Published:Updated:

இந்தியாவின் டாப் ட்ரெண்டிங் ஸ்கூட்டர்ஸ்!

இந்தியாவின் டாப் ட்ரெண்டிங் ஸ்கூட்டர்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
இந்தியாவின் டாப் ட்ரெண்டிங் ஸ்கூட்டர்ஸ்!

ட்ரெண்ட்: ஸ்கூட்டர் தமிழ்

இந்தியாவின் டாப் ட்ரெண்டிங் ஸ்கூட்டர்ஸ்!

ட்ரெண்ட்: ஸ்கூட்டர் தமிழ்

Published:Updated:
இந்தியாவின் டாப் ட்ரெண்டிங் ஸ்கூட்டர்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
இந்தியாவின் டாப் ட்ரெண்டிங் ஸ்கூட்டர்ஸ்!

ண்ணனுக்குப் போட்டி தம்பி; அக்காவுக்குப் போட்டி தங்கை என்பதுபோல், ஆட்டோமொபைல் மார்க்கெட்டில் டிவிஎஸ் பைக்குக்குப் போட்டி டிவிஎஸ் ஸ்கூட்டராகவோ, யமஹா பைக்குக்குப் போட்டி யமஹா ஸ்கூட்டராகவோ இருக்கும். ஆம்! ஸ்கூட்டர்கள், எப்போதுமே பைக்குக்கு டஃப் கொடுப்பவை. அதிலும், பல சாய்ஸ்கள் வேறு... எந்த ஸ்கூட்டர்தான் வாங்குவது? இந்த ‘டயலமா’ எல்லோருக்குமே இருக்கும். மார்க்கெட்டில் நன்கு விற்பனையாகக் கூடிய, நம்பி வாங்கக் கூடிய டாப்-6 ஸ்கூட்டர்கள் இவை.

இந்தியாவின் டாப் ட்ரெண்டிங் ஸ்கூட்டர்ஸ்!

2000-த்தில்தான் ஆக்டிவா பிறந்தது. இதுவரை 1.5 கோடிக்கும் அதிகமான ஆக்டிவாக்கள் விற்றுத் தீர்ந்துவிட்டன. இப்போது மூன்று வகை ஆக்டிவாக்கள்தான் மார்க்கெட்டில் செம ஆக்டிவ். ஆக்டிவா 4G, ஆக்டிவா-i, ஆக்டிவா 125. இங்கே நமது சாய்ஸ், ஆக்டிவாவின் டாப் செல்லிங் மாடல். அதாவது, ஆக்டிவா 4G. இது BSIV விதிகளின்படி வெளிவந்திருக்கும் 109 சிசி, 8 bhp கொண்ட இன்ஜின். டார்க், 0.89kgm. மற்ற ஸ்கூட்டர்களைப்போல இதில் வசதிகள் எல்லாம் இல்லை. இப்போதுதான், சீட்டுக்கு அடியில் மொபைல் சார்ஜிங் போர்ட்டுக்கே வந்திருக்கிறார்கள். ஹோண்டாவில் இப்போது எல்லாமே ட்யூப்லெஸ் டயர்கள்தான். Maintenance Free பேட்டரி உண்டு. இதில் CBS எனும் கம்பைண்ட் பிரேக்கிங் சிஸ்டம், சாலையில் நம்பலாம். இது, முழுக்க முழுக்க மெட்டல் பாடி கொண்டது. எனவே, கட்டுமானத்துக்கும் நம்பகத்தன்மைக்கும் பெயர்பெற்றது, ஆக்டிவா 4G.

இந்தியாவின் டாப் ட்ரெண்டிங் ஸ்கூட்டர்ஸ்!

ம்பினால் நம்புங்கள். ஜூபிட்டர்தான் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் இரண்டாவது ஸ்கூட்டர். ஜூபிட்டரின் வெற்றி, இதன் கம்ஃபர்ட்டிலும் வசதியிலும்தான் அடங்கியிருக்கிறது. பெண்களுக்கு இது மிகவும் பிடித்த ஸ்கூட்டர். சீட்டைத் திறக்காமலே பெட்ரோல் நிரப்பும் வசதி, மொபைல் சார்ஜிங் பாயின்ட், ஈஸியான சென்டர் ஸ்டாண்ட், ஸ்கூட்டர் திருடு போகாமல் இருக்க இக்னீஷன் லாக் கவர் - இப்படி  அதிக வசதிகள். பெரிய ப்ளஸ் - இதன் முன்பக்க டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனும், பின்பக்கம் உள்ள கேஸ்-சார்ஜ்டு மோனோஷாக் சஸ்பென்ஷனும்தான். இது தவிர, இருபுறமும் 12 இன்ச் வீல்கள், நீளமான 1,275 மிமீ வீல்பேஸ், நல்ல ஸ்டெபிலிட்டியைத் தருகிறது. ஜூபிட்டரில் கணவன் மனைவி குழந்தை என்று ஓர் அளவான குடும்பம் வசதியாகப் பயணிக்கலாம். உயரமானவர்கள் கால் இடிக்காமல் பயணிக்க முடிகிற ஸ்கூட்டர், ஜூபிட்டர். ஹோண்டாவுக்கு CBS மாதிரி டிவிஎஸ்-க்கு SBS (Sync Brake System). டிரம், டிஸ்க் இரண்டுமே உண்டு. டிவிஎஸ், லிட்டருக்கு 62 கி.மீ மைலேஜ் தரும் என்கிறது. ஆனால், நம் வாசகர்கள் 45 முதல் 48 வரை தருவதாகச் சொல்கிறார்கள்.

இந்தியாவின் டாப் ட்ரெண்டிங் ஸ்கூட்டர்ஸ்!

ற்ற நிறுவனங்களை ஒப்பிடும்போது, சுஸூகிக்கு வயது குறைவு. 10 வயதுதான் முடிந்திருக்கிறது. அதனால், வீதிக்கு வீதி சர்வீஸ் சென்டர்களை எதிர்பார்க்க முடியாது. பட்டர் ஸ்மூத் இன்ஜின், ஈஸி ஹேண்ட்லிங் - ஆக்ஸஸின் பலம் இவைதான். பவர்ஃபுல் 125 சிசியில் லைட் வெயிட் ஸ்கூட்டர் ஆக வந்துள்ளது ஆக்ஸஸ். ஜூபிட்டர் போலவே முன்பக்கம் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் இருக்கிறது. ஆனால், முன்பக்கம் 12 இன்ச் வீலும், பின்பக்கம் 10 இன்ச் வீலும்தான். ட்யூப்லெஸ் டயர்கள் என்பது ஆறுதல். சில ஸ்கூட்டர்கள்போல ஸ்டார்ட்டிங் டிரபுள் புகார், ஆக்ஸஸில் வந்ததில்லை. கார் போல, ஒன்-டச் ஸ்டார்ட் பெண்களுக்கு ரொம்பப் பிடிக்கும். முன்பக்க ஸ்டோரேஜ் பாக்ஸும் லவ்லி. ஹோண்டா, டிவிஎஸ் போல கம்பைண்டு பிரேக்கிங் சிஸ்டம் இல்லை. ஆனால், டிஸ்க் பிரேக் மற்றும் அலாய் வீல் ஆப்ஷனலாக வருகிறது. ஸ்டீல் பாடி என்பதும், இதன் எடை 102 கிலோ என்பதும்தான் ஹேண்ட்லிங்குக்குப் பக்கா பலம். புது ஆக்ஸஸ், ஒரு பக்கா ஃபேமிலி ஸ்கூட்டர்.

இந்தியாவின் டாப் ட்ரெண்டிங் ஸ்கூட்டர்ஸ்!

விற்பனையில் ஆக்டிவாவுக்கு டஃப் கொடுக்கும் இன்னொரு ஸ்கூட்டர், மேஸ்ட்ரோ எட்ஜ். ஹீரோவில் இருந்து டூயட்டும், மேஸ்ட்ரோ எட்ஜும் ஒன்றாகத்தான் வெளிவந்தன. எட்ஜ், க்ளிக் ஆகிவிட்டது. டூயட்டைவிட 6 கிலோ குறைந்த எடை, (எடையும் சிசியும் ஒண்ணு) முன்பக்கம் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், ட்யூப்லெஸ் டயர்கள் என்று இளசுகளின் சாய்ஸாக மாறிவிட்டது. ஸ்கூட்டர் மார்க்கெட்டைப் பொறுத்தவரை, வசதிகள்தான் முதல் செல்லிங் பாயின்ட். ஹீரோவின் பைக்குகளைப ்போலவே சைடு ஸ்டாண்ட் இண்டிகேட்டர், சீட்டைத் திறக்காமலே பெட்ரோல் நிரப்பும் வசதி, மொபைல் சார்ஜர், சீட்டுக்கு அடியில் 22 லிட்டர் இடவசதி, மல்ட்டி ஃபங்ஷனல் கீ (ஒரே சாவி; டேங்க் திறக்க... சீட்டைத் திறக்க, இக்னீஷன் ஆன் பண்ண), பூட் லைட், பிரேக் லாக் கிளாம்ப் என்று வசதிகளை அள்ளித் தெளித்துள்ளது ஹீரோ. இது தவிர, IBS (Integrated Braking System), ஒரு பிரேக் பிடித்தாலே இரண்டு வீல்களுக்கும் பிரேக்கிங் ஃபோர்ஸ் அப்ளை ஆவது. ஆண்களுக்கு என்று அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்கூட்டரில், இப்போது பெண்களை அதிகம் பார்க்க முடிகிறது. கஸ்ட்டோ போல, சீட் அட்ஜஸ்ட்மென்ட் இருந்தால், இன்னும் நல்லா இருக்கும் என்பது பலரது எதிர்பார்ப்பு.

இந்தியாவின் டாப் ட்ரெண்டிங் ஸ்கூட்டர்ஸ்!

ஃபஸினோவுக்குப் பிறகு இதுவும் யமஹாவின் பெஸ்ட் செல்லிங் ஸ்கூட்டர். பழைய ரே ஸ்கூட்டரை, முழுக்க முழுக்க பெண்களை மனதில் கொண்டே டிசைன் செய்ததாக யமஹா சொன்னது. ஆண்கள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்களுக்காகத்தான் ரே ZR. ஷார்ப்பான டிசைன், பின்பக்கம் நீளமான கிராப் ரெயில், டூயல் டோன் தீம் என்று இவை எல்லாமே ஆண்களுக்கானவை. வெயிட், ஹைட் ஆசாமிகளுக்காக சீட்டின் உயரம் லேசாக அதிகமாகி இருக்கிறது. ஆனால், 130 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் போதவில்லை. ஸ்பீடு பிரேக்கர்களில் கேர்ஃபுல். டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன்தான்; இரண்டு பக்கமும் 10 இன்ச் வீல்கள்தான். டிஸ்க் பிரேக் மற்றும் அலாய் வீல் ஆப்ஷனல். இந்த வேரியன்ட், சாதாரண ரே Z-ஐவிட 1 கிலோ எடை குறைவு. இதனால், ஹேண்ட்லிங் பக்கா. ஆண்கள் ஈஸியாகத் தூக்கி நிறுத்தி பார்க் செய்துவிடலாம். சீட்டுக்கு அடியில் 21 லிட்டர் ஸ்பேஸ் உள்ளது. இது அதிக இடவசதிதான். 66 கி.மீ மைலேஜ் க்ளெய்ம் ்செய்கிறது யமஹா. ஆனால், ஆவரேஜாக 44.5 கி.மீ தருகிறது.

இந்தியாவின் டாப் ட்ரெண்டிங் ஸ்கூட்டர்ஸ்!

பைக் ஓட்டியே பழக்கப்பட்டவர்களுக்கு, ஸ்கூட்டர் ஓட்டுவது பொம்மை வண்டியை ஓட்டுவதுபோல் இருக்கும். ஏப்ரிலியா அப்படி இல்லை. ‘வெளியே கடவுள்; உள்ளே மிருகம்’ என்பதுபோல், வெளிப்புறம்தான் ஸ்கூட்டர்... மற்ற விஷயங்கள் அனைத்தும் பைக்குக்கானது. விலையும் அப்படித்தான். இப்போதைக்கு இந்தியாவில் இருக்கும் 150 சிசி ஸ்கூட்டர் இதுதான். பவர், டார்க், 14 இன்ச் வீல்கள் என்று எல்லாமே பைக்குகளுக்கு டஃப் கொடுப்பவை. ஆனால் வசதிகள்... மூச்! பிரேக் லாக் கிளாம்ப்கூட இல்லை. பெட்ரோலும், சீட்டைத் திறந்துதான் போட வேண்டும். வெஸ்பாவின் இன்ஜின் என்றாலும், பவர் அதைவிடக் குறைவுதான். ஆனால், இந்தியாவின் வேகமான ஸ்கூட்டர் இதுதான். ஃபன் டு டிரைவில் ஃபியட், ஃபோர்டு எப்படியோ, அப்படி ஸ்கூட்டரில் ஏப்ரிலியாவைச் சொல்லலாம். 150 சிசி என்பதால், மைலேஜை ரொம்ப எதிர்பார்க்க முடியாது.