Published:Updated:

மங்களூரிலிருந்து மழைப் பயணம்!

மங்களூரிலிருந்து மழைப் பயணம்!
பிரீமியம் ஸ்டோரி
மங்களூரிலிருந்து மழைப் பயணம்!

மஹிந்திரா: மான்சூன் ராலிகா.பாலமுருகன்: படங்கள்: தி.விஜய்

மங்களூரிலிருந்து மழைப் பயணம்!

மஹிந்திரா: மான்சூன் ராலிகா.பாலமுருகன்: படங்கள்: தி.விஜய்

Published:Updated:
மங்களூரிலிருந்து மழைப் பயணம்!
பிரீமியம் ஸ்டோரி
மங்களூரிலிருந்து மழைப் பயணம்!

ஹிந்திரா நிறுவனம் நடத்தும் மான்ஸூன் சேலஞ்ச் ராலி, TSD (நேரம், வேகம், தூரம்) ராலி பிரியர்களுக்கு முக்கியமான நிகழ்வு. மஹிந்திராவுக்கு இந்த ராலி, ஏழாவது சீஸன். மொத்தம் மூன்று நாள்கள் நடக்கும் இந்தப் போட்டி, ஜூன் 23 அன்று மங்களூரில் உள்ள ஃபோரம் பைஸா மாலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சேலஞ்ச், அமெச்சூர், கார்ப்பரேட், லேடீஸ், கப்பிள், மீடியா என 6 பிரிவுகளில் மொத்தம் 30 மஹிந்திராவின் கார், ஜீப், எஸ்யூவி கார்கள் கலந்துகொண்டன. அதில் மீடியா பிரிவில், KUV100 காருடன் மோட்டார் விகடனும் கலந்துகொண்டது. அடுத்த நாள் காலை 8 மணிக்கு, மங்களூர் புறநகரிலிருந்து ராலி ஆரம்பமானது. அணிவகுத்து நின்ற கார்கள், சாரல் மழையில் குளித்தபடியே, கிராமச் சாலைகளுக்கும் ரூட் மேப் காட்டிய வழியில் ஊர்ந்தன. காட்டுப்பகுதிக்குள் நுழைந்ததும், இலக்கில்லாத பயணமாக அது மாறிவிட்டது. ஆளரவமற்ற காட்டுச் சாலையில் வழி தவறினால் கேட்கக்கூட ஆளில்லை. ஆனால் எந்த காரும் வழி மாறாமல், சரியான சாலையில் சென்றன.

மங்களூரிலிருந்து மழைப் பயணம்!

மங்களூருக்கும் கோவாவுக்கும் இடையே உள்ள கடலோர ஊரான முருடேஸ்வர், அங்குள்ள சிவன் சிலைக்கும் - உயரமான கோபுரத்துக்கும் புகழ்பெற்றது. அன்று இரவு அந்த ஊரில் தங்கிவிட்டு, அடுத்த நாள் காலை புறப்பட்டது ராலி. அன்று, மேற்குத் தொடர்ச்சி மலைமீது ஏறி, மீண்டும் கீழே இறங்கி கோவா நோக்கிச் சென்றது ராலியின் பாதை. மொத்தப் பயண தூரம் சுமார் 660 கி.மீ. இந்த ராலி எப்போதும் முக்கியச் சாலையில் நடக்காது. எல்லாமே கிராமத்துச் சாலை, காட்டுவழி, மலைப்பாதை எனக் கலந்துகட்டித்தான் இருக்கும். இந்த ஆண்டும் மழை, வெயில், மஞ்சு என ஈரமான காலநிலையில், வித்தியாசமான அனுபவத்தை வழங்கியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மங்களூரிலிருந்து மழைப் பயணம்!

ஓப்பன் கிளாஸ் பிரிவில் முதல் இடத்தை WRC வீரரான சஞ்சய் தக்லே - முகமது முஸ்தஃபா ஜோடி பெற்றது. இரண்டாம் இடத்தை ரவீந்திரகுமார் - சாகர் ஜோடி பெற்றது. மூன்றாம் இடத்தை சந்தோஷ்குமார் - நாகராஜன் ஜோடி பிடித்தது. இரண்டாம் இடத்துக்கும் மூன்றாம் இடத்துக்கும் 1 நிமிடம் மட்டுமே வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது.

சேலஞ்ச் கிளாஸில் முதல் இடத்தை வினய் - ரவிகுமார் ஜோடியும், இரண்டாம் இடத்தை டாக்டர் ராகவேந்திர பிடமால் - டாக்டர் முரளிதர் ராய் ஜோடியும், மூன்றாம் இடத்தை மகேஷ்வரன் - முருகன் ஜோடியும் பெற்றன.

மங்களூரிலிருந்து மழைப் பயணம்!

கார்ப்பரேட் கிளாஸில் முதல் இடத்தை சந்தோஷ்குமார் - பிரதீப் நாகராஜ் ஜோடியும், இரண்டாம் இடத்தை பைஜூ ஸ்டீபன் - குமார் ஜோடியும் மூன்றாம் இடத்தை உமாஷங்கர் - சண்முகா ஜோடியும் பெற்றன. மீடியா கிளாஸில் முதல் இடத்தை ‘ரஷ்லேன்’ எனும் மீடியாவைச் சேர்ந்த ரோகன் - ஓம்கார் ஜோடியும், இரண்டாம் இடத்தை மோட்டார் விகடனைச் சேர்ந்த பாலமுருகன் - விஜய் ஜோடியும், மூன்றாம் இடத்தை ‘ஆட்டோ சி’ எனும் மீடியாவைச் சேர்ந்த அபிஷேக் - கீர்த்திபடேல் ஜோடியும் பெற்றன.