கார்ஸ்
Published:Updated:

விசுவாசிகளின் பைக்!

விசுவாசிகளின் பைக்!
பிரீமியம் ஸ்டோரி
News
விசுவாசிகளின் பைக்!

ஃபர்ஸ்ட் ரைடு : MV அகுஸ்டா ப்ருடாலே 800தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

த்தாலியின் பைக் டிசைனர்கள் உலகுக்குக் கொடுத்த அழகான ஸ்ட்ரீட் நேக்கட் பைக்குகளில் MV அகுஸ்டா ப்ருடாலே 800 மாடலும் ஒன்று. இந்த பைக்கை EICMA 2016 ஷோவில்தான் உலகம் முதலில்  தரிசனம் செய்தது.

அகுஸ்டாவின் பாரம்பர்யத்தைக் காக்கும் வகையில் இதை வடிவமைத்துள்ளார், டிசைனர் அட்ரியன் மோர்ட்டன். முன்பைவிட ஸ்மூத்தான டிசைன், பைக்கின் அழகை மெருகூட்டுகிறது. பெட்ரோல் டேங்க், LED ஹெட்லைட், ஹெட்லைட் கௌல், டெயில் செக்‌ஷன் ஆகியவை இப்போது தனித்துத் தெரிகின்றன.

ஹேண்டில் பாரும் புதிதுதான். இன்ஸ்ட்ருமென்ட் பேனல், ஸ்விட்ச்கியர் ஆகியவை மாற்றப்பட்டுள்ளன. 
 ப்ருடாலே 800 பைக்குக்கே உரிய அழகு அதன் 3-பைப் எக்ஸாஸ்ட். இப்போது இந்த எக்ஸாஸ்ட் பெரிதாக உள்ளது. முன்பைவிட 798 சிசி, இன்லைன் 3-சிலிண்டர் இன்ஜினின் எக்ஸாஸ்ட் சத்தமும் மிரட்டல். பழைய பைக்கில் 123bhp இருக்க, புதிய பைக்கில் 109bhp பவர்தான். ஆனால், டெஸ்ட் செய்யும்போது இதை உணர முடியவில்லை. டார்க் இப்போது  8.46 kgm. இந்த டார்க்கின் 90 சதவிகிதம் 3,800 ஆர்பிஎம்-ல் இருந்தே கிடைப்பதால், பைக் சீறுகிறது. 

விசுவாசிகளின் பைக்!

2017 ப்ரூடாலே 800 பைக்கில் இப்போது 8-லெவல் ட்ராக்‌ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், புது எலெக்ட்ரானிக்ஸ் பேக்கேஜ், அட்ஜஸ்டபிள் ABS போன்றவை சேர்க்கப் பட்டுள்ளன. திராட்டில் ரெஸ்பான்ஸ் இன்னும் சிறப்பாக இருக்கலாம். முதல் இரண்டு கியர்களிலும் பைக்கின் பவர் டெலிவரி ‘பாகுபலி’ லெவல். வீல்பேஸ் இப்போது 2,041 மிமீ-ஆக அதிகரிக்கப் பட்டுள்ளது.

 கையாளுமை ஷார்ப்பாக இருந்தாலும், பைக்கை முழுவதும் புரிந்துகொண்டு, நம்பி விரட்ட வழக்கத்தைவிட சிறிது நேரம் ஆகும். ‘பைரலி டயாப்லோ ரோஸோ-3’ டயர்கள் நல்ல கிரிப் அளிக்கின்றன. முன்பக்கம் 320 மிமீ ஃப்ளோட்டிங் பிரெம்போ பிரேக்ஸும், பின்பக்கம் 220 மிமீ பிரேக்ஸும் கச்சிதமாக இயங்குகின்றன. இறுக்கமான சஸ்பென்ஷன் செட்-அப் நம் ஊர் சாலைகளில் கொஞ்சம் அசௌகரியமாக இருக்கலாம்.

விசுவாசிகளின் பைக்!

ஓர் உண்மையான இத்தாலிய நேக்கட் ஸ்ட்ரீட் பைக்காக வருகிறது ப்ருடாலே 800. எடுத்தவுடன் பழகிவிடக்கூடிய பைக் இல்லை இது. ஆனால், பழகிவிட்டால் ஓட்டும்போது அனுபவித்து விரட்டலாம். விலை நிச்சயம் இங்கே அதிகம்தான். இது, அகுஸ்டா விசுவாசிகளின் பைக்.