இந்தியாவில் இருக்கும் 150 - 160சி.சி பைக் செக்மென்ட்டில், தவிர்க்க முடியாத பைக் ஜிக்ஸர். சிறப்பான ஓட்டுதல் அனுபவத்துக்குப் பெயர் பெற்ற ஜிக்ஸர் பைக்கின் ஃபுல் பேரிங் மாடலான ஜிக்ஸர் SF பைக்கில், தற்போது சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதியைச் சேர்த்திருக்கிறது சுஸூகி. 150 - 160சி.சி பைக் செக்மென்ட்டில், ஏபிஎஸ் வசதியைக்கொண்டிருக்கும் ஒரே பைக்கான ஜிக்ஸர் SF, எப்படி இருக்கிறது?

டிசைன்

முன்பக்க மட்கார்டில் சின்னதாக ஏபிஎஸ் ஸ்டிக்கர் ஒன்றும், முன்பக்க டிஸ்க் பிரேக் காலிப்பரில் வீல் ஸ்பீடு சென்ஸார் ஒன்றும் புதிதாக இடம்பெற்றுள்ளன. இங்கே நாம் டெஸ்ட் செய்தது ஃப்யூல் இன்ஜெக்ஷன் மாடல் என்பதால், கார்புரேட்டர் மாடலில் இருக்கும் Fuel Pet Cock இங்கே இல்லை. ஆனால், அந்த ஏரியாவை கவர் செய்யாமல், வெற்றிடமாக இருப்பது நெருடல்.

இன்ஜின்/ பர்ஃபாமென்ஸ்

ஜிக்ஸர் SF ஏபிஎஸ் பைக்கில் இருப்பது, 14.8bhp பவர் மற்றும் 1.4kgm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய சிங்கிள் சிலிண்டர் 154.9சி.சி இன்ஜின். முன்பைவிட ஒரு கிலோ அதிக எடையைச் சுமந்தாலும், பர்ஃபாமென்ஸ் விஷயத்தில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கமான ஜிக்ஸர் மற்றும் ஜிக்ஸர் SF பைக்கைவிடக் கொஞ்சம் அதிக மைலேஜைத் தருகிறது ஜிக்ஸர் SF-Fi ஏபிஎஸ். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு நகரத்தில் 47.5 கி.மீ-யும், நெடுஞ்சாலைகளில் 62..1 கி.மீ மைலேஜைத் தந்தது.

ஓட்டுதல் அனுபவம்

ஏபிஎஸ்ஸைத் தவிர மெக்கானிக்கலாக எந்த மாற்றமும் இல்லாததால், ஜிக்ஸர் SF ஏபிஎஸ் பைக்கின் ஓட்டுதல் அனுபவத்தில் எந்த மாற்றமும் தெரியவில்லை. சிறப்பான கையாளுமைக்குக் கைகொடுக்கும் இறுக்கமான சஸ்பென்ஷன் செட்-அப், மோசமான சாலைகளில் செல்லும்போது அவ்வளவு அசெளகரியத்தைத் தரவில்லை. 80 கி.மீ வேகத்தில் காய்ந்த நிலப்பரப்பில் சென்றுகொண்டிருக்கும்போது, திடீரென பிரேக் பிடித்தால், கிட்டத்தட்ட நான்கு விநாடிகளில் பைக்கை நிறுத்திவிட முடிகிறது. ஏபிஎஸ் இல்லாத மாடலும் இதே பிரேக்கிங் பர்ஃபாமென்ஸைத்தான் அளித்தது. ஆனால், ஈரமான மற்றும் மணல் நிறைந்த நிலப்பரப்பில் பிரேக்கைப் பயன்படுத்தும்போது, சிங்கிள் சேனல் ஏபிஎஸ்ஸின் மகத்துவத்தை

நம்மால் உணர முடிந்தது. ஆனால், பிரேக் லீவரில் ரைடருக்குக் கிடைக்கக்கூடிய ரெஸ்பான்ஸ், கொஞ்சம் குறைந்ததுபோலவே தெரிகிறது. ஏபிஎஸ் பொருத்தப்பட்டிருக்கும் அனைத்து பைக்கிலும் சொல்லப்படும் பொதுவான கருத்துதான் இது.

ஏற்கெனவே சிறந்த தயாரிப்பாக இருந்த ஜிக்ஸர் SF பைக்கில், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதியைப் பொருத்தியதன் வாயிலாக, இந்த பைக்கிற்கு மேலும் சிறப்பு சேர்த்திருக்கிறது சுஸூகி. ஏபிஎஸ் இல்லாத மாடலுடன் ஒப்பிடும்போது ஜிக்ஸர் SF-Fi ஏபிஎஸ் பைக்கின் விலை, 7,000 ரூபாய் அதிகமாக இருக்கிறது. வழக்கமான மாடல் நல்ல சாய்ஸாகவே இருந்தாலும், ஒரு பைக் ரைடரின் கூடுதல் பாதுகாப்புக்காக, இந்தத் தொகையைத் தரலாம்!