Published:Updated:

டாடா நெக்ஸான் - காம்பேக்ட் எஸ்யூவிகளின் பிக் பாக்ஸ்

டாடா நெக்ஸான் - காம்பேக்ட் எஸ்யூவிகளின் பிக் பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
டாடா நெக்ஸான் - காம்பேக்ட் எஸ்யூவிகளின் பிக் பாக்ஸ்

ஃபர்ஸ்ட் டிரைவ் : டாடா நெக்ஸான்தமிழ்

டாடா நெக்ஸான் - காம்பேக்ட் எஸ்யூவிகளின் பிக் பாக்ஸ்

ஃபர்ஸ்ட் டிரைவ் : டாடா நெக்ஸான்தமிழ்

Published:Updated:
டாடா நெக்ஸான் - காம்பேக்ட் எஸ்யூவிகளின் பிக் பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
டாடா நெக்ஸான் - காம்பேக்ட் எஸ்யூவிகளின் பிக் பாக்ஸ்

ப்போதெல்லாம் ‘டாடா எது செய்தாலும் நல்லாதான் இருக்கும்’ என்ற ஒரு பாஸிட்டிவ் இமேஜ் வந்துவிட்டது. ஜாகுவாரை வாங்கிய பிறகு வெளிவந்த டாடா கார்களின் டிசைனைப் பார்த்தாலே இது புரியும். இந்திய கார் சந்தையில் போட்டி அதிகம். அதையும் தாண்டி ஒரு கார் விற்பனையாக வேண்டும் என்றால், எவ்வளவு மெனக்கெட வேண்டும்? அப்படிப்பட்ட மெனக்கெடலுடன் வெளிவந்திருக்கிறது டாடாவின் நெக்ஸான். டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், நெக்ஸானைப் பார்த்த முதல் கணத்திலேயே காதலில் விழுந்தனர் பலர். ‘இது என்ன மாடல்? எப்போ வரும்’ என்று எதிர்பார்க்க ஆரம்பித்தனர்.

டாடாவுக்கு முதல் காம்பேக்ட் எஸ்யூவி, நெக்ஸான்தான். இந்த ஆண்டு தீபாவளிக்கு முன்பு அறிமுகம் ஆகவிருக்கிறது என்பது தகவல். அதற்கு முன்பு ஓட்டுவதற்கு வாய்ப்பு கிடைத்தால் விடுவோமா? இந்தியச் சாலைகளில் இதை டிரைவ் செய்தபோது, ‘கார் எப்ப வரும்... டாடா காரா இது... என்ன விலை?’ என்று ஓவர்டேக் செய்ய மனசு வராமல் கேள்விகளால் துளைத்தெடுத்துவிட்டனர் மக்கள். இப்போதைக்கு காம்பேக்ட் எஸ்யூவிகளின் பிக் பாஸ் போல் பிரமாண்டமாக வந்திருக்கும் நெக்ஸான், டிஆர்பி அள்ளுமா?

டாடா நெக்ஸான் - காம்பேக்ட் எஸ்யூவிகளின் பிக் பாக்ஸ்
டாடா நெக்ஸான் - காம்பேக்ட் எஸ்யூவிகளின் பிக் பாக்ஸ்

டிசைன்

அதெல்லாம் அந்தக் காலம். இப்போதெல்லாம் டாடா கார்களை பார்த்தாலே பிடித்துவிடுகின்றன.  நான்கு மீட்டருக்கு 5 மிமீ குறைவான இந்த எஸ்யூவியின் பலம், இதன் காம்பேக்ட் சைஸ்தான். ஷார்ப்பாக இல்லாமல் மொழுக்கென இருந்தாலும், உயரமாக பொசிஷன் செய்யப்பட்ட ஹெட்லைட்டுகள் கவர்கின்றன. பெரிய வீல் ஆர்ச்சுகள், எஸ்யூவி ஜீன். இதன் கான்ட்ராஸ்ட் ரூஃப், மில்லெனியல் டிசைன். காரை பக்கவாட்டில் இருந்து பார்த்தால், காஸ்ட்லியான கூபே போலவே இருக்கிறது. டிசைனர் பிரதாப் போஸ் டீமுக்கு குடோஸ்.

பின் பக்கம் பம்பருக்கு மேலே, செராமிக் ஃபினிஷிங், அருமை. உற்றுக் கவனித்தீர்கள் என்றால், இது X வடிவத்தில் இருப்பதைக் கவனிக்கலாம். காரின் பின் பக்கம் சில நேரங்களில் ரேஞ்ச் ரோவர் இவோக்கை நினைவுபடுத்தியது நமக்கு மட்டும்தானா?! வழக்கமாக இண்டிகேட்டர் - காரின் பக்கவாட்டிலேயோ, ஹெட்லைட்டுக்குக் கீழேயோதான் இருக்கும். ஹெட்லைட்டுக்கு மேலே இண்டிகேட்டர் இருப்பதே இதன் புதுமையைச் சொல்லிவிடுகிறது.

 AUTOCAR INDIA

டாடா நெக்ஸான் - காம்பேக்ட் எஸ்யூவிகளின் பிக் பாக்ஸ்

உள்ளே

டியாகோ, ஹெக்ஸா, டிகோர் - இப்போது நெக்ஸான்... இன்டீரியர் டிசைனிலும் அடுத்த லெவலுக்குப் போய்விட்டது டாடா. பியானோ பிளாக் தீமில் மெட்டாலிக் ஃபினிஷில் இருக்கும் சென்டர் கன்ஸோல், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. உள்ளே அமர்ந்து செல்ஃபி எடுக்கத் தூண்டுகிறது இதன் டிசைன். மெட்டீரியல் தரத்திலும் முன்னேற்றம். முன்பு டாடா கார்களின் இன்டீரியரில் பெரிய மைனஸ் -பேனல்களுக்கு நடுவில் இருக்கும் இடைவெளி. நெக்ஸானில் ‘பேனல் கேப்’ அவ்வளவாகத் தெரியவில்லை. ஜெர்மன், ஜப்பான் கார்களில்தான் இப்படிப்பட்ட ஃபிட் அண்டு ஃபினிஷ் தெரியும். வெல்டன் டாடா டீம்!

இவற்றை குறைகள் என்று சொல்ல முடியாது. இருந்தாலும் இதன் ஸ்டீயரிங்கை - டியாகோ, டிகோர் காரிலிருந்து எடுத்திருப்பார்களோ? அந்த ஏர்-கான் நாப்களுக்கு இடையே எதற்கு அத்தனை இடைவெளி? ஏ.சி டெம்பரேச்சர் என்னவென்று பார்க்க, சட்டென பார்வை அங்கேதான் போகிறது.
 
டச் ஸ்கிரீன் ரொம்ப சிறுசு. டேஷ்போர்டில் இத்தனை பட்டன்கள் லேசாக குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. டிரைவ் மோடு செலெக்டருக்கான ரோட்டரி கன்ட்ரோல் நாப், ஹெக்ஸாவில் இருப்பது. அதனால் பெரிதாக இருக்கிறது. ஈஸியாகவும் இருக்கிறது. அங்கங்கே குட்டி குட்டியாக க்ரோம் ஃபினிஷ் இருப்பது ஈர்க்கின்றன. ஹேண்ட் பிரேக்குக்குக் கீழே திறந்து மூடும் வகையில் இருக்கும் ஃப்ளிப்-அப் கப் ஹோல்டர்கள், பென்ஸில் இருக்கும் அம்சம். இருந்தாலும், க்ளோவ் பாக்ஸ் மூடி, சென்டர் கன்ஸோல் பிளாஸ்டிக்கின் தரத்து மேல் நமக்கு சந்தேகம் வரத்தான் செய்தது.

இடவசதி

கூபே வடிவம் என்றால், காரின் கூரை பின்பக்கம் தாழ்வாக இறங்கும். இதனால் பின்பக்கப் பயணிகள் தலை குனிந்துதான் பயணிக்க வேண்டி வரும். ஆனால், இதில் உயரமானவர்களுக்குக்கூட தலை இடிக்கவில்லை. நான்கு பேர் பயணித்தபோதும், ‘நெறுக்கு மச்சான்’ போடவில்லை. அதேபோல், முன்பக்க சீட்களும் பெருசு. தொடைக்கான சப்போர்ட்டும் அருமை. இதற்குக் காரணம், அகலமான கேபின். ஸ்டீயரிங்கில் ரேக் அட்ஜஸ்ட் மட்டும்தான். ‘ரீச்’ ஆப்ஷன் இல்லை. அதனால், முதுகுக்கான சப்போர்ட்... ப்ச்!

பின்பக்கம் உள்ளே நுழையும் வரைதான் கஷ்டம். காரணம், தாழ்வான கூரை. தலை குனிந்து உள்ளே நுழைந்துவிட்டால், நம்ப முடியவில்லை. நிறைய இடவசதி தெரிந்தது. பின்பக்கம் நடுவில் ஆர்ம் ரெஸ்ட் இருந்தது. அதனால், நிச்சயம் இது 4 சீட்டர் கார்தான். ஹெட் ரூமும் டீசன்ட். இந்த செக்மென்ட்டிலேயே ப்ளோயர் கன்ட்ரோல் வசதியுடன், பின் பக்க ஏர்-கான் கொண்ட கார், நெக்ஸான்தான்.

பூட் வசதி 350 லிட்டர். பிரெஸ்ஸாவுக்குப் போட்டியாகத்தான் வருகிறது நெக்ஸான். அதனால், பிரெஸ்ஸாவையே எடுத்துக் கொள்ளலாம். பிரெஸ்ஸாவில் பூட் ஸ்பேஸ் நெக்ஸானைவிடக் குறைவுதான். கூபே மாடல் என்பதால், பின் பக்க விஸிபிலிட்டி குறைவுதான். வெளிச்சாலை அவ்வளவாகத் தெரியவில்லை. இரண்டு பாறைகளுக்கு நடுவில் நெக்ஸானை ரிவர்ஸ் எடுத்தேன். ரிவர்ஸ் கேமரா இருந்தது. ஆனாலும், கஷ்டமாக இருந்தது. கேமரா துல்லியமும் சுமாராக இருந்தது; பின்பக்கமும் சரியாகத் தெரியவில்லை. ஒருவேளை மழை காரணமாக கேமரா லென்ஸ் பெர்ஃபெக்ட்டாக இல்லையோ என்று நினைத்தேன். வெயில் அடிக்கும்போதும் அப்படித்தான் இருந்தது.

டாடா நெக்ஸான் - காம்பேக்ட் எஸ்யூவிகளின் பிக் பாக்ஸ்

இன்ஜின்

இன்ஜின் விஷயத்திலும் கெத்து காட்ட ஆரம்பித்துவிட்டது டாடா. பிரெஸ்ஸாவில் இருக்கும் ஃபியட் இன்ஜினையே இதற்கும் பொருத்தினால், கெத்து இருக்காது என்ற டாடாவின் ஐடியா நல்ல முடிவுதான். டியாகோவின் 1.05 லிட்டர் 3 சிலிண்டரில் எக்ஸ்ட்ராவாக 1 சிலிண்டரைச் சேர்த்து, 1.5 லிட்டர் டைரக்ட்-இன்ஜெக்ஷன் கொண்ட டர்போ டீசல் இன்ஜினை நெக்ஸானுக்குப் பொருத்தியுள்ளது டாடா. இதன் பவர் 110bhp. பிரெஸ்ஸாவைவிட எல்லாமே அதிகம். ஸ்டார்ட் செய்ததும் வழக்கம்போல் அதிர்வுகள் தெரிந்தன. ஐடிலிங்கில் போகப் போக எலிமினேட் ஆயின அதிர்வுகள். இன்ஜினில் நல்ல ரிஃபைன்மென்ட் தெரிந்தாலும், ஹை ரெவ்களில் பிரெஸ்ஸாவின் 1.3 மல்டிஜெட் இன்ஜின்போல் தெறிக்க விடவில்லையோ என்று தோன்றுகிறது.

1,400 ஆர்பிஎம்-ல் இருந்தே இன்ஜின் இழுக்க ஆரம்பித்துவிடுகிறது. இதற்குக் காரணம், 26kgm டார்க் 1,500 ஆர்பிஎம்-மிலேயே கிடைத்துவிடுகிறது. அப்படியென்றால், ஃபியட் போல டர்போ லேக் இல்லை. இதனால் டிராஃபிக்கில் கியரைக் குறைக்காமல் ‘சட் சட்’ என முன்னேறினேன். 2,000 முதல் 4,000 வரை இன்ஜின் கஷ்டப்படவே இல்லை. ஆனால், 4,500 ஆர்பிஎம்-மைத் தாண்டியதும் ‘பச்சக்’ என பவர் டெலிவரி டல் ஆகிவிட்டது. இதுவே பிரெஸ்ஸாவின் ஃபியட் இன்ஜின் என்றால், 5,000 ஆர்பிஎம் வரை புகுந்து புறப்படலாம். நமக்குத் தெரிந்தவரை ஏதோ ஒரு ‘கிக்’ மிஸ் ஆகிறது டாடாவின் புதிய இன்ஜினில்.

இன்னொரு விஷயம் - நெக்ஸானின் எடை 1,305 கிலோ. இது பிரெஸ்ஸாவைவிட 110 கிலோ அதிகம். ஒருவேளை அதற்காகத்தான் இந்த 26 kgm டார்க்கோ? நாம் தோராயமாக செக் செய்ததில் 0-100 கி.மீ-ரைக் கடக்க 13.75 விநாடிகள் எடுத்துக்கொண்டது நெக்ஸான். இதே வேகத்தை பிரெஸ்ஸா 12.9 விநாடிகளில் கடக்கும். ஓர் ஆச்சர்யம் - இதுவே 120 கி.மீ-ரைத் தாண்டியதும் பிரெஸ்ஸாவை ஓவர்டேக் செய்கிறது நெக்ஸான். டால் கியரிங், அதிக டார்க், பவர் - எல்லாவற்றுக்கும் ஒரு ஷொட்டு!

நெக்ஸானிலும் டிரைவிங் மோடுகள் உண்டு. எக்கோ, நார்மல், ஸ்போர்ட். ஸ்போர்ட் மோடில் ஹைவேஸில் நெக்ஸானில் பறப்பது செம ஜாலி. நார்மல் மோடு, ரிலாக்ஸ்டு டிரைவிங்குக்கானது. எரிபொருள் சேமிக்கும் நல்ல உள்ளங்கள், எக்கோ மோடில் ஓட்டலாம். மற்றபடி 6 ஸ்பீடு கியர்பாக்ஸும் லைட் கிளட்ச்சும் பயன்படுத்த ஈஸி. ஆனால், 2-ல் இருந்து 3-வது கியருக்குப் போகும்போது மட்டும்... கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.

ஓட்டுதல் தரம், கையாளுமை

நான் நெக்ஸானை ஓட்டியபோது நல்ல மழை. இதனால் சாஃப்ட் ரோடு, ஹார்டு ரோடாக மாறியிருந்தது காரை டெஸ்ட் செய்ய வசதியாகவே இருந்தது. மேடு பள்ளங்களில் நான் நெக்ஸானை ஏற்றியவரை, பின் பக்கம் தூக்கிப் போடவில்லை; அலைபாயவில்லை. அப்படியென்றால், சஸ்பென்ஷன் ஓரளவு ஸ்டிஃப் என்று அர்த்தம். கிரவுண்ட் கிளியரன்ஸ் 200 மிமீ என்றபோதும், பாடி ரோலை நன்கு கட்டுப்படுத்தியிருக்கிறார்கள். எலெக்ட்ரானிக் ஸ்டீயரிங் பயன்படுத்த லைட் வெயிட். நாம் பயன்படுத்தியதில் இந்த செக்மென்ட்டிலேயே பெஸ்ட் என்று இதைச் சொல்லலாம். அகலமான 16 இன்ச் டயர்கள் நல்ல கிரிப். கார்னரிங்கில் நல்ல நம்பிக்கை கிடைக்கிறது.

டாடா நெக்ஸான் - காம்பேக்ட் எஸ்யூவிகளின் பிக் பாக்ஸ்

டாக் ஆஃப் தி நெக்ஸான், இதன் டிசைன்தான். வாடிக்கையாளர்கள் இதன் ஃப்ரெஷ் லுக்கில் நிச்சயம் மயங்குவார்கள். அதற்கு ஏற்றாற்போல், அங்கங்கே கொஞ்சம் காஸ்ட்லி மெட்டீரியல் பயன்படுத்தியிருக்கிறார்கள். இன்ஜினும் இதற்குச் சளைத்ததல்ல. கூடிய விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் நெக்ஸான், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடனும் வரும். நாம் இங்கே டெஸ்ட் செய்தது 1.5 லிட்டர் டீசல். இதில் AMT-யும் வருகிறது. 6 ஸ்பீடு, 5 ஸ்பீடு என்று கியர்பாக்ஸிலும் வெரைட்டி காட்டுகிறது நெக்ஸான். வாடிக்கையாளர்களுக்கு நிறைய ஆப்ஷன்கள் இருக்கின்றன. விலையும் இங்கே முக்கியம். கிட்டத்தட்ட 10 லட்சத்துக்குள் டீசல் டாப் மாடல் வந்தால், காம்பேக்ட் எஸ்யூவிகளின் பிக் பாஸ் நிச்சயம் நெக்ஸான்தான்.