Published:Updated:

AMT... எல்லோருக்குமானது!

AMT... எல்லோருக்குமானது!
பிரீமியம் ஸ்டோரி
AMT... எல்லோருக்குமானது!

தொழில்நுட்பம் : AMT தமிழ்

AMT... எல்லோருக்குமானது!

தொழில்நுட்பம் : AMT தமிழ்

Published:Updated:
AMT... எல்லோருக்குமானது!
பிரீமியம் ஸ்டோரி
AMT... எல்லோருக்குமானது!

‘இந்த டிராஃபிக்கில் கியர் மாத்தி... கிளட்ச் மிதிச்சு... கார் ஓட்டவே கஷ்டமா இருக்கு’ என அலுத்துக்கொள்ளும் டிரைவர்களுக்கான ஜாலி ஆப்ஷன்தான் ஆட்டோமேட்டிக். தானாகவே கியர் மாற்றிக் கொள்ளும் அம்சம் இது. சிக்னல்களில், போக்குவரத்து நெரிசலில் ‘கார் ஆஃப் ஆகிவிடுமோ’ என்ற பதற்றம் தேவையில்லை. கியரை ‘Drive’ மோடில் தள்ளி, ஆக்ஸிலரேட்டரை மிதித்தால், கார் செல்லும்.

AMT... எல்லோருக்குமானது!

இந்த ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன், கொஞ்சம் காஸ்ட்லி. முதலில் பிரீமியம் கார்களில் மட்டும்தான் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வந்தது. ‘அப்போ பட்ஜெட் கார்கள் என்ன பாவம் செஞ்சது’ என்ற கவலையைப் போக்க வந்ததுதான் ‘AMT’ எனும் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதி. முதன் முதலில் AMT ஆப்ஷனை, தனது செலெரியோவில் கொண்டுவந்து, மிடில் க்ளாஸ் மக்களை உற்சாகப்படுத்தியது மாருதி சுஸூகி. இதன் தனிச்சிறப்பே, அதன் விலைதான். வழக்கமான மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட காருக்கும் AMT-க்கும், சுமார் 40,000 முதல் 50,000 வரைதான் விலை வித்தியாசம்! அதனால், AMT-க்கு நல்ல மவுசு ஏற்பட்டது. அதுவும் பெண்கள் ஏரியாவில், AMT கார்தான் இப்போ மோஸ்ட் வான்டட்.

AMT-யும் ஆட்டோமேட்டிக்கும் ஒன்றா?

AMT-க்கும் ஆட்டோமேட்டிக் காருக்கும், வித்தியாசங்கள் உள்ளன. இரண்டிலுமே கிளட்ச் பெடல் இருக்காது; கியர் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இன்ஜினில் இருந்து பெறப்படும் சக்தி, டிரைவ்ட்ரெயின் மூலமாக, டிரான்ஸ்மிஷன் பாக்ஸுக்குக் கடத்தப்படும் முறையில்தான் வேறுபாடு இருக்கிறது.

AMT-யைப் பொறுத்தவரை, இதுவும் ஒரு மேனுவல் டிரான்ஸ்மிஷன் போலத்தான். இதில் கிளட்ச் பெடல் இருக்காது. ஆனால், கிளட்ச் இருக்கும். நீங்கள் கைகளில் செய்ய வேண்டிய கியர் மாற்றும் வேலையை, ஒரு ஆக்ச்சுவேட்டர்... அதாவது எலெக்ட்ரானிக் கன்ட்ரோல் மாட்யூல் செய்யும். இதுதான் AMT. அதனால், இதை செமி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் என்றும் சொல்வார்கள். எனவே இது, முழுமையான ஆட்டோமேட்டிக் கியர் சிஸ்டம் கிடையாது. அதனால், ஆட்டோமேட்டிக் கார்களைப்போல, இது ரொம்ப காஸ்ட்லியும் கிடையாது.

AMT... எல்லோருக்குமானது!

உதாரணத்துக்கு, ஒரு ஸ்மார்ட் டிவி-யை எடுத்துக் கொள்வோம். இன்பில்ட் ஆன்லைன் கனெக்ட்டிவிட்டி மற்றும் நிறைய அப்ளிகேஷன் வசதிகளோடு டிவி-யுடன் சேர்ந்தே வருவதுதான் ஸ்மார்ட் டி.வி. இதுவே சாதாரண LCD டிவி-யில்கூட நீங்கள் பென் டிரைவ், க்ரோம்கேஸ்ட் போன்ற மீடியா டிவைஸ்களைப் பயன்படுத்தி, ஒரு ஸ்மார்ட் டி.வி.க்கான இன்டர்ஃபேஸில் நீங்கள் டிவி பார்க்கலாம். அதற்காக, இது ஸ்மார்ட் டிவி ஆகிவிடாதுதானே? அதேபோல்தான் AMT-யும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸில் CVT, Torque Converter, DCT/DSG என்று ஏகப்பட்ட கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் உண்டு. ஆட்டோமேட்டிக் கார்கள் - ஸ்மார்ட் டி.வி என்றால்... AMT - ஸ்மார்ட் டிவி இல்லை; ஸ்மார்ட் டிவி மாதிரிதான். அதாவது, இது ஸ்மார்ட் டிவி பார்க்க வேண்டிய அத்தனை வேலைகளையும் செய்யும். கியர் போட வேண்டியதில்லை; கிளட்ச் கிடையாது. சொல்லப் போனால், ஒரு சாதா டிவியில் இணைக்கப்பட்ட பென் டிரைவ் மாதிரிதான் AMT. மேனுவலாக நீங்கள் கியர் மாற்றும் விஷயம் - ஆட்டோமேட்டிக் கார்களைப்போல இங்கே எலெக்ட்ரானிக்கலாக நடக்கும். வேலை ஒன்றுதான்; ஆனால், தொழில்நுட்பம் வேறு. AMT-யில் மேனுவல், ஆட்டோ என்று இரண்டு மோடுகளிலும் கார் ஓட்டலாம். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்போல, AMT-யில் அவ்வளவாக லேக் இருக்காது.

AMT... எல்லோருக்குமானது!

AMT- 10 முக்கியமான விஷயங்கள்!

* கிளட்ச் லெஸ் மேனுவல் டிரான்ஸ்மிஷன் என்பதால், இது கிளட்ச் இல்லாத சிஸ்டம் கிடையாது. இதில் கிளட்ச் இருக்கும்; ஆனால், கிளட்ச் பெடல் இருக்காது. அவ்வளவே!

* இது பயன்படுத்த மிகவும் சுலபமான விஷயம். அதேபோல, விலை குறைந்த அம்சம். 1986-ல் ஃபெராரி ரேஸ் கார்கள் மற்றும் லம்போகினி    Murcielago காரில், இந்த AMT சிஸ்டத்தைத்தான் பயன்படுத்தினார்கள்.

* எந்தவொரு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களிலும், AMT-யை ஃபிட் செய்துகொள்ளலாம். ஆனால், இது அந்தந்த கார் நிறுவனங்கள் நினைத்தால்தான் நடக்கும்.

* இதில் இரண்டு முக்கியமான பணிகள் மூலம், கியர் ஷிஃப்ட்டிங் நடக்கிறது. ஹைட்ராலிக் சிஸ்டம் மற்றும் எலெக்ட்ரானிக் கன்ட்ரோல் யூனிட்.

* மேனுவலாக நீங்கள் கியர் மாற்றுவதுபோல்தான் இதில் வேலை நடக்கும். கிளட்ச்சையும் கியரையும் தானாகவே என்கேஜ் செய்து கொள்கிறது. இதில் ‘ஸ்போர்ட்ஸ் மோடு’ ஆப்ஷனும் உண்டு. தேவைப்பட்டால் மேனுவலாகவும், நீங்கள் கியர் மாற்றிக் கொள்ளலாம்.

* கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு, இது பெரிய வேலை இல்லை. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் போல மேனுவலைக் காலி செய்துவிட்டு, AMT-யைப் பொருத்த வேண்டிய அவசியம் இல்லை.

* Magneti Marelli, Ricardo - இவைதான் AMT கியர்பாக்ஸை உருவாக்கும் நிறுவனங்கள். 2020-க்கு முன்னதாக, 20% AMT கியர்பாக்ஸ் கொண்ட கார்கள் விற்பனையாகும் என்று சொல்லியிருக்கின்றன இந்த நிறுவனங்கள்.

* ஆட்டோமேட்டிக் கார்களைப்போல, AMT-யில் மைலேஜ் குறையுமோ என்ற கவலை தேவையில்லை. இன்னும் சொல்லப்போனால், மேனுவலைவிடக் கொஞ்சம் அதிக மைலேஜ் கொடுக்கும் AMT-கள்கூட உண்டு.

* ரொம்ப முக்கியமான விஷயம் - இது விலையில்தான் மெர்சல் பண்ணுகிறது. மேனுவலைவிட 40,000 முதல் 50,000 ரூபாய் மட்டுமே AMT அதிகம்.

* AMT-யில் க்ரீப் ஃபங்ஷன் என்று ஒரு அம்சம் உண்டு. அதாவது சிக்னலில் நிற்கும்போது, பிரேக்கில் இருந்து காலை எடுத்தால், கார் தானாக முன்னோக்கி நகரும். அந்த நேரத்தில் ஆக்ஸிலரேட்டர் மிதிக்கத் தேவையில்லை. இந்த க்ரீப் ஃபங்ஷன், க்விட்டில் மட்டும் கிடையாது.