Published:Updated:

ஃபென்டாஸ்டிக் 5

ஃபென்டாஸ்டிக் 5
பிரீமியம் ஸ்டோரி
ஃபென்டாஸ்டிக் 5

ஃபர்ஸ்ட் லுக் : 2017 பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் ராகுல் சிவகுரு

ஃபென்டாஸ்டிக் 5

ஃபர்ஸ்ட் லுக் : 2017 பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் ராகுல் சிவகுரு

Published:Updated:
ஃபென்டாஸ்டிக் 5
பிரீமியம் ஸ்டோரி
ஃபென்டாஸ்டிக் 5

பிஎம்டபிள்யூவின் புதிய 5 சீரிஸ் லக்ஸூரி செடான் அறிமுகமாகியுள்ளது. Sport Line - Luxury Line - M-Sport எனும் 3 வேரியன்ட்களில், 8 கலர் மற்றும் 3 இன்ஜின் ஆப்ஷன்களுடன் (பெட்ரோல் ஒன்று - டீசல் இரண்டு), ரூ.61.03 - 74.83 லட்சத்துக்குக் (சென்னை ஆன் ரோடு) களமிறங்கியுள்ளது. இந்த லக்ஸூரி செடானின் 530d M Sport எனும் டாப் வேரியன்ட்டில், Aero Kit - Sports Transmission - அகலமான 275/40 R18 டயர் - அலாய் வீல் போன்ற பல தனித்தன்மையான வசதிகள் கிடைக்கின்றன. மேலும், அனைத்து வேரியன்ட்டிலும், ஒவ்வொரு வீலுக்கும் பிரத்யேகமான Damping வசதியுடன்கூடிய Adaptive Suspension மற்றும் எலெக்ட்ரிக்கலாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன்பக்க இருக்கைகள் வழங்கப்பட்டிருப்பது பெரிய ப்ளஸ். போட்டியாளர்களைவிட அதிக மைலேஜுக்கு, இந்த லக்ஸூரி செடானின்  0.22 Drag Co-Efficient உதவிகரமாக இருந்திருக்கிறது.

ஃபென்டாஸ்டிக் 5
ஃபென்டாஸ்டிக் 5

பிஎம்டபிள்யூவின் லேட்டஸ்ட்டான Cluster Architecture ஃப்ளாட்ஃபார்மில்தான், புதிய 5 சீரிஸ் லக்ஸூரி செடான் தயாரிக்கப்படுகிறது. எனவே, முந்தைய தலைமுறை மாடலைவிட காரின் அளவுகளில் மாற்றம் இருந்தாலும், (36 மிமீ கூடுதல் நீளம், 6 மிமீ கூடுதல் அகலம், 2 மிமீ கூடுதல் உயரம், 7 மிமீ கூடுதல் வீல்பேஸ்), பிஎம்டபிள்யூவின் புதிய 5 சீரிஸ், அதனைவிட சுமார் 70 கிலோ எடை குறைவானதாக இருக்கிறது. இந்த லக்ஸூரி செடானின் கட்டுமானத்தில், அலுமினியம் - High Strength ஸ்டீல் பயன்படுத்தப்பட்டிருப்பதும் காரணமாக இருக்கலாம்!

ஃபென்டாஸ்டிக் 5

காரின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில், இந்த நிறுவனத்தின் டாப் செடான் காரான 7 சீரிஸின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. 2017 பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரின் நீளமான சிறப்பம்சங்களின் பட்டியலைப் பார்க்கும்போதே, அதன் தொழில்நுட்ப ரீதியிலான முன்னேற்றம் தெரிகிறது.

Ebony & Beige கலர் டேஷ்போர்டில், Wood - Piano Black - லெதர் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. தவிர, கேபினிலும் முன்பைவிடப் பொருள்களை வைப்பதற்கு அதிகப்படியான ஸ்டோரேஜ் ஸ்பேஸ் இருக்கிறது; பூட் ஸ்பேஸும் 530 லிட்டராக அதிகரித்திருக்கிறது. எனவே, சூப்பர் டிசைன், பிரீமியம் கேபின், ஸ்போர்ட்டி ஓட்டுதல் ஆகியவற்றை முன்னிறுத்தி, தனது 2017 பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் லக்ஸூரி செடானை, மினி 7 சீரிஸ் போல பிஎம்டபிள்யூ வடிவமைத்திருப்பதற்கான நோக்கம் புரிகிறது. CKD முறையில் பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு, சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூவின் தொழிற்சாலையில் கார் அசெம்பிள் செய்யப்படுவதாலேயே, அட்டகாசமான விலையில் புதிய 5 சீரிஸ் காரை அறிமுகப்படுத்த முடிந்திருக்கிறது எனத் தெரிகிறது.