Published:Updated:

ஸ்போர்ட்ஸ் பியூட்டி!

ஸ்போர்ட்ஸ் பியூட்டி!
பிரீமியம் ஸ்டோரி
ஸ்போர்ட்ஸ் பியூட்டி!

போட்டி : ட்ரையம்ப் VS கவாஸாகிராகுல் சிவகுரு

ஸ்போர்ட்ஸ் பியூட்டி!

போட்டி : ட்ரையம்ப் VS கவாஸாகிராகுல் சிவகுரு

Published:Updated:
ஸ்போர்ட்ஸ் பியூட்டி!
பிரீமியம் ஸ்டோரி
ஸ்போர்ட்ஸ் பியூட்டி!

ந்தியாவில் கடந்த 6 மாதங்களில், ஹை - பெர்ஃபாமென்ஸ் பைக் செக்மென்ட்டில் புதிய மாடல்களின் படையெடுப்பு கணிசமாக அதிகரித்திருக்கிறது. சமீபத்தில் அறிமுகமான ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் S மற்றும் கவாஸாகி Z900 ஆகிய பைக்குகளே இதற்கான சிறந்த உதாரணங்கள். ‘‘இவை முதன்முறையாக பைக் ஓட்டுபவர்களுக்கானது அல்ல’’ என்பது, இந்த நேக்கட் பைக்குகளின் டெக்னிக்கல் விபரங்களைப் பார்க்கும்போதே புரிந்துவிடுகிறது. இந்த ஒப்பீட்டில் வெல்லப்போவது ஜப்பானா, இங்கிலாந்தா? வாருங்கள் பார்த்துவிடுவோம்!

ஸ்போர்ட்ஸ் பியூட்டி!
ஸ்போர்ட்ஸ் பியூட்டி!

டிசைன்

Z800 பைக்குடன் ஒப்பிடும்போது, Z900-ன் தோற்றம் அவ்வளவு மிரட்டலாக இல்லை; ஆனால், சாலையில் செல்லும்போது, இதுதான் பலரது கவனத்தை ஈர்த்தது. ஹெட்லைட் முந்தைய மாடலைப்போலவே இருந்தாலும், அதைச் சுற்றியிருக்கும் ஸ்டைலான பிகினி ஃபேரிங் புதிது. இவை அகலமான 17 லிட்டர் பெட்ரோல் டேங்க்குடன் இணையும் விதம் வெகு அழகு. Z800 பைக்கைவிட Z900-ன் பின்பகுதி மெலிதாக இருந்தாலும், இருக்கையின் உயரம் முன்பைவிட அதிகரித்திருக்கிறது. இதனுடன் கவாஸாகி பைக்குகளுக்கே உரித்தான பச்சை - கறுப்பு நிறமும் சேரும்போது, ஷார்ப்பான டிசைனில் அசரடிக்கிறது Z900. LCD இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரில், ரைடருக்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் இருக்கின்றன என்றாலும், சின்ன ஸ்கிரீனில் அதிக விஷயங்கள் தெரிவது நெருடல். சுவிட்ச்கள் தமது பணியைச் சிறப்பாகச் செய்தாலும், அவை விலை குறைவான பெர்ஃபாமென்ஸ் பைக்குகளிலிருந்து எடுத்ததுபோல இருக்கின்றன.

இதுபோன்ற எந்தப் பிரச்னையும் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் S பைக்கில் இல்லை. கவாஸாகியைப் போல LCD பேனல் இல்லையென்றாலும், முந்தைய மாடலில் இருந்த அதே தெளிவான அனலாக் - டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்தான் இங்கும் தொடர்கிறது. மேலும், புதிய ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் S பைக்கின் டிசைனும், முன்பைப் போலவே இருக்கிறது. பெட்ரோல் டேங்க், ஹெட்லைட் மற்றும் அதன் மேலே இருக்கும் வைஸர், பைக்கின் பக்கவாட்டுப் பகுதி மற்றும் பின்பக்கத்தில் இருக்கும் பாடி பேனல்கள், டெயில் லைட் ஆகியவை, பழைய ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் RX பைக்கை நினைவுபடுத்துகின்றன. இதனைத் தவிர்த்துப் பார்த்தால் ‘Gullwing’ ஸ்விங் ஆர்ம், முன்பைவிடச் சிறிதாக மாறியிருக்கும் UnderBelly எக்ஸாஸ்ட் எனச் சில புதிய விஷயங்களும், புதிய ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் S பைக்கில் இடம்பெற்றுள்ளன. மொத்தத்தில், ட்ரையம்ப் பைக்கின் ஸ்மார்ட்டான டிசைன், கவாஸாகியின் கெத்தான டிசைனுக்கு முன்பு டல்லாகத் தெரிகிறது.

எர்கனாமிக்ஸ்

Z900 பைக்கின் இருக்கை, மிகவும் சொகுசாக இருக்கிறது. மேலும், சீட் உயரம் 795 மிமீதான் என்பதால், இரு கால்களையும் தரையில் ஊன்றுவது சுலபம். அகலமான ஹேண்டில்பார் உயரமாக பொசிஷன் செய்யப்பட்டிருப்பதால், அது கைக்கு எட்டும் தூரத்திலேயே இருக்கிறது. ஃபுட் பெக், தாழ்வாகவே வைக்கப்பட்டிருக்கிறது. எனவே, ஸ்போர்ட்டியான ரைடிங் பொசிஷனைவிட சொகுசுக்கே கவாஸாகி முக்கியத்துவம் கொடுத்திருப்பது புரிகிறது.

ஸ்போர்ட்ஸ் பியூட்டி!

பழைய ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் பைக்கில் சிங்கிள் பீஸ் இருக்கை மற்றும் குறுகலான ஹேண்டில்பார் இருந்த நிலையில், அது புதிய S மாடலில் ஸ்ப்ளிட் சீட்டாகவும், அகலமான ஹேண்டில்பாராகவும் மாறியிருக்கிறது. அதில் ரைடரின் சீட் பெரிதாக இருப்பதால், அட்ஜஸ்ட் செய்து உட்காருவதற்கான இடம் அதிகமாகியிருக்கிறது. ஆனால், சீட்டின் உயரம் 810 மிமீ என்பதால், இது உயரம் குறைவான ரைடர்களுக்குக் கொஞ்சம் அசெளகர்யத்தை ஏற்படுத்தும் எனத் தோன்றுகிறது. தவிர, கொஞ்சம் குனிந்து உட்கார்ந்தால்தான் ஹேண்டில்பாரையும் எட்டிப் பிடிக்க முடிகிறது. இவை உயரமான புட் பெக்குகளுடன் சேரும்போது, ஸ்போர்ட்டியான ரைடிங் பொசிஷன் கிடைத்துவிடுகிறது.

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்

இங்கிருக்கும் இரண்டு பைக்கிலும், அதன் முந்தைய மாடல்களில் இருந்ததைவிடக் கூடுதல் திறன் வாய்ந்த இன்ஜின்கள்தான் இடம்பெற்றுள்ளன. டேடோனா 675R பைக்கில் இருந்த இன்லைன் - 3 சிலிண்டர், 675சிசி இன்ஜினின் போர் மற்றும் ஸ்ட்ரோக் அளவுகளை அதிகரித்து, புதிய ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் S பைக்கின் இன்லைன் - 3 சிலிண்டர், 765சிசி இன்ஜினாகத் தயாரித்திருக்கிறது ட்ரையம்ப். 113bhp பவர் மற்றும் 7.3kgm டார்க்கை வெளிப்படுத்தும் இந்த இன்ஜினின் மிட்-ரேஞ்ச் மற்றும் டாப் எண்ட் பெர்ஃபாமென்ஸ் அசத்தல். இதனால் 0 - 100 கி.மீ வேகத்தை, வெறும் 3.97 விநாடிகளிலேயே எட்டுகிறது ஸ்ட்ரீட் ட்ரிப்பிள்.
Z1000 பைக்கின் இன்ஜினை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் Z900 பைக்கின் இன்ஜின், ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் பைக்கைவிட ஒரு சிலிண்டர் கூடுதலாகக் (இன்லைன் - 4 சிலிண்டர்) கொண்டிருக்கிறது. இதனால் எதிர்பார்த்தபடியே, ட்ரையம்ப்பைவிட பவர்ஃபுல்(125bhp பவர் & 9.86kgm டார்க்). இதில், ஆரம்பகட்ட வேகத்திலிருந்தே பவர் கிடைப்பதுடன், மிட் ரேஞ்ச்சிலும் அதிரடியாக இருக்கிறது. பவர் டெலிவரி ஒரே சீராக இருப்பதால், இன்ஜினின் ரெட்லைன் வரை பவர் கொப்பளிக்கிறது. ஆனால், இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் டன்லப் ஸ்போர்ட்ஸ் மேக்ஸ் டயர்கள், ஈரமான சாலைகளில் போதுமான ரோடு கிரிப்பை அளிக்கத் தவறுகிறது. இதனால், ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் பைக்கைவிட பவர்ஃபுல்லாக இருந்தாலும், 0 - 100 கி.மீ வேகத்தைத் தாமதமாக, அதாவது 4.15 விநாடிகளில்தான் எட்டிப் பிடிக்கிறது கவாஸாகி Z900.

பாதுகாப்பு மற்றும் கியரிங்

ஏபிஎஸ் தவிர, Z900 பைக்கில் எந்த எலெக்ட்ரானிக் அம்சங்களும் இல்லை என்பது பைக் காதலர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கலாம். ஆனால், இந்த செக்மென்ட் பைக்கை முதன்முறையாக வாங்குபவர்களுக்கு, அது அவர்களது தன்னம்பிக்கையைக் கொஞ்சம் அசைத்துப் பார்க்கலாம். இதனுடன் ஒப்பிடும்போது, ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் S பைக்கில் ரைடு பை வொயர் திராட்டில், 2 ரைடிங் மோடுகள் (Road, Rain), தேவைப்பட்டால் ஆஃப் செய்து கொள்ளக்கூடிய ட்ராக்‌ஷன் கன்ட்ரோல் என மாஸ் காட்டுகிறது. இதனால் ஸ்மூத்தான திராட்டில் ரெஸ்பான்ஸ் கிடைப்பதுடன், ஸ்டெபிலிட்டி தேவைப்படும்போது பவர் டெலிவரியும் கட்டுப்படுத்தப்படுகிறது. மொத்தத்தில், ட்ரையம்ப் பைக்கை விரட்டி ஓட்டக்கூடிய நம்பிக்கை, அதன் ரைடருக்குக் கிடைப்பது உறுதி.

ஷார்ட் கியரிங் இருப்பதால், குறைவான வேகங்களிலும் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் S பைக்கை ஓட்ட முடிகிறது. இன்ஜினும் ஸ்மூத்தாகத் தனது பணியைச் செய்கிறது. ஆனால், Z900 பைக்கில் இன்னும் ஷார்ட்டான கியரிங் இருப்பதால், 5-வது கியரில்கூட 30 கிமீ வேகத்தில் செல்லமுடிகிறது. மேலும், இன்ஜின் இயங்குவதுகூடத் தெரியாத அளவுக்கு, படு ஸ்மூத்தாக இயங்குகிறது. எனவே, இன்ஜினை வைத்து மட்டும் கணக்கிட்டால், வெற்றி பெறுவது பச்சை இயந்திரம்தான்!

ஸ்போர்ட்ஸ் பியூட்டி!

ஓட்டுதல் அனுபவம்

இத்தகைய ஹை-பெர்ஃபாமென்ஸ் பைக்குகளில், பவர்ஃபுல் இன்ஜினுக்கு ஈடுகொடுக்கக்கூடிய கையாளுமையும் அவசியம். Z900 பைக்கின் புதிய ட்ரெல்லிஸ் ஃப்ரேம், முந்தைய மாடலில் இருந்த ட்யூப்லர் ஃப்ரேமைவிட திடமாக இருப்பதுடன், அது பைக்கின் எடையையும் 20 கிலோ குறைப்பதற்கு உதவியிருக்கிறது. 208 கிலோ எடையுள்ள Z900 பைக்கில், முன்பிருந்த அதே அட்ஜஸ்டபிள் 41மிமீ USD ஃபோர்க் இருந்தாலும், ஷார்ப்பான ரெஸ்பான்ஸுக்கு ஏற்ப ரீ-டியூன் செய்யப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வேகத்திலும் பைக் நிலையாக இருப்பதுடன், வளைத்து நெளித்து ஓட்டுவது நல்ல அனுபவமாக இருக்கிறது. ஆனால், நாம் முன்பே சொன்னதுபோல, ஈரமான சாலைகளில் டன்லப் டயர்களின் ரோடு கிரிப் மிகவும் ஆவரேஜாக இருப்பதால், திருப்பங்களில் பைக்கைச் செலுத்தும்போது கவனமாக இருப்பது நல்லது. பின்பக்க மோனோஷாக் சஸ்பென்ஷன் மென்மையாக செட் செய்யப்பட்டுள்ளதால், மேடு பள்ளங்களில் இறங்கி ஏறும்போது பைக் குலுங்குகிறது. மேலும், கவாஸாகி பைக்கின் சொகுசான சீட்டிங் பொசிஷன் காரணமாக, திருப்பங்களில் பைக்கை இயல்பாகச் செலுத்த முடியவில்லை.

பக்காவான சீட்டிங் பொசிஷன் - 166 கிலோ (Wet Weight) எனும் காம்பினேஷன் ஒன்று சேரும்போது, ட்ரையம்ப் பைக்கை மலைச் சாலைகளில் வளைத்து நெளித்து ஓட்டக்கூடிய சிறப்பான கையாளுமை கிடைத்துவிடுகிறது. அதன் செக்மென்ட்டிலேயே எடை குறைந்த பைக்காக இருக்கும் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் S பைக்கின் எடை, Z900 பைக்கைவிட எப்படியும் 20 கிலோவாவது குறைவாக இருக்கும் எனத் தெரிகிறது. 41மிமீ USD ஃபோர்க் - PiggyBank Reservoir உடன் கூடிய மோனோஷாக் சஸ்பென்ஷன் மற்றும் பைரலியின் Rosso Corsa டயர்கள் ஒன்று சேரும்போது, அற்புதமான ரோடு கிரிப் மற்றும் மோசமான சாலைகளிலும் சிறப்பான ஓட்டுதல் கிடைத்துவிடுகிறது. முன்பக்க சஸ்பென்ஷனை அட்ஜஸ்ட் செய்ய முடியாவிட்டாலும், சிறப்பான செட்-அப்பைக் கொண்டிருப்பதால், அது ஒரு பிரச்னையாகத் தெரியவில்லை. கையாளுமையில் இந்த இரண்டு பைக்குகளும் வித்தியாசமாக இருந்தாலும், பிரேக்கிங்கில் சமநிலை வகிக்கின்றன. இந்த இரண்டிலுமே ரேடியல் கேலிப்பர்கள் இல்லாதது மைனஸ். ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் S பைக்கின் முன்பக்கத்தில் இரட்டை 310மிமீ Nissin 2 பிஸ்டன் டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்கத்தில் 220மிமீ பிரெம்போ 1 பிஸ்டன் டிஸ்க் பிரேக் இருந்தால், Z900 பைக்கின் முன்பக்கத்தில் இரட்டை 300மிமீ Nissin 4 பிஸ்டன் பெட்டல் டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்கத்தில் 250மிமீ Nissin பெட்டல் டிஸ்க் பிரேக் இருக்கிறது. இதனால் சற்றே கூடுதல் திறனைக் கொண்டிருக்கும் கவாஸாகி பைக்கின் பிரேக்குகளால், 80 கிமீ வேகத்தில் செல்லும்போது திடீரென பிரேக் பிடித்தாலும்கூட, 26 மீட்டருக்குள் பைக்கை நிறுத்திவிட முடிகிறது. ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் S பைக்கின் பிரேக்கிங் ரெஸ்பான்ஸும் பெர்ஃபெக்ட்டாகவே இருக்கிறது.

ரண்டுமே நேக்கட் பைக்குகளாக இருந்தாலும், அவை வெவ்வேறு விதமான ரைடர்களுக்கு ஏற்புடையதாக

ஸ்போர்ட்ஸ் பியூட்டி!

இருக்கின்றன. சொகுசான ரைடிங் பொசிஷன் மற்றும் பிராக்டிக்கல் விஷயத்தில், கவாஸாகி Z900 பைக் அட்டகாசமாக இருக்கிறது. மிரட்டலான டிசைன், ஸ்மூத்தான இன்லைன் 4 சிலிண்டர் இன்ஜின் என இந்த ஸ்ட்ரீட் பைக்கில் ப்ளஸ் பாயின்ட்களும் இருக்கின்றன. ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் S பைக், திருப்பங்களுக்கான தயாரிப்பாக இருக்கிறது. அதாவது, பவர்ஃபுல்லான பைக்குகளுடன் போட்டியிடும் அளவுக்குக் கச்சிதமான ஹேண்ட்லிங்கைக் கொண்டிருக்கிறது. எனவே,பெயரில் ஸ்ட்ரீட் இருந்தாலும், ஃபுல் பேரிங் இல்லாத ஸ்போர்ட்ஸ் பைக் போன்ற உணர்வையே இது தருகிறது.முதன்முதலில் அறிமுகமானபோது, ஸ்டாண்டர்டாகச் சில ஆக்ஸசரீஸ்களைக் கொண்டிருந்த Z900 பைக்கில், அவை இல்லாத பேஸ் மாடல் ஒன்றையும் தற்போது களமிறக்கிவிட்டது கவாஸாகி. இதனால் சென்னை ஆன் ரோடு விலையான 8.73 லட்சத்துக்குக் கிடைக்கும் Z900, கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்க பைக்காகத் திகழ்கிறது. ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் S பைக்கின் சென்னை ஆன் ரோடு விலையான 10.09 லட்சம், கவாஸாகி பைக்கைவிடச் சுமார் 1.36 லட்ச ரூபாய் அதிகமாக இருக்கிறது! ஆனால், கூடுதலான எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் பைக் ஃபீலுக்காக, அந்தக் காசை ட்ரையம்ப் பைக்குக்காகத் தரலாம் என்றே தோன்றுகிறது.