Published:Updated:

எட்டுத் திக்கும்

WRC

சார்லஸ்

 ##~##

ட்டாவது முறையாக, உலக ராலி சாம்பியன்ஷிப் பந்தயத்தைக் கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறார் செபாஸ்ட்டியன் லோப். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 37 வயதான செபாஸ்ட்டியன் லோப், இந்த வெற்றியின் மூலம் ராலி சாம்பியன்ஷிப் வரலாற்றில் யாராலும் நெருங்க முடியாத சாதனையைப் படைத்திருக்கிறார். 2004-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து அவர், ஒவ்வொரு ஆண்டும் சாம்பியன் பட்டத்தை வென்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பனி படர்ந்த மலைப் பாதைகளிலும், காட்டிலும், மணல் மேட்டிலும் நடக்கும் ரேஸ் போட்டிதான் வேர்ல்டு ராலி சாம்பியன்ஷிப். ஆண்டுக்கு 13 முறை நடக்கும் இந்த ராலியின் ஒவ்வொரு சுற்றும் மூன்று நாட்கள் நடைபெறும். 2 லிட்டர் இன்ஜின், 300 தீலீஜீ சக்தி, 4 வீல் டிரைவ் சிஸ்டம், டர்போ சார்ஜர் இன்ஜின் என ராக்கெட் வேகத்தில் சீறும் இந்த கார்களைப் பார்ப்பதே த்ரில்தான்! 2011-ம் ஆண்டின் முதல் ராலி சுவீடனில், கடந்த பிப்ரவரி மாதம் 10-ம் தேதி நடைபெற்றது.

எட்டுத் திக்கும்

சுவீடனில் நடைபெற்ற முதல் ராலியில், சிட்ரன் அணி சார்பில் கலந்து கொண்ட சாம்பியன் செபாஸ்ட்டியன் லோப், ஆறாவது இடமே பிடித்தார். முதல் ராலியில் லோப்பின் தோல்வி அவரது ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்தது. ஆனால், அடுத்தபடியாக மெக்ஸிகோவில் நடைபெற்ற ராலியில் வெற்றி பெற்று சாதனைப் பயணத்தைத் துவக்கினார் லோப். இத்தாலி, அர்ஜென்டினா, ஃபின்லாந்து, ஸ்பெயின் என ஐந்து ராலி பந்தயங்களில் முதலிடத்தையும், மூன்று ராலிகளில் இரண்டாம் இடத்தையும் பிடித்து, மொத்தம் 222 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார் லோப்.

''மொத்தம் பத்து சாம்பியன் பட்டங்களை வெல்ல வேண்டும் என்பதே என் லட்சியம். இதை என்னால் அடைய முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது'' என்றார் சாம்பியன் பட்டத்தை வென்றதும் செபாஸ்ட்டியன் லோப்.

லோப் பத்து சாம்பியன் பட்டங்களை வெல்வார் என்பதில் ரசிகர்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை!