Published:Updated:

கோஸ்ட் ரைடர்!

கோஸ்ட் ரைடர்!
பிரீமியம் ஸ்டோரி
கோஸ்ட் ரைடர்!

ஃபர்ஸ்ட் ரைடு : டுகாட்டி Xடயாவெல் Sதமிழ்

கோஸ்ட் ரைடர்!

ஃபர்ஸ்ட் ரைடு : டுகாட்டி Xடயாவெல் Sதமிழ்

Published:Updated:
கோஸ்ட் ரைடர்!
பிரீமியம் ஸ்டோரி
கோஸ்ட் ரைடர்!

டுகாட்டி X டயாவெல் S பைக்கில், ஹெல்மெட் போட்டு ஒரு ரைடு போனீர்கள் என்றால், ‘கோஸ்ட் ரைடர்’ படத்தில் வரும் ஹீரோபோல்தான் இருப்பீர்கள். இதன் நேக்கட் டிசைனும், ஹார்ட் பீட் எகிறவைக்கும் பீட்டும் அப்படி! டுகாட்டி டயாவெல் சீரிஸில் மற்றும் ஒரு புதுப்பிறவி, X டயாவெல் S.

பார்த்தவுடன் பவர் க்ரூஸர் பைக் என்று சொல்லிவிடலாம். பழைய டயாவெல் பைக்கில் பக்கவாட்டில் இருந்த ரேடியேட்டர்கள் இப்போது முன்னே வந்திருக்கின்றன. அதேபோல், பின்பக்கம் இருந்த எக்ஸாஸ்ட் பைப்கள், இப்போது பக்கவாட்டில் மேலே தூக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அதே 18 லிட்டர் டேங்க்தான். கொஞ்சூண்டு ஒல்லி கில்லியாகியிருக்கிறது. 3.5 இன்ச் TFT ஸ்க்ரீன், டேங்க்குக்கும் ஹேண்டில்பாருக்கும் இடையில் இருக்கிறது.

கோஸ்ட் ரைடர்!

பழைய டயாவெல்லிலிருந்து இன்ஜினில் 60 சிசி கூடியிருக்கிறது. இதில் இருப்பது 1,262 சிசி. பவர் அதே 152bhpதான். க்ரூஸர் பைக்குக்கும் டார்க் தேவைதானே! 0.3kgm கூடியிருக்கிறது. DVT (Desmodromic Variable Timing) என்பது டுகாட்டியில் மட்டுமே இருக்கக்கூடிய வால்வ் டைமிங் அம்சம். மல்ட்டிஸ்ட்ராடாவுக்குப் பிறகு DVT கொண்ட பைக், X டயாவெல்தான். ஒவ்வொரு சிலிண்டர் ஹெட்களிலும் இருக்கும் கேம் ஷாஃப்ட்களின் ஓரங்களில் வால்வ் டைமிங் அட்ஜஸ்டர் பொருத்தப்படும் அம்சம்தான் இந்த DVT. தடையில்லாத டார்க், க்ளாஸ் லீடிங் பவர், ஸ்மூத்னெஸ் மற்றும் மைலேஜ்தான் இதன் சிறப்பம்சங்கள். சாதாரண டயாவெல்லில், லோ-ரெவ் RPM நிறைய பேருக்குப் பிடிக்கவில்லை. அந்தக் குறை இதில் சரிசெய்யப்பட்டிருக்கிறது.

தாழ்வான 755 மிமீ சீட்டும், ஃபுட் பெக்குகள் முன்நோக்கியும் இருப்பது, அப்படியே க்ரூஸர் ஸ்டைல். பழைய டயாவெல்லைவிடச் சிறியதுபோல் தெரிந்தாலும், 13 கிலோ எடை கூடியிருக்கிறது. (247 கிலோ). ஆனால், ஆச்சர்யம்... சிட்டி டிராஃபிக்கில் செம லைட்டாக ஹேண்டில் செய்ய முடிகிறது. ஆனால், பின்பக்கம் அத்தனை பெரிய டயர் தேவைதானா? அதேபோல், கிரவுண்ட் கிளியரன்ஸும் குறைவுதான். ஸ்பீடு பிரேக்கர்கள் கவனம்.

கோஸ்ட் ரைடர்!

தடிமனான 50 மிமீ அப்-சைடு டவுன் ஃபோர்க், அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம். லோ ஸ்பீடுகளில் செம உறுதி. இதுவே ஹை ஸ்பீடில் பெரிய பள்ளங்களில் இறக்கும்போது, ரைடரின் முதுகுத்தண்டில் அதிர்வு ஃபீல் ஆகிறது. பழைய டயாவெல்போல் இல்லை; ஒடுக்கமான வளைவுகளில்கூட 40 டிகிரி சாய்மானத்தில்கூட கார்னரிங் செய்ய முடிகிறது. டுகாட்டியின் ஃபேவரைட் பிரெம்போ பிரேக்ஸ் அருமை. ABS உண்டு.

டயாவெல்லைவிட 1 லட்ச ரூபாய் அதிகமாக, டெல்லி எக்ஸ் ஷோரூமில் 19.26 லட்சத்துக்கு வந்திருக்கிறது X டயாவெல் S. இது ஆரம்ப நிலை ஓட்டுநர்களுக்கானது அல்ல; இமயமலை, லே, லடாக் போன்ற இடங்களில் த்ரில்லிங்கான பைக் பயணங்களை விரும்பும் க்ரூஸர்களுக்கானது.