Published:Updated:

ஜி.எஸ்.டி - எந்த கார், எவ்வளவு விலை குறைந்தது?

ஜி.எஸ்.டி - எந்த கார், எவ்வளவு விலை குறைந்தது?
பிரீமியம் ஸ்டோரி
ஜி.எஸ்.டி - எந்த கார், எவ்வளவு விலை குறைந்தது?

சர்வே : ஜிஎஸ்டி தமிழ்

ஜி.எஸ்.டி - எந்த கார், எவ்வளவு விலை குறைந்தது?

சர்வே : ஜிஎஸ்டி தமிழ்

Published:Updated:
ஜி.எஸ்.டி - எந்த கார், எவ்வளவு விலை குறைந்தது?
பிரீமியம் ஸ்டோரி
ஜி.எஸ்.டி - எந்த கார், எவ்வளவு விலை குறைந்தது?

ட்லி முதல் இன்டர்நெட் வரை, நாம் பயன்படுத்தும் பலவற்றுக்கும் ஜிஎஸ்டி போட்டுத் தாளித்துவிட்டார்கள். ஆட்டோமொபைல் மார்க்கெட்டுக்கும் இது பொருந்தும். ஆனால், இதில் சில நன்மைகளும் உண்டு. எப்படி?

ஆட்டோமொபைல் மார்க்கெட்டில் ஹேட்ச்பேக்கில் ஆரம்பித்து எஸ்யூவி வரை எக்கச்சக்க வெரைட்டிகள் உள்ளன. ஆனால், ஜிஎஸ்டியைப் பொறுத்தவரை கார் மார்க்கெட்டில் நான்கு வகைகள்தான். 4 மீட்டருக்குட்பட்ட சின்ன கார்; பெரிய கார்; ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் கார். இதில் பெரிய கார் என்பது எஸ்யூவியை மட்டும் குறிக்காது; பிரீமியம் செடான் காரையும் குறிக்கும். இன்ஜின் கொள்ளளவு மற்றும் நீள/அகலத்தை வைத்துத்தான் இதை வகை பிரிக்க வேண்டும். ஜிஎஸ்டியால், சின்ன காராக இருந்தால், 2.25 சதவிகிதமும், எஸ்யூவியாக இருந்தால் 12 சதவிகிதமும் வரி குறைந்திருக்கிறது.

ஜி.எஸ்.டி - எந்த கார், எவ்வளவு விலை குறைந்தது?

இதில் பெரும்பாலான வகை கார்களுக்கும் 28 சதவிகித வரியோடு, செஸ் வரியும் சேர்த்து விதித்திருக்கிறார்கள். ஹைபிரிட் கார்களுக்கு 12 சதவிகிதம் வரி கூட்டப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் கணிசமான வரிக் குறைப்பு நடந்திருக்கிறது. மற்றபடி, இந்த 14-வது ஜிஎஸ்டி மசோதாவின்படி பார்த்தால், சின்ன கார்களில் இருந்து பெரிய கார்கள் வரை வாடிக்கையாளர் களுக்குப் பெரும்பான்மையாக லாபமே. (பார்க்க அட்டவணை) ஒரு முக்கியமான விஷயம் - இந்த விலைக் குறைப்பு, ஒவ்வொரு மாநிலங்களுக்கும், அந்தந்த மாநிலத்தின் VAT-க்குத் தகுந்தபடி வேறுபடும்.

ஜி.எஸ்.டி - எந்த கார், எவ்வளவு விலை குறைந்தது?

இதில் பெஸ்ட் செல்லிங்கான மாருதியின் ஸ்விஃப்ட், டிசையர், பெலினோ போன்ற கார்களுக்கு, கிட்டத்தட்ட 6,000 முதல் 10,000 ரூபாய் வரை விலைக் குறைப்பு நடந்துள்ளது. இதுவே S-க்ராஸ் போன்ற கார்களுக்கு 45,000 முதல் 50,000 ரூபாய்வரை விலை குறைந்துள்ளது. ஹூண்டாயைப் பொறுத்தவரை, இயானுக்கு சுமார் 4,000 ரூபாய் குறைந்துள்ளது. இதுவே சான்டா ஃபீ எஸ்யூவி-க்கு 2 லட்ச ரூபாய்.

ஜி.எஸ்.டி - எந்த கார், எவ்வளவு விலை குறைந்தது?

டாடா மோட்டார்ஸ், தங்கள் கார்களுக்கு 6,000 ரூபாயில் ஆரம்பித்து 2.17 லட்சம் வரை விலைக் குறைப்பு செய்திருக்கிறது. அதுவும் ஹெக்ஸா வாடிக்கையாளர்களுக்கு செம ஆஃபர். முன்பைவிட 2 லட்ச ரூபாய்  குறைவான விலையில் ஹெக்ஸாவை வாங்கலாம். அதேபோல், க்ரிஸ்டா வாங்குபவர்களுக்கும் சூப்பர் லாபம். கிட்டத்தட்ட 1.5 லட்ச ரூபாய் வரை குறைவு. முன்பைவிடச் சுமார் 2 லட்ச ரூபாய் குறைவாக ஃபார்ச்சூனரை வாங்கலாம். ஃபோர்டிலும் ஃபிகோ மற்றும் எக்கோஸ்போர்ட் கார்கள், முறையே 5,000 ரூபாயில் இருந்து 12,000 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது. எண்டேவர் எஸ்யூவியின் விலை, 2.3 லட்சம் வரை குறைந்திருக்கிறது. இது தவிர, லேண்ட்ரோவரின் ரேஞ்ச்ரோவர் மற்றும் ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவிகளுக்கு, 4.5 லட்ச ரூபாய் வரை விலைக் குறைப்பு நடந்துள்ளது. பென்ஸ், ஆடி, பிஎம்டபிள்யூ போன்றவற்றுக்கும் லட்சக்கணக்கில் சேமிப்பு.

அப்படியென்றால், ஆட்டோமொபைல் வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரை, ஜிஎஸ்டிக்கு - ‘பிக் பாஸ்’ ஓவியாவைவிட அதிக ஓட்டுகள் விழுந்துள்ளன என்பதே உண்மை.