பெரும்பான்மையான கார்கள் இப்போது எலெக்ட்ரானிக் மயமாகிவிட்டன. காரின் சாவியில் ஆரம்பித்து... பிரேக்ஸ், காற்றுப் பைகள், ரிவர்ஸ் கேமரா என பம்பர் டு பம்பர் எல்லாம் சென்ஸார் மயம். சில லக்ஸூரி கார்கள் - டயர்களில் காற்று இறங்குவது; இன்ஜின் ஆயிலின் மசகுத் தன்மை வரை எல்லாவற்றையும் சென்ஸார் செய்து, ஸ்கிரீனில் காட்டும். அந்த வகையான ஒரு எலெக்ட்ரிக் சிஸ்டம்தான் இந்த அட்டென்ஷன் அசிஸ்ட்.

கார் ஓட்டுவது சிலருக்கு ஜாலியான ஹாபி; வேறு சிலருக்கு அதுதான் வேலை. ஜாலிக்கு கார் ஓட்டுபவர்களுக்கு, கொஞ்ச நேரத்தில் ஸ்டீயரிங் பிடிப்பது போர் அடித்துவிடும். சட்டென டயர்டு ஆகிவிட வாய்ப்புண்டு. அவர்கள் காரை நிறுத்தி ரெஸ்ட் எடுத்தோ, ஷேர் செய்தோ காரை ஓட்டலாம். ஆனால், கார் ஓட்டுவதுதான் வேலை என்பவர்களுக்கு... களைப்பு தெரிந்தாலும் வெளிக்காட்டாமல் ஸ்டீயரிங் பிடித்தாக வேண்டும். அவர்களுக்கான ஒரு ஆப்ஷன்தான் - இந்த அட்டென்ஷன் அசிஸ்ட். இது செயல்படும் விதம், செம ஸ்மார்ட்.

இது, கார் ஓட்டும்போது அயர்வு ஏற்பட்டால், ‘பீப்’ சவுண்ட் கொடுத்து அலெர்ட் செய்யும்.

சரி, டிரைவர் சோர்வில் இருக்கிறார் என்பது இதற்கு எப்படித் தெரியும்? எல்லாம் சென்ஸார்தான். டிரைவர் ஸ்டீயரிங்கைக் கையாளும் விதத்திலிருந்தே, அவர் இதயத் துடிப்பு, தூக்கமின்மை, அயர்வு எல்லாவற்றையும் இது கண்டுபிடித்துவிடும். நீங்கள் தூக்கக் கலக்கத்தில் தடாலெனத் தலையை ஆட்டும் அடுத்த நொடி, இதில் உள்ள அலார்ம் ‘கிய்யா முய்யா’ எனக் கதற ஆரம்பித்து, உங்களை அலெர்ட் செய்யும்.

இந்த அற்புதமான தொழில்நுட்பத்தை முதன்முதலில் வாடிக்கையாளர்களுக்கு அளித்தது, மெர்சிடீஸ் பென்ஸ். அமெரிக்காவில் ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 1 லட்சம் விபத்துகள் - டிரைவர்களின் தூக்கத்தால் நடக்கின்றனவாம். இதைக் கட்டுப்படுத்தத்தான் பென்ஸ் தன் கார்களில் இந்த அட்டென்ஷன் அசிஸ்ட் சிஸ்டத்தைக் கொண்டுவந்தது.

டிரைவர் காரில் உட்கார்ந்து, இக்னீஷனை ஆன் செய்வதிலிருந்து, இந்த சென்ஸார் தன் வேலையைத் தொடங்கிவிடும். சொல்லப் போனால், டிரைவர் பற்றிய ஒரு மினி பயோடேட்டாவையே ரெடி செய்துவிடுமாம். அதாவது, டிரைவர் கார் ஓட்டும் ஸ்டைல், அவர் அலெர்ட் ஆக இருக்கிறாரா, அவசரக் குடுக்கைத்தனம், சரியான முறையில் காரைக் கையாள்கிறாரா, அவரின் உடல் நலம் என்று டிரைவரின் அத்தனை விவரங்களையும் அவரின் குட்டிக் குட்டிப் பயணங்களின்போது அவர் கார் ஓட்டும் ஸ்டைலை வைத்து ஒரு புரொஃபைல் தயார் செய்துவிடும். இந்த புரொஃபைலின் அடிப்படையில், அவரின் மற்ற அனுபவங்கள் கண்காணிக்கப்பட்டு, வேகமான பயணங்களின்போது அட்டென்ஷன் அசிஸ்ட் எந்நேரமும் அலெர்ட்டாக இருக்கும்.

ஒரு டிரைவரின் அத்தனை விவரங்களையும் கண்காணிக்கும்படி இது அமைந்திருக்கிறது என்றால், இதில் உள்ள சென்ஸார்களின் ஹை சென்ஸிட்டிவ் எப்படி என்று யோசித்துப் பாருங்கள். இது தவிர, ஸ்டீயரிங் அசைவுகளையும் வேகத்தையும் இது சென்ஸார் செய்தபடியே வரும். இதில்தான் அட்டென்ஷன் அசிஸ்ட்டின் புத்திசாலித்தனமே இருக்கிறது. ஒரு டிரைவர், சாதாரண நிலையில் ஸ்டீயரிங் கையாளும்போதும், தூக்கக் கலக்கத்தில் ஸ்டீயரிங் பிடிக்கும் விதமும் ஒன்றாக இருக்காது. டிரைவர், அயர்ச்சியில் மி.மீ அளவு கண்மூடினாலோ, தலையை ஆட்டினாலோ, அதிலுள்ள எரர்கள் கரெக்ட் செய்யப்பட்டு, சட்டென அலாரம் அடித்து, ஹாலிவுட் படங்களில் வருவதுபோல், ‘நீங்கள் டயர்டாக இருக்கிறீர்கள்’ என்று கம்ப்யூட்டர் குரல் திரும்பத் திரும்ப ஒலித்து உங்களை எரிச்சல் படுத்த ஆரம்பிக்கும். சில பென்ஸ் கார்களில் அலாரத்தோடு, ஸ்பீடோ மீட்டரில் ‘பாஸ்’ சிம்பலும், டீ கப் சிம்பலும் வந்து, உங்களை ரெஃப்ரெஷ் செய்யச் சொல்லி அலெர்ட் செய்கிறது. எனவே, பிக் பாஸ் வீடு முழுக்க கேமராக்கள் இருப்பதுபோல், கார் முழுக்க ஹை சென்ஸிட்டிவ் சென்ஸார்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதால், இங்கே தூங்கவும் முடியாது; அயரவும் முடியாது.

டாப் ஸ்பீடில் காரைப் பறக்கவிடும்போது, சில டிரைவர்களின் இதயத் துடிப்பு தானாகவே எகிற ஆரம்பிக்கும். அந்த மாதிரி நேரங்களிலும் அட்டென்ஷன் அசிஸ்ட், நம்மை அலெர்ட் செய்யத் தயங்காது. அது மட்டுமில்லை; சில டிரைவர்கள் டச் ஸ்கிரீனிலோ, டி.வி-யிலோ படம் பார்த்துக் கொண்டே கார் ஓட்டுவார்கள். அவர்களுக்கும் இது சரியான ஆப்பு வைக்கும். அதாவது, ஒரு குறிப்பிட்ட விநாடிகள் வரை நீங்கள் சாலையில் பார்வையைச் செலுத்தாமல் இருந்தால், அலாரத்துக்கு ஆளாக வேண்டியதுதான். இதற்கு ‘ஸ்ப்ளிட் வியூ சிஸ்டம்’ என்றொரு சென்ஸார் சிஸ்டம் உதவுகிறது. சில குறிப்பிட்ட கார்களில் மட்டும் டீஃபால்ட்டாக அட்டென்ஷன் அசிஸ்ட்டோடு பென்ஸ் இந்த சிஸ்டத்தையும் இணைத்திருக்கிறது. ஒரு முக்கியமான விஷயம், அட்டென்ஷன் அசிஸ்ட் 80 கி.மீ முதல் 200 கி.மீ வரை வேகத்தில் கார் செல்லும்போதுதான் நம்மை அசிஸ்ட் செய்யும்.

2009-ல் இது கண்டுபிடிக்கப்பட்டபோது, அட்டென்ஷன் அசிஸ்ட் பற்றி சில நெகட்டிவ் விமர்சனங்களும் வாசிக்கப்பட்டன. சில ஜாலி டிரைவர்கள், வேண்டுமென்றே ஸ்டீயரிங்கை ஒடித்து காரை டிரிஃப்ட் செய்வது, சட்டென பிரேக் பிடிப்பது என்று ஃபன் செய்வார்கள். அப்போதுகூட அட்டென்ஷன் அசிஸ்ட் அலாரம் அடித்துக் கடுப்பேற்றுகிறது என்பதுதான் அது. இப்போது அதற்கும் தீர்வு காணப்பட்டுவிட்டது. அதற்காகத்தான் டிரைவர்களின் புரொஃபைல்! தூக்கக் கலக்கத்தையும், ஃபன் டிரைவையும் பிரித்தறிந்து செயல்படும் அட்டென்ஷன் அசிஸ்ட்டை இப்போது எல்லோரும் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். தூக்கக்கலக்கத்தில் டிரிஃப்ட் செய்யும் டிரைவர்கள், நிச்சயம் இண்டிகேட்டர் போட மறந்திருப்பார்கள். அப்படியென்றால், இண்டிகேட்டர் விளக்கு போடாமல், காரைத் திருப்பினால் அது உங்கள் தப்பு!

பென்ஸ் தவிர வேறு நிறுவனங்களைச் சேர்ந்த கார்களிலும் இந்தத் தொழில்நுட்பம் வந்துவிட்டது. ஆடியில் ரெஸ்ட் கமாண்டேஷன் சிஸ்டம், பிஎம்டபிள்யூவில் ஆக்டிவ் டிரைவிங் அசிஸ்டன்ட், ஃபோர்டில் டிரைவர் அலெர்ட் என்று வெவ்வேறு பெயர்களில் இதே தொழில்நுட்பம் பரவலாகிவிட்டது. ஆனால், பென்ஸைப் பொறுத்தவரை செம காஸ்ட்லியான E க்ளாஸ், S க்ளாஸ் போன்ற பிரீமியம் கார்களில் மட்டும்தான் இந்தத் தொழில்நுட்பம் உண்டு என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.

எப்படியிருந்தாலும், டிரைவர்களை அலெர்ட் செய்து விபத்துகளைக் குறைக்கும் அட்டென்ஷன் அசிஸ்ட்டுக்கு, அட்டென்ஷனில் ஒரு பெரிய சல்யூட் அடிக்கலாம்!