ஒவ்வொரு மாதமும், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய 750சிசி பைக் குறித்த ஸ்பை படங்கள், இன்டர்நெட்டில் பரவிய வண்ணம் உள்ளன. சமீபத்தில் வெளிவந்திருக்கும் ஸ்பை படங்களைப் பார்க்கும்போது, பேரலல் ட்வின் அமைப்பைக்கொண்ட 750சிசி ஆயில் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்ட இரண்டு மாடல்கள் (ஸ்டாண்டர்டு, கஃபே ரேஸர்), விற்பனைக்கு வரலாம்.

இவை கான்டினென்ட்டல் GT 535 பைக்கை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்படுகின்றன என்பது, அதன் தோற்றத்தைப் பார்த்தாலே தெரிகிறது. ஆனால், இரண்டிலும் கணிசமான வித்தியாசங்கள் உள்ளன. பெட்ரோல் டேங்க், சீட் இதற்கான உதாரணங்கள். ஸ்டாண்டர்டு மாடலில், கிளாஸிக் 350 பைக்கில் இருப்பது போன்ற பெட்ரோல் டேங்க்கும், கான்டினென்ட்டல் GT 535 பைக்கில் ஆப்ஷனலாகக் கிடைக்கக்கூடிய பெஞ்ச் சீட்டும் (2 சீட்டர்) இருக்கின்றன. கஃபே ரேஸர் மாடலில், கவுல் உடனான சிங்கிள் சீட். பார்ப்பதற்கு கான்டினென்ட்டல் GT 535 பைக்கின் ஜெராக்ஸ் போல இருக்கிறது.

பெட்ரோல் டேங்க் மற்றும் சீட் தவிர, இரண்டு மாடல்களின் ஹேண்டில்பார் மற்றும் ஃபுட் பெக்கிலும் மாற்றங்கள் உள்ளன. கஃபே ரேஸர் மாடலில் 2 பீஸ் ஹேண்டில்பார் இருந்தது என்றால், ஸ்டாண்டர்டு மாடலில் வழக்கமான சிங்கிள் பீஸ் ஹேண்டில்பார் இருக்கிறது. நீண்ட தூரப் பயணங்களுக்குகந்த சொகுசான ரைடிங் பொசிஷனுக்காக, ஸ்டாண்டர்டு மாடலின் ஃபுட் பெக்குகள் தாழ்வாக இருக்கின்றன; கஃபே ரேஸர் மாடலின் சற்றே ஸ்போர்ட்டியான சீட்டிங் பொசிஷனுக்காக, ஃபுட் பெக்குகள் உயரமாக இருக்கின்றன. ரியர் வியூ மிரர்களின் பொசிஷனும், ஹேண்டில்பாரின் உயரத்துக்கு ஏற்ப மாறுகின்றன.

இரண்டு மாடல்களிலும் இருப்பது பைரலி டயர்கள்தான் என்றாலும், அவை வெவ்வேறு வேரியன்ட்களைக்கொண்டுள்ளன. கஃபே ரேஸர் மாடலில் பைரலி Sport Demon இருந்தால், ஸ்டாண்டர்டு மாடலில் பைரலி Phantom Sportscomp டயர்கள் உள்ளன. மற்றபடி Twin downtube cradle சேஸி - Paioli சஸ்பென்ஷன் - இரட்டை எக்ஸாஸ்ட் பைப்களுடன் கூடிய ஆயில் கூல்டு 750சிசி பேரலல் ட்வின் இன்ஜின் - Brembo ஏபிஎஸ் பிரேக் போன்றவற்றில், இரண்டு மாடல்களுக்கும் ஒற்றுமைகள் அதிகம்.

முதற்கட்டமாக இந்த ஆண்டு நவம்பரில், மிலனில் நடைபெறும் EICMA மோட்டார் ஷோவில் இந்த இரண்டு மாடல்களும் காட்சிப்படுத்தப்படும். பின்னர் இவை டெல்லியில் நடைபெறவுள்ள 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப் படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம். ட்ரையம்ப் போனவில்லி, ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்குகளுக்குப் போட்டியாகக் களமிறங்கவுள்ள இந்த பைக்கின் விலை, உத்தேசமாக 4 - 5 லட்ச ரூபாயாக இருக்கும். சென்னையில் தற்போது இறுதிகட்ட டெஸ்ட்டிங்கில் இருக்கும் இந்த பைக்குகளைப் படம் பிடித்திருக்கிறார், மோட்டார் விகடன் வாசகரரான நித்தீஷ்.

அடையாளங்களை மறைத்து உங்கள் ஊரில் இப்படி ஏதாவது கார் அல்லது பைக் டெஸ்ட் செய்யப்படுகிறதா?

அதை அப்படியே உங்கள் கேமராவில் பதிவுசெய்து எங்களுக்கு அனுப்புங்கள்! அனுப்ப வேண்டிய முகவரி: ரகசிய கேமரா, மோட்டார் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600002. email: motor@vikatan.com