Published:Updated:

டிகுவானும் டூஸானும்! - விக்ரம் Vs வேதா

டிகுவானும் டூஸானும்! - விக்ரம் Vs வேதா
பிரீமியம் ஸ்டோரி
டிகுவானும் டூஸானும்! - விக்ரம் Vs வேதா

போட்டி : ஃபோக்ஸ்வாகன் டிகுவான் VS ஹூண்டாய் டூஸான்தமிழ்

டிகுவானும் டூஸானும்! - விக்ரம் Vs வேதா

போட்டி : ஃபோக்ஸ்வாகன் டிகுவான் VS ஹூண்டாய் டூஸான்தமிழ்

Published:Updated:
டிகுவானும் டூஸானும்! - விக்ரம் Vs வேதா
பிரீமியம் ஸ்டோரி
டிகுவானும் டூஸானும்! - விக்ரம் Vs வேதா

ஜினிக்குப் போட்டி கமல்; விஜய்க்குப் போட்டி அஜீத் என்பதுபோல், ஆட்டோமொபைல் மார்க்கெட்டிலும் சில பொசிஷன் விதிமுறைகள் உண்டு. சினிமா நடிகர்களின் மார்க்கெட்டை முடிவு செய்வது கலெக்ஷன்தான். அங்கே வசூல் என்றால், இங்கே விலை. இதை வைத்துத்தான் ‘இதுக்குப் போட்டி இது’ என்று முடிவு செய்கிறார்கள். அதேபோல் ஆடி Q3, பிஎம்டபிள்யூ X1 போன்ற ஜெர்மன் எஸ்யூவிகளுக்குப் போட்டியாகத்தான் டிகுவான் எனும் எஸ்யூவியை, 38.5 லட்சத்துக்கு சென்ற மாதம் களமிறக்கியது ஃபோக்ஸ்வாகன். இதில், ஆடியின் எஸ்யூவி 45 லட்சத்தில்தான் ஆரம்பிக்கிறது. பழைய மாடல் வேறு. பிஎம்டபிள்யூ X1 கிட்டத்தட்ட டிகுவானைவிட 1.5 லட்ச ரூபாய் அதிகம். அதைத் தவிர்த்துவிட்டு, மார்க்கெட்டில் உள்ள சாஃப்ட் ரோடர்களை ஜூம் செய்து பார்த்தால், ‘என்னையும் விளையாட்டுக்குச் சேர்த்துக்குங்க’ என்று வண்டியில் ஏறுகிறது ஹூண்டாயின் புதிய டூஸான். விலையிலும் 7 லட்சம் வித்தியாசம். அப்படியென்றால், இரண்டையும் மோத விடுவதுதானே சரி?!

டிகுவானும் டூஸானும்! - விக்ரம் Vs வேதா

மிரர் to மிரர்

க்ராஸ்ஓவர் எஸ்யூவிதான் - ஆனால், சாஃப்ட் ரோடர்கள் என்று இதைச் செல்லமாக அழைக்கலாம். ஏனென்றால், லேடர் ஃப்ரேம் சேஸியில் முரட்டுத்தனமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ‘லுக்கிங் குட்.. ஃபீலிங் குட்’ - இதுதான் சாஃப்ட் ரோடர்களுக்கான ஃபார்முலா. அந்த வகையில் டூஸான் இங்கே ஸ்கோர் செய்கிறது. சான்டா ஃபீ காருக்கு அடுத்து ஹூண்டாயின் இரண்டாவது மிகப் பெரிய எஸ்யூவிதான் டூஸான். ரோடு பிரசன்ஸும் அருமை. டிரைவர் சீட்டில் உட்கார்ந்தால், வெளியே நடப்பது எல்லாமே தெரிகிறது. பானெட்டின் பாதி வரை நீள்கிற ஹெட்லைட்டுகளும், அந்தப் பெரிய அறுங்கோண வடிவ கிரில்லும் ‘மென்மை பாதி, ஆண்மை பாதி’ என்று கலந்துகட்டி மயக்குகிறது. வீல் ஆர்ச்சுகளும், பின்பக்க விண்டோ லைன் டிசைனும் ஹூண்டாய் கார்களுக்குப் புதுசு. இருந்தாலும், டெயில் லைட்டுகளில் கொஞ்சம் புதுமையைப் புகுத்தியிருக்கலாம். நமக்கு i20-ன் டெயில் லைட்டுகளை நகாசு செய்ததுபோல் தோன்றுகிறது.

டிகுவானும் டூஸானும்! - விக்ரம் Vs வேதா

டிகுவானில் ஹெட் லைட் to டெயில் லைட் வரை எல்லாமே நேர்கோடு டிசைன்தான். எறும்புகள் ஒரே நேர்கோட்டில் ஊர்ந்து செல்வதுபோல், அந்தக் கோடுகள் அழகாக LED ஹெட்லாம்ப்புகளில் வந்து சேர்வது அழகு. ஒரு எஸ்யூவியில் பம்பர் டிசைனில் இம்புட்டு அடக்கமா? பூந்து விளையாடியிருக்கலாமே? சைடு புரொஃபைலும் அப்படித்தான். ஆனால், இதுவும் அழகுதான். பின்பக்கம் டெயில் லைட்டுகள், ஹாக்கி ஸ்டிக்கை நமக்கு நினைவுபடுத்துகின்றன. பின்பக்க பம்பரைச் சுற்றி, மெல்லிய க்ரோம் ஸ்ட்ரிப், க்யூட். எல்லாமே அழகுதான். டூஸான் போலவே 18 இன்ச் வீல்கள். எஸ்யூவிபோல் பிரமாண்ட டிசைனை விரும்புபவர்கள், டிகுவானைப் பார்த்து விலகிவிடுவார்கள். ஏனென்றால், இது செல்லமான டிசைன்.

உள்ளே

எங்கோ பார்த்தது மாதிரி இருப்பதால், டச் ஸ்கிரீனைத் தாண்டி ‘வாவ்’ என்று வியப்பதற்கு இரண்டிலுமே அம்சங்கள் இல்லை. ஆனால், இரண்டுமே நீட் அண்டு க்ளீன். டூஸானில் பீஜ் மற்றும் கறுப்பு நிற தீம் கொண்ட இன்டீரியர் கண்ணைப் பறிக்கிறது. இதுவே டிகுவானில் ‘ஆல் பிளாக்’ தீம், கெத்து. இது எல்லோருக்கும் பிடிக்குமா என்று தெரியவில்லை. இரவு நேரங்களில் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் உள்ள LED ஆம்பியன்ட் லைட்டிங், வெளியிலிருந்து பார்த்தாலே நச்சென இருக்கிறது.

டிகுவானும் டூஸானும்! - விக்ரம் Vs வேதா
டிகுவானும் டூஸானும்! - விக்ரம் Vs வேதா

‘விசாலமா இருக்கே’ என்று டூஸானைவிட டிகுவானைப் பார்த்துத்தான் சொல்ல முடிகிறது. அந்தளவு ‘சென்ஸ் ஆஃப் ஸ்பேஸ்’. பெரிய ஜன்னல்களும், பனோரமிக் சன் ரூஃபும்தான் இதற்குக் காரணம். பேஸ் வேரியன்ட் டூஸானில் சன் ரூஃப் இல்லை என்பது வருத்தம். மற்றபடி இரண்டு கார்களிலும் ஆப்பிள் கார் ப்ளே/ஆண்ட்ராய்டு ஆட்டோ உடனான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் MID (Multi Information Display) உண்டு. டச் ஸ்கிரீனைப் பயன்படுத்தும்போதே, இரண்டிலும் ஒரு ரிச் லுக் கிடைக்கிறது .

லெதர் சீட்டுகளிலும் குறை வைக்கவில்லை டூஸானும் டிகுவானும். டிகுவானில் முன் சீட்டுகள் பட்டுபோன்று மென்மையாக இருக்கின்றன. இரண்டிலுமே பவர்டு டிரைவர் சீட்டுகள், முதுகுத் தண்டுக்கு ஏற்றவாறு சீட்டிங் பொசிஷனை அட்ஜஸ்ட் செய்யும் அட்ஜஸ்டபிள் லம்பர் சப்போர்ட்டும் உள்ளன. டிகுவானில் மட்டும்தான் டிரைவர் சீட்டுக்கும் விங் மிரர்களுக்கும் மெமரி அட்ஜஸ்ட் இருக்கிறது. அதாவது, உங்கள் சீட்டிங் பொசிஷனை கஷ்டமே இல்லாமல் ரீ-செட் செய்துகொள்ளலாம்.

டிகுவானில் இரண்டாவது வரிசை சீட்டுகளில், 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் இருக்கிறது. டூஸானில் முன்பக்கம் இரண்டு ஸோன்களும், பின்பக்கம் இரண்டு ஏ.சி வென்ட்களும் மட்டும் கொடுத்திருக்கிறார்கள். அப்படியென்றால், பின் வரிசைப் பயணிகளுக்கு சொகுசு, டிகுவானில்தான். அதேபோல், லெக் ரூமும் தாரா..ஆ..ளம். இதுவே, டூஸானில் பின்பக்க சீட் அகலமாக இருக்கிறது. வழக்கம்போல் டிரான்ஸ்மிஷன் டனல்... ஆனால் அவ்வளவாகத் தொந்தரவு செய்யவில்லை. 3 பேர் வசதியாக உட்காரலாம்.  ஹூண்டாயிலும் தொடைக்கான சப்போர்ட்டுடன் ரியர் சீட்டுகள் சொகுசு. இதுவே டிகுவானின் பின்பக்க இருக்கை தட்டையாக இருக்கிறது என்பதுடன், வெளிச்சாலையும் தெரியவில்லை.

டிகுவானில் 615 லிட்டர் டிக்கி இடவசதி; டூஸானில் 513 லிட்டர்தான். இரண்டு கார்களின் ஸ்ப்ளிட் சீட்டையுமே 60:40 விகிதத்தில் மடித்துக்கொள்ளலாம். இரண்டிலும் ஸ்பேர் டயர் உண்டு. டிகுவானில் இருப்பது ஸ்பேஸ் சேவர் டயர்தான். ஆனால், டிகுவானுக்கு ஸ்பேர் டயர் தேவைப்படாது என்கிறது ஃபோக்ஸ்வாகன். காரணம், செல்ஃப் சீலிங் முறையிலான டயர்கள் இருப்பதால், பஞ்சர்களின்போது உள்ளே இருக்கும் ஜெல், தானாக சீல் வைத்து மூடிக் கொள்ளுமாம். இதனால் காற்று இறங்காது. வசதிகளைப் பொறுத்தவரை டிகுவான் கலக்குகிறது. சன் ரூஃப், ரெயின் சென்ஸிங் வைப்பர்ஸ், கேபின் லைட் அட்ஜஸ்ட்மென்ட், பேடில் ஷிஃப்டர், ஃபுல் LED ஹெட்லைட்ஸ் உண்டு. டூஸானில் லோ பீமுக்கு மட்டும்தான் டூயல் LED. ஹை பீமுக்கு வழக்கமான ஹாலோஜன் லைட்தான். பாதுகாப்பில் இரண்டுமே கில்லி. 6 காற்றுப்பைகள், ABS, ESP, எலெக்ட்ரிக் டெயில் கேட் ஆகியவை டிகுவானிலும் டூஸானிலும் உண்டு.

டிகுவானும் டூஸானும்! - விக்ரம் Vs வேதா

இன்ஜின்

டிகுவானில் பெட்ரோல் இன்ஜின் இல்லை. அதனால், டூஸானின் டீசல் மாடலையே போட்டிக்கு எடுத்துக் கொண்டோம். 1968 சிசி, 4 சிலிண்டர், 143bhp, 34kgm டார்க் - கிட்டத்தட்ட ஸ்கோடா ஆக்டேவியாவின் ஜெராக்ஸ்தான் டிகுவான். 7 ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் நல்ல தரம். ஹூண்டாயைவிட அமைதியாக இருக்கிறது. மிதிக்க மிதிக்க, நம்மை மதித்துச் செயல்படுகிறது இந்த இன்ஜின். அந்தளவு ரெஸ்பான்ஸிவ். பேடில் ஷிஃப்டர் பயன்படுத்தி டிகுவானை விரட்டுவது, செம ஃபன்.

டிகுவானைவிட டூஸானில் எல்லாமே அதிகம். 2.0லிட்டர் டர்போ டீசல், அதற்கேற்றபடி ஹார்டு. 185bhp, 40kgm டார்க்... ஆனால், 1 கியர் குறைவு. டூஸானில் இருப்பது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்தான். மேனுவல் + ஆட்டோமேட்டிக். பெர்ஃபாமென்ஸ், செம ஸ்மூத். காரணம், டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோ கியர்பாக்ஸ். டூஸானில் ஃப்ரன்ட் வீல் டிரைவ் சிஸ்டம்தான். டிகுவானில் Haldex 4 வீல் டிரைவ் சிஸ்டம். ஆஃப் ரோடுக்கும் அசத்தலாக இருந்தது. 2 வீல் டிரைவ் சிஸ்டம்தான் வேகப் போட்டியில் கலக்கும். 0-100 கி.மீ வேகத்தை 10.55 விநாடிகளில் கடந்து அசத்தியது டிகுவான். இது டூஸானைவிட 1 விநாடிதான் அதிகம். ஆனால், 160 கி.மீ வேகத்தைத் தாண்டினால், டிகுவான் லேசாகத் திணறுகிறது. இதுவே டூஸான் 170 கி.மீ வரை ஈஸியாக க்ரூஸ் செய்ய முடிந்தது. டிகுவானில், 80-100 கி.மீ வேகத்தில் விங் மிரர்களில் காற்று மோதும் சத்தம் கேட்கும் அளவுக்கு இன்ஜின் ரிஃபைன்மென்ட்  ஓகே.

டிகுவானில் ஆஃப் ரோடுக்கும், சாதாரண டிரைவிங்கும் தனித்தனியாக 4 மோடுகள் உள்ளன. Snow, Normal, Off-road, Off-road Individual - இவை ஆஃப் ரோடுக்கு. Eco, Normal, Sport, Individual - இவை சாதாரண டிரைவிங்குக்கு. ஆஃப் ரோடு மோடில் எல்லாவற்றிலும் ஸ்டீயரிங் லைட் வெயிட் ஆவதை ஃபீல் செய்ய முடிகிறது. இன்ஜின் ரெஸ்பான்ஸும் மாறுகிறது. ஹில் டிஸென்ட், ஹில் ஹோல்டு ஆப்ஷன்கள் அருமை.

டூஸானில் மூன்று மோடுகள். Eco, Normal, Sport. ஸ்போர்ட் மோடில் பெர்ஃபாமென்ஸ், மெர்சல் பண்ணுகிறது. நெடுஞ்சாலையில் பறக்கும்போது திரும்பிப் பார்த்தால், டிகுவான் தூரத்தில் இருக்கிறது. இது செமையான ஹைவே க்ரூஸர்.

கையாளுமை

ஃபோக்ஸ்வாகனின் MQB பிளாட்ஃபார்மில் ரெடியாகி இருக்கிறது டிகுவான். டிரைவிங் டயனமிக்கைச் சந்தேகப்பட வேண்டி யதில்லை. ஓட்டுதல் தரம், நெடுஞ்சாலையில் சூப்பர். ஆஃப்ரோடிலும் ரொம்ப அலட்ட வில்லை டிகுவான். அதாவது, கம்ஃபர்ட் கிடைப்பதில் சிக்கல் இல்லை. இருந்தாலும், டூஸானின் ஹேண்ட்லிங் ரொம்பப் புத்திசாலித்தனம். தாறுமாறு ரோடுகளில்கூட, ‘வேகத்தைக் குறைக்காதீங்க; அப்படியே போகலாம்’ என்று தைரியமூட்டுகிறது  டூஸான். அதாவது, அதிவேகங்களில் ஸ்டெபிலிட்டி குறையவில்லை. மொத்தத்தில் இரண்டுக்குமே ஷொட்டு.

‘விக்ரம் வேதா’ படம் மாதிரி, இது கொஞ்சம் கஷ்டமான க்ளைமேக்ஸ்தான். டிசைன், கையாளுமை,

டிகுவானும் டூஸானும்! - விக்ரம் Vs வேதா

ஓட்டுதல் தரம், பெர்ஃபாமென்ஸ் என்று எல்லாவற்றிலுமே ‘விக்ரம்’ மாதவன் போல பெப்பியாக அசத்துகிறது டிகுவான். ஃபோக்ஸ்வாகனின் பாறை போன்ற கட்டுமானத் தரம், உயர் தர ஓட்டுதல் ஃபீலிங், ஆஃப் ரோடிங் எல்லாமே ‘வேதா’ விஜய் சேதுபதி போல டஃப். ஆனால், இதற்குக் கொடுக்கக் கூடிய விலை, 38.5 லட்ச ரூபாய்.

இவை எல்லாமே டூஸானிலும் கிடைக்கின்றன. முக்கியமாக ஸ்டேட்டஸ், கம்ஃபர்ட், பவர் - இந்த மூன்றிலும் டூஸான் டிகுவானுடன் நேருக்கு நேர் மோதுகிறது. டூஸானைவிட டிகுவான் சொல்லியடிக்கும் இடம் ஆஃப் ரோடிங். எல்லா நேரங்களிலும் ஒரு எஸ்யூவிக்கு ஆஃப்ரோடிங் தேவைப்படுமா என்பதைத் தாண்டி, இதற்கு நாம் எக்ஸ்ட்ராவாகக் கொடுக்கக்கூடிய விலை கிட்டத்தட்ட 7 லட்சம். ஆஃப் ரோடிங் மோடு இல்லையென்றாலும், கரடுமுரடான சாலைகளை டிகுவானுக்கு இணையாகச் சமாளிக்கிறது டூஸான் என்பது நிம்மதி தருகிறது. மேலே சொன்ன மூன்று விஷயங்களையும் தாண்டி, நாம் ஏற்கெனவே சொன்னதுபோல் விலையும் ஒரு காரை பொசிஷன் செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அப்படிப் பார்க்கையில், விலைக்கேற்ற தரம் எனும் விஷயமும் டூஸானுடன் சேர்ந்துகொள்கிறது. டூஸானுக்கு வாழ்த்துகள்!