`Jegan National Champion’ - ஆறு ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் சாம்பியன் ஆனபோது, ரேஸர் ஜெகன் நம்பரை இப்படித்தான் என் போன் கான்டாக்ட்ஸில் பதிவேற்றியிருந்தேன். இப்போது வரை அந்த சாம்பியன் பட்டத்தை யாருக்கும் விட்டுத் தரவில்லை ஜெகன். தொடர்ந்து ஆறாவது முறையாக, இந்த ஆண்டும் சாம்பியன் ஆகியிருக்கிறார்.

‘அடுத்த நேஷனல் சாம்பியன்ஷிப் ட்ராஃபியை ஏந்தியபடி போஸ் கொடுக்கப் போகிறவர் யாரோ?’ என்று சென்ற இதழில் முடிந்த ரேஸ் கட்டுரையின் தொடர்ச்சி யாகக்கூட இதை எடுத்துக் கொள்ளலாம். டி.வி.எஸ். ரேஸிங் அணிக்காக பைக் ஓட்டும் ஜெகன்தான் டி.வி.எஸ்-ஸின் முக்கியமான நட்சத்திரம். 4-வது ரவுண்டில் கோவையில் நடந்த ரேஸில், பைக் க்ராஷ் ஆகி வெளியே போனபோது... ஜெகன்கூட லேசாக ஜெர்க் ஆகியிருக்கக்கூடும். ஆனால், டி.வி.எஸ். அணி, ஜெகன்மீது வைத்திருந்த நம்பிக்கையைக் கைவிடவில்லை.

சராசரிக் குடும்பப் பின்னணி கொண்ட ஜெகன், புரொஃபஷனல் ரேஸர்களுடன் மோதி ஜெயித்திருக்கிறார். அவருடன் ஒரு ஸ்பீடு பேட்டி.

‘‘எக்ஸைட்டிங்கா இருக்கா?’’

‘‘நிச்சயமா. ரேஸ் ஆரம்பித்த நாள்களில் இருந்து வெறித்தனமா பிராக்டீஸ் பண்ணினேன். நிச்சயம் வெற்றிக்கோப்பையை ஏந்துவேன்னு எனக்குத் தெரியும். என்னை ஊக்கப்படுத்திய டி.வி.எஸ். டீமுக்கு தேங்க்ஸ்.’’

‘‘கோவை ட்ராக்கில் என்னாச்சு?’’

‘‘என் பைக்கில் ஏதோ கோளாறு. அதுவும் இல்லாமல், அன்னைக்கு செம மழை. வெட் ரேஸ் எனக்குப் பழக்கம்தான். இருந்தாலும், என் பின்னால் வந்தவர் லேசா இடிச்சுட்டார். செயின் ஸ்ப்ராக்கெட்டில் பிரச்னைனு நினைக்கிறேன். கன்ட்ரோல் பண்ண முடியலை. அதான் அவுட் ஆஃப் தி ட்ராக் ஆகிட்டேன்.’’

‘‘அந்த நேரத்தில் நம்பிக்கை போயிடுச்சா?’’

‘‘சத்தியமா இல்லை. இன்னும் ரெண்டு ரவுண்ட் இருக்கே. அது எனக்கு ஒரு நல்ல அனுபவமா மாறிடுச்சு.’’

‘‘சென்னை ட்ராக்கில் உங்களை அடிச்சுக்க ஆளே இல்லைன்னு பேச்சு வருதே?’’

‘‘இதுக்கு நான் எப்படி பதில் சொல்வேன். ஆனா, இந்தியாவில் நான் நிறைய ட்ராக்குகள்ல ரேஸ் ஓட்டியிருக்கேன். சென்னைதான் என்னோட லவ்லி ட்ராக். அதோட ஒவ்வொரு கார்னரும் என் செல்லப்பிள்ளைங்க மாதிரி.’’

‘‘ஹோண்டா Ten10 அகாடமியின் ராஜீவ் சேது, பாயின்ட்களில் முன்னணியில் இருந்தாரே... உங்களுக்கு அவர்தான் போட்டியா?’’

‘‘நிச்சயம் இல்லை. அவர் திறமையான ரேஸர். சந்தேகமே இல்லை. ஆனா, எனக்குப் போட்டி, என் டீமைச் சேர்ந்த அஹமதுதான்!’’

‘‘பெண்கள் போட்டியைக் கவனிக்கிறீங்களா?’’

‘‘ம்ம்... வியப்பா இருக்கு. ஒண்ணு கவனிச்சீங்களா... அதிலும் நாங்கதான் முன்னணியில் இருக்கோம். டி.வி.எஸ் ரேஸிங் டீம் ஐஸ்வர்யாவின் டிரைவிங் ஸ்டைல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். மற்றபடி ரெஹானா, ஸ்ருதி எல்லாருமே நல்ல ரேஸர்ஸ்.’’

‘‘பிடிச்ச ரேஸர்?’’

‘‘சந்தேகமே இல்லை. தலைவன் ராஸிதான்!’’

‘‘அடுத்த டார்கெட்?’’

‘‘தொடர்ந்து 10 தடவை சாம்பியன்ஷிப் அடிக்கணும். அப்படியே ஏசியா... இன்டர்நேஷனல்னு தமிழன் முத்திரையைப் பதிக்கணும்!’’

ட்ராக்கை ஆளப்போறான் தமிழன். வாழ்த்துகள்!