காம்பேக்ட் எஸ்யூவி கார்களில் பல நன்மைகள் உண்டு. நான்கு மீட்டருக்குக் குறைவாக இருப்பதால், வரி குறையும்; அதனால், விலை குறையும். உள்ளே... பெரிய எஸ்யூவிபோல பெரிதாக இருக்கும். பார்க்கிங்கில் இடத்தை அடைக்காது. எஸ்யூவி என்கிற அந்தஸ்தைப் பெற்றிருப்பதால், செடான்களைவிட கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகமாக இருக்கும்; எனவே, ஆஃப்ரோடிங் திறனும் இருக்கும். இதனால்தான், ஃபோர்டு எக்கோஸ்போர்ட், மாருதி பிரெஸ்ஸா, ரெனோ டஸ்ட்டர் போன்ற கார்கள் பல்ஸ் எகிறவைக்கின்றன. ‘இந்த நான்கு மீட்டர் போட்டியில், டாடா ஏன் இடம் பெறவில்லை’ என்கிற கேள்விக்குப் பதிலாக வந்துள்ளது, நெக்ஸான். லேட்டாகத்தான் வந்திருக்கிறது; ஆனால், செம டேஸ்ட்டாக வந்திருக்கிறது நெக்ஸான். சென்ற இதழில், அசத்தல் என்ட்ரி கொடுத்த நெக்ஸானின் டெஸ்ட் ரிப்போர்ட் படித்திருப்பீர்கள். ஸோலோவாகக் கலக்கிய நெக்ஸானை, மாருதியின் ‘விட்டாரா பிரெஸ்ஸா’வுடன் ஒரே சமயத்தில் களம் இறக்கினால் என்ன?

போட்டி ஆரம்பம்...

வெளியே

நெக்ஸான்: இந்த காரின் டிசைன் டீமின் தலைவர், பிரதாப் போஸ். காரைப் பார்த்த உடனே வாங்க வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டும் இதன் டிசைனை அமைத்த அவர் டிசைன் யுக்திக்கு ஒரு பொக்கே! இதன் இண்டிகேட்டர் பொசிஷன் செய்யப்பட்ட விதத்தைக் கவனியுங்கள். ஹெட்லைட்டுக்கு மேலே இருக்கும். பக்கவாட்டில் இருந்து ஒரு தடவை காரைப் பார்த்தால், ரேஞ்ச்ரோவர் காரோ அல்லது ஏதோ கூபே காரோ என நினைக்கத் தோன்றுகிறது. செராமிக் ஃபினிஷ், புத்திசாலித்தனம். டெய்ல் லைட்டுகளை அந்த ஃபினிஷில் இணைத்திருக்கும் விதமும் நச்! ஜெஸ்ட் தயாரிக்கப்பட்ட பிளாட்ஃபார்மான X1-தான் இதன் வடிவமைப்புத் தளமும். ஆனால், ஜெஸ்ட்டின் உயரமான சாயலை, அப்படியே ரசனைக்குரியதாக மாற்றியதற்குப் பாராட்டுகள்.

பிரெஸ்ஸா: 2016-லேயே அறிமுகமாகிவிட்டது. அதனால், டிசைன் பார்த்துப் பார்த்து போர் அடித்துவிட்டது. ஆனாலும், அறிமுகமான 11 மாதங்களில் 2 லட்சம் புக்கிங்குகளெல்லாம் நடந்து அடக்கமாகச் சிரிக்கிறது பிரெஸ்ஸா. வந்த புதிதில் பிரெஸ்ஸாவும் மனம் மயக்கத் தவறவில்லை. அதேநேரம், இந்த பாக்ஸ் டிசைன் எல்லோருக்கும் பிடிக்கவும் இல்லை. ‘அதிக இடவசதிக்காகத்தான் இந்த பிராக்கடிக்கல் டிசைன்’ என்றது மாருதி. 198 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், 16 இன்ச் வீல்கள், மற்ற மாருதி கார்களைவிட அதிக எடை (1,195 கிலோ) என்று ‘நானும் காம்பேக்ட் எஸ்யூவிதான்’ என்று ‘நாட் அவுட் பேட்ஸ்மேனாக’ இப்போதும் ஆட்டத்தில் இருக்கிறது பிரெஸ்ஸா. லேட்டஸ்ட்டாக வரும் டூயல் டோனுக்கு (ZDI+) நல்ல வரவேற்பு இருப்பதாகச் சொல்கிறது மாருதி.

உள்ளே...

நெக்ஸான்: வெளிப்பக்க டிசைனில் டிஸ்டிங்ஷன் வாங்கிவிட்டது நெக்ஸான். கதவைத் திறந்து உள்ளே நுழைந்தால், வெளியே ‘வாவ்’ என்று திறந்த வாய், உள்ளேயும் மூடவில்லை. அத்தனை வாவ்கள்! சில க்ரோம் பிட்ஸ் மற்றும் சில்வர் வேலைப்பாடுகள் இன்டீரியரை ஒரு படி மேலே உயர்த்துகின்றன. சில இடங்களில் ஃபிட் அண்டு ஃபினிஷ் சரியில்லை. பேனல்களின் இடைவெளி ஓவராக இருக்கிறது. சென்டர் கன்ஸோலில் எக்கச்சக்க விஷயங்கள். ஆனால், எதுவும் குழப்பியடிக்கவில்லை. டிரைவிங் மோடுக்கான செலெக்டர் நாப், ஏ.சி கன்ட்ரோல் பட்டன்கள், டச் ஸ்கிரீன் என்று எல்லாமே சாலையைப் பார்த்து கார் ஓட்டிக்கொண்டே அட்ஜஸ்ட் செய்யலாம். இதைத்தான் ‘எர்கானமிக்ஸ்’ என்கிறார்கள்.

சில பேனல்களை அப்படியே டிகோர், டியாகோவில் இருந்து எடுத்திருக்கிறார்கள். டச் ஸ்கிரீன் சிறுசு. ரோட்டரி டிரைவ் மோடு பெருசு. இது ஹெக்ஸாவில் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. பெரிய கூல்டு க்ளோவ் பாக்ஸ், டோர்களில் குடை வைக்க இடம் என்று சூப்பர் பிராக்டிக்கல். எஸ்யூவிதானே... அதனால், முன்பக்க சீட் நல்ல உயரமாக இருக்கிறது. உயரமாக சீட் வடிவமைப்பதற்குக் காரணம், சாலை நன்றாகத் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், இதன் ‘A’ பில்லர்கள், பிளைண்ட் ஸ்பாட்டை ஏற்படுத்துகின்றன. இது திருப்பங்களில் பயமாக இருக்கிறது. மற்றபடி சீட்கள் சப்போர்ட்டிவ்.

பிரெஸ்ஸா: இதன் டேஷ்போர்டு டிசைன் பார்த்துப் பழகிவிட்டது. எனவே, புதிதாய் சிலாகிக்க எதுவும் இல்லை. காருக்கு வெளியே டூயல் டோனெல்லாம் கொண்டுவந்ததுபோல், இன்டீரியரிலும் டூயல் டோன் கொண்டு வந்திருக்கலாமோ? இதன் மோனோ டோன் டேஷ்போர்டு பெரிதாக அப்பீலை ஏற்படுத்தவில்லை. ஆனால், அந்த பியானோ டைப் பிளாஸ்டிக் சரவுண்ட் கொண்ட இன்ஃபோடெயின்மெனட் சிஸ்டம் மட்டும் போர் அடிக்கவில்லை. பிளாஸ்டிக்குகள் செம ஹார்டு. ஸ்டீயரிங் மற்றும் கதவுக்கான பவர் விண்டோ பட்டன்கள்கூட, விலை குறைந்த மாருதி கார்களின் ஷேரிங்தான். மற்றபடி இரட்டை க்ளோவ்பாக்ஸ்கள், தண்ணீர் பாட்டில் வைக்க இடவசதி அதிகம்.

பிரெஸ்ஸாவின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் புத்திசாலித்தனமாக ஒரு விஷயம் பண்ணியிருக்கிறார்கள். அதாவது, இதன் ஸ்பீடோ மீட்டர், டேக்கோ மீட்டரைச் சுற்றி நமக்குப் பிடித்த கலரை பேக்லிட்டாக வைத்துக்கொள்ளலாம். முன் பக்கம் சீட் நல்ல உயரம். சாலை நன்றாகவே தெரிகிறது. நெக்ஸானைப்போல் பிளைண்ட் ஸ்பாட் பிரச்னை பிரெஸ்ஸாவில் இல்லை. நல்ல நிமிர்ந்த நிலையில் உள்ள ‘A’ பில்லர்கள், எஸ்யூவிக்கான டிரேட்மார்க். இந்த பிராக்டிக்கல் விஷயங்களால்தான் மாருதியை ஓட்டத் துடிக்கிறது மனது.

பின் பக்கம்...

நெக்ஸான்: கார் கூஃபே மாதிரி சரிந்திருக்கிறதே... அப்படியென்றால் பின்னால் உட்கார்பவர்களின் கதி..? நுழையும்போது கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால், ஆச்சர்யம்! உள்ளே நெக்ஸானில் அந்தப் பிரச்னை இல்லை. தலை, கூரையில் இடிக்கவில்லை. போதுமான அளவு லெக்ரூமும், ஹெட்ரூமும் இருந்தது. பின்பக்க சீட்டில் நடுவில் இருப்பவர் மட்டும் திணற வேண்டும். காரணம், அந்த ஏர்-கான் வென்ட். இதில் புளோயர் கன்ட்ரோலும் உண்டு. இன்னொரு விஷயம் - ஆர்ம் ரெஸ்ட் இருக்கிறது. பின்னால் இரண்டு பேர் மட்டும் என்றால், ஹாயாகப் பயணிக்கலாம். இந்த செக்மென்ட்டில் பின் பக்கம் ஏ.சி கன்ட்ரோல் வசதிகொண்ட ஒரே கார் நெக்ஸான்தான். சீட்கள் கொஞ்சம் தாழ்வாக இருப்பதால்தான் ஹெட்ரூம் கிடைக்கிறது. ஆனால், வெளிச்சாலை தெரிவதற்கு எட்டித்தான் பார்க்க வேண்டும். அடைசலான தெருக்களில் ரிவர்ஸ் எடுப்பதும் சிக்கல்தான். நெக்ஸானின் பூட் ஸ்பேஸ் 350 லிட்டர். இரண்டு பேர் மட்டும்தான்; லக்கேஜ் அதிகம் என்றால், பின் பக்க இருக்கையையும் முழுதாக மடக்கிக் கொள்ளலாம்.

பிரெஸ்ஸா: இதிலும் லெக்ரூம், ஹெட்ரூம் எல்லாமே சூப்பர். பின்பக்க சீட்டுகள் செம சப்போர்ட்டிவ். நெக்ஸானைப்போல் இல்லை; பின்னால் உட்கார்ந்து வெளியே என்ன நடக்கிறது என்பதைப் பார்த்துக் கொண்டே பயணிக்கலாம். பிரெஸ்ஸாவில் பின் சீட்டில் அமர்ந்து வந்தால், சோர்வடைய வேண்டியதில்லை. இட நெருக்கடி இல்லாமல், மூன்று பேர்கூட உட்கார்ந்து பயணிக்கலாம். இதிலும் ரிவர்ஸ் எடுப்பது கொஞ்சம் கஷ்டம்தான். நெக்ஸானில் ‘A’ பில்லர் என்றால், இதில் ‘C’ பில்லர் செம தடிமன். இதிலும் ஆர்ம் ரெஸ்ட் உண்டு. அதில் கப் ஹோல்டரும் உண்டு. நெக்ஸானைவிட இதில் பூட் வசதி குறைவுதான். 328 லிட்டர்.

வசதிகள்

நெக்ஸான்: டாப் மாடலான XZ+ நெக்ஸான், வெல் எக்யூப்டு. புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், அதுவும் DRL உடன். MID உடனான இன்ஸ்ட்ரூமென்ட் டயல்கள், கியர் மோடுகளுக்கான வட்ட வடிவ நாப், 6.5 இன்ச் Harman ConnectNext டச் ஸ்க்ரீன், ஸ்டீயரிங் மவுன்டட் கன்ட்ரோல்கள், Aux-in/USB போர்ட், புளூடூத் வசதி, ஆண்ட்ராய்டு ஆட்டோ, (ஆப்பிள் கார் ப்ளே இனிமேல் வரலாம்) என்று வசதிகள் குவிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இது எல்லாமே டாப் மாடலில் மட்டும்தான். இதற்கு முந்தைய மாடலில் சில வசதிகள் காலியாகிவிடும். பாதுகாப்பைப் பொறுத்தவரை இரண்டு காற்றுப் பைகள், ஏபிஎஸ் (எல்லா மாடல்களுக்கும்) உண்டு.

பிரெஸ்ஸா: இதிலும் நாம் டெஸ்ட் செய்தது ZDI+ மாடல். 16 இன்ச் அலாய் வீல், க்ரூஸ் கன்ட்ரோல், ரெயின் சென்ஸிங் வைப்பர்ஸ், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்ஸ், ஆப்பிள் கார் ப்ளே (இதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ கிடையாது) கொண்ட டச் ஸ்கிரீன் சிஸ்டம் போன்றவை உண்டு. பாதுகாப்புக்கு இரண்டு காற்றுப் பைகள், ஏபிஎஸ், EBD போன்ற எக்ஸ்ட்ரா வசதிகள் உண்டு. மொத்தம் நான்கு வேரியன்ட்கள். இதில் ZDI மாடலில் 15 இன்ச் வீல்கள்தான். டச் ஸ்கிரீன், லெதர் சீட்டுகள் போன்றவை இருக்காது. இது ZDI+ மாடலைவிட 1 லட்சம் அதிகம்.

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்...

நெக்ஸான்: நெக்ஸானில் இருப்பது 1.5 லிட்டர் டீசல் இன்ஜின். டஸ்ட்டர் டாப் மாடலைப்போல் இது 110bhp பவர் கொடுக்கிறது. 26kgm டார்க். குறைந்த வேகங்களில், அதாவது 1,400 rpm-ல் இருந்தே நன்றாக ‘இழு இழு’ என்று இழுத்துச் செல்கிறது இதன் இன்ஜின். ஆரம்பத்தில் வைப்ரேஷன் இருக்கிறதுதான்; போகப் போக ஸ்மூத்தாகிவிடுகிறது. ஃபியட் போல டர்போ லேக் தெரியவில்லை. அதிக வேகங்களில் மட்டும் பவர் டெலிவரியில் ஏதோ தொய்வு இருப்பதுபோல் தோன்றுகிறது. 4,500 ஆர்பிஎம்மில், ஓவர்டேக்கிங்கில் ஹார்டு ஆக்ஸிலரேஷன் கொடுக்கும்போது இதை உணர முடிந்தது. கியரைக் குறைக்கச் சொல்கிறதோ? இதுவே, டிராஃபிக்கில் கியரைக் குறைக்க விடவே இல்லை நெக்ஸானின் இன்ஜின்.

நெக்ஸானில் 6 கியர்கள். இதில் 5-ம் 6-ம், 3 மற்றும் 4-வது கியருக்கு ரொம்பப் பக்கமாக இருக்கிறது கியரிங் ஷிஃப்ட். 3-வது கியரில் கொஞ்சம் ஹால்ட் ஆவதுபோல் தெரிந்தது. முக்கியமாக, அவசர கதியில் 2-ல் இருந்து 3-வது கியருக்குச் செல்லும்போது இதை உணர்ந்தேன். இது பெரிய பிரச்னையாகத் தெரியவில்லை. மொத்தம் மூன்று டிரைவிங் மோடுகள். நார்மல், எக்கோ, ஸ்போர்ட். இதில் ஸ்போர்ட் மோடு, செம ஃபன். 0-100 கி.மீ-ரை இது அடைய 13.75 விநாடிகள் ஆனது. அப்படியே 120 கி.மீ-ரை அடைய 18.61 விநாடிகள் எடுத்துக்கொண்டது நெக்ஸான். செஞ்சுரிக்குப் பிறகு பிரெஸ்ஸாவைவிட மெர்சல் பண்ணுவது நெக்ஸான்.

பிரெஸ்ஸா: இதன் விற்பனைக்கு மாருதி என்கிற பிராண்ட் ஒரு காரணம் என்றால், ஃபியட் இன்னொரு காரணம். இதில் இருப்பது ஃபியட்டின் 1.3 மல்ட்டிஜெட் டீசல் இன்ஜின். நெக்ஸானைவிட 20bhp குறைவு. (90bhp). டார்க்கும் 6kgm வரை கம்மி. (20.4kgm). 5 கியர்கள்தான். டிரைவிங் மோடுகளெல்லாம் கிடையாது. அதனால் என்ன? பிரெஸ்ஸாவின் பலமே இதன் ஃபன் டு டிரைவ்தான். நெடுஞ்சாலையில் பிரெஸ்ஸாவில் க்ரூஸ் செய்வது செம ஜாலியாக இருக்கும். 100 கி.மீ-ல் பறக்கும் வாகனங்களைக்கூட இருந்த கியரிலிருந்தே விவேகமாக ஓவர்டேக் செய்வதில் மல்ட்டிஜெட், எக்ஸ்பெர்ட். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், 0-100 கி.மீ அளவைக் கவனியுங்கள். நெக்ஸானுக்கு 13.75 விநாடிகள்; இதுவே பிரெஸ்ஸாவுக்கு 13 விநாடிகள்தான். கிட்டத்தட்ட ஒரு விநாடி குறைவு. வெல்டன் ஃபியட். ஃபியட் மட்டுமில்லை; மாருதியும் இதற்கு ஒரு காரணம். நெக்ஸானைவிட கிட்டத்தட்ட 110 கிலோ குறைவு என்பதும்தான்.

ஆனால், டாடா அளவுக்கு இதன் இன்ஜின் ரிஃபைன்மென்ட் அந்தளவு பிரமாதமாக இல்லை. ஏனென்றால், 4,500 rpm-க்கு மேல் இன்ஜின் கதறுகிறது. 3,000 rpm-லேயே இன்ஜின் சத்தம் கேபினுக்குள் கேட்க ஆரம்பிக்கிறது. அதேநேரம், 110 கி.மீ-க்குப் பிறகு நெக்ஸானிடம் தோற்கிறது பிரெஸ்ஸா. 120 கி.மீ-க்குப் பிறகு பார்த்தால், திடீரென பிரெஸ்ஸாவை ஓவர்டேக் செய்து சென்றுவிட்டது நெக்ஸான்.

ஓட்டுதல், கையாளுமை...

நெக்ஸான்: சஸ்பென்ஷனில் லேசான ஸ்டிஃப்னெஸ் தன்மையை வேண்டுமென்றே நெக்ஸானில் கோத்திருக்கிறார்கள். உடைந்துபோன சாலைகளையும், ஸ்பீடு பிரேக்கர்களையும் சமாளிப்பதற்காக இந்த டெக்னிக். பயணிக்கும்போது லேசான இறுக்கம் தெரிகிறது; அதேநேரத்தில் பில்லோ சாஃப்ட்டும் இல்லை. பேலன்ஸ்ட் ஆக செட் செய்யப்பட்டிருப்பதால், மேடு பள்ளங்களில் ரொம்பவும் தூக்கியும் போடவில்லை. ஸ்டீயரிங்கும் செம க்விக். இந்த லேசான ஸ்டிஃப்னெஸ்தான், கார்னரிங்கில் ஸ்டீயரிங்குக்கு நல்ல பார்ட்னர்ஷிப். 16 இன்ச் டயர்கள், ஃபன்னைக் கூட்டுகிறது நெக்ஸானில்.

பிரெஸ்ஸா: நேர்மையாக ஒரு விஷயம் - சஸ்பென்ஷனில் இன்னும் ரொம்ப முன்னேற வேண்டும் பிரெஸ்ஸா. முன் பக்கம் மெக்ஃபர்ஸன் ஸ்ட்ரட், பின் பக்கம் டார்ஷன் பீம் எனும் வழக்கமான செட்-அப்தான். சஸ்பென்ஷனில் பேலன்ஸ்டு இல்லை; நல்ல இறுக்கம் என்பதால், குறைந்த வேகங்களில் ‘டம் டும்’ என ஆட்டம் போடுகிறது பிரெஸ்ஸா. கொஞ்சம் பாவப்பட்ட சாலைகளில் பயணிக்கும்போது, பாவப்பட்ட ஜீவன்களாகிவிடுகிறோம். கி.கிளியரன்ஸ் 198 என்பதால், காருக்குச் சேதாரம் இருக்காது. இதுவே வேகங்களில் இந்தச் சிக்கல்கள் எதுவும் தெரியவில்லை. நெக்ஸான் போலவே டஃப் ரோடுகளுக்கு டஃப் பைட் கொடுக்கிறது. ஸ்டீயரிங்கும் லைட் ஃபீல். ஆனால், திருப்பங்களில் காரோடு சேர்ந்து நாமும் திரும்புகிறோம்.

மைலேஜ்

நெக்ஸான்: இதன் டேங்க் கொள்ளளவு 44 லிட்டர். டாடா இதன் அராய் மைலேஜையும் வெளியிடவில்லை. முழு டெஸ்ட் டிரைவுக்குப் பிறகு மைலேஜ் பற்றி முடிவெடுக்கலாம்.

பிரெஸ்ஸா: இதன் டேங்க் 48 லிட்டர். நெக்ஸானைவிட 4 லிட்டர் அதிகம். இதன் அராய் மைலேஜ் 24.3 கி.மீ. நமக்கு ஆவரேஜாக 15.35 கி.மீ மைலேஜ் கிடைத்தது. அதாவது, ஒரு தடவை டேங்க் நிரப்பினால் 736 கி.மீ வரை பயணிக்கலாம்.

புதுசுக்கு எப்போதுமே மவுசு இருக்கத்தான் செய்யும். ஆனால், புதுசு என்பதைத் தாண்டி சொகுசு, டிசைன், வசதிகள், ரைடிங் போன்றவற்றை மேம்படுத்த முயற்சிசெய்து வருவது டாடாவிடம் நன்றாகவே தெரிகிறது. பிரெஸ்ஸாவையும் குறை சொல்ல முடியாது. மாருதியின் பரந்து விரிந்த சர்வீஸ் நெட்வொர்க், குறைந்த விலை (ZDI+ டாப் மாடலின் விலை 11.4 லட்சம்தான்), பராமரிப்புச் செலவு என்று... சேல்ஸ்கிராஃபில் ஏறிக்கொண்டே இருக்கிறது. அப்படிப்பட்ட பிரெஸ்ஸாவை எதிர்த்துப் போட்டியிட்டு ஓவர்டேக் செய்ய வேண்டுமென்றால், அது சாதாரண விஷயமில்லை. அதற்கான எல்லா யுக்திகளையும் கொண்டு இந்தப் போட்டியில் முஷ்டி முறுக்கி வந்துவிட்டது நெக்ஸான். விலையைப் பொறுத்தவரை, பிரெஸ்ஸாவுக்கு கடுமையான சவாலை அளிக்கக்கூடிய வகையில் இருந்தால், பிரெஸ்ஸாவுக்கு விழும் ஓட்டுகள் நெக்ஸானுக்குத்தான் இடம் மாற்றி விழும்.