இதன் சஸ்பென்ஷன் சிறப்பாக இருப்பதோடு, பில்டு குவாலிட்டியும் சூப்பர். அதேபோல், பர்ஃபாமென்ஸ் மற்றும் மைலேஜிலும் ஹோண்டா சிபி ட்விஸ்ட்டர் சிறந்த பைக்காக இருக்கிறது.

கைலாஷ், தஞ்சாவூர்.

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

எங்கள் வீட்டில் மொத்தம் ஐந்து பேர். எல்லோருமே நல்ல உயரம். கொஞ்சம் ஓவர் வெயிட்டும்கூட! 10 லட்ச ரூபாயில் ஒரு கார் வாங்க வேண்டும். என்ன கார் வாங்கலாம்?

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

நிச்சயம் உங்களுக்கு அதிக இட வசதி கொண்ட தரமான கார் வேண்டும். ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ உங்களுக்கு சரியான சாய்ஸாக இருக்கும். பின் இருக்கையில் மூன்று பேர் வசதியாக உட்கார முடியும் என்பதோடு, நெடுஞ்சாலையில் எந்த சிரமமும் இன்றி பறக்க ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ சரியாக இருக்கும். பில்டு குவாலிட்டியிலும் சூப்பர் கார் ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism