‘அச்சச்சோ... அவசரப்பட்டு இந்த காரை வாங்கிட்டோமே... கொஞ்சம் வெயிட் பண்ணியிருந்தா புது மாடலே வாங்கியிருக்கலாமே’ என்று பலரும் நகத்தைக் கடித்துக் கொள்வார்கள். அடுத்து என்னென்ன கார்கள் மற்றும் மாடல்கள் வரப்போகின்றன என்று முன்கூட்டியே தெரிந்துகொண்டு கார் வாங்கும் முடிவை எடுப்பதுதான் எப்போதும் நல்லது. இந்த ஆண்டு செப்டம்பர் தொடங்கி, அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள்ளாக, பல புதிய கார்கள் நம் நாட்டில் அறிமுகமாகவிருக்கின்றன. எனவே, இந்த இடைப்பட்ட காலத்தில், நீங்கள் புதிதாக கார் வாங்கும் முடிவில் இருந்தால், இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு தெளிவாக முடிவெடுங்கள்.

காம்பேக்ட் எஸ்யூவியின் ராஜாவாக இருந்த எக்கோஸ்போர்ட், அந்த இடத்தைத் தற்போது விட்டாரா பிரெஸ்ஸாவிடம் இழந்துவிட்டது. டாடா நெக்ஸான்வேறு களமிறங்கவிருக்கிறது. தனது பெருமையை மீட்டெடுக்கும் வகையில், எக்கோஸ்போர்ட்டின் ஃபேஸ்லிஃப்ட் மாடலைக் களமிறக்கவுள்ளது ஃபோர்டு. அதற்கேற்ப அகலமான கிரில், ஷார்ப்பான ஹெட்லைட், ஸ்டைலான பம்பர் என காரின் முன்பக்கத்தில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. பலவித கன்ட்ரோல்களுடன் கூடிய ஸ்டீயரிங் வீல், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், Sync 3 உடனான டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் என டேஷ்போர்டும் புதிய டிசைனில் கலக்குகிறது. இன்ஜின் ஆப்ஷன்களைப் பொறுத்தமட்டில், 1.5 லிட்டர் டீசல் இன்ஜினில் எந்த மாறுதலும் இல்லை. ஆனால், தற்போது இருக்கும் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினுக்குப் பதிலாக, முற்றிலும் புதிய 1.5 லிட்டர், 3 சிலிண்டர் Dragon சீரிஸ் பெட்ரோல் இன்ஜினை எக்கோஸ்போர்ட்டில் பொருத்தியுள்ளது ஃபோர்டு. இது 1.0 லிட்டர் எக்கோபூஸ்ட் இன்ஜினுக்கு இணையான 125-130bhp பவரை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த தலைமுறை CR-V, தற்போதைய மாடலைவிட ஸ்டைலாகவும், பெரிதாகவும் மாறியிருக்கிறது. கேபினில் தொடுவதற்கு மென்மையான மெட்டீரியல்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதுடன், கனெக்ட்டிவிட்டி ஆப்ஷன்களுடன் கூடிய 7 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் இடம்பெற்றுள்ளது. மேலும் டேஷ்போர்டின் டிசைனும், அக்கார்டு ஹைபிரிட் காரை நினைவுபடுத்தும்படி பிரீமியமாக அமைந்திருக்கிறது. டாப் வேரியன்ட்களில் டூயல் ஸோன் கிளைமேட் கன்ட்ரோல், Heated ரியர் வியூ மிரர்கள், எலெக்ட்ரிக்கலாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன்பக்க இருக்கைகள், ரிமோட் இன்ஜின் ஸ்டார்ட் எனச் சிறப்பம்சங்களின் பட்டியல் நீள்கிறது. இது தவிர, இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ள CR-V-ல் முதன்முறையாக டீசல் இன்ஜின் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. இந்த 1.6 லிட்டர் டீசல் இன்ஜின், 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. தற்போதைய மாடலில் இருக்கும் 2.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அப்படியே இங்கும் தொடர்கிறது. இதன் போட்டியாளர்களான ஹூண்டாய் டூஸான் மற்றும் ஜீப் காம்பஸ் ஆகிய எஸ்யூவிகளுடன் ஒப்பிடும்போது, இது 7 சீட்டராக இருப்பது கவனிக்கத்தக்கது.

ரெனோவுக்கு காப்டூர் எப்படியோ, நிஸானுக்கு கிக்ஸ் அப்படி. ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் ஜீப் காம்பஸ் ஆகிய எஸ்யூவிகளுக்குப் போட்டியாக பொசிஷன் செய்யப்பட்டிருக்கும் கிக்ஸ், டெரானோவை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஷார்ப்பான டிசைன், கூபே போன்ற பக்கவாட்டுத் தோற்றம், ஃப்ளோட்டிங் ரூஃப் என படு மாடர்ன்னாக இருக்கிறது கிக்ஸ். அனலாக் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பலவித கன்ட்ரோல்களுடன்கூடிய ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல், ரிவர்ஸ் கேமரா மற்றும் ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டியுடன் கூடிய 7 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோ கிளைமேட் கன்ட்ரோல் என இடவசதிமிக்க கேபினில் சிறப்பம்சங்களின் பட்டியல் மிக நீளம். டாப் வேரியன்ட்களில் 360 டிகிரி கேமரா, டிராக்ஷன் கன்ட்ரோல், பக்கவாட்டுக் காற்றுப்பைகள் என அதிக பாதுகாப்பு வசதிகளும் இருக்கின்றன. இதில் டெரானோவில் இருக்கும் அதே இன்ஜின் ஆப்ஷன்களே இடம்பெற்றுள்ளன என்றாலும், அவை அதிக பவருக்காக ரீ-டியூன் செய்யப்படும் எனத் தெரிகிறது. மேலும், எதிர்பார்த்தபடியே இதன் விலை, டெரானோவைவிட அதிகமாகவே இருக்கும்.

கார் ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கான பதிலாக, சிவிக் செடானை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது ஹோண்டா. சிட்டி மற்றும் அக்கார்டு செடான்களுக்கு இடையே பொசிஷன் செய்யப்பட உள்ள சிவிக், தனது கூபே போன்ற டிசைனால் கவர்ந்திழுக்கிறது. இதில் முற்றிலும் புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. டூயல் ஸோன் ஏ.சி, TFT LCD இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே, ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி உடனான 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பேடில் ஷிப்ட்டர் உடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என சிவிக்கில் அதிக வசதிகள் இருக்கின்றன.

டிசையர், டிகோர் எனப் புதிய காம்பேக்ட் செடான்களின் வருகையால், விற்பனையில் மிகவும் பின்தங்கிவிட்டது அமேஸ். எனவே, தனது மிட்சைஸ் செடானான சிட்டியைப் போல, ஷார்ப்பான டிசைனுடன் அமேஸை மாற்றும் வேலைகளில் இறங்கியிருக்கிறது ஹோண்டா. ஏற்கெனவே இடவசதியில் ஸ்கோர் செய்திருக்கும் அமேஸ், வசதிகளிலும் ஸ்கோர் செய்யும் என நம்பலாம்.

BR-V மற்றும் CR-V கார்களுக்கு இடையே, HR-V காரை பொசிஷன் செய்துள்ளது ஹோண்டா. இந்த காரை, விரைவில் அறிமுகமாக உள்ள ரெனோ காப்டூர் காருக்குப் போட்டியாகப் பொசிஷன் செய்திருக்கிறது ஹோண்டா. பெட்ரோல் மாடலில் CVT கியர்பாக்ஸும், டீசல் மாடலில் ஆல் வீல் டிரைவும் ஆப்ஷனலாக வழங்கப்படலாம்.

ஃபோர்டு எக்கோஸ்போர்ட், மாருதி சுஸூகி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான் ஆகிய காம்பேக்ட் எஸ்யூவிகளுக்குப் போட்டியாக, கார்லினோ எனும் காரைக் களமிறக்குகிறது ஹூண்டாய். ஸ்டைலான டிசைன், தரமான கேபின், அதிக சிறப்பம்சங்கள் என ஹூண்டாய் காருக்கான அம்சங்கள் இருக்கலாம். i20, க்ரெட்டாவில் இருக்கும் 1.4 லிட்டர் டர்போ டீசல் இன்ஜினுடன், எக்கோஸ்போர்ட்டைப் போல 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் வெளிவரவுள்ளது.

மாருதி சுஸூகி எர்டிகா மற்றும் ரெனோ லாஜி ஆகிய எம்பிவிகளுக்குப் போட்டியாக, TUV 3OO எஸ்யூவியின் LWB மாடலைக் களமிறக்குகிறது மஹிந்திரா. இது ,TUV 3OO எஸ்யூவியை அடிப்படையாகக்கொண்டது என்றாலும், வீல்பேஸ் முன்பைவிட அதிகம். எனவே, அதிக இடவசதியை எதிர்பார்க்கலாம். TUV 3OO -ல் இருக்கும் 1.5 லிட்டர், 3 சிலிண்டர் டர்போ டீசல் இன்ஜினுடன் ஒப்பிடும்போது, பவர்ஃபுல் 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜினைக் கொண்டிருக்கிறது TUV LWB மாடல்.

தனது XUV 5OO எஸ்யூவியை அடிப்படையாகக் கொண்டு, ஸ்போர்ட்ஸ் கூபே மாடலை அறிமுகப்படுத்துகிறது மஹிந்திரா. இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான இத்தாலிய டிசைன் நிறுவனமான PininFarina, இந்த காரை 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியபோது, பலரது கவனத்தையும் கவர்ந்தது. இதில் டீசல் இன்ஜினைத் தவிர, எலெக்ட்ரிக் மாடலையும் ஆப்ஷனலாகக் கொண்டிருக்கிறது XUV Aero.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஆல்ட்டோவின் அடுத்த தலைமுறை மாடல், இக்னீஸ் போன்ற க்ராஸ்ஓவர் டிசைனுடன் வெளிவரலாம். எனவே, தற்போதைய மாடலைவிட ஸ்டைலாகவும், அதிக இடவசதியுடனும் இது இருக்கும். ரெனோ க்விட்டைப்போல இதில் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தைச் சேர்த்திருக்கிறது மாருதி சுஸூகி. ஆனால் ஏபிஎஸ், காற்றுப்பைகள் போன்ற பாதுகாப்பு வசதிகள், காரில் ஸ்டாண்டர்டாக இருக்குமா என்பது தெரியவில்லை.

எஸ்யூவி போன்ற டிசைன், ரெனோ க்விட்டை இந்தியாவில் வெற்றி பெறச் செய்த காரணங்களில் பிரதானமானது. எனவே, அந்த வழியைப் பின்பற்றி, ஒரு சின்ன காரைத் தயாரித்து வருகிறது மாருதி சுஸூகி. 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட உள்ள இந்த கார், எஸ்யூவி போன்ற டிசைன், அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், AMT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் போன்ற வசதிகளுடன் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.

புதிய கிரில், LED ஹெட்லைட்ஸ், LED டெயில் லைட்ஸ், புதிய பம்பர்கள் என காரின் முன்பக்க மற்றும் பின்பக்கத் தோற்றத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சன் ரூஃப், அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், பெட்ரோல் இன்ஜின் என அதிக வசதிகளையும் எதிர்பார்க்கலாம்.

புதிய மைக்ரா ஹேட்ச்பேக்கை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் புதிய சன்னி, அதைவிட அதிக வீல்பேஸைக் கொண்டிருக்கிறது. ஆனால், கையாளுமைக்கும் சொகுசுக்கும் சரிசமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால், தற்போது விற்பனையில் இருப்பதைவிடக் கொஞ்சம் குறைவான பின்பக்க இடவசதியே இருக்கும் எனத் தெரிகிறது. ஆனால், இன்ஜின் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் இல்லை.

இது பார்ப்பதற்கு ரெனோ டஸ்ட்டர் சைஸில் இருந்தாலும், அதைவிட அகலமாகவும் உயரமாகவும் இருக்கிறது. ஜீப் கார்களுக்கே உரித்தான டிசைனைக் கொண்டிருக்கும் ரெனிகாடே, ஆஃப் ரோடிங் திறனில் போட்டியாளர்களைவிடத் தனித்து நிற்கிறது. ஆனால், டாப் வேரியன்ட்களில் மட்டுமே இது இருக்கும். இதில் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின்களைத் தவிர, மாருதி சுஸூகி எஸ்-க்ராஸில் இருக்கும் 1.6 லிட்டர் டர்போ டீசல் இன்ஜினும் பொருத்தப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம்! காம்பஸ் எஸ்யூவியைத் தொடர்ந்து, ரெனிகாடே எஸ்யூவியையும் இந்தியாவில் அசெம்பிள் செய்யும் முடிவில் இருக்கிறது ஜீப். எனவே, அதிரடியான விலையை எதிர்பார்க்கலாம்.

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் முதன்முறையாகக் காட்சிப்படுத்தப்பட்ட இந்த க்ராஸ்ஓவர், பலரின் லைக்குகளைப் பெற்றது. இது 4 மீட்டர் நீளத்துக்கு உட்பட்ட கோ + காரை அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்பட்டுள்ளது என்பதுடன், விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் எக்கோஸ்போர்ட் ஆகிய காம்பேக்ட் எஸ்யூவிகளுக்குப் போட்டியாக இது பொசிஷன் செய்யப்படும் எனத் தெரிகிறது. எனவே, அதற்கேற்ப கோ க்ராஸ் காரின் கேபினை, டச் ஸ்கிரீனுடன் டட்ஸன் மாடர்ன்னாக வடிவமைக்கும் என எதிர்பார்க்கலாம். மேலும் முன்னே சொன்ன கார்களுடன் ஒப்பிடும்போது, கோ க்ராஸ் காரின் விலை குறைவாகவே இருக்கும் என்பது பெரிய ப்ளஸ்.