ஃபோக்ஸ்வாகன் பஸாத்.... சர்வதேசச் சந்தைகளில் அறிமுகமாகி மூன்று ஆண்டுகள் ஆன பிறகே, இந்தியாவுக்கு வந்திருக்கிறது. உலக அளவில், தனது டீசல் கார்களின் மாசு அளவுகளில் ஏற்பட்ட பிரச்னைகளைச் சரிசெய்த பிறகு, பஸாத்தை நம் ஊருக்கு ஏற்றபடி மாற்றியிருக்கிறது ஃபோக்ஸ்வாகன். மேலும், சர்வதேசச் சந்தைகளில் EURO-6 விதிகளுக்கு ஏற்ப விற்பனை செய்யப்படும் பஸாத்தை, இந்தியாவின் BS-IV விதிகளுக்கு ஏற்ப மதிப்பிறக்கம் செய்வதற்கு ஏற்பட்ட காலதாமதமே இதற்கான காரணம். இந்தக் காரில் இருக்கும் EA288 2.0 லிட்டர் TDI டீசல் இன்ஜின்தான், ஸ்கோடா சூப்பர்ப், ஃபோக்ஸ்வாகன் டிகுவான், ஆடி A4 போன்ற கார்களிலும் இருக்கின்றன.

எக்ஸிகியூட்டிவ் செடான்களுக்கான வரவேற்பு தற்போது குறைந்துவருவதுடன், இதே விலையில் கிடைக்கக்கூடிய எஸ்யூவி-களைப் பலர் வாங்கத் தொடங்கிவிட்டனர். எனவே, விற்பனை எண்ணிக்கை அதிரடியாக இல்லாவிட்டாலும், டொயோட்டா கேம்ரி மற்றும் ஸ்கோடா சூப்பர்ப் என வலுவான போட்டியாளர்களை எதிர்கொள்கிறது பஸாத். அதிலும் பஸாத் தயாரிக்கப்படும் அதே MQB பிளாட்ஃபார்மில்தான் சூப்பர்ப் காரும் தயாரிக்கப்படுகிறது. எனவே, அதிக சிறப்பம்சங்களைத் தனது காரில் வழங்கியிருக்கும் ஃபோக்ஸ்வாகன், தனது போட்டியாளர்களுக்குச் சமமான விலையிலேயே காரின் விலையை நிர்ணயித்திருக்கிறது.

டிசைன் & கேபின்

நீங்கள் பஸாத்தை அணுகும் விதத்தைப் பொறுத்து, காரின் டிசைன் உங்களுக்கு நீட்டாகவோ, வழக்கமான ஒன்றாகவோ தெரியும். LED DRL உடனான LED ஹெட்லைட்டும் - க்ரோம் கிரில்லும் சிங்கிள் பீஸ் டிசைனில் இருப்பதுடன், அவை காரின் அகலம் வரை நீண்டிருப்பது அழகு. பக்கவாட்டுப் பகுதி, கூபே போன்ற ரூஃப் லைனைக் கொண்டிருக்கிறது. பின்பக்கத்தில் ஸ்டைலான LED டெயில் லைட்ஸ் இருக்கிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, க்ளாஸான டிசைனை பஸாத் கொண்டிருந்தாலும், அது மாஸாக இல்லை. வெளிப்புறத்தைப்போலவே, உட்புறமும் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இருக்கிறது. கறுப்பு நிறம் வியாபித்திருக்கும் கேபினில், டேஷ்போர்டு மற்றும் கதவுகளில் இருக்கும் மர வேலைப்பாடுகள் ரசனையாகச் செய்யப்பட்டுள்ளன.

வெளிப்புறத்தில் இருந்த சிங்கிள் பீஸ் கிரில் மற்றும் ஹெட்லைட்டைப்போலவே, கேபினில் ஏ.சி வென்ட் சிங்கிள் பீஸ் தோற்றத்தில் இருக்கிறது. இதை சென்டர் கன்ஸோலின் நடுவே இருக்கும் கடிகாரம் பிரிக்கிறது. போலோவின் ஸ்டீயரிங் வீல், ஜெட்டா மற்றும் டிகுவான் கார்களில் இருக்கும் ஏ.சி கன்ட்ரோல்கள் - கதவுக் கைப்பிடிகள் - பவர் விண்டோ சுவிட்ச்கள் என ஃபோக்ஸ்வாகனின் விலை குறைவான கார்களில் இருக்கும் பல பாகங்கள் பஸாத்தில் இருக்கின்றன. இதனைச் சரிகட்டும்விதமாக, மர வேலைப்பாடுகள் - Nappa லெதர் உள்ளலங்காரம், தொடுவதற்கு மென்மையான பிளாஸ்டிக்ஸ் என பஸாத்தின் டேஷ்போர்டில் விலை உயர்ந்த பாகங்களைப் பொருத்தியுள்ளது ஃபோக்ஸ்வாகன்.

சொகுசு & சிறப்பம்சங்கள்

கேபின் வடிவமைப்பு ஸ்டைலாக இல்லாவிட்டாலும், அதன் தரத்தைப் போலவே சொகுசும் சூப்பராக இருக்கிறது. முன்பக்க இருக்கைகளில் பவர் அட்ஜஸ்ட் மற்றும் Heating வசதி இருக்கின்றன. இதுவே டிரைவர் இருக்கையில், போனஸாக சீட் மெமரி மற்றும் மஸாஜ் வசதி உண்டு. ஆனால், பஸாத்தைவிட விலை குறைந்த ஹூண்டாய் கார்களான எலான்ட்ரா மற்றும் வெர்னாவில் இருக்கும் Cooled சீட்கள், பஸாத்தில் இல்லாதது கொஞ்சம் ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆர்ம்ரெஸ்ட் உடனான பின்பக்க இருக்கைகள் போதுமான சப்போர்ட்டை அளிப்பதுடன், தேவையான லெக்ரூமும் இருக்கிறது. அதற்காக இதை சூப்பர்ப் காருடன் ஒப்பிடமுடியாது! பஸாத்தின் கூபே போன்ற ரூஃப்லைன், கேபினின் ஹெட்ரூமைப் பாதிக்கவில்லை என்பது ப்ளஸ். மூன்று பேருக்கான இடவசதி இருந்தாலும், நடுவில் அமர்பவருக்கு இருக்கை சிறிதாக இருப்பதுடன், Transmission Tunnel வேறு லெக்ரூமைக் குறைத்துவிடுகிறது. கேபினில் போதுமான ஸ்டோரேஜ் ஸ்பேஸ்கள் இருப்பதுடன், 586 லிட்டர் பூட் ஸ்பேஸும் இருக்கிறது.

பஸாத்தின் சாவியில் இருக்கும் ரிமோட் அல்லது பின்பக்க பம்பரின் கீழே காலை ஆட்டினாலே பூட்டைத் திறந்துவிட முடிகிறது. கூடுதலாக பூட் ஸ்பேஸ் தேவைப்பட்டால், பின்பக்க இருக்கையை 60:40 முறையில் மடித்துக்கொள்ளலாம். 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் பார்க்கிங், எலெக்ட்ரிக் பின்பக்க சன்ஷேடு, TPMS, சன்ரூஃப், 360 டிகிரி ரிவர்ஸ் கேமரா - ஆப்பிள் கார் ப்ளே - ஆண்ட்ராய்டு ஆட்டோ - USB - AUX - ப்ளூடூத் உடனான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் என காரில் ஏராளமான வசதிகள் இருக்கின்றன. பாதுகாப்பைப் பொறுத்தவரை 9 காற்றுப்பைகள், ABS, ESC, Drag Reduction ஆகியவை இருக்கின்றன. இதில் ஓட்டுநரின் காலுக்குக்கூட காற்றுப்பை உண்டு மக்களே! மேலும், கியர்களை திடீரெனக் குறைக்கும்போது, முன்பக்க வீல்கள் லாக் ஆகாமல் இருப்பதை, Drag Reduction கவனித்துக் கொள்கிறது.

இன்ஜின் பர்ஃபாமென்ஸ்

ஸ்கோடா சூப்பர்ப் காரில் இருக்கும் அதே 2.0 லிட்டர் TDi டீசல் இன்ஜின் மற்றும் 6 ஸ்பீடு DSG கியர்பாக்ஸ் கூட்டணியே, பஸாத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இது வெளிப்படுத்தும் 177bhp பவர் மற்றும் 35kgm டார்க்கில் எந்த வித்தியாசமும் இல்லை. 1,500 ஆர்பிஎம் முதல் இன்ஜின் ரெட்லைனான 5,400 ஆர்பிஎம் வரை பவர் கொப்புளிக்கிறது. கியர்பாக்ஸும் துல்லியமாகவும் விரைவாகவும் தனது பணியைச் செய்வதால், பவர் டெலிவரி அதிரடியாக இருக்கிறது. ஸ்டீயரிங் வீலில் பேடில் ஷிஃப்ட்டர்களும் இருப்பதால், தேவைப்பட்டால் நாமே கியர்களை மாற்றிக் கொள்ளலாம். ஆனால், இன்ஜின் சத்தம் காருக்குள்ளே கேட்பது நெருடலாக இருக்கிறது. மேலும் காருக்கு வெளியே நிற்கும்போது, இன்ஜின் சத்தம் இரைச்சலாக இருப்பது மைனஸ். ஒரு லிட்டர் டீசலுக்கு, பஸாத் 17.42 கி.மீ மைலேஜ் கொடுக்கும் (அராய் மைலேஜ்) என ஃபோக்ஸ்வாகன் சொல்கிறது. அதைச் சாதிக்கும் விதத்தில், காரில் இருக்கும் Think Blue Trainer வசதி இயங்குகிறது. தவிர, டிரைவிங் மோடுகள் இருப்பதும் ப்ளஸ்.

ஓட்டுதல் அனுபவம்

காரின் இன்ஜின், கியர்பாக்ஸ், ஸ்டீயரிங், டேம்பர் ஆகியவற்றை, டிரைவிங் மோடுகள் வாயிலாக செட் செய்துகொள்ள முடிகிறது. ஐரோப்பிய கார்களைப்போன்ற சஸ்பென்ஷன் செட்-அப்பைக் கொண்டிருக்கிறது பஸாத். எனவே, நம் ஊர் சாலைகளுக்கு சஸ்பென்ஷன் கொஞ்சம் இறுக்கமாக இருப்பதுபோலத் தெரிந்தாலும், இதுதான் அதிக வேகங்களில் செல்லும்போது பஸாத்தின் அசத்தலான நிலைத்தன்மைக்கு துணை நிற்கிறது. தேவைப்பட்டால் டேம்பர்களின் செட்டிங்கை அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம் என்பதால், இது ஒரு பிரச்னை இல்லை. ஆனால், ஸ்பீடு பிரேக்கர்களில் செல்லும்போதும், கரடுமுரடான சாலைகளில் செல்லும்போதும், சஸ்பென்ஷன் இயங்குவது காருக்குள்ளே கேட்கிறது. ஸ்டீயரிங் போதுமான எடையில் இருப்பதுடன், ஸ்போர்ட்ஸ் மோடில் இதன் ரெஸ்பான்ஸ் சூப்பராக இருக்கிறது. எனவே, திருப்பங்களில் காரைச் செலுத்துவது நல்ல அனுபவமாக இருக்கிறது.

‘எல்லா திறமைகளும் இருக்க வேண்டும். ஆனால், அது இருக்கிற இடமே தெரியக் கூடாது’ என்ற சொல்லுக்கு ஏற்ற காராக இருக்கிறது பஸாத். சத்தம் போடும் இன்ஜின் மற்றும் சஸ்பென்ஷன் ஆகியவற்றைத் தவிர்த்துப் பார்த்தால், சிறப்பம்சங்கள் - இடவசதி - ஓட்டுதல் அனுபவம் - பர்ஃபாமென்ஸ் என இந்த கார் ஆல்ரவுண்டராக அசத்துகிறது. எக்ஸிக்யூட்டிவ் செடான்களைப் பொறுத்தவரை, ஒருவரது உள்ளுணர்வைப் பொறுத்தே தமது கார்களைத் தேர்ந்தெடுப்பார்கள். அந்த வகையில் பார்த்தால், இதயத்துடிப்பை ஏற்றக்கூடிய டிசைன் பஸாத்தில் கிடையாது. ஆனால், ஆர்ப்பாட்டமில்லாத கம்பீரமும், கெத்தும் உங்களுக்குப் பிடிக்கும் என்றால், இந்த ஃபோக்ஸ்வாகன் செடான் உங்களுக்கு நிச்சயமாகப் பிடிக்கும்!