ஹாய், நான் ப்ரஷாந்து. படிக்கும்போதே கார் ஓட்டும் வாய்ப்பு கிடைப்பது ரொம்பக் கஷ்டம். நான் அந்த வகையில் லக்கி. அப்பாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். எங்களிடம் ஏற்கெனவே மாருதியின் கிஸாஷி, பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் ஆகிய கார்கள் இருக்கின்றன.

ஏன் வால்வோ V40?

டிரைவிங்கில் கிஸாஷி, பிஎம்டபிள்யூ இரண்டையும் குறை சொல்ல முடியாது. இருந்தாலும், காலேஜுக்கு எடுத்துச் செல்ல ஒரு காம்பேக்ட் கார் வாங்க வேண்டும் என்று விரும்பினேன். காம்பேக்ட் மட்டுமில்லை; சொகுசாகவும் இருக்க வேண்டும். தேடிப் பார்த்ததில் வால்வோ V40 இம்ப்ரஸ் செய்தது. அதன் அழகான டிசைன் யாருக்கும் பிடிக்கும்.

உலகின் மிகவும் பாதுகாப்பான கார் எது என்று கேட்டால், சின்னக் குழந்தைகூடச் சொல்லும். யெஸ், வால்வோதான்! வால்வோவின் ப்ளஸ்ஸே இந்தப் பாதுகாப்பு அம்சங்கள்தான். குட்டி காரில் 7 காற்றுப் பைகள் என்றால் சும்மாவா? சொகுசிலும் வால்வோவை அடித்துக்கொள்ள முடியாது. பிஎம்டபிள்யூ-வைவிட சொகுசான, சிறப்பான இருக்கைகள் எனக்கு மிகவும் பிடித்தது. நான் ஓட்டிப் பார்த்தது பழைய மாடல்தான். ‘2017 மாடல் வரையும் காத்திருக்கலாமே’ என்று ஷோரூமில் ஐடியா கொடுத்தார்கள். 2017 மாடலுக்காகக் காத்திருந்தேன். ஓடுமீன் ஓட உறுமீன் வரும்வரை காத்திருந்த கொக்கு மாதிரி, லபக்கென அமுக்கிவிட்டேன். இப்போது என் செல்லம் வால்வோதான்.

ஷோரூம் அனுபவம்

ஏற்கெனவே இதற்கு முந்தைய V40 மாடலை கோவையில் உள்ள ஆர்ட்டெமிஸ் வால்வோவில் டெஸ்ட் ட்ரைவ் செய்திருக்கிறேன். அதனால், கார் வாங்க முடிவு செய்தபோது, ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி புக் செய்தேன். டெலிவரி எடுக்க ஷோரூம் சென்றபோது, காரின் சிறப்பம்சங்கள் அனைத்தையும் தெளிவாக விளக்கினார்கள். ‘கார் பற்றி என்ன சந்தேகம் இருந்தாலும் தயங்காமல் போன் பண்ணுங்கள்’ என்றார்கள். பேச்சுக்குத்தான் சொல்கிறார்கள் என்று நினைத்தேன். என்ன சந்தேகம் வந்தாலும், ஷோரூமுக்கு போன் பறக்கும். சலிக்காமல் பதில் சொல்கிறார்கள்.

ஓட்டுதல் அனுபவம்

பார்ப்பதற்குச் செல்லக் குழந்தைபோல் இருக்கிறது V40. ஆனால், நெடுஞ்சாலையில் குட்டிப் புலி மாதிரி சீறுகிறது. டெலிவரி எடுத்தபோதே, 160 கி.மீ-ரை அசால்ட்டாகத் தொட்டது வால்வோ. திடீரென்று பார்த்தால் வீடு வந்துவிட்டது. V40 சாலையில் என் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்தது. பெப்பி டிசைனாக இருந்தாலும், இதன் எடை 1,582 கிலோ என்பதால்கூட இருக்கலாம். வால்வோவின் பிரேக்குகளைப் பற்றியும் சொல்ல வேண்டியதில்லை. பிரேக்கில் கால் வைத்த அடுத்த நொடி, ‘பச்சக்’ என கார் நிற்கிறது. என் கார் என்பதற்காகச் சொல்லவில்லை - இதுவரை ஓட்டிய கார்களிலேயே, V40 போன்று எந்த காரும் எனக்குச் சிறந்த ஓட்டுதல் அனுபவத்தைத் தந்ததில்லை.

பிடித்தது

திரும்பவும் சொல்கிறேன். வால்வோ கார்களுக்கே உரிய பாதுகாப்பு அம்சங்கள்தான் அடிக்கடி என்னை ‘வாவ்’ போட வைக்கின்றன. எப்படி என்றால், எல்லா கார்களிலும் காருக்குள்ளே பயணிப்பவர்களின் பாதுகாப்பைத்தான் ரொம்ப முக்கியமாக ஃபோகஸ் செய்திருப்பார்கள். ஆனால், இதில் பாதசாரிகளின் பாதுகாப்புக்குக்கூடக் காற்றுப் பை இருக்கிறது என்பதுதான் அல்ட்டிமேட்டான விஷயம். மொத்தம் 7 காற்றுப் பைகள். அதில் ஒன்று பானெட்டில் இருந்து காருக்கு வெளியே ரிலீஸ் ஆகும். அப்புறம், இதன் சொகுசான இருக்கைகள். எவ்வளவு தூரம் சென்றாலும் சோர்வடையாமல் வைத்திருக்கின்றன. ‘டயர்டே தெரியலை’ என்கிறார் அப்பா.

சென்டர் கன்ஸோல், ரிச் லுக்கில் கலக்குகிறது. நேவிகேஷன், 10GB ஹார்ட் டிஸ்க் டிரைவ், WiFi மூலம் இயங்கும் பிரௌசர் என்று வால்வோவின் வசதிகள் என் அடுத்த சாய்ஸ்!

பிடிக்காதது

இது கொஞ்சம்கூட ஆஃப் ரோடுக்கு சரிவரவில்லை. காரணம், இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ். 133 மி.மீதான். பெரிய ஸ்பீடு பிரேக்கர்களில் நிறுத்தி ஏற்றி இறக்குவதற்குள்... பலர் ஓவர்டேக் செய்துவிடுகிறார்கள். அதிலும் 4 பேர் பயணித்தால், இன்னும் சிக்கல். பின்னால் இருக்கும் 2 பேர் இறங்கிக் கொள்ள வேண்டியதாக உள்ளது. இருப்பினும், காரின் அடிப்பாகத்துக்கும் சாலைக்கும் இடையே எவ்வளவு இடைவெளி இருக்கிறது என்பதை சென்ஸார் மூலம் கன்ஸோலில் தெரிவிப்பது உதவியாக உள்ளது.

என் தீர்ப்பு

பிராண்ட் இமேஜ் பார்த்துத்தான் இன்று நிறைய பேர் ஆடி, பிஎம்டபிள்யூ கார்களை வாங்குகின்றனர். ஆனால், குறைந்த விலையில் அதிக பாதுகாப்பு அம்சங்களை அள்ளித் தருவது வால்வோ மட்டும்தான். எனது அடுத்த காராக நான் டிக் அடித்திருப்பதும் வால்வோ S90தான்.