Published:Updated:

வியட்நாம் டு இந்தியா - யமஹாவின் Fi ஸ்கூட்டர்!

வியட்நாம் டு இந்தியா - யமஹாவின் Fi ஸ்கூட்டர்!
பிரீமியம் ஸ்டோரி
வியட்நாம் டு இந்தியா - யமஹாவின் Fi ஸ்கூட்டர்!

ஃபர்ஸ்ட் லுக்: யமஹா நோஸா கிராண்டே தமிழ்

வியட்நாம் டு இந்தியா - யமஹாவின் Fi ஸ்கூட்டர்!

ஃபர்ஸ்ட் லுக்: யமஹா நோஸா கிராண்டே தமிழ்

Published:Updated:
வியட்நாம் டு இந்தியா - யமஹாவின் Fi ஸ்கூட்டர்!
பிரீமியம் ஸ்டோரி
வியட்நாம் டு இந்தியா - யமஹாவின் Fi ஸ்கூட்டர்!

து ஸ்கூட்டர்கள் காலம். ஹோண்டாவிலிருந்து க்ளிக் வந்துவிட்டது. இப்போது யமஹாவும் தன் பங்குக்கு ரெடியாகிவிட்டது. நோஸா கிராண்டே எனும் ஸ்கூட்டர் யமஹாவிலிருந்து தயார். சென்னையில் இதற்கான சோதனை ஓட்டத்தை ஆரம்பித்துவிட்டது யமஹா. ஸ்பை போட்டோவிலிருந்து தப்பித்தாலும், நோஸா கிராண்டே பற்றிய ஒரு சிறு குறிப்பு.

2014-ல் வியட்நாமில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கூட்டர்தான் நோஸா கிராண்டே. இப்போது 125 சிசி ஸ்கூட்டர்களுக்குத்தானே இந்தியாவில் மவுசு! நோஸாவில் இருப்பது 125 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்தான். 8.2bhp பவரும் 0.97kgm டார்க்கும் கொண்டிருக்கிறது. பெண்களும் இதை எளிதில் கையாள வேண்டும் என்பதற்காக, இதன் எடை 100 கிலோவுக்குள்தான் இருக்குமாம். லைட் வெயிட் ஸ்கூட்டர் என்பதால், பெர்ஃபாமென்ஸிலும் சொல்லியடிக்கலாம். வளைவுகள், அப்படியே ஃபஸினோவை நினைவுபடுத்துகின்றன.

வியட்நாம் டு இந்தியா - யமஹாவின் Fi ஸ்கூட்டர்!

சில இன்ட்ரஸ்டிங்கான வசதிகள் நோஸா கிராண்டேயில் உண்டு. முக்கியமாக, Apron-Mounted Fuel Filler. அதாவது, ஸ்கூட்டரின் இடதுபக்கம் பெட்ரோல் டேங்க்கின் வாய் இருக்கும். பைக்குகள் மாதிரி சீட்டில் உட்கார்ந்தபடியே சாவியைத் திருகி பெட்ரோல் நிரப்பிக்கொள்ளலாம். மஹிந்திரா சிம் ரோடியோவுக்குப் பிறகு இந்த வசதிகொண்ட ஸ்கூட்டர் இதுதான். சீட்டுக்கு அடியில் இடவசதி அதிகம்கொண்ட ஸ்கூட்டரும் இதுவாகத்தான் இருக்கும். 27 லிட்டர். வியட்நாம் விதிமுறைகளுக்கு ஏற்ப இதன் சீட் உயரம் 790 மிமீ. இது இந்திய மக்களுக்குக் கொஞ்சம் உயரம் அதிகம்தான். இரண்டு பக்கமும் 12 இன்ச் அலாய் வீல்கள்; முன்பக்கம் டிஸ்க் கொண்டு வரலாம்.

இங்கு வரும்போது, இதன் ஒரிஜினல் Fi சிஸ்டம் இருக்குமா எனத் தெரியவில்லை. அப்படி Fi வந்தால், ஃப்யூல் இன்ஜெக்ஷன் கொண்ட ஒரே ஸ்கூட்டரும் நோஸா கிராண்டேதான். அநேகமாக, இதன் எக்ஸ் ஷோரூம் விலை கிட்டத்தட்ட 65,000 ரூபாயாக இருக்கலாம். ஏப்ரிலியா, ஆக்ஸஸ், வெஸ்பாவுக்குக் கடும்போட்டி காத்திருக்கிறது.