மாருதி நடத்தும் ராலிகளில் மிகப் பிரபலமானது, ‘ரைடு தி ஹிமாலயா’. உலகின் மிக உயரமான இடங்களில் நடக்கும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் ராலி போட்டிகளில் மிக முக்கியமானது இது. இந்த ஆண்டு, மாருதிக்கு 19-வது ராலி. அக்டோபர் 7 அன்று,ஹிமாச்சல் பிரதேசத்தின் மணாலி நகரில் கொடியசைத்துத் துவக்கிவைக்கப்பட்ட இந்த ராலி போட்டி, அக்டோபர் 14 அன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் லே நகரில் நிறைவடைந்தது.

மணாலி, காஸா, சார்ச்சு, கார்கில், லே ஆகிய இடங்களின் வழியாக மொத்தம் சுமார் 2,000 கி.மீ தூரம் நடந்த இந்த ராலி போட்டியில், எக்ஸ்ட்ரீம் கார், எக்ஸ்ட்ரீம் பைக், அட்வெஞ்சர் கார் என மூன்று பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. மொத்தம் 106 ராலி வீரர்கள் இதில் பங்கேற்றனர். இதில் பங்கேற்பவர்கள், கடைசி வரை கலந்துகொண்டு போட்டியை நிறைவு செய்வதே பெரும் சாதனையாகப் பார்க்கப்படுவதுதான் ஆச்சர்யமான விஷயம். போட்டி நடந்த ஏழு நாள்களும் பரபரப்புக்கும் த்ரில்லுக்கும் பஞ்சம் இல்லை.

இந்த ஆண்டு மாருதியின் போட்டியைக் காணும் அப்சர்வராக மோட்டார் விகடனுக்கு அழைப்பு விடுத்திருந்தது மாருதி. மிக உற்சாகமாகப் போட்டியைக் காணச் சென்ற நமக்கு, ‘மரண பயத்த காட்டிட்டாண்டா பரமா’ என்ற கதையாகிப்போனது.

அக்டோபர் 7 அன்று மாலை நடந்த துவக்கவிழா முடிந்ததும், பத்திரிகையாளர்களுக்கான விதிமுறைகள், போக்குவரத்து, பாதுகாப்பு அம்சங்களை விளக்கினர். அப்போதே லேசாக வயிற்றில் புளியைக் கரைத்தது. அன்று நள்ளிரவு இரண்டு மணிக்கு அனைவரும் புறப்பட வேண்டும். போட்டி காலை ஆறு மணிக்குத் துவங்குகிறது. எனவே, போட்டி நடக்கும் சாலையில் பாதுகாப்பான இடத்துக்கு நீங்கள் முன்னதாகச் செல்ல வேண்டும். தயாராக இருங்கள் என்று சொல்லிவிட்டனர். மணாலியில் பகலில் இதமான வெயில் இருந்தாலும், இரவில் மைனஸ் டிகிரி வரை சென்றது விடுதிக்குள் இருந்த எங்களுக்கு அது தெரியவில்லை. நள்ளிரவு இரண்டு மணிக்குத் தயாராகி விடுதியை விட்டு வெளியே வந்ததும்தான் குளிரின் வீரியம் உறைத்தது. மொத்தம் ஏழு கார்களில் பத்திரிகையாளர்கள் இருந்தனர். மணாலியில் இருந்து மலைத் தொடரின் மீது ஏறத் தொடங்கின எங்கள் கார்கள். நேரம் ஆகஆக தலைவலிக்கத் துவங்கியது. குளிர் சொல்ல முடியாத அளவுக்குத் தாக்க ஆரம்பிக்க... ரோத்தாங் பாஸ் என்ற இடத்தை நெருங்கியபோது, சிலர் வாந்தி எடுக்க ஆரம்பித்தனர்.

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 13,000 அடி உயரம் ஏறியதால், ஆக்ஸிஜன் குறைபாடு பலருக்குத் தலைவலியும் வாந்தியும் வரவைத்துவிட்டது. ஒவ்வொரு காரிலும் முதலுதவிப் பெட்டி தயார் நிலையில் இருந்தது. உடல் உபாதைகள் ஏற்படும் என்பது பற்றி ஏற்கெனவே எச்சரித்திருந்ததால், மாத்திரைகள் எடுத்துக்கொண்டு, போட்டி நடக்கும் இடம் நோக்கிச் சென்றோம். அதுவரை ஓரளவுக்கு நல்ல தார் சாலையில் சென்ற கார், சட்டென விலகிச் சாலையே இல்லாத சரளைக்கல் பாதையில் திரும்பியது. அந்த இருட்டிலும் வானம் தெளிவாகத் தெரிந்ததுடன் அந்த மலைச் சிகரங்களின் காட்சி துலக்கமாகத் தெரிந்தன. எல்லா சாலைகளும் ஆற்றின் கரையோரமாகவேதான் அமைக்கப்பட்டிருக்கின்றன.

சில இடங்களில் ஆற்றின் படுகையிலும், பல சமயம் அதலபாதாளத்தில் செல்லும் ஆற்றங்கரையிலும்தான் முழுப்பயணமும் அமைந்தது. ஆற்றைக் காண முற்பட்டாலே தலைச்சுற்றும் ஆழத்தில் பாய்கிறது ஆறு. அந்தப் பாதையில் எதிரே வாகனம் ஒதுங்கக்கூட இடம் இல்லை. அந்தப் பாதையை அறுத்துக்கொண்டு சிற்றாறுகள் ஆங்காங்கே இருக்கும் கொஞ்சநஞ்ச மண் சாலையை அரித்துக்கொண்டிருந்தன. சில இடங்களில் வெறும் பாறைகளாக இருந்ததால், காரில் இருந்தவர்கள் அனைவரும் இறங்கி காரைத் தள்ளிவிட்டுக் கடக்கும் சூழல். காருக்கு வெளியே மைனஸ் டிகிரி குளிரின் வாதையை முதன்முதலாக உணர்ந்தோம்.

குளிரில் ரத்தம் உறைந்துவிடாமலிருக்க குடிக்கும் நீரில் அதற்கெனச் சில மாத்திரைகளைக் கரைத்துவைத்துக் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு வழியாக காலை ஆறு மணிக்குக் குறிப்பிட்ட இலக்கான சத்ரு என்ற இடத்தை அடைந்துவிட்டோம். அன்று மணாலியில் தொடங்கும் ராலி போட்டி கிராம்போ, லோஸர் தாண்டி காஸா என்ற இடத்தில் நிறைவடையும். இதன் தூரம் சுமார் 200 கி.மீ. இந்த தூரத்தைக் கடப்பது மிகச் சவாலான காரியம். மனிதர்களே ஆக்ஸிஜன் குறைவால் திண்டாடும்போது, காரின் இன்ஜின் இயங்கவும் போதுமான ஆக்ஸிஜன் தேவையல்லவா? நம்முடைய செயல்பாட்டைப்போல் காரின் செயல்பாடும் மந்தமாகத்தான் இருக்கும். எனவே, அதையெல்லாம் புரிந்துகொண்டு, சாலையே இல்லாத படு பயங்கர ஆபத்தான மண் சாலையில் வாகனத்தை ஓட்ட வேண்டும். வாகனத்தின் ஒரு பாகமாக மாறினால்தான் அது சாத்தியம். அதற்கான மன உறுதியும், உடல் பலமும் இருந்தால்தான் இந்தப் போட்டியில் பங்கேற்கவே முடியும்.

ராலி தொடங்குவதற்கு முன்பு, அந்தச் சாலையில் வேறு வாகனங்கள் இல்லை என்பதை ஹெலிகாப்டர் ஒன்று பறந்துசென்று உறுதி செய்ய... முதலில் கார்கள் சீறி வரத் தொடங்கின. பல கி.மீ தூரத்துக்கு அப்பால் வரும் காரின் உறுமல் ஒலி மலை முழுவதும் எதிரொலித்து சிலிர்க்கவைத்தது.

ஒவ்வொரு ராலி வீரரின் கனவும் ஹிமாலயா ராலியில் கலந்துகொண்டு, போட்டியின் கடைசிவரை பங்கேற்று நிறைவு செய்வதுதான் இலக்காக இருக்கும். ஏனென்றால், உதவிக்கு ஆளற்ற அந்தச் சாலைகளில் வாகனத்துக்கோ, ராலி வீரருக்கோ ஏதாவது உதவி தேவை என்றால், பலமணி நேரங்கள் கடுங்குளிரில் காத்திருக்கத்தான் வேண்டும். ராலி விதிகளின்படி, குறிப்பிட்ட நேரத்துக்குள் இலக்கை அடையாவிட்டால், போட்டியில் இருந்து விலக நேரிடும். எனவே, ஹிமாலயா ராலிக்கு, ராலி வீரர்கள் ஆண்டு முழுவதும் பயிற்சியில் இருந்தால்தான் இங்கே தாக்குப் பிடிக்க முடியும். இந்த ராலிக்கு வெளிநாடுகளில் இருந்தும், ராலி வீரர்கள் பங்கேற்பார்கள் என்பதால், உலக ராலி வீரர்களின் பெருங்கனவாக இருக்கிறது இந்த ஹிமாலயா ராலி. டெரர் ராலியின் எக்ஸ்ட்ரீம் பைக் பிரிவில், தில்லு பார்ட்டிகளான இரண்டு பெண்கள் பங்கேற்றனர். அவர்கள் இருவரும் மோட்டார் விகடன் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான சாரா மற்றும் ஐஸ்வர்யா.

அடுத்தநாள் அங்கிருந்து வந்தவழியே பாதி தூரம் திரும்பி லே நோக்கிச் செல்லும் சாலை வழி பாங்க் என்ற இடத்துக்குச் செல்ல வேண்டும். முதல் நாள் இதற்கு நடுவே இருக்கும் சின்னக் கிராமமான ஜிஸ்பா எனும் ஊரில் தங்கவைக்கப்பட்டோம். பாங்க் என்ற இடம். இது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 15,000 அடி உயரத்தில் அமைந்த இடம். இந்த இடத்தில் நம்மைப் போன்றவர்கள், விண்வெளி வீரர்கள்போல நடந்தால்தான் முடியும். எதையும் ஸ்லோமோஷனில்தான் செய்ய வேண்டும். அவசரப்பட்டால் ஆக்ஸிஜன் கிடைக்காது. அடுத்தநாள் லே சென்று தங்கிவிட்டு, அதற்கு அடுத்த நாள் கார்கில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு இடமும் மிகச் சிக்கலான, சவாலான இடமாக இருந்தது.

ஐந்து நாள்கள் நடந்த போட்டியிலும், எக்ஸ்ட்ரீம் கார் பிரிவில் முன்னணியில் இருந்தது, மணாலி மைந்தனான சுரேஷ் ராணாவின் கிராண்ட் விட்டாராதான். இதுவரை 11 முறை ரைடு ஹிமாலயா சாம்பியன் பட்டம் பெற்றவர். இவருடைய கோ-டிரைவர் பெங்களூரைச் சேர்ந்த பிவிஎஸ் மூர்த்தி. இதில் இரண்டாம் இடத்தை சஞ்சய் கரன் ஜோடியும், மூன்றாம் இடத்தை சஞ்சய் அகர்வால் - ஸ்மிதா ஜோடியும் பெற்றன. பைக் பிரிவில் அப்துல் வாஹித் முதல் இடத்தையும், நடராஜ் இரண்டாம் இடத்தையும், ராஜேந்திரா மூன்றாம் இடத்தையும் கைப்பற்றினர். இவர்கள் மூவருமே டிவிஎஸ் அணியைச் சேர்ந்தவர்கள். இந்த ராலியில் நமது இந்திய ராணுவத்தின் பங்கு மிக முக்கியமானது. ராணுவத்தின் சார்பாக ஓர் அணியும் கலந்துகொண்டு சில பிரிவுகளில் பரிசுகள் பெற்றது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் ரைடு ஹிமாலயா ரசிக்க வேண்டிய ராலி அல்ல... சாதனையின் உச்சம் என்றே சொல்லலாம்.

ஹிமாலயாவின் சம்மர் காலத்திலேயே நம்மால் குளிரைத் தாக்குப்பிடிக்க முடியாதபோது, அந்தக் கடுங்குளிரில் எல்லையைக் காக்கும் ராணுவ வீரர்களை எல்லைச் சாமிகள் என்றுதான் சொல்ல வேண்டும்!