Published:Updated:

செம மைலேஜ்... செம அழகு!

செம மைலேஜ்... செம அழகு!
பிரீமியம் ஸ்டோரி
செம மைலேஜ்... செம அழகு!

ரீடர்ஸ் ரெவ்யூ : டாடா டிகோர் (பெட்ரோல்)எஸ்.விஷால் அரவிந்த் : படங்கள்: ப.சரவணகுமார்

செம மைலேஜ்... செம அழகு!

ரீடர்ஸ் ரெவ்யூ : டாடா டிகோர் (பெட்ரோல்)எஸ்.விஷால் அரவிந்த் : படங்கள்: ப.சரவணகுமார்

Published:Updated:
செம மைலேஜ்... செம அழகு!
பிரீமியம் ஸ்டோரி
செம மைலேஜ்... செம அழகு!

லோ! நான் சதீஷ். டிரைவிங், டிராவலிங் - இந்த ரெண்டும்தான் எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம். கம்போடியா, வியட்நாம், சிங்கப்பூர், ஐரோப்பா - இப்படி உலகத்தில் பல நாடுகள் போயிருக்கேன். என் பாலிஸியே - வாழ்க்கையை வாழணும். அதாவது - ஊர் சுத்தணும். அதுக்கு வாகனங்கள் ரொம்ப முக்கியம்.

டாடா சியராதான் என்னோட முதல் கார். அதுக்கப்புறம் ஸ்கார்ப்பியோ, i10, சான்ட்ரோனு நிறைய கார்கள் வெச்சிருந்தேன். ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை கார்களை மாத்திக்கிட்டே இருப்பேன். ஆனா, நடப்புல ஒரே ஒரு கார்தான் இருக்கும். இந்த கார்கள்லதான் லே, லடாக்னு இந்தியா ஃபுல்லா சுத்தியிருக்கேன். இப்போ என்னோட ப்ரசென்ட் கார்  டாடா டிகோர். டிகோருக்கும் ரூட் மேப் போட்டாச்சு. வர்ற அக்டோபரில் ராஜஸ்தானுக்குக் கிளம்பறேன்.

செம மைலேஜ்... செம அழகு!

ஏன் டாடா டிகோர்?

சியரா கார் பயன்படுத்தியிருக்கேன். ஆனா, அதுக்கப்புறம் டாடா காரே வேண்டாம்னுதான் இருந்தேன். 7 லட்ச ரூபாய் பட்ஜெட்ல ஒரு நல்ல பெட்ரோல் செடான் பார்த்துக்கிட்டிருந்தேன். ஃபோர்டு ஆஸ்பயர், ஹோண்டா அமேஸ் - இந்த ரெண்டும்தான் என்னோட சாய்ஸா இருந்தது. ஆஸ்பயரில் கதவுப் பிரச்னை, அமேஸில் வசதிகள் குறைவு - இப்படி சில குறைகள் இருந்ததா கேள்விப்பட்டேன். அப்புறம்தான் டிகோர் ஞாபகம் வந்தது. ஏன் ஞாபகம் வந்துச்சுன்னா - இப்போ வர்ற டாடா கார்கள்ல டிசைன், தரம், இன்ஜின் எல்லாமே அருமை. அதுக்குக் காரணம் - ஜாகுவார், லேண்ட்ரோவர் நிறுவனங்களை டாடா வாங்கிய பிறகுதான் இந்த முன்னேற்றம்.  எல்லா  இடங்களிலும் ரெவ்யூ பார்த்தேன். டாடா பற்றி நல்லவிதமாகவே சொல்லியிருந்தார்கள். மோ.வி-யிலும் டிகோர் பற்றி நல்ல விமர்சனம் வந்திருந்தது. அப்புறம் என்ன... டிகோரை டெஸ்ட் டிரைவ் பண்ணினேன். பெட்ரோல் மாடல் ரொம்பப் பிடிச்சிருந்தது. பட்ஜெட்டில் கையைக் கடிக்கலை. 6.4 லட்சத்துக்குள் வந்துச்சு. உடனே புக் பண்ணிட்டேன்.

ஷோரூம் அனுபவம்:

அரும்பாக்கத்தில் இருக்கிற குருதேவ் மோட்டார்ஸுக்குப் போனேன். சும்மா பெருமைக்காகச் சொல்லலை - டிகோர் டிசைன் மாதிரியே டீலரில் எக்ஸிக்யூட்டிவ்களோட பேச்சு ரொம்ப அட்ராக்டிவ்வா இருந்துச்சு. சிலபேர் கலர் விஷயத்தில் காம்ப்ரமைஸ் பண்ணுவாங்க. ஆனால், எனக்குப் பிடிச்ச ‘Copper Dazzle’ கலர் வேணும்னு சொன்னவுடன், ‘நாலு நாள்ல டெலிவரி கொடுத்திடலாம்’னு வாக்குறுதி கொடுத்தாங்க. அஞ்சாவது நாள் டெலிவரி எடுத்துட்டேன். முதல் சர்வீஸ் இன்னும் வரலை. சர்வீஸ் அனுபவம் இனிமேல்தான் தெரியும்.

பிடித்தது:

நான் கார்களை விரட்டி ஓட்டுவேன். அதனால், இதற்கு முன்னால் நான் பயன்படுத்திய கார்களில் மைலேஜ் அவ்வளவாகக் கிடைக்காது. ஆனால், டிகோரில் டிசைனைத் தாண்டி எனக்குப் பிடிச்ச விஷயம் - மைலேஜ். பெட்ரோல் காராக இருந்தாலும், 16 முதல் 18 கி.மீ மைலேஜ் கிடைக்குது.

ஏன் இதைச் சொல்றேன்னா, நிறைய கார்களில் டிரைவிங் மோடு இருக்கும். ஆனால், எல்லாமே ஒரே மாதிரிதான் இருக்கும். டிகோரிலும் ECO, CITY என்று இரண்டு மோடுகள். சும்மா மார்க்கெட்டிங் யுக்திக்காகத்தான் இதை வெச்சிருக்காங்கனு நினைச்சேன். ஓட்டினப்புறம்தான் தெரியுது - இரண்டுக்கும் எவ்ளோ வித்தியாசம்? எக்கோ மோடில், நீங்கள் எவ்வளவுதான் த்ராட்டில் பண்ணினாலும், ரெஸ்பான்ஸ் டல்லாகவே இருக்கும். ஆனால், மைலேஜ் சொல்லியடிக்கும். இதுவே சிட்டி மோடு, டீசன்ட்!

அப்புறம், ஆடியோ சிஸ்டம். பாட்டுக் கேட்டுக்கொண்டே ஹைவேஸில் பயணிப்பவர்களுக்கு, செமையான சாய்ஸ் டிகோர். ஹர்மான் ஆடியோ சிஸ்டம், புயலும் தென்றலும் கலந்தடிக்கிறது. இத்தனைக்கும் என் XT மாடலில் 4 ஸ்பீக்கர்கள்தான். இதுவே டாப் மாடலான XZ(O)-வில் 6 ஸ்பீக்கர். இது இன்னும் தெறிக்க விடும். இது தவிர புளூடூத், AUX, USB எல்லாமே உண்டு. என் மாடலில் டச் ஸ்க்ரீன் இல்லை. பட்டன் டைப் சிஸ்டம்தான். அதனால், போன் மட்டும் பேசிக்கொள்ளலாம். டாப் மாடலில் இருக்கும் பெரும்பாலான வசதிகள் இதுல இருக்கு.

செம மைலேஜ்... செம அழகு!

வழக்கம்போல், டாடாவின் ஸ்லீக் ஸ்டைல், மில்லெனியல் டிசைன். டாடா காரா இது என்று நம்பவே முடியவில்லை. டிகோரைப் பார்த்தவுடனே எல்லோருக்கும் பிடித்துவிடும். காரின் பின் பக்க டிசைன், செம ஸ்டைல். அதனால்தான் இதை ஸ்டைல்பேக் என்கிறார்கள்.

பிடிக்காதது:

மைலேஜ் இருந்தால், பெர்ஃபாமென்ஸை எதிர்பார்க்க முடியாதுதானே? டியாகோ கார்ல இருக்கிற அதே 1.2, ரெவோட்ரான் இன்ஜின். 3 சிலிண்டர்ங்கிறதால, காரை ஸ்டார்ட் பண்ணின உடனே ரொம்ப அதிருது. இன்ஜின் ரீஃபைன்மென்ட்டில் எனக்குத் திருப்தி இல்லையோனு தோணுது. கேபினுக்குள் ஓவர் சத்தம்.

பெர்ஃபாமென்ஸ், பிக்-அப் ரெண்டுமே சுமார்தான். லோ டார்க் என்பதால், கியரை அடிக்கடி மாத்திக்கிட்டே இருக்க வேண்டியிருக்கு. இடவசதியும் எனக்கு அவ்வளவா திருப்தி இல்லை. பின்னால் உட்கார்பவர்களுக்கு முன்பக்க சீட்டில் கால் இடிக்கிறது. அதாவது, லெக் ரூம் போதவில்லை. தள்ளுமுள்ளாகத்தான் இருக்கும். டிசைனில் கவனம் செலுத்துற டாடா, பில்டு குவாலிட்டியில் இன்னும் பின்தங்கியே இருக்கிறது மாதிரி தெரியுது. இண்டிகா, இண்டிகோ போன்ற கார்களை ஒப்பிடும்போது, டிகோர் ஓகேதான் என்றாலும், இன்னும் முன்னேற்றம் வேணும். டாடா கார்கள் இந்த ஏரியாவில் கொஞ்சம் வீக்தான்.

என் தீர்ப்பு:

என்னைக் கேட்டால், இந்த செக்மென்ட்டில் ‘காசுக்கேற்ற கார்’ டிகோர்தான் என்று சொல்வேன். 6.4 லட்ச ரூபாய்க்கு செம வொர்த். நடுத்தர பட்ஜெட்காரர்களுக்கு மைலேஜ்தானே ரொம்ப முக்கியம். அதை நிறைவேற்றுகிறது டிகோர். ஆனால், ‘வ்வ்வ்ர்ர்ரூம்’னு பறக்க விரும்பும் டிரைவர்களுக்கான ஆப்ஷன் டிகோர் இல்லை. கண்டிப்பாக, அடுத்தவர்களுக்கு ரெகமெண்ட் செய்யும் அளவுக்கு நம்பகமான கார், டிகோர்.