Published:Updated:

மிரட்டல் சைஸ்... மிஸ்டர் எக்ஸ்!

மிரட்டல் சைஸ்... மிஸ்டர் எக்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
மிரட்டல் சைஸ்... மிஸ்டர் எக்ஸ்!

ஃபர்ஸ்ட் டிரைவ் : இசுஸூ MU-X சார்லஸ்

மிரட்டல் சைஸ்... மிஸ்டர் எக்ஸ்!

ஃபர்ஸ்ட் டிரைவ் : இசுஸூ MU-X சார்லஸ்

Published:Updated:
மிரட்டல் சைஸ்... மிஸ்டர் எக்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
மிரட்டல் சைஸ்... மிஸ்டர் எக்ஸ்!

துவுமே இங்கே மினிமம் கிடையாது. எல்லாமே மேக்ஸிமம்! அதிரடி ஸ்டைல், பிரமாண்ட இடவசதி, பவர்ஃபுல் பெர்ஃபாமென்ஸ் என எல்லாவற்றையும் மேக்ஸிமம் கொடுக்கும் கார்கள் பட்டியலில் ஃபோர்டு எண்டேவரும், டொயோட்டா ஃபார்ச்சூனரும் புது மாற்றங்கள் கண்டுவிட்டன. அதனால், தன்னுடைய பிரம்மாஸ்திரமான MU-7 காரை தரம் உயர்த்தி, MUX என்ற பெயரில் கொண்டுவந்திருக்கிறது இசுஸூ. எக்ஸ் என்பதற்கு எல்லாமே எக்ஸ்ட்ரா என்று அர்த்தமாம். எதெல்லாம் எக்ஸ்ட்ரா? வாங்க ஒரு டெஸ்ட் டிரைவ் போலாம்!

மிரட்டல் சைஸ்... மிஸ்டர் எக்ஸ்!

ஸ்டைல்

‘இவ்ளோ பெரிய காரா?’ - பார்த்தவுடனே வாவ் சொல்ல வைக்கிறது இதன் தோற்றம். பிரமாண்ட ஹெட்லைட்ஸின் மேல் LED விளக்குகள், மிகப் பெரிய வீல் ஆர்ச்சுகள், காருக்குள் ஏறுவதற்குப் பெரிய ஃபுட் போர்டு, வித்தியாசமான பின்பக்க விளக்குகள் என MU-7-ல் இருந்து ஸ்டைல் கூடியிருக்கிறது. 17 இன்ச் அலாய் வீல் டிசைன் கவனம் ஈர்க்கிறது.

உள்ளே

ஃபுட்போர்டில் கால்வைத்து உள்ளே ஏறிக் குதித்தால், மீண்டும் அதே ஆச்சர்யம். டேஷ்போர்டின் சைஸே ஆச்சர்யப்படுத்துகிறது. சென்டர் கன்ஸோலில் டச் ஸ்கிரீன், ஏ.சி கன்ட்ரோல் யூனிட் ஆகியவை கவனம் ஈர்க்கின்றன. ஸ்டீயரிங் வீலில் சுற்றப்பட்டிருக்கும் மெல்லிய லெதர், பிடித்து ஓட்டுவதற்கு வசதியாக இருக்கிறது. தரமான பிளாஸ்டிக்குகளால் பிட் அண்டு ஃபினிஷ் அருமை. கீ-லெஸ் என்ட்ரி, 7 இன்ச் என்ஃபோடெய்ன்மென்ட் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல் என வசதிகளிலும் குறைவில்லை.

3 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் இன்ஜினைக்கொண்டிருக்கிறது இசுஸூ MUX. இது அதிகபட்சமாக 177bhp சக்தியையும், 38kgm டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. எண்டேவர், ஃபார்ச்சூனரைவிட டார்க் குறைவுதான் என்றாலும், குறைந்த வேகத்திலேயே அதிக பிக்-அப் கிடைக்கிறது. 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட இந்த காரில் 2 வீல், 4 வீல் டிரைவ் ஆப்ஷன்கள் உண்டு.

மிரட்டல் சைஸ்... மிஸ்டர் எக்ஸ்!

2,000 ஆர்பிஎம்முக்கு மேல் ஆக்ஸிலரேட்டரை மிதித்தால், சத்தத்தாலும் அதிர்வுகளாலும் அலறுகிறது இன்ஜின். சிக்னலிலிருந்து சீறும்போதும், ஸ்பீடு பிரேக்கர்களில் இறங்கி ஏறிப் புறப்படும்போதும், நாம் எதிர்பார்க்கும் வேகத்துக்கு ஈடுகொடுக்க மறுக்கிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸில் எப்போதுதான் கியர்கள் மாறும் என நாம் பொறுமையை இழக்கும்போதுதான், கார் சீறிப் புறப்பட ஆரம்பிக்கிறது. ஆனால் அதற்குள் அடுத்த சிக்னல், ஸ்பீடு பிரேக்கரே வந்துவிடுகின்றன. நெடுஞ்சாலைகளில் 5-வது கியரில் ஓட்டும்போது, காரின் பெர்ஃபாமென்ஸ் சிறப்பாக இருக்கிறது.

சாஃப்ட் சஸ்பென்ஷன் செட்-அப் என்பதால், மெதுவாக ஓட்டும்போது கார் மிதக்கிறது. அதுவே கரடுமுரடான, மேடு பள்ளமான சாலைகளில் ஆட்டம் அதிகமாகவே இருக்கும். லேடர் ஃப்ரேம் சேஸி என்பதால்,  வேகமாக வளைத்துத் திருப்பி ஓட்டும்போது, பாடி ரோல் இருக்கிறது.

விலையைப் பொறுத்தவரை ஃபார்ச்சூனர், எண்டேவரைவிட இசுஸூ கிட்டத்தட்ட 7 லட்ச ரூபாய் குறைவு.

பொறுமையாக, நிதானமாக டிரைவர் ஓட்ட, பின்னால் உட்கார்ந்து பயணிக்கச் சிறந்த காராக இருக்கிறது இசுஸூ MUX. ஆனால், பெர்ஃபாமென்ஸில் போட்டியாளர்களை மிஞ்சும் கார் இது இல்லை.