Published:Updated:

எஸ்யூவி பாதி, ஃபேமிலி கார் மீதி!

எஸ்யூவி பாதி, ஃபேமிலி கார் மீதி!
பிரீமியம் ஸ்டோரி
எஸ்யூவி பாதி, ஃபேமிலி கார் மீதி!

ஃபர்ஸ்ட் டிரைவ் : மெர்சிடீஸ் பென்ஸ் GLA220D 4maticதமிழ்

எஸ்யூவி பாதி, ஃபேமிலி கார் மீதி!

ஃபர்ஸ்ட் டிரைவ் : மெர்சிடீஸ் பென்ஸ் GLA220D 4maticதமிழ்

Published:Updated:
எஸ்யூவி பாதி, ஃபேமிலி கார் மீதி!
பிரீமியம் ஸ்டோரி
எஸ்யூவி பாதி, ஃபேமிலி கார் மீதி!

பென்ஸுக்கு GLA கார், ஒரு விளையாட்டு பொம்மை! ஆரம்பத்தில், 2 வீல் டிரைவ் மாடலில் அறிமுகம்; பிறகு AMG இன்ஜினைப் பொருத்தினார்கள்; சென்ற ஆண்டு 4 வீல் டிரைவ் மாடலைக் கொண்டுவந்தார்கள். இப்போது மறுபடியும் ஃபேஸ்லிஃப்ட் GLA மாடல். இதில் என்ன மாற்றங்கள்?

பெரிய மாற்றம் என்று பார்த்தால், புதிதாகச் சேர்க்கப்பட்ட இதன் LED ஹெட்லைட்ஸ். ட்வின் பிளேடு டிசைனில் பெரிய கிரில்லும், புதிய பம்பர் கிளாடிங்குகளும் செம ஸ்போர்ட்டி. பின்பக்கமும் க்ரிஸ்டல் எஃபெக்ட் LED டெயில் லைட்டுகள்; புதிய 5 ஸ்போக் அலாய் வீல்கள். இவ்வளவு மாற்றங்கள் நடந்தாலும், அந்த ‘A’ க்ளாஸ் சாயல் போகவில்லையே?

எஸ்யூவி பாதி, ஃபேமிலி கார் மீதி!

எஸ்யூவி என்றால், வெளிச்சாலை நன்கு தெரிய வேண்டும்தானே? முன்பக்கம் சிறிய விண்ட்ஷீல்டு என்பதால், இது மிஸ்ஸிங்!

இந்த GLA220D-ல் இருப்பது 170bhp பவர், 35kgm டார்க் கொண்ட பெரிய 2.0 லிட்டர் இன்ஜின். இது, 136bhp பவர், 30kgm டார்க் கொண்ட 200D GLA-வைவிட தெறி பெர்ஃபாமென்ஸ் கொண்டிருக்கிறது. ஒரு நெகட்டிவ் ஆன விஷயம் - 40 லட்ச ரூபாய் காரில் இத்தனை இரைச்சல் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

2016 GLA-வில் ஆஃப்ரோடு மற்றும் இண்டிவிஜுவல் மோடுகளில் மிகப்பெரிய மாற்றம் நடந்தது. இது அப்படியே இந்தப் பெரிய GLA220D-லும் தொடர்ந்தது. பவர் ட்ரெயினிலும் ஸ்டீயரிங்கிலும் மட்டும்தான் இப்போது மாற்றம். பழைய GLA-வுக்கும் இந்த GLA220D-க்கும் சஸ்பென்ஷனில் மாற்றம் நடக்கவில்லை. ஆனால், பழைய ஸ்டிஃப்னெஸ் குறைந்திருந்தது. எப்படி இந்த ரைடு வேறுபாடு? காரணம்: 18 இன்ச் ஸ்போர்ட்டியான டன்லப் டயர்கள் என்கிறது பென்ஸ். எக்ஸ் ஷோரூம் 35 லட்சத்திலிருந்து ஆரம்பிக்கிறது GLA மாடல். இந்த GLA220D மாடல் ஆன்ரோடு சுமார் 41 லட்சம் வரை வரலாம். லக்ஸுரி கார் வாடிக்கையாளர்கள், GST-க்கு ஒரு பெரிய ‘ஓ’ போடுங்கள்; எப்படியும் 3 லட்சம் வரை விலை குறையலாம்.

கரடுமுரடு எஸ்யூவியும் கிடையாது; சாந்தமான ஃபேமிலி காரும் கிடையாது. பென்ஸ் GLA220D - இந்த இரண்டுக்கும் நடுவில் ஓர் அற்புதமான ஓட்டுதல் அனுபவத்தைத் தரக்கூடிய கார் பென்ஸ், GLA 220D.