Published:Updated:

இமயமலையோடு ஓர் இனம் புரியாக் காதல்!

இமயமலையோடு ஓர் இனம் புரியாக் காதல்!
பிரீமியம் ஸ்டோரி
இமயமலையோடு ஓர் இனம் புரியாக் காதல்!

பயணம் : அனுபவம் இரா.கலைச்செல்வன்

இமயமலையோடு ஓர் இனம் புரியாக் காதல்!

பயணம் : அனுபவம் இரா.கலைச்செல்வன்

Published:Updated:
இமயமலையோடு ஓர் இனம் புரியாக் காதல்!
பிரீமியம் ஸ்டோரி
இமயமலையோடு ஓர் இனம் புரியாக் காதல்!

மயமலைக்கும் ராயல் என்ஃபீல்டுக்கும் இருக்கும் ஒரு நெருங்கிய தொடர்புதான் அவர்களின் ஒரு பைக்குக்கே ‘ஹிமாலயன்’ எனப் பெயர் வைக்கக் காரணம். இந்தியாவில் மட்டுமல்ல; உலக அளவிலிருக்கும் பைக் ரைடர்களின் கனவு இமயமலை யில் பைக் ஓட்ட வேண்டும் என்பது தான். அதிலும் பெரும்பாலான வர்களின் கனவு, ராயல் என்ஃபீல்டின் ஏதாவது ஒரு பைக்கில் இமயமலையைத் தரிசித்துவிட வேண்டுமென்பதுதான். `ஏன் இப்படி?’ என்ற கேள்விக்கு... ‘குணா’ பாணியில் ‘மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல’ என்ற பதிலைத்தான் சொல்ல வேண்டும். இப்படி, இமயமலையின் இனம்புரியாக் காதலோடு திரியும் தங்கள் ரைடர்களுக்காக, ஒவ்வொரு வருடமும் ராயல் என்ஃபீல்டு நடத்தும் நிகழ்வுதான் ‘ஹிமாலயன் ஒடிசி’.

14-வது வருட ஹிமாலயன் ஒடிசி ஜூலை 12-ம் தேதி டெல்லியின், இந்தியா கேட் பகுதியிலிருந்து தொடங்கியது. இந்தியா முழுவதிலுமிருந்து ஆறு பெண்கள் உட்பட 61 ரைடர்கள் தங்கள் புல்லட்களில் தயாராக நின்றுகொண்டிருந்தனர். தமிழ்நாட்டிலிருந்து வேலூர் மற்றும் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த இருவர் இந்த ரைடில் கலந்து கொண்டனர். டெல்லியின் குளிர் அங்கு நின்றிருந்த கிளாசிக், ஸ்டாண்டர்டு, தண்டர்பேர்டு, ஹிமாலயன் என அனைத்து பைக்குகளையுமே நனைத்துக்கொண்டிருந்தது. அந்தக் குளிரைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல், அத்தனை ரைடர்களுமே படு உற்சாகமாகத் தயாராகிக் கொண்டிருந்தனர். மொத்த ரைடர்களின் ஹெல்மெட்களுமே சீராக அடுக்கி வைக்கப் பட்டிருக்க, அங்கு வந்த சில புத்த ‘லாமா’க்கள் அதைப் பூஜித்து, அனைவரையும் ஆசீர்வதித்தார்கள். இந்த ‘போதி தர்மர்’ மொமன்ட்டைத் தொடர்ந்து, சில ‘போதனை’ மொமன்ட்கள் தொடர்ந்தன. மலைப் பாதைகளில் பைக்கை எப்படிக் கையாள வேண்டும், ரூட் என்ன, அடுத்த பிட் ஸ்டாப் எது என்பது போன்ற தகவல்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன.

இமயமலையோடு ஓர் இனம் புரியாக் காதல்!

சில நிமிடங்களில் பைக்குகள் வரிசையாகக் கிளம்பின. பெரும்பாலான பைக்குகளில் லைட்கள் எரியாவிட்டாலும்கூட, இடையிடையே சில BS4 பைக்குகளின் விளக்குகள் தானாக எரிந்துக் கொண்டிருந்தன. ரைடிங் பூட்ஸ், ஜாக்கெட், க்ளவ்ஸ், ஹெல்மெட் என பக்கா கிட்களோடுதான் ரைடர்கள் இதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். காரணம், அடுத்த 18 நாள்களும் அவர்கள் உலகின் மிகக் கடுமையான பாதைகளைக் கடக்கப் போகிறார்கள். சண்டிகர் - மணாலி வழியில் லே, கார்துங்லா என இவர்களின் பயண வழி முழுக்கவே அழகும் ஆபத்தும் நிறைந்தவை.

‘‘ராயல் என்ஃபீல்டு ஏன் ராயலா இருக்குங்கிறத தெரிஞ்சக்கணும்னா அதைச் சும்மா சிட்டிக்குள்ளயும், ஹைவேயிலும் ஓட்டாம, இமயமலையிலதான் போய் ஓட்டணும். போன வருடம் ஹிமாலயன் ஒடிசியில நான் பங்கேற்றது என்னால மறக்கவே முடியாத ஒரு வாழ்க்கை அனுபவம்.

இமயமலையோடு ஓர் இனம் புரியாக் காதல்!

நான் போன வருடம் போகும்போது எனக்கு அங்க யாரையுமே தெரியாது. ஆனா, ரெண்டே நாள் ரைடில் எனக்கு ஏகப்பட்ட ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சாங்க. தாய்லாந்து, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா என பல நாடுகள்லருந்தும் ரைடர்கள் வந்திருந்தாங்க. அவங்க எல்லோருமே எனக்கு நண்பர்களா மாறினாங்க. காரணம் என்னன்னா, இந்தப் பயணத்துல நீங்க மரணத்தைத் தொட்டுட்டு வர்ற மாதிரியான த்ரில்லிங் அனுபவம் ஏற்படும். எனக்கு கார்துங் லா போகும் போதெல்லாம் கடுமையான AMS (Altitude Medical Sickness ). அதாவது, அதிக உயரத்தில் ஆக்ஸிஜன் கம்மியா இருக்கும்போது ஏற்படுற மூச்சுத்திணறல் வரும். அவ்ளோ கஷ்டப்பட்டேன். சண்டிகர்லருந்து மணாலி போகும்போது கடுமையான மழை. ஒரு இடத்துல சின்னதா ஸ்கிட்டாகி கீழே விழுந்திட்டேன். ஜஸ்ட் மிஸ்... அந்தப்பக்கம் ஆயிரம் அடிக்கும் மேலே பள்ளம். இப்படி, ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் அனுபவங்கள். இந்த மாதிரி சமயங்கள்ல நமக்குப் பழக்கமே இல்லாத ஆட்கள் நமக்கு உதவுவாங்க. அவங்க நமக்குச் சிறந்த நண்பர்களா உருவாகுவாங்க. என்னைக்கேட்டா, புல்லட் வெச்சிருக்குற ஒவ்வொருவரும் இமயமலைப் பயணத்துக்குப் போகணும், அப்பத்தான் அதைப் பத்தி முழுசா புரிஞ்சுக்க முடியும்...” என்று சொல்கிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த மனோஜ் கிருஷ்ணன்.

2400 கிமீ, 18 நாள்கள், கடுமையான பனி, அதிக உயரங்கள், கரடுமுரடான பாதைகள் எனக் கலக்கிய ஹிமாலயன் ஒடிசி, கடைசியாக சண்டிகரில் ஜூலை 23-ம் தேதி முடிந்தது. புழுதி படிந்த தங்கள் பைக், புதிதாகக் கிடைத்த நண்பர்கள்... பிரிய மனமில்லாமல், பல அனுபவங்களோடு பிரிந்துசென்றனர் ராயல் என்ஃபீல்டு ரைடர்கள்.

“இமயமலை நம் புனித ஸ்தலம் என்றால், இந்த ஹிமாலயன் ஒடிசிதான் அங்கு மேற்கொள்ளப்படும் புனிதப் பயணம்...”