Published:Updated:

ரீடர்ஸ் டெஸ்ட் - ஹோண்டா பிரியோ

ரீடர்ஸ் டெஸ்ட் - ஹோண்டா பிரியோ

எஸ்.ஷக்தி,  கே.ஆர்.வெங்கடேஸ்வரன்  தி.விஜய் 

'ஹோண்டாவில் இருந்து சின்ன கார் வராதா’ என ஏங்கிய ஹோண்டா ரசிகர்களைச் சந்தோஷப்படுத்தி இருக்கிறது பிரியோவின் வருகை! முதல் பார்வையிலேயே கவனத்தைக் கவரும் பிரியோவை, மோட்டார் விகடனின் கோவை வாசகர்கள் டெஸ்ட் டிரைவ் செய்தனர். வாசகர்களின் ரிப்போர்ட் இதோ...

ரீடர்ஸ் டெஸ்ட் - ஹோண்டா பிரியோ

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

லோகநாதன் (வழக்கறிஞர்):

ரீடர்ஸ் டெஸ்ட் - ஹோண்டா பிரியோ

''ஒரு காரோட பெரிய வெற்றியே, அதை டெஸ்ட் டிரைவ் பண்ணியதும் 'வாங்கலாமே’னு தோண வைக்கணும். பிரியோவும் அப்படித்தான். ஹோண்டாவோட ஸ்பெஷாலிட்டியை 'எம் அண்டு எம்’-ன்னு சொல்லுவாங்க. 'மேன் மேக்ஸிமம், மெஷின் மினிமம்.’ அதாவது, காரில் மனிதர்களுக்கு அதிக இடமும், மெஷினுக்குக் குறைவான இடமும் இருக்கணும்ங்கிறது அர்த்தம். ஹோண்டாவோட பிரியோ, அதற்கான சரியான உதாரணம்!''

திருஞானசம்பந்தம் (வழக்கறிஞர்):

 ##~##

''இன்ஜின் பர்ஃபாமென்ஸ் நல்லா இருக்கு! ஐடிலிங்கில், உள்ளே ஒரு சின்ன அதிர்வுகூட இல்லை. ஹோண்டாவின் சூப்பர் ஸ்பெஷல் 'ஐ-விடெக்’னு சொல்லப்படுற உயர்வான தொழில்நுட்பம்தான் இன்ஜின் பவர் மேம்பாட்டுக்கும், எரிபொருள் சிக்கனத்துக்கும் காரணம்னு நினைக்கிறேன். வெறும் 4.5 மீட்டர் ரேடியஸ்ல காரைத் திருப்பிடலாம்ங்கிறது ஆச்சரியம்!''

ராகேஷ் (கல்லூரி மாணவர்):

''அட்ஜஸ்டபிள் ஸ்டீயரிங் பக்காவா இருக்குது. ஸ்டீயரிங்கைப் பிடிக்கிறப்ப, அழுத்தமான ஒரு உணர்வு கிடைக்கணும். பிரியோ அதைத் தருது. ஸ்டீயரிங் பொசிஷன்ல இருக்கிறவங்க எதிர்பார்க்கிற இன்னொரு விஷயம், சாலை விசாலமா தெரியணும். பிரியோவுல டிரைவர் சீட்ல உட்கார்ந்து பார்க்கிறப்ப நல்ல வியூ கிடைக்குது!''

ராஜா (கல்லூரி மாணவர்):

''ஹோண்டாவோட ஜீன்ல உள்ள முக்கிய விஷயமான 'ஃபன் டு டிரைவ்’ அப்படிங்கிறது பிரியோவிலே கச்சிதமா இருக்குது. வெளித் தோற்றம் மட்டுமில்ல... உள்தோற்றமும் பக்காவா பண்ணியிருக்காங்க. டேஷ் போர்டு நிறைய வசதி களோட இருக்குது. சின்ன காருக்கான பெரிய இம்சையான இட 'நெருக்கடி’ பிரியோவில் இல்லை. ஆனா, பின்னாடி வெறும் கண்ணாடியா இருக்கிற 'டெயில் கேட்’தான் பார்க்க பயமா இருக்கு!''