Published:Updated:

அசத்தல் அட்வென்ச்சர் டூரர்!

அசத்தல் அட்வென்ச்சர் டூரர்!
பிரீமியம் ஸ்டோரி
அசத்தல் அட்வென்ச்சர் டூரர்!

ஃபர்ஸ்ட் ரைடு : SMW சூப்பர் டூ யல் T தொகுப்பு: ராகுல் சிவகுரு

அசத்தல் அட்வென்ச்சர் டூரர்!

ஃபர்ஸ்ட் ரைடு : SMW சூப்பர் டூ யல் T தொகுப்பு: ராகுல் சிவகுரு

Published:Updated:
அசத்தல் அட்வென்ச்சர் டூரர்!
பிரீமியம் ஸ்டோரி
அசத்தல் அட்வென்ச்சர் டூரர்!

மோசமான சாலைகளாக இருந்தாலும், அதில் அலுங்காமல் குலுங்காமல் பயணிக்க வசதியாக வடிவமைப்பட்டவைதான் அட்வென்ச்சர் டூரிங் பைக்ஸ். ஆனாலும், இந்திய பைக் சந்தையில் அவற்றுக்கு ஆப்ஷன் மிகக் குறைவு. ஒன்று, அவை மல்ட்டிஸ்ட்ராடா, டைகர் போன்ற பல்க் பிரீமியம் அட்வென்ச்சர் டூரர் பைக்குகளாகவோ அல்லது இம்பல்ஸ், ஹிமாலயன் போன்ற பவர் குறைவான அட்வென்ச்சர் டூரர் பைக்குகளாகவோ இருக்கின்றன. சொகுசான, உறுதியான, எடை குறைவான, சிம்பிளான மிடில் வெயிட் அட்வென்ச்சர் டூரர் பைக், இந்தியாவுக்கு ஏற்றதாக இருக்கும். கார்களில் எஸ்யூவி எப்படியோ, பைக்கில் அட்வென்ச்சர் பைக் அப்படி. ஏனெனில், இரண்டுமே பிராக்டிக்கலாக இருப்பதுடன், எல்லா சாலையிலும் செல்லக்கூடிய திறன் கொண்டவை; கட்டுமஸ்தானவை.  

அசத்தல் அட்வென்ச்சர் டூரர்!

இவற்றையெல்லாம் முன்கூட்டியே கணித்திருந்த மோட்டோராயல் நிறுவனம், SWM சூப்பர் டூயல் T பைக்கைச் சரியான நேரத்தில் இந்தியாவுக்குக் கொண்டுவரவிருக்கிறது. தனது உறுதிக்காகவும், குறைவான நடைமுறைச் செலவுக்காகவும் பராமரிப்புச் செலவுக்காகவும் ஆஸ்திரேலிய மற்றும் ஐரோப்பிய பைக் சந்தைகளில் சூப்பர் டூயல் T பைக், நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஹஸ்க்வர்னா TE 630 பைக்கை அடிப்படையாகக்கொண்டு இது தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அந்த நிறுவனத்தின் தொழிற்சாலையிலேயே தயாரிக்கப்படுகிறது.

டிசைன்

ஓர் அட்வென்ச்சர் டூரர் பைக் எப்படி இருக்குமோ, அப்படிப்பட்ட தோற்றத்தைக் கொண்டிருக்கிறது சூப்பர் டூயல் T. இந்த பைக்கின் உயரம், உயரமான மட்கார்ட் மற்றும் விண்ட் ஸ்கிரீன், மேல்நோக்கி பக்கவாட்டில் இருக்கும் இரட்டை எக்ஸாஸ்ட் பைப்கள், லக்கேஜ் வைப்பதற்கு இடம் ஆகியவற்றை உதாரணமாகச் சொல்லலாம். LCD இன்ஸ்ட்ரூமென்ட் கன்ஸோல் சிம்பிளான டிசைனில் இருந்தாலும், பைக்கின் வேகம், இன்ஜின் ஆர்பிஎம், வார்னிங் லைட் போன்ற பல தகவல்கள் அதில் தெளிவாகத் தெரிகின்றன.

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்

சூப்பர் டூயல் T பைக்கில், 57bhp பவரையும், 5.35kgm டார்க்கையும் வெளிப்படுத்தக்கூடிய DOHC, 4 வால்வு, லிக்விட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர், 600சிசி இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளன. ஆக, மெக்கானிக்கலாகக் கவரும் இந்த பைக்கின் இன்ஜின்,  எல்லா ஆர்பிஎம்மிலும் பவர் - டார்க்கைச் சீராக வெளிப்படுத்துகிறது. இன்ஜின் அவ்வுளவு ஸ்மூத்தாக இல்லாவிட்டாலும், போதுமான பவர் இருப்பதால், நெடுஞ்சாலை - ஆஃப் ரோடிங் செல்வதற்கான ஃபன் பைக்காக இருக்கிறது சூப்பர் டூயல் T.

அசத்தல் அட்வென்ச்சர் டூரர்!

டெக் டேட்டா

ஸ்டீல் பைப்களால் ஆன டூயல் க்ரேடில் ஃப்ரேமில், எடை குறைவான அலாய் சப் ஃப்ரேம் இணைக்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஷனைப் பொறுத்தவரை, முன்பக்கத்தில் 210மிமீ ட்ராவலுடன் கூடிய தடிமனான 45மிமீ USD ஃபோர்க் - பின்பக்கத்தில் 270மிமீ ட்ராவலுடன் கூடிய  அட்ஜஸ்ட் செய்யக்கூடிய Sachs மோனோஷாக் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே, நம் ஊரின் கரடுமுரடான சாலைகளை இந்த பைக் சிறப்பாகச் சமாளிக்கும் என எதிர்பார்க்கலாம். 180மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் போதுமானதாக இருந்தாலும், 898மிமீ சீட் உயரம் மிக அதிகம். ஏனெனில், இது பல்க்கான பிரீமியம் அட்வென்ச்சர் டூரர் பைக்குகளைவிட அதிகம். ஆனால், கெத்தான சீட்டிங் பொசிஷன் கிடைப்பதுடன், ஆஃப் ரோடிங் செல்லும்போது இது உதவிகரமாக இருப்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். 19 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொண்டிருக்கும் சூப்பர் டூயல் T பைக்கின் Dry Weight 169 கிலோதான். முன்பக்கம் 300மிமீ டிஸ்க் பிரேக் - 19 இன்ச் ஸ்போக் வீல்களும், பின்பக்கம் 220மிமீ டிஸ்க் பிரேக் - 17 இன்ச் ஸ்போக் வீல்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. Floating பிரேக் காலிப்பர்களில், ஆஃப் ரோடுக்கு ஏற்ற ஏபிஎஸ் அமைப்பு இடம்பெற்றுள்ளது ப்ளஸ். இவ்வளவு பெரிய பைக்குக்கு, பிரேக்கிங் திறன் கொஞ்சம் குறைவுதான். ஆனால், Metzelet Tourance டயர்களின் அசத்தலான கிரிப், அந்தக் குறையை ஓரளவுக்குச் சரிசெய்துவிடுகிறது.

ஓட்டுதல் அனுபவம்

SWM சூப்பர் டூயல் T பைக்கின் லாங் ட்ராவல் சஸ்பென்ஷன் மற்றும் முன்பக்க 19 இன்ச் வீல் ஆகியவற்றின் காரணமாக, ஸ்டீயரிங் ஃபீட்பேக் அவ்வளவு பெப்பியாக இல்லை. மேலும், பவர் டெலிவரி சீராக இருந்தாலும், திராட்டில் ரெஸ்பான்ஸும் அப்படி இல்லை. இதனால், பைக்கை விரட்டி ஓட்டுவதும்,

அசத்தல் அட்வென்ச்சர் டூரர்!

திருப்பங்களில் பைக்கைச் செலுத்துவதும் நல்ல அனுபவமாக இல்லை. ஆனால், ரிலாக்ஸ்டாக ஓட்டினால், நெடுஞ்சாலைப் பயணங்கள் - ஆஃப் ரோடிங்கிற்கு ஏற்ற பைக்காக இருக்கிறது சூப்பர் டூயல் T.

பைக்கின் டெக்னிக்கல் விபரங்களை வைத்துப் பார்க்கும்போது, கவாஸாகியின் KLR 650 மற்றும் சுஸூகியின் DR650 பைக்குடன் போட்டி போடுகிறது சூப்பர் டூயல் T. ஆனால், இந்த பைக் இந்தியாவுக்கு வரும்போது, இங்கு விற்பனை செய்யப்படும் முதல் மிடில் வெயிட் அட்வென்ச்சர் டூரர் பைக் என்ற பெருமையை இது பெற்றுவிடும். உத்தேசமாக 5.5 லட்ச ரூபாய்க்கு வரவிருக்கும் சூப்பர் டூயல் T பைக்கை, அதைவிடக் குறைவான விலையில் மோட்டோராயல் நிறுவனம் களமிறக்கினால், போட்டி மிகுந்த இந்திய பைக் சந்தையில் இந்த அட்வென்ச்சர் டூரர் பைக் சாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்!