ஹோண்டாவின் புதிய ஸ்கூட்டர் இதுதான்!

ஹோண்டாவின் புதிய ஸ்கூட்டர் பற்றிய தகவல்கள் லீக் ஆகியுள்ளன. Grazia எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த ‘Advanced Urban Scooter’, ஒரு 125சி.சி ஸ்கூட்டராக இருக்கலாம். மேலும், டூயல் டோன் மேட் ஃப்னிஷ், டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன், டிஸ்க் பிரேக், டிஜிட்டல் மீட்டர், CBS, USB மொபைல் சார்ஜர், 12 இன்ச் டியூப்லெஸ் டயர்கள், அலாய் வீல்கள், அலாய் ஃபுட் பெக், Seat Release Latch மற்றும் சென்ட்ரல் லாக்கிங் என Grazia-வில் எக்கச்சக்க வசதிகள். Grazia-வை 2,000 ரூபாய் செலுத்தி புக் செய்துகொள்ளலாம்.
Grazia-வுக்கு அடுத்து, மேம்படுத்தப்பட்ட CBR பைக்குகளும் வரலாம். SDBV சஸ்பென்ஷன், LED ஹெட்லைட்-டெயில் லைட், Nissin டிஸ்க் பிரேக் - BS-IV விதிகளுக்கு ஏற்ப ரீ-டியூன் செய்யப்பட்ட இன்ஜின் என புதிய CBR 650F பைக்கை, அதே விலைக்கு (7.30 லட்ச ரூபாய் - டெல்லி எக்ஸ் ஷோரூம்) ஹோண்டா அறிமுகப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து புதிய CBR 150R மற்றும் CBR 300R பைக்குகளும் வரலாம்.

எலெக்ட்ரிக் கார் ஏலம்... மஹிந்திராவுக்கு நஷ்டமா?

மத்திய அரசாங்கத்துக்குச் சொந்தமான Energy Efficient Services Limited (EESL) நிறுவனத்துக்கு, 10,000 எலெக்ட்ரிக் கார்களை வழங்குவதற்காக நடந்த டெண்டரில், நிஸான் - மஹிந்திரா - டாடா நிறுவனங்கள் பங்குபெற்றன. இறுதியில் டாடா மோட்டார்ஸ் இந்த ஏலத்தில் வெற்றி பெற்றது. முதலில் அதிர்ச்சியடைந்தாலும், பின்னர் டாடாவின் விலைக்கே இறங்கிவந்துவிட்டது மஹிந்திரா! முதற்கட்டமாக, வருகிற நவம்பருக்குள் 500 கார்கள் டெலிவரி செய்யப்பட உள்ளன. இதில் டாடா மோட்டார்ஸின் 250 எலெக்ட்ரிக் டிகோர் கார்களும், மஹிந்திராவின் எலெக்ட்ரிக் வெரிட்டோ கார்களும் அடக்கம். இதில் ஒவ்வொரு காருக்கும், மஹிந்திராவுக்கு 2.3 லட்ச ரூபாய் நஷ்டம். அதாவது 150 கார்களுக்கு உத்தேசமாக 3.5 கோடி ரூபாய்! எனவே, மீதமுள்ள 9,500 கார்களில், 40 முதல் 50 சதவிகிதம் (அதிகபட்சமாக 4,750 எலெக்ட்ரிக் கார்கள்) கார்களை வழங்கவும் மஹிந்திராவுக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்நிலையில், எலெக்ட்ரிக் சுப்ரோ, எலெக்ட்ரிக் வெரிட்டோ, E2O ஆகிய கார்களைத் தொடர்ந்து, நான்காவதாக KUV 100 NXT காரின் எலெக்ட்ரிக் மாடலை மஹிந்திரா தயாரிக்க உள்ளது.

கார்களின் தொழில்நுட்பம் இனி ட்ரக்குகளில்!

இந்தியாவில்தான் விற்பனை செய்யும் MCV & HCV (Medium & Heavy Commercial Vehicles) வாகனங்களில், பிரீமியம் கார்களில் காணப்படும் பாதுகாப்பு வசதியான எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC)-யைப் பொருத்தியுள்ளது டாடா மோட்டார்ஸ். முதற்கட்டமாக, ப்ரிமா மற்றும் சிக்மா சீரிஸ் டிரக்குகளில் இவை இடம்பெற உள்ளன. மேலும், ஆட்டோமேட்டிக் டிராக்ஷன் கன்டோல் (ATC) மற்றும் Hill Start Aid (HSA) போன்ற பாதுகாப்பு வசதிகள், டாடாவின் டிரக் மற்றும் பஸ்களில் வருகின்றன. இதற்காக, வாப்கோ இந்தியா நிறுவனத்துடன் இணைந்து பணிபுரிந்துள்ளது, டாடா.

படம்: வீ.நாகமணி