Published:Updated:

டாக் ஆஃப் தி ட்ராக்! - ராஜிவ் & ரெஹானா!

டாக் ஆஃப் தி ட்ராக்! - ராஜிவ் & ரெஹானா!
பிரீமியம் ஸ்டோரி
டாக் ஆஃப் தி ட்ராக்! - ராஜிவ் & ரெஹானா!

ரேஸ் : சென்னை தமிழ் : படங்கள்: தென்றல்

டாக் ஆஃப் தி ட்ராக்! - ராஜிவ் & ரெஹானா!

ரேஸ் : சென்னை தமிழ் : படங்கள்: தென்றல்

Published:Updated:
டாக் ஆஃப் தி ட்ராக்! - ராஜிவ் & ரெஹானா!
பிரீமியம் ஸ்டோரி
டாக் ஆஃப் தி ட்ராக்! - ராஜிவ் & ரெஹானா!

மோட்டோ ஜீபி சீஸன்போல் பரபரப்பாகியிருக்கிறது நம் ஊர் ரேஸ் டிராக். சென்ற மாதம் கோவையில் என்றால், இந்த மாதம் சென்னை இருங்காட்டுக்கோட்டை ரேஸ் டிராக்கில் ‘வ்வ்வ்ர்ர்ரூம்’ சண்டை. இது FMSCI ரேஸின் இரண்டாவது ரவுண்டு. சென்னையில் பல பேர் சொல்லியடித்தார்கள்; சிலர் அடுத்த சீஸனுக்குச் சவால் விட்டிருக்கிறார்கள்.

கோவையைப்போலவே இந்த முறையும் ஆண்கள் பிரிவில் ராஜிவ் சேதுவும், பெண்கள் பிரிவில் ரெஹானா ரியாவும் அதே ஸ்டார் ரேஸர்ஸ் இடத்தைத் தக்க வைத்துக்கொண்டார்கள். ஆண்களுக்கான சூப்பர்ஸ்போர்ட் ஒன்மேக் மற்றும் நேஷனல் இரண்டிலுமே ஹோண்டா Ten10 அகாடமியின் ராஜிவ் சேதுதான் இந்த முறையும் போடியத்தில் ஏறினார். கடந்த முறை இரண்டாம் இடம் பிடித்த மதனா குமார், ‘‘பைக் பிரச்னை ஆயிடுச்சுண்ணா.. அதான் 4-வது இடம் வந்தேன்...’’ என்று வருத்தப்பட்டாலும், முதல் ரேஸில் இரண்டாம் இடமே பிடித்தார்.

டாக் ஆஃப் தி ட்ராக்! - ராஜிவ் & ரெஹானா!

ஒரு சினிமா முடிந்த பிறகும் கதையைப் பற்றியோ, அந்த நடிகர்களின் நடிப்பைப் பற்றியோ பேசிக்கொண்டிருப்பார்களே... அதுபோல் ரெஹானாவின் ரேஸிங் டெக்னிக்ஸ்தான் ‘டாக் ஆஃப் தி ட்ராக்’ ஆக இருந்தது. கடந்த முறை பெங்களூருவைச் சேர்ந்த ஐஸ்வர்யா பிடித்த இடத்தை, இந்த முறை நடந்த இரண்டு ரேஸ்களிலும் பிடித்து அசத்தினார் ரெஹானா ரியா. காலையில் நடந்த பெண்களுக்கான ஹோண்டா ஒன்மேக் ரேஸில்  வின்னிங் ஷாட் அடித்தபோதே, பெண்கள் டீம் பரபரப்பாகிவிட்டது. ‘‘மாலையில் நடக்கும் நேஷனல் சாம்பியன்ஷிப்பில் எப்படியாவது ரெஹானாவை முந்த வேண்டும்’’ என்கிற வெறி அனைவரிடமும் இருந்தது. ஆனால், யாருக்கும் அசைந்து கொடுக்கவில்லை; நேஷனல் சாம்பியன்ஷிப்பிலும் தெறிக்கவிட்டார் ரெஹானா. காலையில் நடந்த ரேஸில், ரெஹானாவுக்கு அடுத்த இடத்தில் ஸ்ருதியும் கல்யாணியும் வந்தனர். நேஷனல் சாம்பியன்ஷிப்பில் கல்யாணிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடம். அபெக்ஸ் டீமைச் சேர்ந்த ஐஸ்வர்யாவுக்கு, பைக் பிரேக்கிங்கில் ஏதோ பிரச்னை என்றார்கள். இதனால், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கல்யாணி சட்டென இரண்டாம் இடத்துக்கு முன்னேறினார்.

‘‘நாளைக்கு காலேஜ்ல எக்ஸாம் இருக்கு... சொதப்பிடாதனு அண்ணா சொல்லித்தான் அனுப்பினான். எக்ஸாம் டென்ஷன் இருந்துச்சு. ஆனால், அதை டிராக்கில் காண்பிச்சுக்கலை. பயப்படாம நடிக்கிறதுக்குப் பேர்தானே வீரம்!’’ என்று கமல் டயலாக் பேசினார் ரெஹானா. சொன்னபடியே சொல்லியடித்ததில் ரெஹானாவின் அண்ணனும் குடும்பத்தினரும் சந்தோஷத்தில் திளைத்தனர். ‘‘நாளைக்கு எக்ஸாம்லேயும் சொல்லியடிக்கணும்!’’ என்று டென்ஷனோடே இருந்தார் ரெஹானா. சென்ற மாதத்துக்கும், இந்த மாதத்துக்கும் இடையில் நடந்த ஒரு மிகப் பெரிய வித்தியாசம் - இப்போது ஹோண்டாவின் Ten10 அகாடமியில் ரெஹானா இல்லை; Speed-up டீமுக்காக இந்த முறை ரேஸ் ஓட்டினார் அவர். ‘‘இது நிச்சயம் ஹோண்டாவுக்கு மிகப் பெரிய இழப்புதான்’’ என்று அரசல்புரசலாகப் பேசினார்கள். ஏனென்றால், முதல் மற்றும் இரண்டாம் இடம் இரண்டுமே, ஸ்பீடு அப் டீமுக்குப் போய்விட்டதே!

‘பொண்ணுங்க’ டீமில் ரெஹானா என்றால், ‘பசங்க’ பிரிவில் ராஜிவ் சேதுதான் இப்போதைய டாக். ஹோண்டாவின் Ten10 டீமுக்குக் கிடைத்த ‘வ்வ்வ்ர்ர்ரூம்’ புயல்! ரெஹானா மாதிரியே, சூப்பர் ஸ்போர்ட்ஸ் பிரிவிலும், நேஷனல் சாம்பியன்ஷிப் ரேஸிலும் முதல் இடத்தில் போடியம் ஏறினார், 18 வயது ராஜிவ் சேது. பைக் ஓட்டுவதில் ராஜிவ் சேதுவிடம் அத்தனை மெச்சூரிட்டி.

ஜெகன் என்றாலே டிராக்கே அலறும். ஐந்து முறை நேஷனல் சாம்பியன்ஷிப் பட்டம் தட்டிய ஜெகனையே பின்னுக்குத் தள்ளிய ராஜிவ் சேதுதான், குவாலிஃபையிங் ரேஸில் ஒரு லேப்பைக் குறைந்தபட்ச நேரத்தில் கடந்து சாதனை செய்தவர். 1.59.344 நிமிடங்களில் ஒரு லேப்பைக் கடந்து மெர்சல் பண்ணினார் ராஜிவ். இதுவே ஜெகனின் லேப் டைம், 2.00.396 நிமிடங்கள். ‘சரி; குவாலிஃபையிங்தானே...’ என்று நினைத்தார்கள் ஜெகன் ரசிகர்கள். துரதிர்ஷ்டம் என்னவென்றால், கோவையைப் போலவே இந்த முறையும் நேஷனல் சாம்பியன்ஷிப் ரேஸில், 6-வது லேப்பில் ஜெகனின் பைக் க்ராஷ் ஆனது. இதனால் ஜெகனால் முன்னேற முடியாமல் போனது.

டாக் ஆஃப் தி ட்ராக்! - ராஜிவ் & ரெஹானா!

Ten10 அகாடமியின் மற்றொரு ஸ்டார் ரேஸர், மதனா குமார். இவர் 2.03.820 நிமிடங்களில் ஒரு லேப்பைக் கடந்து நாலாவது இடம் பிடித்தார். வெள்ளிக்கிழமை வரை மதனா குமார் பீக்கில்தான் இருந்தார். இன்ஜின் பிரச்னையால், ஜெயிக்க வேண்டிய ரேஸில் 4-ம் இடமே கிடைத்தது. ஹோண்டா Ten10 டீமுக்கு அடுத்த நம்பிக்கை அர்விந்த் பாலகிருஷ்ணன். 300-400 சிசி கேட்டகிரியில், ‘கஸ்ட்டோ ரேஸிங்’ டீமைச் சேர்ந்த கேரளாவின் அமர்நாத் மேனனைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடம் பிடித்தார். இது தவிர, Drag Race மூலம் இருங்காட்டுக் கோட்டை இன்னும் பல திறமையாளர்களை உருவாக்கிக் கொண்டிருந்தது. இதில் முக்கியமானவர் நேதாஜி. சென்னைத் தெருக்களில் கன்னாபின்னாவென முறையற்று ஸ்ட்ரீட் ரேஸ் ஓட்டிக் கொண்டிருந்த நேதாஜி, சென்ற மாதம் கோவையில் நடந்த முதல் ரேஸில் 8-வது இடம் பிடித்தவர், இந்த முறை ஆரம்பம் முதலே வெறியாகத்தான் இருந்தார். மற்ற ரைடர்கள் அனைவரும் கோவை, சென்னை, பெங்களூரு என்று ரேஸ் டிராக்கிலேயே வாழ்பவர்கள். ஆனால், நேதாஜிக்கு இது இரண்டாவது ரேஸ். இரண்டாவது ரேஸிலேயே முதலில் வந்தவர், அடுத்து நடந்த ரேஸில் கடைசிக்கு முந்தைய லேப் வரை முதலில்தான் பறந்துகொண்டிருந்தார். துரதிர்ஷ்டவசமாக பைக் வீல் ஸ்லிப் ஆகி, கீழே விழுந்து வெளியேறினார் நேதாஜி. ‘‘அதனால கவலைப்பட மாட்டேன். அடுத்த ரேஸ்ல விட்ட இடத்தைப் பிடிப்பேன். ஸ்ட்ரீட் ரேஸ்ல கலந்துகிட்டவன், ரேஸ் டிராக்கில் இப்போ பைக் ஓட்டுறேன். இதுக்குக் காரணம் என்னோட Moto2 டீமின் இளங்கோ அண்ணனும், ஜார்ஜ் அண்ணனும்தான்’’ என்று பிராக்டிஸ் செய்துகொண்டே பேசினார்.

இன்னும் நிறைய ரேஸ் நட்சத்திரங்கள் உருவாக, இருங்காட்டுக்கோட்டையின் கதவுகள் திறந்தே இருக்கட்டும்!