Published:Updated:

லிட்டர் க்ளாஸில் பெட்டர் பைக்!

லிட்டர் க்ளாஸில் பெட்டர் பைக்!
பிரீமியம் ஸ்டோரி
லிட்டர் க்ளாஸில் பெட்டர் பைக்!

ஃபர்ஸ்ட் ரைடு : 2017 சுஸூகி GSX-R1000R தமிழ்

லிட்டர் க்ளாஸில் பெட்டர் பைக்!

ஃபர்ஸ்ட் ரைடு : 2017 சுஸூகி GSX-R1000R தமிழ்

Published:Updated:
லிட்டர் க்ளாஸில் பெட்டர் பைக்!
பிரீமியம் ஸ்டோரி
லிட்டர் க்ளாஸில் பெட்டர் பைக்!

ம் ஊர் ஜிக்ஸர் SF பைக்கின் இன்ஸ்பிரேஷன், GSX சூப்பர் பைக்தான். அதன் லேட்டஸ்ட் வெர்ஷன்தான் இந்த GSX-R1000R. ‘கிங் ஆஃப் சூப்பர் பைக்’ என்று சுஸூகி இதை அறிவித்திருக்கிறது. பார்த்தவுடனே ‘வாவ்’ போட வைத்தது GSX-R1000R. முன்பக்கம், ஒரு வௌவாலை நினைவுபடுத்துகிற ஹெட்லைட்டுகள்தான் GSX-ன் ஸ்பெஷல். இப்போது ஓவல் வடிவத்தில் மாறியிருக்கிறது. முன்பைவிட பைக் குறுகலாகி இருப்பதால், சீட்டில் ஏறி உட்கார்ந்தவுடன் கிளப்பச் சொல்லி ஆவலைத் தூண்டுகிறது.

லிட்டர் க்ளாஸில் பெட்டர் பைக்!

பழைய பைக்கைவிட எலெக்ட்ரானிக் மயமாகிவிட்டது சுஸூகி GSX-R1000R. 5 ஆக்ஸிஸ் IMU (Inertial Measurement Unit) இந்த பைக்கில் இருக்கிறது. 10 லெவல் ட்ராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், லோ-RPM அசிஸ்ட் சிஸ்டம், ஏபிஎஸ் என்று எல்லாமே இதில் அடங்கும். அதாவது, நீங்கள் பைக்கை வளைத்துத் திருப்பும் திசைக்கு ஏற்ப பிரேக்கிங்கையும் ட்ராக்ஷன் கன்ட்ரோலையும் எலெக்ட்ரானிக்கலாக முடிவு செய்யும். அப்படியென்றால், அதிகமான வேகங்களில் அழுத்தமாக பிரேக் பிடிக்கும்போதுகூட உங்களை ஸ்கிட் ஆக்கிக் கீழே விழ வைக்காது. அதேபோல், ‘வ்வ்வ்ர்ர்ரூம்’ ஸ்டெபிலிட்டி இன்னும் கூடியிருக்கிறது.  ஃபோர்க்கிலும் இதற்கான விஷயம் அடங்கியிருக்கிறது. சுஸூகியின் மற்ற சூப்பர் பைக்குகளில் இருப்பது Big Piston Fork என்னும் அசெம்பிளி. இதில் அதற்கு அண்ணன் BFF (Balance Free Fork). இந்த சஸ்பென்ஷன் நம்மை வேற லெவலுக்குக் கொண்டுபோகிறது. விர்ரெனக் கிளம்பும்போதும் சரி; தடாலென பிரேக் பிடிக்கும்போதும் சரி - அத்தனை துல்லியம். செம ஸ்மூத். ஜெர்க் ஆவது... ஸ்கிட் ஆவது என்ற பேச்சுக்கே இடமில்லை.

லிட்டர் க்ளாஸில் பெட்டர் பைக்!

6 கியர்கள். சில கார்னர்களில் கியரைக் குறைக்கவே விடவில்லை GSX-R1000R. 6-வது கியரிலேயே பைக் அதே வேகத்தில் திணறாமல் திரும்புகிறது. 1000 சிசி, 4 சிலிண்டர் இன்ஜின், 202bhp பவர், 11.8kgm டார்க் என்று பவர் தெறிக்கவிடுகிறது. எல்லா பைக்குகளிலும் ஆர்பிஎம் ரெட்லைனைத் தொட்டதும் பவர் டெலிவரி டல் ஆகிவிடும். ஆச்சர்யமாக, இதில் 10,000 RPM-க்குப் பிறகும்கூட, த்ராட்டில் ரெஸ்பான்ஸ் இன்னும் எகிறுகிறது. அதுதான் சுஸூகியின் VVT தொழில்நுட்பம்! இதை அனுபவிக்க சுமார் 26 லட்சம் கொடுக்க வேண்டும்.

மற்றபடி கவாஸாகி ZX-10R, பிஎம்டபிள்யூ S1000R, யமஹா YZF-R1, ஹோண்டா CBR Fireblade போன்ற லிட்டர் க்ளாஸ் பைக்குகளுடன் ஒப்பிடும்போது, இது சூப்பர் பைக்கில் ராஜாவா என்பதை, இதன் வாடிக்கையாளர்கள்தான் உறுதி செய்ய வேண்டும்.