Published:Updated:

AMG-க்கு 50 வயசு!

AMG-க்கு 50 வயசு!
பிரீமியம் ஸ்டோரி
AMG-க்கு 50 வயசு!

ஃபர்ஸ்ட் லுக் : மெர்சிடீஸ் GLC AMG 43ராகுல் சிவகுரு

AMG-க்கு 50 வயசு!

ஃபர்ஸ்ட் லுக் : மெர்சிடீஸ் GLC AMG 43ராகுல் சிவகுரு

Published:Updated:
AMG-க்கு 50 வயசு!
பிரீமியம் ஸ்டோரி
AMG-க்கு 50 வயசு!

திரடியான பெர்ஃபாமென்ஸுக்குப் பெயர் பெற்ற AMG கார்களை, இந்தியாவில் தொடர்ச்சியாக (G63 AMG Edition 43, GLS 63 AMG) அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது மெர்சிடீஸ் பென்ஸ். தற்போது AMG கார்கள் வெளியாகி 50 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதமாக, 74.8 லட்சத்துக்குக் (இந்திய எக்ஸ் ஷோரூம் விலை) களமிறங்கியிருக்கிறது GLC AMG 43 Coupe. இந்த காரில் இருப்பது, AMG 43 பேட்ஜ் கொண்ட கார்களில் (GLE 43 Coupe, SLC 43, C 43)  இருக்கும் அதே 3.0 லிட்டர், ட்வின் டர்போ, V6 பெட்ரோல் இன்ஜின்தான்; இது 367bhp பவர் - 52kgm டார்க்கை வெளிப்படுத்தும். இந்த இன்ஜின், 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

AMG-க்கு 50 வயசு!

0 - 100 கி.மீ வேகத்தை வெறும் 4.9 விநாடிகளில் எட்டும் இது, அதிகபட்சமாக 250 கி.மீ வேகம் வரை செல்கிறது.

வழக்கமான GLC Coupe மாடலுடன் ஒப்பிடும்போது, க்ரோம் வேலைப்பாடுகளுடன் கூடிய டைமண்ட் ரேடியேட்டர் கிரில், ஸ்போர்ட்டியான ஏர் இன்டேக்ஸ், முன்பக்க க்ரோம் ஸ்ப்ளிட்டர், Chrome Plated டெயில் பைப், ஷார்ப்பான லிப் ஸ்பாய்லர், 19 இன்ச் அலாய் வீல்கள், சில்வர் சைடு ஸ்கர்ட், LED DRL - LED டெயில் லைட், எலெக்ட்ரிக் சன்ரூஃப் ஆகியவை மாறியிருக்கின்றன. சிவப்பு நிறத் தையல் வேலைப்பாடுகள் - கறுப்பு நிற லெதர் அப்ஹோல்ஸ்ரி, கார்பன் ஃபைபர் ஃபினிஷ், AMG லோகோ உடனான ஃப்ளோர் மேட், சிவப்பு நிற சீட் பெல்ட், பலவித கன்ட்ரோல்களுடன்கூடிய ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல், ரேஸ் டைமர் - ப்ளூடூத் - USB வசதிகளுடன்கூடிய 7.0 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் என கேபினிலும் மாற்றங்கள் தென்படுகின்றன.

அட்ஜஸ்டபிள் டேம்பர் மற்றும் Ride Height உடனான இன்டிபெண்டன்ட் ஸ்போர்ட்ஸ் சஸ்பென்ஷன், 4 வீல் டிரைவ் ஆகியவை, காரில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மெக்கானிக்கல் மாற்றங்கள். இந்த ஆண்டு இந்தியாவில் மெர்சிடீஸ் பென்ஸ் வெளியிட்டிருக்கும் 8-வது காரான இது, ஆடி Q7 - பிஎம்டபிள்யூ X5 - வால்வோ XC90 - போர்ஷே மக்கான் - ஜாகுவார் F-Pace ஆகிய எஸ்யூவிகளுடன் போட்டியிடுகிறது.