கார் வாங்குவதில்தான் எவ்வளவு குழப்பம்? முதன்முறையாக கார் வாங்குபவருக்கும், ஏற்கெனவே கார் வைத்திருப்பவருக்கும், புதிதாக கார் வாங்குவதில் எத்தனை கட்டப் பேச்சுவார்த்தை நடக்கும் என்பதை அனைவரும் அறிவோம். பின்னர் பல மாடல்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதை வாங்குவது என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், ஒரு செக்மென்ட்டின் விலையுயர்ந்த மாடலை வாங்குவதா அல்லது அதற்கு அடுத்த செக்மென்ட்டின் ஆரம்ப மாடலை வாங்குவதா என்பதில் தெளிவு இருப்பது கொஞ்சம் கடினம்தான்! ரெனோ க்விட் - டாடா டியாகோ, மாருதி சுஸூகி டிசையர் - ஹோண்டா சிட்டி, ஹோண்டா சிட்டி - ஹூண்டாய் எலான்ட்ரா ஆகியவற்றை, இதற்கான சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். இது கொஞ்சம் சிக்கலான கேள்வியாகத் தெரிந்தாலும், பதிலைக் கண்டுகொள்வது மிகவும் எளிதுதான். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் எப்படி முடிவெடுக்க வேண்டும் என்பதை விளக்குவதே இந்தக் கட்டுரை!

ஒருவர் டாப் வேரியன்ட் காரை எதற்காக வாங்குவார்?

அதிக வசதிகள்: டாப் வேரியன்ட் என்பதால், எதிர்பார்த்தபடியே அது அனைத்து வசதிகளுடனும் வரும். அதில் சில, இதைவிட விலை அதிகமான காரின் பேஸ் வேரியன்ட்டில்கூட இருக்காது. உதாரணத்துக்கு, ஹோண்டா சிட்டி காரின் ZX டாப் வேரியன்ட்டை எடுத்துக் கொண்டால், அதில் 6 காற்றுப்பைகள் - சன்ரூஃப் - சாட்டிலைட் நேவிகேஷன், ரிவர்ஸ் கேமரா, வாய்ஸ் கன்ட்ரோல் உடனான டச் ஸ்கிரீன் , ஆட்டோ கிளைமேட் கன்ட்ரோல் ஏ.சி, க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோ LED ஹெட்லைட்ஸ், ஆட்டோ டிம்மிங் ரியர் வியூ மிரர், எலெக்ட்ரிக்கலாக மடிக்கக்கூடிய மிரர், டெலிஸ்கோபிக் ஸ்டீயரிங் அட்ஜஸ்ட்மென்ட் என இதன் சிறப்பம்சங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். ஆனால், இது எதுவும் ஹூண்டாய் எலான்ட்ராவின் ஆரம்ப வேரியன்ட்டான SMT-ல் கிடையாது! இவற்றில் LED ஹெட்லைட், டச் ஸ்கிரீன், ரிவர்ஸ் கேமரா ஆகியவற்றை வெளிமார்க்கெட்டில் வாங்கிப் பொருத்திக் கொள்ள முடியும். ஆனால், அதற்குக் கிடைக்கக்கூடிய வாரன்டி மற்றும் தரம், காருடன் வரும் பொருள்களின் அளவுக்கு இருக்காது என்பது உண்மை.

குறைந்த விலை: முன்னே சொன்ன அதே உதாரணத்தின்படி, ஹோண்டா சிட்டியின் ZX வேரியன்ட்டின் விலை, ஹூண்டாய் எலான்ட்ராவின் SMT வேரியன்ட்டைவிட விலை குறைவாகவே இருக்கும். இதனுடன் விலை குறைவான உதிரிபாகங்கள் மற்றும் அதிக மைலேஜ் என எலான்ட்ராவைவிட சிட்டியின் பராமரிப்புச் செலவுகளும், ரன்னிங் காஸ்ட்டும் குறைவாகவே இருக்கும். இது தவிர, யூஸ்டு கார் மார்க்கெட்டிலும், எலான்ட்ராவைவிட சிட்டிக்குத்தான் ரீ-சேல் மதிப்பு அதிகம் என்பதை நினைவில் கொள்ளவும்.

வசதி: நெரிசல்மிக்க நகரச் சாலைகளில், பெரிய காரைவிடச் சின்ன காரைக் கையாள்வதுதான் சுலபம். பார்க்கிங் செய்வதும், நாமாகவே காரை வாஷ் செய்வதும் எளிதாக இருக்கும்.

ஒருவர் பிரீமியம் காரை எதற்காக வாங்குவார்?

சைஸ்: இரண்டுமே செடான் கார்கள்தாம் என்றாலும், ஹோண்டா சிட்டியைவிட ஹூண்டாய் எலான்ட்ரா சற்றே பெரிய கார்; எனவே, அதிக இடவசதி, பூட் ஸ்பேஸ் தவிர, அதிக பாதுகாப்பும் கிடைக்கும். இதற்கு காரின் கட்டுமானமே பெரும்பங்கு வகிக்கும்.

பெர்ஃபாமென்ஸ்: சிட்டியைவிடப் பெரிய கார் என்பதால், எதிர்பார்த்தபடியே பெரிய இன்ஜினைக் கொண்டிருக்கிறது எலான்ட்ரா. சிட்டியில் இருக்கும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின், 100bhp பவர் - 20kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது; இதுவே எலான்ட்ராவின் 1.6 லிட்டர் டீசல் இன்ஜின், 128bhp பவர் - 26kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. எனவே, பெர்ஃபாமென்ஸில் எந்த கார் முன்னணியில் இருக்கும் என்பதை ஈஸியாகச் சொல்லிவிடலாம்.

ஓட்டுதல் தரம்: பொதுவாகவே, சின்ன கார்களைவிடப் பெரிய கார்களின் ஓட்டுதல் தரம் நன்றாக இருக்கும். சிட்டியைவிட எலான்ட்ராவின் ஓட்டுதல் தரம் சிறப்பாக இருக்கிறது; ஆனால், சில சமயங்களில் இது ரிவர்ஸாக நடக்கவும் வாய்ப்பிருக்கிறது. உதாரணத்துக்கு, தற்போது விற்பனையில் இருக்கும் வெர்னாவைவிட, அளவில் சின்ன காரான ஃபியட் புன்ட்டோவின் ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை அசத்தலாக இருக்கும் என்பதை, கார் ஆர்வலர்கள் அறிவர்!

அந்தஸ்து: பலர் பெரிய கார் வாங்குவதற்குப் பிரதானமான காரணம் என்னவென்றால், அது ஒருவருக்கு இச்சமூகத்தில் கூடுதல் கெளரவத்தையும் பெருமையையும் தருவதுதான்.

உங்கள் புதிய காரில் என்ன தேவை, என்ன இருக்க வேண்டும் என்பதைப் பொறுத்து, மாடலைத் தேர்வு செய்வது நல்லது; உங்களுக்கு குறைவான ரன்னிங் காஸ்ட் மற்றும் அதிக வசதிகள் முக்கியம் என்றால், ஹோண்டா சிட்டி ZX வேரியன்ட்டை டிக் செய்யுங்கள். “எனக்கு வசதிகள் அவசியமில்லை, கூடுதல் பெர்ஃபாமென்ஸும், இடவசதியும் - பெரிய கார் வைத்திருக்கிறேன் என்கிற பெருமையே போதும்’’ என்பவரா நீங்கள்? உங்களுக்கான கார்தான் ஹூண்டாய் எலான்ட்ரா SMT. ஆனால், ஒருவேளை நீங்கள் உங்கள் புதிய காரை, மாதத் தவணையில் வாங்குகிறீர்கள் என்றால், உங்கள் சாய்ஸ் மாறுவதற்கான சாத்தியங்கள் அதிகம்!