இந்தியாவில் மிட் சைஸ் செடான்களுடன் ஒப்பிடும்போது, எக்ஸிக்யூட்டிவ் செடான்களுக்கு வரவேற்பு குறைவுதான்; ஆனால் ஆக்டேவியா, எலான்ட்ரா, கரோலா ஆல்ட்டிஸ் என இந்த செக்மென்ட்டிலும், போட்டி நிலவுகிறது. கடந்த ஆண்டில் தனது ஆறாவது தலைமுறை எலான்ட்ரா காரை அறிமுகப்படுத்தியது ஹூண்டாய். இதற்குப் போட்டியாக, ஆக்டேவியா மற்றும் கரோலா ஆல்ட்டிஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் களமிறங்கின. விற்பனை எண்ணிக்கையின்படி, இந்த செக்மென்ட்டின் லீடர் கரோலா ஆல்ட்டிஸ்தான். அதனால், போட்டி இரண்டாவது இடத்துக்குத்தான். இந்த இடத்துக்கு எலான்ட்ரா மற்றும் ஆக்டேவியா ஆகியவை போட்டி போடுகின்றன.

டிசைன்

தூரத்தில் இருந்து பார்த்தால், மெர்சிடீஸ் பென்ஸின் முந்தைய E-க்ளாஸ் செடானை நினைவுபடுத்துகிறது ஆக்டேவியா. இதற்கு அந்த காரின் முன்பக்கத்தில் இருக்கும் ஸ்டைலான Quad ஹெட்லைட்டே காரணம். இரண்டு பகுதிகளாக இருக்கும் அடாப்டிவ் LED ஹெட்லைட்கள், கிரில்லுடன் இணையும் விதம் வெகு அழகு. பானெட்டும் முன்பைவிடக் கூடுதல் டிசைன் அம்சங்களுடன் கவர்ந்திழுக்கிறது.

வெளிப்புறத் தோற்றத்தில் எலான்ட்ரா கவர்ச்சிகரமாக இருக்கிறது. இந்த கார் கிடைக்கக்கூடிய 5 கலர் ஆப்ஷன்களில், நீல நிற எலான்ட்ரா, பார்க்க செம ஸ்போர்ட்டியாக உள்ளது. இதன் 458 லிட்டர் பூட் ஸ்பேஸுக்கு, ‘ஸ்மார்ட் ட்ரங்க்’ எனும் வசதி உள்ளது. ஹூண்டாய் தனது ஃப்ளூயிடிக் டிசைன் கோட்பாடுகளைப் பயன்படுத்தி, ஐரோப்பிய காரைப்போல எலான்ட்ராவை வடிவமைத்திருக்கிறது.

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்

எக்ஸிக்யூட்டிவ் செடான் செக்மென்ட்டின் சிறந்த பெட்ரோல் இன்ஜினாக, ஸ்கோடா ஆக்டேவியாவில் இருக்கும் 1.8 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினைச் சொல்லலாம். 180bhp பவர் - 25kgm டார்க்கை வெளிப்படுத்தும் இந்த ஸ்மூத்தான இன்ஜின், பெர்ஃபாமென்ஸில் பட்டையைக் கிளப்புகிறது. இதற்கு இந்த இன்ஜினுடன் இணைக்கப்பட்டிருக்கும் 7 ஸ்பீடு DSG ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் துணை நிற்கிறது. குறைவான வேகங்களில் செல்லும்போது கொஞ்சம் டர்போ லேக் எட்டிப் பார்த்தாலும், அதன் பிறகு விருட்டென வேகம் பிடிக்கிறது ஆக்டேவியா. மேலும், எந்த வேகத்தில் சென்றாலும், கேபினுக்குள்ளே இன்ஜின் சத்தம் கேட்கவில்லை என்பது ப்ளஸ்.

ஆக்டேவியாவுடன் ஒப்பிடும்போது, டர்போ சார்ஜர் - டைரக்ட் இன்ஜெக்ஷன் போன்ற தொழில்நுட்பங்கள் ஏதும் இல்லாத வழக்கமான 2.0 லிட்டர் VTVT பெட்ரோல் இன்ஜினைக் கொண்டிருக்கிறது எலான்ட்ரா. இது அளவில் பெரிதாக இருந்தாலும், ஆக்டேவியாவைவிடக் குறைவான பவர் (152bhp) மற்றும் டார்க்கையே (25kgm) வெளிப்படுத்துகிறது. ஆனால், இங்கே டிரைவிங் மோடுகள் இருப்பதால், காரை ஓட்டும்போது பவர் குறைபாடு தெரியவில்லை. எலான்ட்ராவின் ஆக்ஸிலரேஷன் போதுமான அளவு இருந்தாலும், அது ஆக்டேவியா அளவுக்கு அதிரடியாக இல்லை. மற்ற ஹூண்டாய் இன்ஜின்களைப் போலவே, இதுவும் சத்தமின்றி தனது பணியைச் செய்கிறது. ஸ்போர்ட்ஸ் மோடில் காரை ஓட்டும்போது, இன்ஜின் ரெஸ்பான்ஸ் உடனடியாக இருப்பதை உணர முடிகிறது. ஆனால், நெரிசல்மிக்க நகரச் சாலைகளில் செல்வதற்கு, எக்கோ மோடைப் பயன்படுத்துவதே சரியான சாய்ஸ்.

ஓட்டுதல் அனுபவம்

குறைவான வேகத்தில் கரடுமுரடான சாலைகளில் செல்லும்போது, ஆக்டேவியா குலுங்குகிறது. இதுவே காரின் வேகத்தை அதிகரிக்கும்போது, சஸ்பென்ஷன் அனைத்தையும் சமாளித்துவிடுகிறது. ஆக்டேவியா முன்பைவிடக் கொஞ்சம் அதிகமாக அலைபாய்வதுபோல இருந்தாலும், காரின் ரோடு கிரிப் மற்றும் கன்ட்ரோல் அற்புதம்.

குறைவான வேகங்களில் செல்லும்போது, ஆக்டேவியாவை விட சொகுசான காராக இருக்கிறது எலான்ட்ரா. இதை நம்பி வேகத்தை அதிகரித்தால், கார் ஆட்டம் போடுகிறது. எடை அதிகமான ஆக்டேவியாவுடன் ஒப்பிடும்போது, எடை குறைந்த எலான்ட்ரா நிலையாக இல்லை. அதாவது, ரோடு கிரிப் குறைவு. மற்ற ஹூண்டாய் கார்களுடன் ஒப்பிடும்போது, எலான்ட்ராவின் ஸ்டீயரிங் சிறப்பு. ஆனால், இதன் ஃபீட்பேக், ஆக்டேவியாவைவிடக் குறைவு.

கேபின்

டூயல் டோன் (பீஜ் - பிளாக்) ஃபினிஷைக் கொண்டிருக்கும் ஆக்டேவியாவின் கேபினில் பயன்படுத்தப்பட்டுள்ள பிளாஸ்டிக், ஸ்விட்ச்கள், அப்ஹோல்சரியின் தரம் ஆகியவை அசத்தல் ரகம். பனரோமிக் சன்ரூஃப் மற்றும் டச் ஸ்கிரீன் ஆகியவை, இந்த கேபினுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன. அதனால், ஆக்டேவியாவில் செல்லும்போது, ஒரு லக்ஸூரி செடானில் பயணிக்கும் உணர்வு தானாக வந்துவிடுகிறது. இரண்டு டயல்களைக் கொண்டிருக்கும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மாடர்னாக இருக்கிறது. கேபினில் இருக்கும் மூட் லைட்டிங், இரவு நேரப் பயணங்களை நல்ல அனுபவமாக மாற்றுகிறது.

ஐரோப்பிய கார்களில் இருப்பது போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது எலான்ட்ராவின் கேபின். சில்வர் வேலைப்பாடுகளுடன் கறுப்பு நிறம் சேரும் விதம் அழகாக இருந்தாலும், ஆக்டேவியாவில் இருந்த அந்த பிரீமியம் உணர்வு, எலான்ட்ராவில் இல்லை. ஆனால், கேபினில் இடம்பெற்றுள்ள பட்டன்களின் தரம் மற்றும் ஃபிட் அண்டு ஃபினிஷ் அட்டகாசமாக இருக்கிறது. வெளிப்புறச் சத்தம் எதுவும் உள்ளே நுழையாதபடி, எலான்ட்ராவின் கேபினை அற்புதமாகத் தயாரித்திருக்கிறது ஹூண்டாய்.

இடவசதி

ஆக்டேவியாவின் முன்பக்க இருக்கைகள் பெரிதாக இருப்பதுடன், அவை நல்ல சப்போர்ட்டையும் அளிக்கின்றன. பின்பக்க இருக்கையிலும் லெக்ரூம் - ஹெட்ரூம் - தொடைகளுக்கான சப்போர்ட் என எல்லாமே பக்கா. டெயில்கேட்டின் புதுமையான வடிவமைப்பு காரணமாக, விசாலமான 590 பூட் ஸ்பேஸில் பொருள்களை வைப்பது, மிகச் சுலபமாக இருக்கிறது. இதுவே ஆக்டேவியாவின் பின்பக்க இருக்கைகளை மடக்கும்போது, ஸ்டேஷன் வேகன் கார்களுக்கு இணையான 1,580 லிட்டர் பூட் ஸ்பேஸ் கிடைக்கிறது.

எலான்ட்ராவின் அகலமான முன்பக்க இருக்கைகள், சொகுசாக இருக்கின்றன. பின்பக்க இருக்கைகள் தாழ்வாக இருப்பதுடன், காரின் ரூஃப் லைனும் கூபே போல சரிவாக இருப்பதால், ஹெட்ரூம் திருப்திகரமாக இல்லை. இதனால், ஒரு சிலருக்கு காருக்குள்ளே செல்வது, கொஞ்சம் அசெளகரியத்தை ஏற்படுத்தலாம். ஆனால், லெக்ரூம் போதுமான அளவில் இருக்கிறது; காரின் அகலம் காரணமாக, எலான்ட்ராவின் பின்பக்க இருக்கையில் மூன்று பேர் உட்கார முடிகிறது.

சிறப்பம்சங்கள்

ஆக்டேவியாவின் புதிய 8 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தின் இருபுறமும், மெயின் மெனுவைப் பார்க்கக்கூடிய பட்டன்கள் உள்ளன. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற கனெக்ட்டிவிட்டி வசதிகளைக் கொண்டிருக்கும் இந்த டச் ஸ்கிரீன், ரெஸ்பான்ஸிவ்வாக இருக்கிறது. மேலும், ஆக்டேவியாவில் ஆட்டோ பார்க்கிங் வசதியும் இருப்பதால், இவ்வளவு பெரிய காரை பார்க் செய்வது மிகச் சுலபம்; 8 காற்றுப்பைகள், ABS, ESP, ISOFIX என பாதுகாப்பு வசதிகளிலும் ஆக்டேவியா மாஸ் காட்டுகிறது. மற்ற ஹூண்டாய் கார்களைப் போலவே, எலான்ட்ராவிலும் அதிக வசதிகளைச் சேர்த்துள்ளது ஹூண்டாய். முன்பக்க கூலிங் சீட்ஸ், பார்க்கிங் சென்ஸாருடன்கூடிய ரிவர்ஸ் கேமரா, ஆப்பிள் கார் ப்ளே - ஆண்ட்ராய்டு ஆட்டோ - சாட்டிலைட் நேவிகேஷன் உடனான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 6 காற்றுப்பைகள், ABS, ESP, ISOFIX என சிறப்பம்சங்களின் பட்டியல் மிக நீளம். எலான்ட்ராவில் தானாகவே திறக்கக்கூடிய பூட் இருக்கிறது. எனவே, பூட்டைத் திறக்க, காரின் சாவியை உங்களுடன் வைத்துக்கொண்டு, நீங்கள் காரின் பூட் அருகில் போய் நின்றாலே போதும்!

ஸ்கோடா ஆக்டேவியா, இந்த ஒப்பீட்டின் வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறது. இதற்கு பவர்ஃபுல் இன்ஜின், கேபின் தரம் மற்றும் இடவசதி, ரோடு கிரிப் ஆகியவையே காரணம். இதற்காக ஸ்கோடா நிர்ணயித்திருக்கும் விலைதான் கொஞ்சம் அதிகம். விற்பனை மற்றும் சர்வீஸ் அனுபவத்தை மேம்படுத்துவதற்கு ஸ்கோடா முயன்றாலும், அது ஹூண்டாயுடன் ஒப்பிடும்போது சொற்பமாகவே இருக்கிறது. ஆனால், இதைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், ஒரு லக்ஸூரி செடானுக்குரிய குணங்களுடன் தனித்து நிற்கிறது ஆக்டேவியா.

ஐரோப்பிய கார்களைப்போல வடிவமைக்கப்பட்டிருக்கும் எலான்ட்ரா, சிறப்பம்சங்களின் பட்டியல் மற்றும் குறைந்த வேக ஓட்டுதல் தரத்தில் அசத்துகிறது. ஆனால், ஆக்டேவியாவுடன் ஒப்பிடும்போது, இந்த காரின் ரோடு கிரிப் சிறப்பாக இல்லாததுடன், பின்பக்க இருக்கையும் அவ்வளவு சொகுசாக இல்லை. ஆனால், காரின் விலையைப் பார்க்கும்போது, இந்தக் குறைகள் எல்லாம் ஒருகணம் மறந்துவிடுகின்றன. எனவே, எக்ஸிக்யூட்டிவ் செடான் செக்மென்ட்டின் கேப்டன் ஆக்டேவியா என்றால், துணை கேப்டன் எலான்ட்ராதான்!