அறிமுகமான இருபத்தி ஒன்றே மாதங்களில், தன்னுடைய முதல் மோனோகாக் ஹேட்ச்பேக்கான KUV 100 காரில் நாற்பதுக்கு மேற்பட்ட மாற்றங்களைச் செய்திருக்கிறது மஹிந்திரா. அத்துடன் KUV 100 NXT என்று புதுப் பெயரும் கொடுத்திருக்கிறது.

வெளித்தோற்றம்/உள்ளங்காரம்

தன்னுடைய இருப்பைச் சத்தமாகச் சொல்லும் கிரில் மற்றும் வீல் ஆர்ச், DRL ஹெட்லைட்ஸ், புதிய டெய்ல் லைட்ஸ், ஸ்போர்ட்டியான 15 இன்ச் அலாய் வீல் ஆகியவை, நடந்திருக்கும் மாற்றங்களில் முக்கியமானவை. முன் மற்றும் பின்பக்க பம்பர்களில் இருக்கும் சில்வர் ஸ்கிட் பிளேட்ஸ் இதற்கு முரட்டுத் தோற்றத்தைக் கொடுக்கின்றன. ORVM எனப்படும் பக்க வாட்டுக் கண்ணாடிகளில் இப்போது இண்டிகேட்டர்கள் சேர்ந்திருக்கின்றன. பின் கதவின் கைப்பிடிகள் கறுப்பு வண்ணத்துக்கு மாறியிருக்கின்றன. கிரீஸ் கோடுகளும், ஸ்பாய்லரும் KUV 100 காருக்கு ஸ்போர்ட்டியான தோற்றத்தைக் கொடுக்கின்றன. கொஞ்ச நாள்களுக்கு முன்பு மஹிந்திரா வெளியிட்ட KUV 100 காரின் அனிவர்ஸரி எடிஷனில் இருப்பதைப் போன்றே - தேவை என்றால் காரின் கூரைக்கு கறுப்பு வண்ணத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளக்கூடிய ஆப்ஷன் உண்டு. அனிவர்ஸரி எடிஷனைப் போலவே காரின் உட்புறம் முழுக்கக் கவர்ச்சியான கறுப்பு நிறத்தின் ஆதிக்கம் இருக்கிறது. TUV 300 காரில் இருந்த 7 இன்ச் டச் ஸ்கிரீனை இப்போது இதிலும் கொடுத்திருக்கிறது மஹிந்திரா. ஏர் கண்டிஷன் பட்டன்களில் மாற்றம் தெரிகிறது. ஆறு இருக்கைகளை இதில் மஹிந்திரா கொடுத்திருக்கிறது. ஆனால், புதிதாகச் சேர்ந்திருக்கும் அந்த இருக்கை முதல் வரிசையின் நடு இருக்கையாக இருப்பதால், அதில் சிறுவர்கள் மட்டும்தான் வசதியாகப் பயணம் செய்ய முடியும். காரணம், பெரியவர்கள் உட்கார்ந்தால் முழங்கால் சென்டர் கன்ஸோலில் இடிக்கும். தண்ணீர் பாட்டில், பேப்பர் போன்ற விஷயங்களை வைத்துக்கொள்ள வழக்கம் போல இதில் ஏராளமான இடம் இருக்கின்றன. அதேபோல, 243 லிட்டர் டிக்கியும் போதுமானதாக இருக்கிறது.

இன்ஜின் மற்றும் பர்ஃபாமென்ஸ்

முந்தைய KUV 100 காரில் இருப்பதைப் போன்றே இதிலும் 83bhp சக்தியை வெளிப்படுத்தக்கூடிய 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 78bhp சக்தியை வெளிப்படுத்தக்கூடிய 1.2 லிட்டர் டீசல் இன்ஜின் என்று இரண்டு சாய்ஸ் இருக்கின்றன. இந்த இரண்டிலும் இருப்பது 5 கியர்களைக்கொண்ட கியர்பாக்ஸ்தான். டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட KUV 100 மாடலைப் பொறுத்தவரை, இது முன்பைப் போலவே ஸ்மூத்தாகச் செயல்படுகிறது. நான்காவது ஐந்தாவது கியர்களில் லேசாக ஆக்ஸிலேட்டரை அழுத்தியபடி ஓட்டினாலே போதும்; இதில் சுலபமாக க்ரூஸ் செய்யலாம். வாகன நெருக்கடியான சாலைகளில்கூட அடிக்கடி கியரைக் குறைக்காமல் ஓட்ட முடிவது இதன் இன்னொரு ப்ளஸ். ஆனால், இது நிச்சயம் பெர்ஃபாமென்ஸ் விரும்பிகளின் கார் கிடையாது என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.

போர்ஷே பொறியாளர்களால் வடிவமைக்கப்பட்ட இதன் கியர்பாக்ஸ் துல்லியமாக மட்டுமல்ல... கச்சிதமாகவும் இயங்குகிறது. வெளிச்சத்தம் காருக்குள் கேட்காத அளவுக்குப் பல மாற்றங்களைச் செய்திருப்பதாக மஹிந்திரா சொல்கிறது. இது ஓரளவுக்கு உண்மையும்கூட. டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட காரின் ஆக்ஸிலரேட்டர் பெடலை அதிகமாக மிதித்து ஓட்டும்போது மட்டும் இன்ஜின் சத்தம் காருக்குள் கேட்கிறது. ஏ.சி ஃபேன் சத்தம்தான் கொஞ்சம் ஓவராக இருக்கிறது. சஸ்பென்ஷன் சாஃப்ட்டாக இருப்பதால், குண்டும் குழியுமான சாலைகளில் ஓட்டும் போது அதிர்ச்சிகளை இது உள்வாங்கிக் கொள்கிறது. ஆனால், நெடுஞ்சாலையில் ஓட்டும்போது இது சற்றே அலைபாய்கிறது. ஸ்டீயரிங் ஹெவியாக இருப்பதுடன் குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது.

ஆறு பேர் இல்லை என்றாலும் ஐந்து பேர் ப்ளஸ் ஒரு சிறுவன்/சிறுமி தாராளமாகப் பயணிக்கக்கூடிய காராக இது இருக்கிறது. இதில், இப்போதும் பிரீமியமான சிறப்பம்சங்களும் சேர்ந்திருக்கின்றன.

டிசைனில் இருந்த சில குறைகளையும் இப்போது நீக்கியிருக்கிறது. எண்ணிக் கொடுக்கும் காசுக்கு ஏற்ற காராக இருப்பது இதன் இன்னொரு ப்ளஸ்.