நம் ஊரின் நெரிசலான சாலைகளில் பைக் ஓட்டும் ஒருவர், ரேஸ் டிராக்கில் அல்லது ஒரு ரைடிங் அகாடமியிடம் பயிற்சி பெற்றால் எப்படி இருக்கும்? இதனால் அவர் பைக் ஓட்டும் முறையில் வித்தியாசம் ஏற்படுமா? இந்தக் கேள்விகளுக்கான பதிலை, ஹோண்டாவின் டென் 10 ரேஸிங் அகாடமி (HTRA) எனக்கு அளித்தது! சென்னை இருங்காட்டுக்கோட்டை ரேஸ் டிராக்கில், கடந்த ஆகஸ்ட் 2, 3, 4 ஆகிய தேதிகளில், மீடியா பிரிவுக்கான பயிற்சி முகாமை நடத்தியது ஹோண்டா.

ரேஸ் டிராக்கில், வேகமாக பைக் ஓட்டினால்தான் வெல்ல முடியும் என, நான் இவ்வளவு நாள் நினைத்துக்கொண்டிருந்தேன். அது முற்றிலும் தவறு என்பது, ரேஸ் டிராக்கில் பைக் ஓட்டியபோதுதான் தெரிந்தது. அதாவது, ரேஸ் டிராக்கில் அனைவரும் ஒரே விதமான பைக்கையே ஓட்டுவதால், பைக்கைச் சரியான ரேஸ் லைனில் ஓட்டும் முறை, திருப்பங்களில் பிரேக் பயன்படுத்தும் முறை, ரைடிங் பொசிஷன் எனப் பல விஷயங்களில் ஒரு ரைடர் செயல்படுவதைப் பொறுத்தே, ரேஸ் டிராக்கில் அவரின் வெற்றி வாய்ப்பு அமையும் என்பதைப் புரிந்துகொண்டேன். இது படிக்கும்போது எளிதானதாகத் தெரிந்தாலும், அந்த உத்திகளை ரேஸ் டிராக்கில் எப்படி, எங்கே பயன்படுத்துகிறோம் என்பதற்குத்தான், ஹோண்டா டென் 10 ரேஸிங் அகாடமியின் பயிற்சி உதவுகிறது.

FIA Grade 2 சான்றிதழைப் பெற்றிருக்கும் மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக்கின் நீளம் - 3.7 கி.மீ. இதில் 12 திருப்பங்களும், 3 நேர் சாலைகளும் உள்ளன. ஹோண்டா டென் 10 ரேஸிங் அகாடமி, பயிற்சி நடந்த மூன்று நாள்களுக்கும், எழுத்து முறை மற்றும் செயல் முறை (Therory & Practical) என இரண்டு முறையையும் சரிசமமான விகிதத்தில் கலந்து, ரேஸ் டிராக்கில் பைக் ஓட்டுவதற்கான பயிற்சியினை வழங்கியது.

எழுத்து முறையில், ரேஸ் டிராக்கில் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் மற்றும் அங்கே பயன்படுத்தப்படும் கொடிகள் குறித்து விளக்கப்பட்டது. பின்பு அதன் நீட்சியாக, ரேஸ் டிராக்கில் இவற்றை எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்பதைச் செயல்விளக்கப் பயிற்சியாகக் கற்றுக் கொடுத்தார்கள். மீடியா பிரிவினருக்காக, ரேஸ் டிராக்குக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்ட CBR 150R பைக்கையும், ரேஸிங் சூட் - கிளவுஸ் - பூட்ஸ் - ஹெல்மெட் ஆகிய பாதுகாப்பு உபகரணங்களையும் ஹோண்டா வழங்கியது.

தமிழகத்தில் பல ரேஸிங் அகாடமி இருந்தாலும், ஹோண்டா டென் 10 ரேஸிங் அகாடமிக்கு ஒரு தனித்துவம் உண்டு. இவர்கள் ஒரு பயிற்சி வகுப்புக்கு, மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே ரைடர்களைத் தேர்ந்தெடுப்பதால், அனைவர்மீதும் தனித் தனியே கவனம் செலுத்திப் பயிற்சி அளிக்க முடிகிறது. இது பயிற்சி வகுப்பறை மற்றும் ரேஸ் டிராக் என இரண்டுக்குமே பொருந்தும் என்பது பெரிய ப்ளஸ்.

ஹோண்டா டென் 10 ரேஸிங் அகாடமியின் தலைவர் ராம்ஜி கோவிந்தராஜன், பயிற்சி வகுப்பறையில் ரேஸிங் டிப்ஸ்களையும், ரேஸ் டிராக்கில் பின்பற்றப்படும் விதிமுறைகளையும் மிக எளிய நடையில் விளக்கினார். பின்பு ரேஸ் டிராக்கில், ஹோண்டா டென் 10 அணியின் ரேஸர்களான சரத்குமார் மற்றும் வினோத் கண்ணன் ஆகியோர், ரேஸ் டிராக்கில் மீடியா நபர்களுடன் இணைந்து பைக் ஓட்டினர். நான் நேர் சாலையில் பைக்கை வேகமாக ஓட்டினேன் என்றாலும், சில குறுகலான திருப்பங்கள் வரும்போது, பயத்தின் காரணமாக, பைக்கின் வேகத்தை உடனடியாகக் குறைத்தேன். இதைக் கவனித்த சரத்குமார், எனக்கு முன்னால் சென்று, அவரது பைக்கை அப்படியே பின் தொடரச் சொன்னார். எனவே, திருப்பங்கள் வரும்போது, பைக்கின் வேகத்தைக் குறைக்காமல், பைக்கை அப்படியே வளைத்துச் செல்லும் வித்தையை அப்போது கற்றுக்கொண்டேன். அந்த கணம் எனது மனதில் ஏற்பட்ட உணர்வை, என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை! அது ஒருவித த்ரில்லாகவும், மனநிறைவாகவும் இருந்தது.

நம் ஊர்ச் சாலைகளில் செய்யப்பட்டுள்ள லேன் கோடுகளின் மீது பைக்கைச் செலுத்தினால், பைக்கின் டயர்கள் போதுமான க்ரிப் கிடைக்காமல் வழுக்குவதை நம்மால் உணர முடியும். இதே எண்ணத்தில்தான், எங்கே பைக்கின் பின் சக்கரம் க்ரிப் கிடைக்காமல் வழுக்கிவிடுமோ என நினைத்துக்கொண்டு, நான் டிராக்கின் விளிம்பில் இருக்கும் ரேஸ் லைனின் மீது செல்லாமல் இருந்தேன். ஆனால், திருப்பங்களில் பைக்கைச் செலுத்துவதற்காக, நாம் அவற்றின் மீது ஏறிச் செல்லத்தான் வேண்டியிருக்கும். அந்த சந்தர்ப்பத்தில் நான் அவற்றின் மீது பைக்கை ஓட்ட நேர்ந்தது என்றாலும், அதன் பிறகு பயம் காணாமல் போய்விட்டது.

முதல் நாள் பயிற்சியே இப்படி த்ரிலிங்காக ஆரம்பமானது. இரண்டாவது நாள் முழுதும் ரேஸ் டிராக்கில் பைக் ஓட்டுவதற்கே முக்கியத்துவம். அப்போது Transponder எனப்படும் லேப் டைமை அளந்து சொல்லக்கூடிய கருவி, அனைவரது பைக்கின் ஃபோர்க்கிலும் பொருத்தப்பட்டது. அதனால், 3.7 கி.மீ நீளம்கொண்ட சென்னை ரேஸ் டிராக்கை ஒருவர் எத்தனை நிமிடங்களில் கடக்கிறார் என்பதைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ள முடியும். முதலில் நான் ஒரு லேப்பை நிறைவு செய்ய, நான்கு நிமிடங்களுக்கும் அதிகமான நேரம் தேவைப்பட்டது. ஆனால், ஹோண்டா டென் 10 ரேஸிங் அகாடமியின் தலைவர் ராம்ஜி மற்றும் ரேஸர் சரத்குமாரின் பயிற்சி மற்றும் டிப்ஸ்களால், நாளின் முடிவில் நான் 3 நிமிடங்களிலேயே ஒரு லேப்பை நிறைவு செய்தேன். அதாவது, முன்பைவிட ஒரு நிமிடம் (60 விநாடிகள்) குறைவு!

ரேஸ் பைக்குகளில், ஸ்பீடோ மீட்டருக்கான இணைப்பை அகற்றியிருந்ததால், நான் என்ன வேகத்தில் சென்றேன் என்பதைச் சரியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், நான் எதிர்கொண்ட காற்றை வைத்துப் பார்க்கும்போதும், சுற்றியிருக்கும் பொருள்களை நாம் கடக்கும் வேகத்தை வைத்துக் கணிக்கும்போதும், நிச்சயம் அது 100 கி.மீ-க்கும் அதிகமாகத்தான் இருக்கும் என ஊகிக்கிறேன். ஆனால், இதை நான் பாதுகாப்பான சூழ்நிலையில், பாதுகாப்பு உபகரணங்களுடன் மேற்கொண்டேன் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

வெறும் மூன்று நாள்கள் நடைபெற்ற இந்தப் பயிற்சியிலேயே, நான் பைக் ஓட்டும் முறையில் மாற்றத்தை உணர முடிந்தது! ‘எவ்வளவு வேகத்தில் செல்கிறோம் என்பது முக்கியமில்லை; அதை என்ன முறையில் எட்டிப்பிடிக்கிறோம் என்பதில்தான் திறமை அடங்கியிருக்கிறது’ என்பதை இந்த மூன்று நாள்கள் எனக்குத் தெளிவாகப் புரிய வைத்தன. நம் ஊர்ச் சாலைகளில் பைக்கை வேகமாக ஓட்டுவதற்கும், ரேஸ் டிராக்கில் வேகமாக ஓட்டுவதற்கும், கடலளவு வித்தியாசம் இருக்கிறது!

நீங்கள் எவ்வளவு அனுபவம் வாய்ந்த ரைடராக இருந்தாலும், ரேஸ் டிராக்குக்குச் செல்லும்போது, தெளிந்த மனதுடன் செல்வது நல்லது; அப்போதுதான் புதிய விஷயங்களைக் கற்க முடியும் என்பதுடன், நாம் செய்த தவறுகளையும் தெரிந்துகொள்ள முடியும். Basic - Intermediate - Expert என மூன்று பிரிவுகளில் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது ஹோண்டா டென் 10 ரேஸிங் அகாடமி. நீங்கள் இதில் கலந்துகொள்ள விரும்பினால், ஒவ்வொரு பயிற்சி வகுப்புக்கும் 10,000 ரூபாய் செலுத்த வேண்டும். இந்தத் தொகையில், நீங்கள் பயிற்சி பெறப்போகும் பைக்கும் அடக்கம்! உங்களிடம் ரேஸ் டிராக்குக்கே உரிய ரேஸிங் சூட் - கிளவுஸ் - பூட்ஸ் - ஹெல்மெட் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் இல்லையென்றால், அவற்றை நீங்கள் பயிற்சி வகுப்பில் வாடகைக்குப் பெற்றுக்கொள்ள முடியும். இந்தத் தொகை சற்றே அதிகம்போலத் தோன்றினாலும், நீங்கள் பைக் ஓட்டும் முறையில் பெறப்போகும் முன்னேற்றத்துக்கு, இந்தச் செலவை தாராளமாக ஏற்றுக்கொள்ளலாம்.