ஹாய், நான் அன்பரசன். 2014-ல் தென்னிந்தியா அளவில் நடந்த பாடி பில்டிங் போட்டியில் இரண்டாவது இடம் பிடித்தது நான்தான். கூகுளில் வேணும்னா பார்த்துக்கோங்க. பலபேர் மாதிரி, எனக்கும் பைக் ரைடிங் பிடிக்கும். அதைவிட பைக்ஸ் கட்டுமஸ்தா இருந்தா ரொம்பப் பிடிக்கும். அதுதானே என்னோட உடம்புக்கு செட் ஆகும்.

ஏன் ரெனிகாடே கமாண்டோ?

ஸ்லிம் அண்டு ஸ்லீக் எப்பவுமே நம்ம சாய்ஸ் கிடையாது. ஹார்னெட்டுக்குப் பிறகு ஓங்குதாங்கா ஒரு பைக் வாங்கலாம்னு ஐடியா. கட்டுமஸ்து என்றால், இப்போ இருக்கிற ஒரே சாய்ஸ், புல்லட்தான். கரெக்ட். எனக்கும் ராயல் என்ஃபீல்டு புல்லட்டைத்தான் நண்பர்கள் எல்லோரும் ரெஃபர் பண்ணினாங்க. எனக்கு புல்லட் பிடிக்கும்தான். ஆனா, எதிலேயும் யூனிக்கா தெரியணும்னு நினைக்கிறவன் நான். புல்லட்தான் தெருவுக்குத் தெரு ஓட்டுறாங்களே?

நெட்ல தேடிப் பார்த்தா, UM ரெனிகாடே, ஸ்போர்ட்S அப்படினு ரெண்டு பைக்கோட ரெவ்யூ போட்டிருந்தாங்க. இதில் கமாண்டோ எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. நண்பர்கள்கிட்ட சொன்னப்போ, ‘டேய், ஏதோ பேர் தெரியாத கம்பெனியோட பைக் வாங்குறியே..’னு நெகட்டிவ் கமென்ட்ஸ் கொடுத்தாங்க. நான் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படலை. பைக்ல போனா, தனியா தெரியணும். அதான் நம்மோட ஒரே குறிக்கோள். இப்போ நான் நினைச்ச மாதிரியேதான் நடந்துக்கிட்டிருக்கு. எல்லோரும் என்னை ‘மாஸ்டர்’னுதான் கூப்பிட்டுக்கிட்டிருந்தாங்க. இப்போ, ‘ஹார்லி டேவிட்சன் மாதிரி ஒரு பைக் வெச்சிருப்பாரே போரூர்ல... அந்த மாஸ்டரா’னு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. எனக்குத் தனி அடையாளத்தை ஏற்படுத்தித் தந்திருக்கு. ரெனிகாடே கமாண்டோவுக்கு மானசீக நன்றிகள்!

ஷோரூம், சர்வீஸ் அனுபவம்

ஜனவரி மாசம் புக் பண்ணினேன். மூணு மாசத்தில் டெலிவரி கொடுத்துட்டாங்க! இதுவரை மூணு சர்வீஸ் பண்ணிட்டேன். ஒவ்வொரு தடவையும் ஆயில் மாத்த 1,500 ரூபாய் ஆனது. லிக்விட் கூல்டு இன்ஜின் இல்லையா? அதான் இந்தச் செலவு. மத்தபடி புல்லட்டோட ஒப்பிடும்போது, இது ரொம்பக் கம்மிதான்னு நினைக்கிறேன்.

எப்படி இருக்கிறது ரெனிகாடே?

கன்னியாகுமரிக்கு ஒரு ட்ரிப் அடிச்சேன். செம ஜாலி அனுபவம் அது. இதோட பீட் சத்தமே தனி. போற வழியிலெல்லாம், ‘ஹார்லி டேவிட்சனா, எவ்வளவு மைலேஜ்’னு விசாரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. 140 கி.மீ வரைக்கும் ஸ்பீடு அசால்ட்டா போகுது. எதிர்காத்துலகூட ஆடாம அசையாமப் பறக்குது. மூணு தடவை 1,000 ரூபாய்க்கு பெட்ரோல் ஃபில் பண்ணினேன். 22 லிட்டர் பெட்ரோல் கொள்ளளவுனு சொல்றாங்க. ஆனா, 18 லிட்டர் வரையும் பிடிக்கலாம். இல்லைனா ஓவர்ஃப்ளோ ஆகிடும்னு ரெவ்யூ படிச்சேன். எனக்கு இதுவரைக்கும் அந்த மாதிரி பிரச்னை எதுவும் வரலை.

பிடித்தது

இதில் எனக்கு முதலில் பிடிச்ச விஷயம் பிக்-அப். 279.5 சிசி... பவர் 24.8bhp... டார்க் 2.18kgm. புல்லட்டைவிடக் குறைவுதான். ஆனா, பிக்-அப் ரொம்ப அருமை.

இதோட டாலர் கியரிங் ஆப்ஷன், நிறைய பேருக்குப் பிடிக்காமப்போகலாம். எனக்கு இதுதான் சூப்பர். அதாவது, ஃபர்ஸ்ட் கியரிலேயே 80 கி.மீ-ரைத் தொடுது. சிட்டிக்குள் 6 கியரையும் நான் பயன்படுத்தின மாதிரி ஞாபகமே இல்லை. 4-வது கியர் போட்டு முடிக்கிறதுக்குள்ள அடுத்த சிக்னல் வந்துடும். அதேபோல், டாப் ஸ்பீடில் நிச்சயமாக எந்த வைப்ரேஷனும் இல்லை. 140 கி.மீ வேகத்தில் பறந்தாலும், கொஞ்சம்கூட அதிர்வுகள் தெரியவே இல்லை. மெர்சல் பண்ணுது ரெனிகாடே!

அப்புறம், இதோட சீட்டிங் பொசிஷன். க்ரூஸர் பைக்கின் அம்சமே அதுதானே! கன்னியாகுமரி ரைடுக்கு அப்புறம் நிறைய லாங் ரைடு போயிட்டு வந்துட்டேன். முதுகு வலி கொஞ்சம்கூடத் தெரியலை. பின்னால் உட்கார்பவர்களுக்கும் சேஃப்டியாக கிராப் ரெயில் அட்டகாசமா இருக்கு. சில பைக்குகளில் பிக்-அப் அதிகமா இருந்தால், பில்லியன் ரைடர்கள் ‘சட்’டென வாரி பின்னால் விழ வாய்ப்புண்டு. இந்த கிராப் ரெயிலை நீங்களே பாருங்க!

மொபைல் போன் சார்ஜர், ரொம்ப யூஸ்ஃபுல். ஆனா, அது பெட்ரோல் டேங்க்குக்குப் பக்கத்தில் இருக்கு. பிரேக்ஸ் நல்ல பவர்ஃபுல். ஸ்போக் வீல் க்ளாஸிக். க்ரூஸர் பைக்கில் அலாய் வீலை நினைச்சுப் பார்க்கவே முடியலை. டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் அருமை. ஓட்டும்போது ஜம்முனு இருக்கு. சைலன்ஸருக்கு உள்ளே ஒரு பிளேட் இருக்கும். அதைக் கழட்டினா... புலியும் சிறுத்தையும் சேர்ந்து உறுமுற மாதிரி சத்தம் கேட்கும். இந்தச் சத்தத்தில் பறந்தோம்னா, செம சீன்தான். ஆனா, இதில் மைலேஜ் எனக்குக் குறைஞ்சது. அதனால, மூணாவது சர்வீஸ்ல திரும்பவும் மாட்டிட்டேன்.

பிடிக்காதது

நினைத்த இடங்களில் ‘சட் சட்’ என யு-டர்ன் எடுக்க முடியலை. இந்த பைக்கோட நீளம் அதிகம். இதனால், டர்னிங் ரேடியஸ் கூடுது. திருப்பி வளைத்து ஓட்ட ஏதுவாக இல்லை. இதோட எடை 172 கிலோ. என்னோட எடைக்கு ஒப்பிடும்போது, இது ஓகேதான். என்னால ஈஸியா ஹேண்டில் பண்ண முடியுது. எடை குறைவானவங்களுக்கு இது எப்படி இருக்கும்னு தெரியலை.

இன்ஜின் பிக்-அப்பில் பட்டையைக் கிளப்பினாலும், இப்போ வர்ற மாடர்ன் பைக்குகள் Fi-க்கு மாறிடுச்சு. இதில் Fi குடுத்திருக்கலாமோ? அப்புறம், பிரேக்ஸ் சூப்பரா இருந்தாலும், பின்பக்கம் டிஸ்க் இருந்திருந்தா, இன்னும் மெர்சல் பண்ணலாம். பிளாஸ்டிக்ஸ் தரம் சீப்பா இருக்குனு சொல்றாங்க. ஆனா, என்னைப் பொறுத்தவரை ஓகேதான். ஆனா, டிசைன் பழசு மாதிரி இருக்கு. இண்டிகேட்டர் கொஞ்சம் உயரமா இருக்கிறதால, ஆனில்தான் இருக்குங்கிறது தெரியமாட்டேங்குது. பஸ்ஸர் பீப் சவுண்டை சேர்த்தே தரலாமே?

என் தீர்ப்பு

சில பேர் பைக் வாங்கிய பிறகு, ‘ச்சே... அந்த பைக்கே வாங்கியிருக்கலாமோ’னு ஃபீல் பண்ணுவாங்க. ரெனிகாடே வாங்கின பிறகு எனக்கு அந்த மாதிரி ஃபீலிங் எதுவும் வராம இருக்குன்னா, இதோட ரைடிங் கம்ஃபர்ட்டும், க்ரூஸிங் பவரும்தான் காரணம். ஸ்போக் வீல் என்பதால், ட்யூப் டயர்தான். பஞ்சர் ஆகாதவரை ஓகே! ஒல்லியானவங்க கொஞ்சம் யோசிங்க. மத்தபடி யூனிக்கா தெரியணும்னு நினைச்சீங்கன்னா, ரெனிகாடேவுக்கு நிச்சயம் டிக் அடிக்கலாம். சர்வீஸ் சென்டரை மட்டும் இன்னும் அதிகப்படுத்தினால், மகிழ்ச்சி!