Published:Updated:

இனி டபுள்ஸ் இல்லை!

WSBK

சார்லஸ்

 ##~##

வால்களைச் சந்திக்க இருக்கிறது வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ். அடுத்த ஆண்டுக்கான சூப்பர் பைக் ரேஸ் போட்டியில், முக்கிய அணியான யமஹா இல்லை! யமஹா அணியைச் சேர்ந்த மார்க்கோ மெலாண்ட்ரி பிஎம்டபிள்யூ அணிக்கும், யூஜின் லாவெர்ட்டி ஏப்ரில்லா அணிக்கும் தாவி இருக்கிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வீரர்கள் மாற்றம் மட்டும் அல்ல; 2012-ம் ஆண்டுக்கான ரேஸில், விதிமுறைகளையும் மாற்றியிருக்கிறது சூப்பர் பைக் ரேஸை நடத்தும் திமிவி அமைப்பு. 'ஒரு ரேஸில், ஒரு ரேஸ் வீரர் இரண்டு பைக்குகளைப் பயன்படுத்தலாம்’ என்ற விதியை மாற்றியிருக்கிறது. இனிமேல் ஒரு ரேஸ் வீரர், ஒரு பைக்கை மட்டுமே ஒரு ரேஸுக்குப் பயன்படுத்த முடியும். அதாவது, பயிற்சியின்போதோ அல்லது தகுதிச் சுற்றின்போதோ, பைக் விபத்தில் சிக்கினால், இனி புது பைக்கைப் பயன்படுத்த முடியாது. அதே பைக்கை சரி செய்துதான் ஓட்ட வேண்டும்.

இனி டபுள்ஸ் இல்லை!

அதேபோல், இதுவரை டுகாட்டி மட்டுமே 1200 சிசி, 2 சிலிண்டர் இன்ஜினைப் பயன்படுத்தி வருகிறது. யமஹா, ஹோண்டா, சுஸ¨கி பைக்குகள் 1000 சிசி இன்ஜினுடன் ரேஸில் கலந்து கொள்கின்றன. எடை குறைவான பைக்குகள் ரேஸில் முந்த வாய்ப்புகள் அதிகம் என்பதால், பைக்கின் எடையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. 1200 சிசி, இரண்டு சிலிண்டர் கொண்ட பைக்குகளின் எடை 177 கிலோ இருக்க வேண்டும். அதேபோல் 1000 சிசி, மூன்று அல்லது நான்கு சிலிண்டர் இன்ஜின்கள் கொண்ட பைக்குகளின் எடை 165 கிலோ இருக்க வேண்டும் என்று மாற்றப்பட்டுள்ளது.

இனி டபுள்ஸ் இல்லை!
இனி டபுள்ஸ் இல்லை!

இந்த ஆண்டு மோட்டோ ஜீபி ரேஸில் கலந்து கொண்ட ஹிரோஷி அயோமா, அடுத்த ஆண்டு முதல் வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸில் கலந்து கொள்ள உள்ளார். 'டென் கேட் ஹோண்டா’ அணியில் இடம் பிடித்திருக்கிறார் அயோமா.

பல மாற்றங்கள் கண்டிருக்கும் வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸைக் காணக் காத்திருக்கிறது ரசிகர் கூட்டம்!