சில திரைப்படங்களுக்கு டீஸர், விளம்பரங்கள் என்று ப்ரொமோஷன் தெறிக்கவிடுவார்கள். ஆனால், படம் பப்படம் ஆகிவிடும். ஹைப்பை ஏற்றிவிட்டு ஏமாற்றாத படங்கள் சிலதான். அப்படிப்பட்ட ஒரு கார், ஃபோர்டு எக்கோஸ்போர்ட். ரிலீஸாவதற்கு முன்பே ஸ்பை படங்கள், ஸ்கூப் நியூஸ், கவர் ஸ்டோரி என்று எக்கோஸ்போர்ட் ஆரம்பத்தில் செம ட்ரெண்டிங்கில் இருந்தது. ட்ரெண்டிங்கைத் தக்கவைத்து, எக்கோஸ்போர்ட்டை இன்றும் விற்பனையில் சக்கைப்போடு போட வைத்ததில் ஃபோர்டு நிறுவனத்தைப் பாராட்டியே ஆக வேண்டும்.

காம்பேக்ட் எஸ்யூவி என்றாலே, அது எக்கோஸ்போர்ட்தான். பவர்ஃபுல் 1.5 டீசல், 1.5 லி பெட்ரோல், மிடில் க்ளாஸ் மக்களுக்கு 1.0 எக்கோபூஸ்ட் பெட்ரோல் என்று ஃபோர்டு தூங்கவே இல்லை. பிரெஸ்ஸா, நெக்ஸான் என்று இப்போது ரிங்கில் செம டஃப் பைட் போட்டுக்கொண்டிருக்கும் எக்கோஸ்போர்ட்டின் ஃபேஸ்லிஃப்ட் வந்துவிட்டது. முதலில் பெட்ரோலை வைத்து விளையாடி இருக்கிறது ஃபோர்டு. மறைமலை நகரில் ஃபோர்டு தொழிற்சாலைக்கு அருகே எக்கோஸ்போர்ட் காம்பேக்ட் எஸ்யூவியில் ஒரு காம்பேக்ட் டிரைவ் அடித்துப் பார்த்தேன்.

டிசைன்

பானெட் அதேதான். ஆனால், கொஞ்சம் பல்க்கான க்ரோம் ஃபினிஷ்டு கிரில் டிசைன் செமத்தியாக இருக்கிறது. லாங் ஷாட்டில் பார்க்கும்போது, மூக்கு புடைப்பாக இருப்பதுபோல் தெரிந்தது. ஹெட்லைட்டும் பெரிது. புரொஜெக்டர் லைட் பற்றி நாம் ஏற்கெனவே குறைபட்டிருந்தது ஃபோர்டின் காதில் விழுந்துவிட்டதற்கு மகிழ்ச்சி. இதில் புரொஜெக்டர் ஹெட்லைட், பட்டையைக் கிளப்புகிறது. LED DRL-க்கும் லைக். அந்த முக்கோண வடிவப் பனிவிளக்கு செட்-அப் நிறைய பேருக்குப் பிடிக்காது. ஆனால், இதை நான் ரொம்ப ரசித்தேன். ஸ்போர்ட்டியான அலாய் டிசைன், எல்லோருக்கும் பிடிக்கும். வழக்கம்போல், பின்பக்கம் ஸ்டெஃப்னி டயருக்கான இடம். மொத்தத்தில், பழைய எம்ஜிஆர் படங்களைப் போல் சின்னதாக மரு வைத்து மாறுவேஷமும் போடவில்லை; மொத்தமாக வடிவமும் மாறவில்லை.

உள்ளே

‘எக்கோஸ்போர்ட்டா இது’ என்று டேஷ்போர்டைப் பார்த்ததும் வியந்து விட்டேன். அந்த 8 இன்ச் டச் ஸ்கிரீனைவிட்டு என் பார்வை அகலவில்லை. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், பிரீமியம் லுக்கில் அசத்தியது. ஸ்டீயரிங்கில், ஆடியோ கன்ட்ரோல்களும் பிரீமியம் லுக். ஏர்கான்களும் மாறிவிட்டன.

சின்னதான, மோனோக்ரோம், டாட் மேட்ரிக்ஸ், டச் ஸ்கிரீன் இல்லாத 2013-ல் வந்த எக்கோஸ்போர்ட் மனதில் வந்து போனது. மற்றபடி வாய்ஸ் கமாண்ட் சிஸ்டம், எமர்ஜென்ஸி அசிஸ்ட் சிஸ்டம் போன்ற அத்தியாவசிய அம்சங்கள் புதுசிலும் உண்டு. எண்டேவரில் முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்ட ‘SYNC 3’ இன்டர்ஃபேஸ், புது எக்கோஸ்போர்ட்டில் இருப்பதே இதன் ரிச்னஸைச் சொல்கிறது. ஹூண்டாய்கூட தவறவிட்ட இதை ‘கிச்’செனப் பிடித்துக் கொண்டுவிட்டது ஃபோர்டு. ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே போன்றவை உண்டு. ஆனால், சாட்டிலைட் நேவிகேஷன் இல்லையே?

ஏழு கலர்களில் ஆம்பியன்ட் லைட்டிங்கைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இன்ஸ்ட்ரூமென்ட் டயல்களும் மொத்தமாக மாறிவிட்டது. டயல்களுக்கு, கசகசவென க்ரோம் பூச்சுகள் இல்லாததுகூட அழகுதான். Multi Information Display மட்டும் சின்னதாக சதுர வடிவில் இருக்கிறது. அட! டயர் பிரஷர் மானிட்டர்கூட இருக்கிறதே! இதற்கெல்லாம் இண்டிகேட்டர் ஸ்டாக்கைத் தடவவிடாமல், தனித்தனி பட்டன்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ஆர்ம் ரெஸ்ட், பாட்டில் ஹோல்டர்கள், பெரிய டோர் பின்கள்... பிராக்டிகலாக மட்டுமில்லை; எல்லாமே தரம். ஃபோர்டு இதை எல்லா கார்களிலும் நிரந்தரமாக்கினால் சூப்பர்!

இருக்கைகள்

லாங் பானெட் என்பதால், (நீளம் 3,998 மி.மீ) முன்பக்க சீட்களைப் பொறுத்தவரை செம லெக்ரூம். செமி ஸ்லீப்பர்போல் ஹாயாக வரலாம். பிரெஸ்ஸா, நெக்ஸானெல்லாம் நோட் பண்ணுங்கப்பா. பானெட் கொஞ்சம் உயர்ந்திருப்பதால், எங்கே முடிகிறது என்று தெரியவில்லை. டிரைவர் அலெர்ட்டாக இருக்க வேண்டும். முன்பக்க சீட், இப்போது அகலமாகி இருக்கிறது. டிரைவர் சீட்டில் உயரத்துக்கான அட்ஜஸ்ட் மட்டும்தான் உண்டு. லம்பர் சப்போர்ட் காலி.

பின்பக்கம் உட்கார்ந்தால், அதுவும் சூப்பர் கம்ஃபர்ட். சீட் உயரத்தையும் ஏற்றி, காரின் உயரத்தை லெவல் பண்ணிவிட்டது ஃபோர்டு. இது நமக்கு நல்லதுதான். வெளியே என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்த்துக் கொண்டே வரலாம். தொடைகளுக்கான சப்போர்ட்டும் அருமை. குஷனிங் வேலைப்பாடுகளில் இன்னும் கொஞ்சம் கை வைத்துள்ளதாகச் சொல்கிறது ஃபோர்டு. ஆம்! சாஃப்ட்டாகத்தான் இருக்கிறது. பழசில், கொஞ்சம் தட்டையாகவும் இறுக்கமாகவும் இருந்தது.

ஃபோர்டுமீது முதலில் கோபம் வந்துவிட்டது. சீட்களை மடிப்பதற்கான ஸ்ட்ராப்களைக் காலி செய்துவிட்டதோ என்று வருத்தப்பட்டேன். அப்புறமாகத்தான் தெரிந்தது. அட! இதற்கும் பட்டன் வசதி கொண்டு வந்ததற்காக ஃபோர்டுக்கு லவ் எமோடிகான். உங்கள் தோள்களின் பக்கத்தில் இரண்டு பட்டன்கள் இருக்கும். அதை வைத்து சீட்களை மடித்து, பூட் ஸ்பேஸை அதிகரித்துக்கொள்ளலாம். டாப் வேரியன்ட்டான டைட்டானியம் + மாடலில் சீட்களை முன் பக்கமாகவும் மடித்து, ஃப்ளாட்டாக்கி படுத்தே விடலாம்.

இன்ஜின்

இந்த ஃபேஸ்லிஃப்ட் ரிலீஸுக்குக் காரணமே இதன் புதிய பெட்ரோல் இன்ஜின்தான். இந்த 1.5 பெட்ரோல் இன்ஜினுக்கு ‘டிராகன் சீரிஸ்’ என்று பெயர் சூட்டியிருக்கிறது ஃபோர்டு.

1.0 எக்கோபூஸ்ட் பெட்ரோலைவிட 2 bhpதான் குறைவு. 123 bhp. டார்க்கும் 2.0 kgm குறைந்துள்ளது. 15 kgm. சி.சி-யை ஒப்பிடும்போது இது குறைவுதானே என்று தோன்றியது. டைரக்ட் இன்ஜெக்ஷன் இல்லை; டர்போ சார்ஜர் வேறு இல்லை. ரொம்ப முக்கியம் , 3 சிலிண்டர் இன்ஜின்தான். ‘என்னத்த’ என்ற சந்தேகத்துடன்தான் ஆக்ஸிலரேட்டரில் கால் வைத்தேன்.

முதல் பிக்-அப்பிலேயே இம்ப்ரஸ் செய்தது டிராகன். லோ ரெவ்களில் இதன் இழுவைத் திறன் பிரமாதமாக இருந்தது. சாதாரண பெட்ரோல் இன்ஜின்களை மிட் ரேஞ்சில் கொண்டுவந்து, டாப் எண்டுக்கு இழுத்து வருவதற்குள் பெரும்பாடு பட வேண்டும். இந்த டிராகன் மோட்டாரில் எல்லாமே சீராக இருந்தது. அனைத்து ஆர்பிஎம்-களிலும் அத்தனை நேர்த்தி. ஒரு சின்ன டெஸ்ட் வைத்தேன். வேகமாகப் போய்க் கொண்டிருந்தபோது, திடீரென ஆர்பிஎம் முள்ளைக் கீழறக்கிவிட்டு, (கிட்டத்தட்ட ஐடில்) மறுபடியும் ஆக்ஸிலரேட்டரை மிதித்தேன். எந்தத் தயக்கமும் இல்லாமல், பட்டெனச் சீறியது டிராகன்.

அதை விடுங்கள்; 3 சிலிண்டர் என்றால், அதிர்வுகள் இலவசமாகக் கிடைக்கும்தானே... டிராகனில், சுத்தமாக சத்தமே இல்லை. அந்த அளவு இன்ஜின் ரிஃபைன்மென்ட் பிரமாதமாக இருந்தது. நடப்பில் ஓடும் 1.5 சிக்மா பெட்ரோல் இன்ஜினில் இந்த அளவு ரிஃபைன்மென்ட்டை உணர முடியாது. இதற்கு நிறைய காரணங்களை அடுக்கலாம். பேலன்ஸர் ஷாஃப்ட்களை கவனமாக பேலன்ஸ் செய்திருக்கிறார்கள். ஃப்ளைவீல் பேலன்ஸிங்கிலும் பர்ஃபெக்ஷனைக் கடைப்பிடித்திருக்க வேண்டும். இன்ஜின் மவுன்ட்களை ஃபிட் செய்தவிதத்தில் ட்ரிக் இருக்கிறது. டிரைவ் பெல்ட், ஹைட்ராலிக் லேஷ் அட்ஜஸ்ட்டர்கள்... இப்படி இன்ஜின் விஷயத்தில், ஃபோர்டு நிறைய ஓவர்டைம் பார்த்திருப்பது நிரூபணம்.

வைப்ரேஷன் ஃப்ரீ மட்டுமில்லை; வேகமான இன்ஜினாகவும் இருக்கிறது புதிய 1.5 டிராகன். 6,500rpm ரெட்லைன் வரை ஆக்ஸிலரேட்டரை அழுத்திப் பார்த்தேன். அப்பொழுதும்கூட, எத்தனை அடி வாங்கினாலும் சத்தம் போடாத ‘பாட்ஷா’ ரஜினிபோல் அமைதியாகவே பறந்தது.

ஆட்டோமேட்டிக், மேனுவல் என இரண்டு கியர் ஆப்ஷன்களிலும் வருகிறது எக்கோஸ்போர்ட் டிராகன். ஆட்டோமேட்டிக்கில் பேடில் ஷிஃப்டர் இருந்தது.

முதலில் மேனுவலை எடுத்தேன். இதன் IB5 கியர்பாக்ஸிலும் ஏதோ வேலை பார்த்திருக்கிறது ஃபோர்டு. இந்த கியர்பாக்ஸ்தான், ஐகான் காரில் இருந்து ஃபோர்டின் ஃபேவரைட். மேனுவலில் செமயான டால் கியரிங் செட்-அப். உதாரணத்துக்கு, 2-வது கியரிலேயே 90 கி.மீ வேகம் வரை விரட்ட முடிந்தது. அடடா! ஓவர்டேக்கிங்கில் பதற்றத்தைக் குறைக்க இந்த கியரிங்தானே தேவை. கிளட்ச்சும் லைட்டாகவும் நைஸாகவும் இருந்தது. இதனால் சிட்டிக்குள்ளும் ஜாலியாக இருந்தது. இந்த டால் கியரிங் செட்-அப், மைலேஜுக்காக இருக்கலாம். நடப்பு 1.5 சிக்மா இன்ஜினைவிட, ஏழு சதவிகிதம் மைலேஜ் அதிகமாக இருக்கும் என்கிறது ஃபோர்டு.

ஃபன் டு டிரைவ்

ஒரு காரில் ஃபன் டு டிரைவ் இல்லையென்றால், அது ஃபோர்டு இல்லை. இன்ஜின் தவிர்த்து மற்ற விஷயங்களும் இதில் அடக்கம். முதலில், இதன் எலெக்ட்ரானிக் பவர் ஸ்டீயரிங்கைப் பிடித்து ஓட்டவே ஆசையாக இருக்கிறது. பார்க்கிங்கின்போது, செம லைட் வெயிட்டாகவும்; ஹை ஸ்பீடில் கிச்சென டைட்டாகவும் ஃபீல் ஆனது.

வாடிக்கையாளர்களின் கோரிக்கைப்படி சஸ்பென்ஷனையும் கொஞ்சம் சாஃப்ட் செய்திருக்கிறார்கள். ரைடு அண்டு ஹேண்ட்லிங்கில் மொத்தமாக மாற்றம் தெரிகிறது எக்கோஸ்போர்ட்டில். 200 மி.மீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட உயரமான காரில் பாடி ரோல் எப்படி இருக்கும் என்று உங்களுக்கே தெரியும். ஆனால், சாஃப்ட் சஸ்பென்ஷனுக்கு மாறியும், இந்த உயரமான காரில் பாடி ரோல் அவ்வளவாகத் தெரியவில்லை என்பது ஸ்பெஷல். சொல்லப் போனால், திருப்பங்களில் - இதன் 17 இன்ச் டயர்களில் நல்ல கிரிப் கிடைத்தது. மேடு பள்ளங்களெல்லாம்... ஹை ஜாலி!

எல்லாவற்றிலும் வேலை பார்த்து ஃபோர்டு மெனக் கெட்டிருக்கிறது. அதனால் ஃபேஸ்லிஃப்ட் மாதிரியே தெரியவில்லை. புது கார்போல்தான் இருக்கிறது. டச் ஸ்கிரீன், வாய்ஸ் கமாண்ட் என்று எக்யூப்மென்ட் லிஸ்ட்டில் அடுத்த லெவலுக்குத் தாவியிருக்கிறது எக்கோஸ்போர்ட். ரொம்ப முக்கியம் . 3 சிலிண்டராக இருந்தாலும், அந்த 1.5 டிராகன் இன்ஜினின் மென்மை ப்ளஸ் சீற்றம். ஜாலி டிரைவிங்கை விரும்பும் எல்லோருக்கும் இது பிடிக்கும். பிரெஸ்ஸா, க்ரெட்டா, நெக்ஸான், டஸ்ட்டர், ஏன் - வெர்னா, சிட்டி போன்ற செடான்கள்கூட நிமிர்ந்து நிற்க வேண்டிய நேரம் இது.

ஆல்ரவுண்டராகக் கலக்கி அடிக்க வாய்ப்பு இருக்கிறது எக்கோஸ்போர்ட் டிராகன்.