Published:Updated:

இனோவா இல்லேனா எர்டிகா!

இனோவா இல்லேனா எர்டிகா!
பிரீமியம் ஸ்டோரி
இனோவா இல்லேனா எர்டிகா!

பழைய கார் : மாருதி சுஸூகி எர்டிகா (டீசல்) தமிழ், படங்கள்: எல்.ராஜேந்திரன்

இனோவா இல்லேனா எர்டிகா!

பழைய கார் : மாருதி சுஸூகி எர்டிகா (டீசல்) தமிழ், படங்கள்: எல்.ராஜேந்திரன்

Published:Updated:
இனோவா இல்லேனா எர்டிகா!
பிரீமியம் ஸ்டோரி
இனோவா இல்லேனா எர்டிகா!

ரண்டாவது கார் வாங்குபவர்களின் சாய்ஸ், பெரும்பாலும் எம்யூவி அல்லது எஸ்யூவி-யாகத்தான் இருக்கும். இந்த மார்க்கெட்டில் இனோவாதான் ராஜா. ஆனால், சில நேரங்களில் நடுத்தர பட்ஜெட்காரர்கள், ‘ச்சீ.. இந்தப் பழம் புளிக்கும்’ என்று மாற்று காரைத் தேடுவார்கள். காரணம் விலை! நிஜமாகச் சொல்லலாம்; இனோவாவுக்கு மாற்று இப்போது எர்டிகாதான். அப்படித்தான் இனோவாவை முதலில் டிக் அடித்துவிட்டு, விலை  சரிவராமல் இப்போது எர்டிகாவைத் தேடிக் கொண்டிருந்தார், பாளையங்கோட்டையைச் சேர்ந்த பெனெடிட் ராஜா.

‘‘இண்டிகா வெச்சிருக்கேன். பெரிய குடும்பம் ஆயிடுச்சு. 5 சீட்டர் பத்தலை. 7 சீட்டர் வாங்கணும். இனோவா 8 லட்சத்தில்தான் ஆரம்பிக்கவே செய்யுது. 6 லட்சத்துக்குள் எர்டிகா பார்க்கலாம்னு இருக்கேன். என் சாய்ஸ் சரிதானா?’’ என்று கேட்டார், ஏகக் குழப்பத்தில் இருந்த பெனெடிட் ராஜா.

‘‘உங்க சாய்ஸ்தான் சரி. அருமையான சிவப்பு கலர் எர்டிகா இருக்கு. பாருங்க... ஓட்டுங்க... நிச்சயம் பிடிக்கும்!’’ என்று நமக்கும் சேர்த்து அழைப்புவிடுத்திருந்தார் பாபு வசந்த்.

இனோவா இல்லேனா எர்டிகா!

நெல்லை வண்ணாரப்பேட்டையில் ‘ஹிந்துஸ்தான் வேல்யூ கார்ஸ்’ என்ற பெயரில் யூஸ்டு கார் ஷோரூம் வைத்திருக்கும் பாபு வசந்த்திடம், எக்கச்சக்க கார்கள் நின்றிருந்தன. அவர் குறிப்பிட்ட சிவப்பு நிற எர்டிகா, 80,000 கி.மீ ஓடியிருந்தது. முதல் ஓனர், டீசல் VDI மாடல், பீரியாடிக்கல் சர்வீஸ் எல்லாம் பக்கா, முன் பக்கம் மாற்றப்பட்ட டயர்கள் என்று எர்டிகாவைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தார். விலை 6 லட்சம் என்றதும் பெனெடிட் ராஜா, சின்னதாகப் புன்னகைத்துத் தலையசைத்தார்.

எர்டிகா ஒரு எம்யூவி. இதை எஸ்யூவியாகப் பாவித்து ஓட்டுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால், நிஜத்தில் இது ஒரு LUV. அதாவது, Life Utitlity Vehicle. 2012-ல்தான் எர்டிகா அறிமுகம் ஆனது. ஒரு காரின் வெற்றி, பழைய கார் மார்க்கெட்டையும் சேர்த்துத்தான் இருக்கிறது. அதாவது, புதிதாக அறிமுகமான கார், அதிக கி.மீ ரீடிங் ஓடாமல் விரைவில் பழைய கார் மார்க்கெட்டுக்கு வந்தால் - அந்த கார் வெற்றியடையவில்லை என்று அர்த்தம். 80,000 கி.மீ-க்கு மேல் ஓடிய அல்லது இரண்டு ஓனர்களால் கைமாற்றப்பட்ட பழைய எர்டிகாதான் மார்க்கெட்டில் கிடைக்கும். இது எர்டிகாவுக்கு வெற்றியே!

எர்டிகாவுக்கு நிறைய பலங்கள் உண்டு. மாருதி என்பது முதல் பலம். அதனால், சர்வீஸ் மற்றும் ஸ்பேர்ஸ் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. ‘‘எந்த ஸ்பேர்ஸும் மாத்தாம, ஒரு ஃபுல் ஆயில் சர்வீஸுக்கு 3,500 ரூபாய்க்கு மேல் தாண்டாது. அதுதான் எர்டிகா. அதேபோல், ஸ்பேர்ஸும் விலை குறைவுதான்.

உதாரணத்துக்கு ஒரு டிஸ்க் பிரேக் பேடின் விலை 1,500 ரூபாய்க்குள்ளதான்!’’ என்று சொன்னார் பாபு வசந்த்.
அடுத்து, ஃபியட் இன்ஜின். 1.3 மல்ட்டிஜெட் டீசல் இன்ஜின். இந்த எர்டிகாவின் முதல் ஓனர் ஒரு டாக்டர். அவரிடம் விசாரித்தபோது, லிட்டருக்கு 20 கி.மீ தருவதாகச் சொன்னார். நகரம் என்றால் 17 அல்லது 18 கி.மீ தருமாம். பவர் 90bhp. மைலேஜுக்குக் காரணம் இன்ஜின் மட்டுமன்று; மோனோகாக் சேஸியில், ஸ்விஃப்ட் ப்ளாட்ஃபார்மில், லைட் வெயிட் ஸ்டீலில், எர்டிகா தயாரிக்கப்படுவதும்தான்! இதன் மொத்த எடை 1,235 கிலோதான். டார்க் 20.40kgm. இந்த எடைக்கு இந்த டார்க் சூப்பர். எனவே, ஓட்டுதலில் சொல்லியடிக்கிறது எர்டிகா.

சாலையில் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வந்து ‘‘இன்ஜின்னாலே ஃபியட்தான்!’’ என்று புளகாங்கிதமடைந்தார் பெனெடிட் ராஜா. ஸ்விஃப்ட்டைவிட வெறும் 300 மிமீதான் நீளம் அதிகம். இதனால் பெரிய காரை ஓட்டுவதுபோன்ற பயம் வரவில்லை. ‘‘இருந்தாலும் ரிவர்ஸ் கேமரா இருந்தால்தான் நிம்மதி!’’ என்றார் பெனெடிட். இதன் 90bhp இன்ஜின், டர்போ லேக் விஷயத்தில் மட்டும் படுத்தி எடுத்துவிடும். டர்போ லேக் பற்றி விசாரித்தவர், ‘‘மோ.வி.யிலகூட இதோட மைனஸ் டர்போ லேக்னு போட்டிருக்கு. அப்போ மலை ஏர்றது எர்டிகாவில் கஷ்டமா?’’ என்று லேசாக ஜெர்க் ஆனார். அவர் ஓட்டியது, VDI மாடல். இதில் காற்றுப் பைகள், டிராக்ஷன் கன்ட்ரோல் போன்ற பாதுகாப்பு வசதிகள் இல்லை. ஆனால், ஏபிஎஸ் உண்டு.

எர்டிகாவில் யாரும் கவனிக்காத விஷயம் - இதன் உயரம் (1,685 மிமீ). இது மற்ற எம்யூவிகளை ஒப்பிடும்போது, மிகவும் குறைவு. இதனால் காரின் சென்டர் ஆஃப் கிராவிட்டி குறைகிறது. இதனால், வேகங்களில் ‘ Aerodynamic Drag’ என்று சொல்லக்கூடிய அலைபாயும் தன்மையும் குறைகிறது. எலெக்ட்ரானிக் ஸ்டீயரிங் வேறு. கார்னரிங்கில் திருப்புவதற்கு சூப்பராக இருந்ததாகச் சொன்னார் பெனெடிட்.

இனோவா இல்லேனா எர்டிகா!

‘‘இன்டீரியரைப் பார்க்கலாமா?’’ என்று பாபு வசந்த், கதவைத் திறந்து காட்டினார். 7 சீட்கள் இருந்தன. ஆனால், கடைசி வரிசை சீட்டில் பயணிப்பவர்கள் நிச்சயம் பாவம்தான். போய் வருவதும் சிரமமாகவே இருக்கிறது. இது ஊருக்கே தெரியும். ‘‘ஆனா சீட்டை மடக்கினா 400 லிட்டர் இருக்கே..’’ என்றார் பெனெடிட் ராஜா.

இனோவா போலவே பின்பக்கம் ஏ.சி புளோயர் இருந்தது. நடுவரிசை சீட்கள்தான் ஆறுதல். எர்டிகாவின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 185 மிமீதான். ஆனால், 7 பேர் பயணிக்கும்போது இது குறையலாம். எனவே, ஸ்பீடு பிரேக்கர்கள், மேடுகளில் கவனம் தேவை.

டயர்களைத் தீவிரமாக செக் செய்தவரிடம், முன் பக்க டயர்கள் மாற்றியிருப்பதாகச் சொன்னார் பாபு வசந்த். VDI மாடலில் இருப்பது 15 இன்ச் டயர்கள். எப்போதுமே பழைய கார் வாங்கும்போது, வீல் அலைன்மென்ட்டை செக் செய்ய மறந்துவிடக் கூடாது. கார் வாங்கிவிட்டால், உடனடியாக இதைச் செய்ய வேண்டும். 300 ரூபாய்தான் செலவாகும்.

டர்போ லேக், கடைசி வரிசை சீட் போன்ற குறைகளை பெனெடிட் ராஜா பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை. ‘‘எந்த கார்லயும் குறை இல்லாமல் இல்லை. டிரைவிங் சீட் கொஞ்சம் லோ பொசிஷன்ல இருக்கு. பார்த்துக்கலாம்’’ என்று அடுத்த வேலைகளில் இறங்க ஆரம்பித்துவிட்டார். மாருதிக்கு போன் செய்து பீரியாடிக்கல் சர்வீஸ், ஆக்ஸிடென்ட் பற்றிய விவரங்களை செக் செய்துவிட்டு, லோன் ப்ராசஸில் பிஸியானார்.

அடுத்த வாரம், ‘‘எர்டிகா டெலிவரி எடுத்தாச்சு சார். குடும்பத்தோடு டூர் அடிக்க ப்ளான் பண்ணிக்கிட்டிருக்கேன்!’’ என்று போட்டோவுடன் வாட்ஸ்-அப் செய்தார் பெனெடிட் ராஜா.

வாசகர் தீர்ப்பு

‘‘இனோவாதான் முதலில் பார்த்தேன். விலை ரொம்ப அதிகமாக இருந்தது. மொபிலியோ, என்ஜாய், எக்ஸ்யூவி, ஸ்கார்ப்பியோனு நிறைய ஆப்ஷன் சொன்னாங்க. மாருதியில் இருக்கிற கம்ஃபர்ட் எனக்கு வேறு எதிலும் கிடைக்கலை. மாசச் சம்பளக்காரர்களுக்கு மாருதியை விட்டா வேற ஆப்ஷன் ஏது? 7 பேர் போகணும்; மைலேஜ் ஓரளவு கிடைக்கணும்; சர்வீஸ் செலவு கையைக் கடிக்காம இருக்கணும். இதுதான் என்னோட தேவை. இதுக்கு எர்டிகாதான் சரியான சாய்ஸ்!’’