ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, முழு மாற்றம் பெற்று வந்திருக்கிறது வெர்னா. இந்த ஐந்தாம் தலைமுறை வெர்னாவை, ‘நியூ ஜென் வெர்னா’ என்று அழைக்கிறது ஹூண்டாய். சென்ற தலைமுறை வெர்னா வெளிவந்தபோது, அது ‘மிட் சைஸ் செக்மென்ட்டின்’ மூடிசூடா மன்னனாகத் திகழ்ந்த ஹோண்டா சிட்டிக்கே சவால் விடும் அளவிற்கு விற்பனையில் அசத்தியது என்றாலும், மாருதி சுஸூகி சியாஸின் வருகைக்குப் பிறகு, வெர்னா பின்னுக்குத் தள்ளப்பட்டது. இழந்த தனது இடத்தை நியூ ஜென் வெர்னா கைப்பற்றுமா?

டிசைன்

K2 பிளாட்ஃபார்மில் தயாராகும் நியூ ஜென் வெர்னா, நியூ ஜென் எலான்ட்ராவின் டிசைனை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், பார்வைக்கு நியூ ஜென் வெர்னாவுக்கும் முந்தைய வெர்னாவுக்கும் டிசைனில் பெரிய மாற்றங்கள் தெரியவில்லை. பெரிய மாற்றம் என்றால், கேபினைச் சொல்லலாம். அதே சமயம், நியூ ஜென் வெர்னாவில் புதிய கிரில், ஷார்ப்பான ஹெட்லைட்ஸ், ஃபாக் லைட்ஸ், மெலிந்திருக்கும் டெயில் லைட்ஸ், புதிய 16 இன்ச் டயமன்ட் கட் அலாய் வீல் என்று குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள்.

பழைய வெர்னாவின் உயரம்தான், நியூ ஜென் வெர்னாவும். ஆனால் நீளமும் அகலமும் சற்றே அதிகரித்திருக்கின்றன. அதனால் கேபின் ஸ்பேஸ் முன்பைவிட அதிகமாகியிருக்கிறது. ஹெட் ரூமும் தாராளமாகியிருக்கிறது. டிக்கிகூட பெரிதாகியிருக்கிறது. ஆனாலும், போட்டியாளர்களோடு ஒப்பிடும்போது, இதன் டிக்கி சிறிதுதான்.

உள்ளலங்காரம்

இரட்டை வண்ண உள்ளலங்காரம், கவனத்தை ஈர்க்கிறது. மற்ற ஹூண்டாய் கார்களைப்போலவே, புதிய நியூ ஜென் வெர்னாவில் ஏராளமான சிறப்பம்சங்கள். இதில் முக்கியமானது ‘ஆப்பிள் ப்ளே’ மற்றும் ‘ஆண்ட்ராய்டு ஆட்டோ’ உடன் கூடிய 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோ டெயின்மென்ட் சிஸ்டம். வாய்ஸ் கமாண்ட், ஸ்டீயரிங் மவுன்டட் ஆடியோ கன்ட்ரோல், பின்னிருக்கைகளுக்கான ஏ.சி கன்ட்ரோல், வென்டிலேட்டட் முன்னிருக்கைகள், சன் ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல், ரியர் பார்க்கிங் சென்ஸார், ஆறு காற்றுப்பைகள் போன்ற பல வசதிகள் இதில் இடம்பெற்றிருக்கின்றன. குளிர்ச்சியைக் கொடுக்கும் வென்டிலேட்டட் இருக்கைகள் நீங்கலாக, வெர்னாவில் இருக்கும் பெரும்பாலான சிறப்பம்சங்கள், ஹோண்டா சிட்டியிலும் இருக்கின்றன. வெர்னா மற்றும் சிட்டியைப்போலவே, சியாஸிலும், வென்ட்டோவிலும் அனேகமாக அனைத்து சிறப்பம்சங்களும் உண்டு. ஆனால், இவற்றில் இரண்டு காற்றுப்பைகள்தான்.

இன்ஜின்

நியூ ஜென் வெர்னாவில் இருப்பது, 123 bhp சக்தியையும், 15.1 kgm டார்க்கையும் கொடுக்கக்கூடிய (பழைய வெர்னாவில் இருந்த) அதே 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்தான். 128 bhp சக்தியையும், 26.5 kgm டார்க்கையும் அளிக்கக்கூடிய 1.6 லிட்டர் டர்போ டீசல் இன்ஜினிலும் எந்த மாற்றமும் இல்லை. டீசல் இன்ஜினோடு அதே 6 ஸ்பீடு கியர் பாக்ஸ்தான் இப்போதும். ஆனால், முந்தைய பெட்ரோல் காரைப்போல இல்லாமல், புதிய பெட்ரோல் வெர்னாவில் ஐந்துக்குப் பதிலாக ஆறு கியர்கள் உள்ளன. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் இரண்டிலும் உண்டு.

பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், நியூ ஜென் வெர்னாவில் 50 சதவிகிதம் Ultra High Strength ஸ்டீல் பயன்படுத்தப்பட்டிருப்பதாக ஹூண்டாய் கூறியுள்ளது. வெர்னாவில் இருப்பது சக்தி வாய்ந்த இன்ஜின் என்பதால், மைலேஜைப் பொறுத்தவரை, வெர்னாவைவிட போட்டியாளர்கள் முன்னணியில் இருக்கிறார்கள்.

மார்க்கெட்டில் தான் இழந்த இடத்தை மீண்டும் பிடிப்பதில் ஹூண்டாய் உறுதியாக இருப்பது அறிவிக்கப்பட்டிருக்கும் அதன் விலையைப் பார்த்தாலே தெரிகிறது.

முந்தைய வெர்னாவின் விலையைவிடவும் ஹூண்டாய் நியூ ஜென் வெர்னாவின் விலையைக் குறைவாகவே நிர்ணயித்திருக்கிறது ஹூண்டாய். நியூ ஜென் (பெட்ரோல் மேனுவல்) வெர்னாவின் விலை ரூ. 7.99 (எக்ஸ் ஷோரூம், டெல்லி) லட்சம் என்றால், இதன் டீசல் ஆட்டோமேட்டிக் வேரியன்ட்டின் விலை ரூ. 12.61 லட்சம். இந்த விலை எல்லாம் ஹோண்டா சிட்டியைவிடக் குறைவுதான் என்றாலும், புதிதாக முளைத்திருக்கும் போட்டியாளரான மாருதி சியாஸைவிடக் குறைவு இல்லை.