``எனக்கு ஹூண்டாயின் i20 மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால் எலீட், ஆக்டிவ் எனும் இரண்டு மாடலில், எதை வாங்குவது என்பதில் குழப்பம். என்னைத் தெளிவுபடுத்தும் பதில் எதிர்பார்க்கிறேன்.’’

- சம்பத், இமெயில்.

``பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் இருக்கும் ஸ்டைலான கார்களில் ஒன்று, எலீட் i20. ஒவ்வொரு மாதமும் கார் விற்பனையில், மாருதியின் பெலினோவுக்குக் கடும் சவாலை அளித்துவரும் இந்த காரில் நவீன டிசைன், கேபின் தரம், டீசல் இன்ஜினின் பெர்ஃபாமென்ஸ், எளிதான ஓட்டுதல் ஆகியவை இருக்கின்றன. `கார் காம்பேக்ட்டாக இருக்க வேண்டும். பார்க்க எஸ்யூவி போலவும் இருப்பது அவசியம்’ என்பவர்களுக்காக வெளிவந்ததுதான் i20 ஆக்டிவ். இது க்ராஸ்ஓவர் போன்ற தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், i20 ஹேட்ச்பேக்கை அடிப்படையாகக்கொண்டே இது தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, இரண்டுக்கும் ஒற்றுமைகள் அதிகம். ஆனால், i20 ஹேட்ச்பேக்கின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் தற்போது டெஸ்ட்டிங்கில் இருப்பதால், கொஞ்சம் காத்திருப்பது நல்லது. அப்படி உங்களுக்கு கார் உடனடியாகத் தேவை என்றால், ஹோண்டாவின் WR-V காரை நீங்கள் பரிசீலிக்கலாம்.’’

``மூன்று லட்சம் ரூபாய் விலையில், நெடுந்தூரப் பயணம் செல்லும் வகையில், இரு சக்கர வாகனத்தை எனக்குப் பரிந்துரை செய்யுங்கள்.’’

- எம். ராஜ், இமெயில்.

``உங்களது பட்ஜெட்டுக்கும் குறைவான விலையிலேயே நல்ல டூரிங் பைக்குகள் கிடைக்கின்றன. மோஜோ, CBR 250R, YZF-R3, ஹிமாலயன் ஆகியவை சிறப்பான டூரிங் பைக்குகள். இருந்தாலும், அவற்றின் BS-IV மாடல்கள் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. எனவே, டொமினார் ABS, FZ25, கிளாசிக் 500 அல்லது தண்டர்பேர்டு 500, ரெனிகெய்ட் ஸ்போர்ட் S ஆகியவற்றை நீங்கள் பரிசீலிக்கலாம். இதில் ராயல் என்ஃபீல்டு பைக்குகளே Default சாய்ஸாகத் தெரிந்தாலும், அவற்றின் அதிக எடை மற்றும் அதிர்வுகள், சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். மேலும், அவற்றின் வெயிட்டிங் பீரியட் மற்றும் பராமரிப்புச் செலவுகளும் அதிகமாக இருப்பதுடன், வசதிகளும் குறைவாகவே இருக்கின்றன. இந்த இடத்தில்தான் டொமினார், FZ25, ரெனிகெய்ட் ஸ்போர்ட் S முன்னிலை பெறுகின்றன. எனவே, கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்க பைக் வேண்டுமென்றால் டொமினார்; எடை குறைந்த பைக் என்றால், FZ25; க்ரூஸர் டிசைனைக் கொண்ட பைக் வேண்டும் என்றால், ரெனிகெய்ட் ஸ்போர்ட் S ஆகியவற்றைப் பரிசீலிக்கலாம்.’’

``எனது பட்ஜெட் 65,000 ரூபாய். சுஸூகி லெட்ஸ் மற்றும் டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் ஆகியவற்றில் எதை வாங்கலாம்? இதே பட்ஜெட்டில் வேறு ஏதெனும் ஸ்கூட்டர்கள் இருந்தால், அதைப் பற்றியும் கூறவும்.’’

- பிரதீப், இமெயில்.

``நீங்கள் குறிப்பிட்டுள்ள இரண்டு மாடல்களும், அந்தந்த நிறுவனங்களின் என்ட்ரி லெவல் ஸ்கூட்டர்கள். ஆனால், டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன், டியூப்லெஸ் டயர்கள், MF பேட்டரி, சீட்டுக்கு அடியில் அதிக இடம், டூயல் டோன் ஃபினிஷ் என இவற்றைவிட விலை அதிகமான ஸ்கூட்டர்களில் இல்லாத வசதிகளைக் கொண்டிருக்கின்றன. லெட்ஸுடன் ஒப்பிடும்போது யூஎஸ்பி மொபைல் சார்ஜர், க்ரோம் லோகோ, சீட்டுக்கு அடியில் லைட், டூயல் டோன் சீட் கவர் & பாடி பேனல்கள், பார்க்கிங் பிரேக், LED DRL & டெயில் லைட், ஆட்டோ சோக், பலவிதமான கலர் ஆப்ஷன்கள் (Matt, Solid) என கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்க ஸ்கூட்டராகத் திகழ்கிறது ஸ்கூட்டி ஜெஸ்ட். இன்ஜினின் பெர்ஃபாமன்ஸ் - மைலேஜ் விஷயத்திலும், ஸ்கூட்டி ஜெஸ்ட்தான் முன்னிலை வகிக்கிறது. ஆக்டிவா-i மற்றும் ப்ளஷர் ஆகியவை, உங்கள் பட்ஜெட்டில் கிடைக்கின்றன. அவை பழைய மாடல்களாக இருப்பதுடன் சஸ்பென்ஷன் விஷயத்திலும் பின்தங்கிவிடுகின்றன.’’

``எனது பட்ஜெட் 10 - 12 லட்சம் ரூபாய். நான் முதன்முறையாக கார் வாங்க உள்ளேன். அது நல்ல கட்டுமானத் தரத்துடன் 7 சீட்டராக இருப்பது அவசியம். ஹோண்டா BR-V அல்லது ரெனோ லாஜி ஆகியவற்றில் எதை வாங்கலாம்?’’

- வி.சுதர்சன், சிவகங்கை.

``நீங்கள் குறிப்பிட்ட கார்களில், ரெனோ லாஜி சரியான தேர்வாக இருக்கும். என்னதான் BR-V பார்ப்பதற்கு எஸ்யூவி போல இருந்தாலும், அது அடிப்படையில் மொபிலியோதான். மேலும், லாஜியுடன் ஒப்பிடும்போது சிறப்பம்சங்களிலும் அது அவ்வளவாக ஈர்க்கவில்லை. தவிர, இதில் உள்ள டீசல் இன்ஜின், லாஜியைவிடக் குறைவான பவரையே வெளிப்படுத்துகிறது. இதனுடன் ஒப்பிடும்போது, ரெனோ லாஜியின் தோற்றம் அனைவருக்கும் பிடிக்காது. இருந்தாலும் இடவசதி, ஓட்டுதல் அனுபவம், பெர்ஃபாமென்ஸ் ஆகியவற்றில் அசத்துகிறது. மாருதி சுஸூகியின் எர்டிகா, நல்ல ஆப்ஷனாக இருந்தாலும் ஜிஎஸ்டி-வரிக்குப் பிறகு அந்த காரின் விலை கணிசமாக அதிகரித்துவிட்டது. இதற்கு அந்த காரில் இருக்கும் SHVS சிஸ்டமே காரணம்.’’

``சிறப்பான பெர்ஃபாமென்ஸ் மற்றும் பிரேக்கிங் திறன்கொண்ட பைக் ஒன்றை வாங்க உள்ளேன். பல்ஸர் NS200 அல்லது பல்ஸர் 220F ஆகியவற்றில் எது பெஸ்ட்?’’

- மொஹமத் இப்ராஹிம், இமெயில்.

``200சிசி செக்மென்ட்டின் பவர்ஃபுல்லான பைக், பல்ஸர் NS200. ஐந்து ஆண்டுகள் பழைய டிசைனாக இருந்தாலும், இது பார்ப்பதற்கு ஸ்டைலாகவே இருக்கிறது. NS200 பைக்கில் இருக்கும் 4 வால்வு, 3 ஸ்பார்க் ப்ளக், லிக்விட் கூல்டு இன்ஜின் ஆகியவை, டியூக் 200 பைக்கை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டது என்பதால், பெர்ஃபாமென்ஸ் அருமையாக இருக்கிறது. மேலும், பல்ஸர் சீரிஸ் பைக்கிலே, சிறப்பான கையாளுமையைக் கொண்டிருக்கும் மாடல் இதுதான், இதற்கு NS200 பைக்கின் Perimeter ஃப்ரேமும் MRF டயர்களும் துணை நிற்கின்றன. பல்ஸர் 220F விற்பனைக்கு வந்து, 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே, NS200 பைக்குடன் ஒப்பிடும்போது, இது டிசைனிலும் தொழில்நுட்பரீதியிலும் சற்று பின்தங்கியிருப்பது உண்மைதான். ஆனால், இந்த இடைப்பட்ட காலத்தில் தனக்கென நிலையான ரசிகர் வட்டத்தை இது பெற்றிருப்பதால், ஒவ்வொரு மாதமும் விற்பனை எண்ணிக்கையில் NS200 பைக்கை எளிதாக வீழ்த்திவிடுகிறது. டெஸ்ட் டிரைவ் செய்து, உங்களுக்கு ஏற்ற பைக்கைத் தேர்ந்தெடுங்கள்.’’