Published:Updated:

ஏர் லெஸ் டயர்

ஏர் லெஸ் டயர்
பிரீமியம் ஸ்டோரி
ஏர் லெஸ் டயர்

தொழில்நுட்பம் : டயர் ராகுல் சிவகுரு

ஏர் லெஸ் டயர்

தொழில்நுட்பம் : டயர் ராகுல் சிவகுரு

Published:Updated:
ஏர் லெஸ் டயர்
பிரீமியம் ஸ்டோரி
ஏர் லெஸ் டயர்

ட்டோமொபைல் துறை நிபுணர்கள், ஆர்வலர்கள் என ஒருசேர அனைவரையும், சமீபத்தில் வியப்பின் உச்சத்துக்கே கொண்டுசென்ற தொழில்நுட்பம், ஏர்லெஸ் (Airless) டயர். Non Pneumatic வகை டயரான இது, டயர் தொழில்நுட்பத்தின் அடுத்த தலைமுறைத் தயாரிப்பாகப் பார்க்கப்படுகிறது. பிரத்யேக ஸ்போக்குகளால் (Spokes) ஆன செட்-அப் கொண்டிருக்கும் இந்த ஏர்லெஸ் டயர், வாகனத்தின் நான்குபுறமும் பொருத்தப்படுவதால், அதன் ஒட்டுமொத்த எடையையும் தாங்கக்கூடிய திறனைக் கொண்டிருக்கின்றன. வழக்கமான டயர்களைப்போல, இதில் காற்று நிரப்பத் தேவையில்லை என்பதுதான் இதன் சிறப்பு.

அதிக எடையைத் தாங்கும் திறன், சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்பு, சிறப்பான ஓட்டுதல் அனுபவம் ஆகியவற்றை வழங்கக்கூடிய இந்த ஏர்லெஸ் டயர்களை, Bridgestone, Michelin, Hankook போன்ற உலகின் முன்னணி டயர் தயாரிக்கும் நிறுவனங்கள், Prototype-களாக வடிவமைத்திருக்கின்றன.

ஏர் லெஸ் டயர்

எனவே, டயரின் ஸ்போக்குகளில் குப்பைகள் தேங்காமல் இருக்க தடுப்பில்லாதது, வாகனத்தின் எடையை சரிசமமாகப் பகிராமல் இருப்பது போன்ற சில குறைகள் இருந்தாலும், தயாரிப்பு நிலையை அடையும்போது இந்தக் குறைகள் எல்லாம் நிவர்த்தி செய்யப்படும் என நம்பலாம். வழக்கமான டயர்களில் இருக்கக்கூடிய வீல் - டயர் - வால்வு அமைப்புடன் ஒப்பிடும்போது, ஒரே யூனிட்டாக இருக்கிறது ஏர்லெஸ் டயர்.
Golf carts, Trailers, LawnMowers போன்ற கமர்ஷியல் வாகனங்களில், ஏர்லெஸ் டயர்கள் ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கின்றன. ஆனால், அவை திடமான ரப்பர் அல்லது பாலிமர் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டவை. ஏர்லெஸ் டயர்கள் பயன்படுத்தப்படும் வாகனங்களில், டயர் ரிப்பேர் கிட், டூல் கிட், ஸ்பேர் வீல் போன்றவை இருக்காது!

இந்த டயரால் பல நன்மைகள் உண்டு.பஞ்சர் ஆகாது: வழக்கமான டயர்கள் பஞ்சர் ஆகும்போது, அதில் அழுத்தத்துடன் இருக்கும் காற்று, விரைவாக வெளியேறி விடும். தனது பெயருக்கு ஏற்ப, ஏர்லெஸ் டயர்களில் காற்று கிடையாது. எனவே, கூர்மையான பொருள்கள்மீது ஏறி இறங்கினாலும், டயர் பஞ்சர் ஆகாது! அதனால், ஸ்பேர் வீல் மற்றும் அது தொடர்பான சாதனங்களும் தேவையில்லை. அதனால், வாகனத்தின் எடை சற்று குறையும். பூட் ஸ்பேஸும் அதிகமாகும்; மைலேஜும் சற்று அதிகரிக்கும்!

அதிக சேமிப்பு

 வர்த்தகப் பயன்பாட்டுக்கான டிரக்கு களில், ஏர்லெஸ் டயர்களைப் பயன் படுத்தும்போது, பஞ்சர், அதிக வெப்பத்தால் டயர் வெடிப்பது, காற்று வெளியேறுவது போன்ற நடைமுறைச் சிக்கல்கள் அறவே தவிர்க்கப்படும். இதனால் குறித்த நேரத்தில், குறைவான எரிபொருளில், செல்ல வேண்டிய இடத்துக்குப் பொருள்களைப் பத்திரமாகச் சேர்த்துவிட முடிகிறது. பின்னாளில் தொழில்துறையின் உற்பத்தித்திறனை அதிகரிக்க, ஏர்லெஸ் டயர்கள் உதவிகரமாக இருக்கும்.

ஏர் லெஸ் டயர்

குறைந்த காற்று மாசு:

வழக்கமான டயர்களின் அதிக Rolling Resistance மற்றும் பலதரப்பட்ட சாலைகளில் செல்வதனால் மட்டுமே, 90 சதவிகிதம் ஆற்றல்/எரிபொருள் இழப்பு ஏற்படுகிறது. ஏர்லெஸ் டயர்களின் கட்டுமானத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களினால், ஆற்றல் இழப்பு - Rolling Resistance ஆகியவை கட்டுப்படுத்தப்படுகின்றன. எரிபொருளின் தேவையும் குறைவு.

பூமியின் நண்பன்:

ஏர்லெஸ் டயர்கள், முழுக்க முழுக்க மறுசுழற்சி செய்யக்கூடிய Poly Resin போன்ற கனிம  வளங்களைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன. எனவே, புதிதாக ஏர்லெஸ் டயர் ஒன்றைத் தயாரிக்கும்போது, பழைய ஏர்லெஸ் டயரின் மூலப் பொருள்களும் அதில் பயன்படுத்தப்படும் வாய்ப்புகள் அதிகம்! இது வழக்கமான டயர்களை Re-Thread செய்து பயன்படுத்துவது போல ஆபத்தானதாக அமையாது என்பதுடன், நிலத்தின் கனிம வளங்களைப் பாதுகாக்கவும் முடியும் என்கின்றனர் ஆட்டோமொபைல் துறை வல்லுநர்கள்.