Published:Updated:

வேகமெடுக்குமா வால்வோ வேகன்?

வேகமெடுக்குமா வால்வோ வேகன்?
பிரீமியம் ஸ்டோரி
வேகமெடுக்குமா வால்வோ வேகன்?

ஃபர்ஸ்ட் டிரைவ் : வால்வோ v90 க்ராஸ் கன்ட்ரி ராஜா ராமமூர்த்தி

வேகமெடுக்குமா வால்வோ வேகன்?

ஃபர்ஸ்ட் டிரைவ் : வால்வோ v90 க்ராஸ் கன்ட்ரி ராஜா ராமமூர்த்தி

Published:Updated:
வேகமெடுக்குமா வால்வோ வேகன்?
பிரீமியம் ஸ்டோரி
வேகமெடுக்குமா வால்வோ வேகன்?

ங்களூரில் வால்வோ அதிகாரிகள், புது V90 க்ராஸ் கன்ட்ரி காரை நம்மிடம் கொடுத்தபோது, மதியம் ஒரு மணி. அப்போது நன்றாக மழை பெய்து விட்டிருந்தது. போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் ஊர்ந்துகொண்டிருந்தன. V90 க்ராஸ் கன்ட்ரி வேகன் - 4.9 மீட்டர் நீளம், 2.0 மீட்டர் அகலம். பார்க்கவே பிரமாண்டமாக இருந்தது. டிராஃபிக் குறைந்ததும் போகலாமா என எண்ணிக்கொண்டிருக்கையில், ‘டிராஃபிக்னு யோசிக்கறீங்களா? ஓட்டிப்பார்த்துட்டுச் சொல்லுங்க!’ என நம்மைக் கிளப்பிவிட்டார் வால்வோ அதிகாரி. மங்களூர் நகரச் சாலைகளில் இந்த வால்வோவின் சைஸை உணர முடியவில்லை. வெளியில் குளிர, உள்ளே உயர்தரமான ஓட்டுநர் இருக்கையில் வென்டிலேஷனையும், ஸ்டீயரிங் வீல் ஹீட்டரையும் ஆன் செய்துவிட்டு ஓட்டினோம்.

வேகமெடுக்குமா வால்வோ வேகன்?

டிசைன்

ரசனையுள்ள மனிதர்களின் தேர்வு, எஸ்டேட் கார்களாகத்தான் இருக்கும். காபிக்குப் பிரபலமான குடகு மலைப்பகுதியின் மடிக்கேரிக்குச் செல்லப்போகிறோம் என்பதாலோ என்னவோ, Maple Brown கலர் காரைக் கொடுத்திருந்தது வால்வோ. காரின் LED டே டைம் ரன்னிங் லைட் வேறு, சாலையில் எல்லோர் கண்களையும் ஈர்த்தது.  க்ராஸ் கன்ட்ரி கார் என்பதால், காரின் கிரவுண்ட் கிளியரன்ஸும் (210 மிமீ) அதிகம். பக்கவாட்டில் பிளாஸ்டிக் கிளாடிங், காருக்கு எஸ்யுவி உணர்வை அளிக்கிறது. காரின் பின்பக்கம், வால்வோவின் ட்ரேட்மார்க் டெயில் லைட் டிசைன் கெத்தாக இருக்கிறது. பல்புகளின் வடிவமைப்புடன், பாடி பேனல் டிசைன் பொருந்துவது ரசனை. வேகன் ஸ்டைல் கார் என்பதால், காரின் டிக்கி பகுதியின் டிசைன் மிகவும் முக்கியமானது. இங்கே குறை சொல்ல முடியாத அளவுக்கு நேர்த்தியான டிசைன்.

உள்ளே

மங்களூர் டிராஃபிக்கைக் கடந்ததும், காரின் உள்ளலங்காரத்தின் மீது கண்களை மேய விட்டோம். ஒட்டுமொத்த கேபின் தரம், மிகச் சிறப்பாக இருக்கிறது. ஒவ்வொரு பாகமும் இழைத்து ரசித்து உருவாக்கப்பட்டிருக்கிறது. வண்ணங்களின் தேர்வு, வேலைப்பாடுகளின் நேர்த்தி என வால்வோ வாக்குகளை அள்ளுகிறது. கேபினில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அலுமினியம் பேனல்கள் வாவ்….!  பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி கார்களின் கேபின்களில் இல்லாத ஓர் உணர்வு, நிச்சயம் வால்வோவில் இருக்கிறது.

வேகமெடுக்குமா வால்வோ வேகன்?

ஸ்டீயரிங் வீல் பிடித்து ஓட்ட கச்சிதமாக இருக்கிறது. ஓட்டுநர் இருக்கைக்கு மசாஜ் வசதி இருந்தாலும், காரை ஓட்டும்போது பயன்படுத்தத் தோன்றுவதில்லை. முழுவதும் டிஜிட்டலில் உள்ள டயல்கள், மிகத் தெளிவாகவும் ஸ்டைலாகவும் இருக்கின்றன. அதிலேயே சாட்டிலைட் நேவிகேஷனும் தெரிவது சூப்பர். நீளமான காராக இருந்தாலும், ஓட்டுநர் இருக்கையில் இருந்து ரியர்வியூ மிரர் வழியாக, பின்னால் வரும் வாகனங்களைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது. 9-இன்ச் டச் ஸ்கிரீனில்தான், பெரும்பாலான கன்ட்ரோல்கள் இருக்கின்றன. இதில் இருப்பது மிகச் சிறந்த டச் ஸ்கிரீன். எந்த வெளிச்சத்திலும் தெளிவாக இருக்கிறது. ஆனால், கார் ஓட்டிக்கொண்டே ஏ.சி டெம்பரேச்சரை மாற்றுவதற்குக்கூட டச் ஸ்கிரீனைத் தடவிக்கொண்டிருப்பது சமயத்தில் கடுப்ஸ். முன்னால் இரண்டு இருக்கைகளுக்கும் இருக்கும் மசாஜ் வசதி, பின் இருக்கைகளுக்குக் கிடையாது. முன் இருக்கைகளுக்கு இருக்கும் தொடை சப்போர்ட் வசதியையாவது பின்னிருக்கைகளுக்குக் கொடுத்திருக்கலாம். பின்னிருக்கைக்கும், இரண்டு தனித்தனி டெம்பரேச்சர் கன்ட்ரோல் கொண்ட ஏ.சி வென்ட்டுகள் உள்ளன. பின்னிருக்கை கதவின் உள்பக்கம், ஒரு குட்டி காயின் பாக்ஸ் இருப்பது செம க்யூட்! டெஸ்லா கார்களின் கேபினைப் பார்த்தால், வால்வோ கார்கள் நினைவு வருகிறதா? அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. லேட்டஸ்ட் வால்வோ கார்களின் இன்டீரியர் டிசைனர் ஆண்டர்ஸ் பெல்தான், இப்போது டெஸ்லாவின் இன்டீரியர்களை டிசைன் செய்கிறார்.

வசதிகள்

இதுதாங்க V90 க்ராஸ் கன்ட்ரியோட பெரிய ப்ளஸ் பாயின்ட். காரில் உள்ள அனைத்து வசதிகளுமே ஸ்டாண்டர்டு. மடிக்கேரி மலைச் சாலைகளில் மழை தூற, காரின் பெரிய பனோரமிக் சன்ரூஃபைத் திறந்துவிட்டு ஓட்டுவது சொர்க்கம். முழுவதும் திறந்துவிட்டுக் காற்று வாங்கினால், இன்னும் சுகம். 19 ஸ்பீக்கர்கள் கொண்ட Bowers & Wilkins மியூஸிக் சிஸ்டம் ‘பேட்ட ராப்’-ஆக இருந்தாலும் சரி, மெல்லிசை மன்னர் - இசைஞானியின் மியூஸிக்காக இருந்தாலும் சரி, அற்புதமான அனுபவத்தைக் கொடுக்கிறது. 4-Zone கிளைமேட் கன்ட்ரோல், ஒரிஜினல் லெதர் இருக்கைகள்,  ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, எலெக்ட்ரிக் டெயில்கேட் ஆகிய வசதிகள், யதார்த்தமான பயன்பாட்டுக்குப் பெரிதும் உதவுகின்றன. ஆக்டிவ் ஹை பீம் வசதியும் அருமை!

வால்வோ என்றாலே பாதுகாப்பு வசதிகள்தானே! வழக்கமான பாதுகாப்பு வசதிகள் தவிர, புதிய IntelliSafe தொழில்நுட்பம், V90 க்ராஸ் கன்ட்ரி காரில் உள்ளது. இது ரேடார் அடிப்படையில் இயங்குகிறது. உங்கள் முன்னால் செல்லும் வாகனத்தின் வேகத்துக்கு ஏற்ப, தானாகவே இது தனது வேகத்தை மாற்றிக்கொள்கிறது. சின்ன வளைவுகளில் தானாகவே காரை வளைக்கிறது. ஆனாலும், நம் ஊர்ச் சாலைகளில் இதை முழுவதும் டெஸ்ட் செய்ய வேண்டும். இந்த காரை நாம் டெஸ்ட் செய்தபோது, முன்னால் சென்றுகொண்டிருந்த இன்னொரு வால்வோ கார் திடீரென பிரேக் போட்டது. நாம் சுதாரிப்பதற்குள் நம்மை அலெர்ட் செய்துவிட்டு, காரை தானாகவே பிரேக் போட்டு, சீட் பெல்ட்டையும் டைட் செய்துவிட்டது. (இதை மோட்டார் விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோவாகப் பார்க்கலாம்) அட சூப்பரா இருக்கே என்று பார்த்தால், எல்லா நேரங்களிலும் இதே போல் ரியாக்ட் செய்யவில்லை. ஆனால், நமக்கு முன்னால் சென்ற ஒரு ஆக்டிவா ஸ்கூட்டர் திடீரென பிரேக் போட, டக்கென்று நமது காரும் தானாக பிரேக் போட்டது. இந்தப் பாதுகாப்பு வசதி ஆபத்தில் இருந்து காப்பாற்றும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நம் ஊர்ச் சாலைகளில் இதை இன்னும் விலாவாரியாக டெஸ்ட் செய்ய வேண்டும்.

இன்ஜின்

V90 க்ராஸ் கன்ட்ரியில் இருப்பது, D5 2-லிட்டர் 4 சிலிண்டர் டீசல் இன்ஜின். இது 235 bhp சக்தியையும்,  48.93 kgm டார்க்கையும் அளிக்கிறது. இதில் PowerPulse எனும் தொழில்நுட்பம் இருக்கிறது. பொதுவாக, டீசல் இன்ஜினில் டர்போ லேக் இருப்பதால், குறைந்த ஆர்பிஎம்களில் டக்கென்று ஆக்ஸிலரேட்டரை அழுத்தினால் பவர் உடனடியாகக் கிடைக்காது. இந்தத் தொழில் நுட்பம் ஆக்ஸிலரேட்டரை மிதித்ததும், அழுத்தமான காற்றை டர்போ சார்ஜருக்குள் செலுத்துகிறது. இதனால், கார் உடனே வேகமெடுத்து பவர் டெலிவரியைக் கூட்டுகிறது. 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுக்கு பேடில் ஷிஃப்டர்கள்... ப்பா! செம பெர்ஃபாமென்ஸ். பேடில் ஷிஃப்டர்களுடன் மலைச் சாலைகளில், இந்தப் பெரிய காரை ஓட்டுவது மிக எளிதாக இருக்கிறது.

வேகமெடுக்குமா வால்வோ வேகன்?

ஓட்டுதல் அனுபவம், கையாளுமை

மங்களூரிலிருந்து மடிக்கேரி வரையிலான வளைவு நெளிவுகள் கொண்ட சாலையில், இவ்வளவு பெரிய வேகன் கார் ஓட்ட ஜாலியாக இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. ஆல்-வீல் டிரைவுடன், இந்த காருக்கெனப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட Pirelli P-Zero டயர்கள் கிரிப்பில் அசத்த, மலைச் சாலைகளில் காரை வளைத்து விரட்டினோம். பின்பக்கம் உள்ள ஏர்-சஸ்பென்ஷன், சாலையின் பெரும்பாலான சிறிய மேடு பள்ளங்களை உள்ளே கடத்துவதில்லை. பெரிய வீல்கள், நல்ல கிரவுண்ட் கிளியரன்ஸ் என்பதால், பெரிய பள்ளங்களையும் ஓரளவு வேகத்துடன் கடக்கலாம்.

எக்கோ, கம்ஃபோர்ட், ஆஃப்-ரோடு, டைனமிக் என நான்கு டிரைவிங் மோடுகள் உள்ளன. எக்கோ மோடில் இன்ஜின் ரெஸ்பான்ஸ் மிகவும் சாஃப்ட்டாக இருக்கிறது. ரிலாக்ஸான டிரைவுக்கு ஏற்ற மோடு இது. கம்ஃபர்ட் மோடு, நம் ஊர்ச் சாலைக்கு ஏற்ற நார்மல் மோடு. குறைந்த வேகங்களில் மட்டுமே ஆஃப் ரோடு மோடு இயங்கும். இதில் கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகரித்துவிடும். டைனமிக் மோடில் ஸ்டீயரிங், சஸ்பென்ஷன் இறுக்கமாகிவிடுகின்றன. இதில் பாடி ரோல் கொஞ்சம் இருந்தாலும், ஸ்டீயரிங்

வேகமெடுக்குமா வால்வோ வேகன்?

தேவைக்கும்அதிகமாகவே இறுக்கமாகிவிடுகிறது.

ங்களூரில் திரும்பவும் வால்வோவிடம், V90 க்ராஸ் கன்ட்ரி காரை ஒப்படைத்துவிட்டுத் திரும்பியபோது தோன்றியது இதுதான்! இந்தியாவில் வேகன் கார்கள் பொதுவாக எடுபட்டதே இல்லை. இந்த நிலையில் வால்வோ நிறுவனம், V90 க்ராஸ் கன்ட்ரியை தைரியமாகக் களமிறக்கியுள்ளது என்றால், அதற்குக் காரணம், இந்த கார் உண்மையில் ஒரு நல்ல தயாரிப்பு. ஒரு லக்‌ஸூரி செடானுக்கு உண்டான வசதிகள், எஸ்யுவிகளுக்கே உரிய ஆல்-வீல் டிரைவ், கிரவுண்ட் கிளியரன்ஸ் போன்ற யதார்த்தமான வசதிகள் என அசத்துகிறது. மேலும், பார்ப்பதற்குக் கொள்ளை அழகு. அதிக வசதிகள் கொண்ட இவ்வளவு பெரிய காரின் விலையும் 60 லட்சம் (எக்ஸ் ஷோரூம் விலை) என்பது ப்ளஸ்.