Published:Updated:

சத்குருவின் கார்

குருவின் கார் வேண்டுமா?

எஸ்.ஷக்தி

 ##~##

த்குரு ஜக்கி வாசுதேவ், யோகி மட்டுமில்லை; மிகச் சிறந்த மோட்டார் காதலரும்கூட! பைக், கார் அத்தனை ரகங்களின் மெக்கானிச ரகசியங்களும் இவருக்கு அத்துப்படி! ஏதோ ஸ்டார்ட் செய்தோம்; சவாரி செய்தோம் என்றில்லாமல், அனாடமியையும் ஆட்டோமொபைலையும் ஒரு புள்ளியில் இணைத்து, அலசி ஆராய்ந்து யோக விளக்கம் கொடுப்பவர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''மனித உடலே ஒரு மோட்டார் தான். நமக்குள்ளும் ஒரு இன்ஜின் இருந்து கொண்டு நாம் இயங்குவதற்கான சக்தியைத் தந்து கொண்டே இருக்கிறது. அந்த இன்ஜினை பக்குவமாக பராமரிப்பது அவசியம். மெயின்டனன்ஸ் இஸ் மஸ்ட்!'' என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன் மோட்டார் விகடனுக்கான தனது பிரத்யேகப் பேட்டியில் சொல்லியிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கும்.

ஈஷா மையத்துக்காக கணிசமான எண்ணிக்கையில் கார்கள் இருக்கின்றன. இதில், சத்குருவின் பிரத்யேகப் பயன்பாட்டுக்கான வாகனம் அவ்வப்போது மாற்றப்படும். அவரது கையால் தீர்த்தம் பெறுவதையே பெரும் பாக்கியமாக நினைக்கும் ஈஷாவின் பக்தர்களில் சிலருக்கு, வேறொரு லட்சியமும் உண்டு. அதாவது, சத்குரு பயன்படுத்திய காரை எவ்வளவு செலவானாலும் வாங்கி தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான். அப்படிப்பட்டவர்களுக்கு, சமீபத்தில் பம்பர் வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, சத்குருவின் பிஎம்டபிள்யூ கார் ஒன்றை விற்பனைக்குக் கொண்டு வந்தது ஈஷா. ஜக்கி வாசுதேவ் மிகவும் லயித்து இயக்கிய கார்களில் இதுவும் ஒன்றாம்.

சத்குருவின் கார்

டெல்லி பதிவு எண்ணுடன் கூடிய 2007 மாடலான இந்த பிஎம்டபிள்யூ 325வீ கார், கோவை ஈஷா மையத்தின் ஈர்ப்பு மையமான 'தியான லிங்கம்’ ஆலயத்தின் முன்புற ஓரத்தில், அழகிய சிறு குடிலினுள் பார்வைக்காக நிறுத்தப்பட்டு இருந்தது. 17,693 கி.மீ தூரம் ஓடியுள்ளது இந்த கார். விற்பனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்த நாளிலிருந்து ஏகப்பட்ட விசாரிப்புகள் வந்ததாம். புதிய பிஎம்டபிள்யூ காரைவிட ஒரு மடங்கு அதிக விலை கொடுத்து, இந்த காரை வாங்க பலர் ஆர்வம் காட்டியதாகச் சொல்லி சிலாகித்தது ஈஷா மையம்.

சத்குருவின் கார்

இந்த விற்பனை குறித்து மேலும் விளக்கும் ஈஷா மையம், ''கோவையில் தியான லிங்கம் ஆலயத்துக்கு எதிர்ப்புறத்தில் 'ஆதி யோகி ஆலயம்’ ஒன்று தயாராக இருக்கிறது. இந்த பிஎம்டபிள்யூ காரை விற்பதன் மூலம் கிடைக்கும் பணம், அப்படியே இந்த ஆலய நிர்மாணத்துக்காக முதலீடு செய்யப்பட இருக்கிறது. இந்த ஆதி யோகி ஆலயத்தின் சிறப்பே... சுமார் பத்தாயிரம் பேர் அமரக் கூடிய வகையில் மிகப் பெரிய தியானக் கூடம் ஒன்று தயாராக இருப்பதுதான்.

இது ஈஷாவின் தனிச் சிறப்புகளில் ஒன்றாக மாறி, கால காலத்துக்கும் பெரு¬ம பெறப் போகும் இந்த ஆலய அமைவில், இந்த காரை வாங்கியவரின் தொகை இடம் பெறப்போகிறது என்பது அவருக்குச் சிறப்புதானே!'' என்கிறார்கள் நிதானமாக!