ஹாய், என் பெயர் அம்ரிஷ். டிப்ளமோ படிக்கிறேன். இதுக்கு முன்னாடி ஸ்கூட்டி ஸ்ட்ரீக் வெச்சிருந்தேன். அதில் கொஞ்சம் ஸ்டார்ட்டிங் ட்ரபுள். இதுபோக, ஸ்கூட்டரும் பழசாயிடுச்சு. எங்கிட்ட பைக்கும் இருக்கு. பைக்கை மாற்றும் ஐடியா இல்லை. வேற எந்த ஸ்கூட்டர் வாங்கலாம்னு தேடினேன். யமஹா ரே ZR அறிமுகம் கிடைச்சுது. பார்த்தவுடனே காதலில் விழுந்துட்டேன். அம்மா-அப்பாகிட்ட பெரிய போராட்டத்துக்குப் பிறகுதான் ரே ZR ஸ்கூட்டர் வாங்கினேன்.

ஏன் ரே ZR?

எங்க அப்பாவும் அம்மாவும் ஆக்டிவா 4G ஸ்கூட்டரைத்தான் ரெஃபர் பண்ணினாங்க. ‘இதுதாண்டா குடும்பத்துக்கு ஏத்த மாதிரி இருக்கு’னு என்னை காம்ப்ரமைஸ் பண்ணப் பார்த்தாங்க. ஆனா, எனக்கோ ரே ZR ஸ்கூட்டரோட ஸ்டைல் பிடிச்சிருந்தது. ‘ஆக்டிவாதான் எல்லோருமே யூஸ் பண்றாங்களேப்பா... கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமே’னு வீட்ல கெஞ்சிக் கூத்தாடின பிறகுதான், அப்பா இதை வாங்கச் சம்மதிச்சார்.

‘இது என்னமோ வயசுப் பசங்க ஸ்கூட்டர் மாதிரி இருக்கேடா. இதை எப்படி நான் ஓட்டுவேன்’ - இப்படித்தான் ரே ZR-ஐப் பார்த்ததும் அப்பா சொன்னார். உண்மைதான். ரே ZR... வயசுப் பசங்களுக்கான அக்மார்க் ஸ்கூட்டர். ஏன்னா, இதோட ஸ்டைல் அப்படி. பழைய ரே ஸ்கூட்டர்கூட என்னை இந்த அளவு இம்ப்ரஸ் பண்ணலை. சொன்னா நம்பமாட்டீங்க, அஞ்சு மாசப் போராட்டத்துக்குப் பிறகுதான் ரே ZR ஸ்கூட்டரை வாங்கினேன்.

ஷோரூம் அனுபவம்

வளசரவாக்கத்தில் இருக்கிற ஸ்ரீ மோட்டார்ஸில் தான் இதைப்போய்ப் பார்த்தேன். ரொம்ப நல்லாவே விவரிச்சாங்க. ஆன்ரோடு விலையைச் சொன்னதும் கொஞ்சம் ஜெர்க் ஆகிடுச்சு. ஆமா! கிட்டத்தட்ட 68,000 ரூபாய். டிஸ்க் ஆப்ஷன் இல்லாம வாங்கினா 2,500 ரூபாய் குறையும். நமக்கு எது செஞ்சாலும் பெர்ஃபெக்ட்டா இருக்கணும். டிஸ்க்தான் செலெக்ட் பண்ணினேன். ஷோரூம்ல சொன்ன ஒரே ஒரு பொய் இதோட மைலேஜ். 60-ல் இருந்து 66 வரை தரும்னு சொன்னாங்க. வெளில விசாரிச்சபிறகுதான் தெரிஞ்சது, இந்த மைலேஜ் எந்த ஸ்கூட்டருக்கும் கிடைக்காதுங்கிறது!

எப்படி இருக்கிறது ரே ZR?

ஒரே வார்த்தையில் உண்மையைச் சொல்றேன் . சத்தியமா பைக்கிலகூட இந்த மாதிரி ஒரு பெர்ஃபாமென்ஸையோ, ஓட்டுதல் உற்சாகத்தையோ நான் பார்த்ததே இல்லை. ஸ்ட்ரீக் ஓட்டிட்டு யமஹா ரே ZR ஓட்டுறது செம ஜாலியா இருக்கு. என்கிட்ட டிஸ்கவர் 125 பைக்கும் இருக்கு. பொதுவா, பசங்களுக்கு பைக் ஓட்டுறதுதான் பிடிக்கும்னு கேள்விப்பட்டிருப்பீங்க. நான் டிஸ்கவரை எடுத்து ரொம்ப நாளாச்சு சார். நமக்கு எப்பவுமே ரே ZR ஸ்கூட்டர்தான் ஃபேவரைட்னு ஆயிடுச்சு. காலேஜ் துவங்கி மார்க்கெட் வரைக்கும் எல்லாத்துக்கும் ரே ZRதான்.

ஸ்கூட்டர் வாங்கி மூணு மாசம்கூட முழுசா முடியலை. ஆனா, 4,400 கி.மீ ஓட்டிட்டேன். ஸ்கூட்டரோட ஸ்பீடும் சூப்பர். நான் ரொம்ப லாங் டிரைவ் போனதில்லை. அதிகபட்சம் தாம்பரம்தான் போயிருக்கேன். ஆனா, பைபாஸ்ல போகும்போது நல்ல ஸ்டெபிலிட்டி கிடைச்சுது. ஸ்பீடோ மீட்டர்ல 87 கி.மீ ஸ்பீடு காட்டுற அளவுக்கு டிரைவ் பண்ணியிருக்கேன். ஆனா, என் ஆண்ட்ராய்டு போனில் பைக் பெர்ஃபாமென்ஸ், ஸ்பீடு செக் பண்றதுக்கு ஒரு ஆப் வெச்சிருக்கேன். அதை கனெக்ட் பண்ணிட்டுத்தான் போவேன். அதுல 100 கி.மீ காட்டுச்சு. இது சரியா இல்லையானு தெரியலை. ஆனா, ரேஸர் மாதிரி செமையா ஃபீல் பண்ணினேன்!

பிடித்தது

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் செம ஸ்போர்ட்டியா இருக்கு. நைட்டில் பார்க்க இன்னும் சூப்பரா இருக்கும். இதோட ஹெட்லைட், ஹேண்டில் பாரில் இல்லாமல் பாடியில் இருப்பது சிலருக்குப் பிடிக்காது. ஆனா, அதுதான் இதன் ஹைலைட்டே!

அப்புறம், இதோட இன்ஜின் பெர்ஃபாமென்ஸ். பிக்-அப் சூப்பரா இருக்கு. 110 சி.சி ஸ்கூட்டர் மாதிரியே தெரியலை. சட் சட்னு சீறிக்கிட்டுக் கிளம்புது. யமஹா, ஸ்மூத்னெஸ்ஸா இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். எவ்வளவு ஸ்பீடா போனாலும், ஸ்கூட்டர் அதிரவே இல்லை. எடை அதிகமான என்னைச் சுமந்துக்கிட்டு ஸ்கூட்டர், டாப் ஸ்பீடில் ஸ்டேபிளா போறதுன்னா சும்மாவா?

இதோட லைட் வெயிட், ஹேண்ட்லிங் பண்றதுக்கு ரொம்ப ஈஸியா இருக்கு. 103 கிலோங்கிறதால, என் பாடி வெயிட்டுக்கு இதை ஈஸியா கையாள முடியுது. பைக்குக்கு இணையாக சஸ்பென்ஷன் கலக்குது. டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் சூப்பர். இதுவரை முதுகு வலி வந்ததே இல்லை. சின்ன டிஸ்க்கா இருந்தாலும், நச்னு பிரேக் பிடிக்குது. ஹைவேஸில் இதை நம்பித்தான் போயிட்டு இருக்கேன். செம கம்ஃபர்ட். சீட் கொள்ளளவு ஓகே. 21 லிட்டர். சின்ன ஹெல்மெட் வெச்சு மூடிடலாம்.

பிடிக்காதது

என்னை ரொம்ப ஏமாற்றிய விஷயம், மைலேஜ்தான். 66 வரும்னு சொன்னாங்க. எனக்கு 40 கி.மீ-தான் கொடுக்குது. அடுத்து, பெட்ரோல் ஃபில்லிங். ஒவ்வொரு தடவையும் இறங்கித்தான் பெட்ரோல் நிரப்ப வேண்டியிருக்கு. டேங்க் கொள்ளளவும் ஐந்து லிட்டர்தான். நான் ரொம்ப ஸ்கூட்டர் ஓட்டுறவன். அடிக்கடி பெட்ரோல் போட வேண்டியிருக்கு.

மத்தபடி, சின்னச்சின்னக் குறைகள். சைடு ஸ்டாண்ட் இண்டிகேட்டர் இல்லை. என்னோட பழைய ஸ்கூட்டி ஸ்ட்ரீக்கிலேயே சைடு ஸ்டாண்ட் எடுக்கலேன்னா, பஸ்ஸர் கத்த ஆரம்பிச்சு அலெர்ட் பண்ணும். ஸ்கூட்டரை மேடான பகுதிகளில் பார்க் பண்றது ரொம்பச் சிரமமா இருக்கு. பிரேக் லாக் கிளாம்ப் இல்லை. பெரும்பாலான ஸ்கூட்டர்களில் இப்போ கடிகாரம், USB சார்ஜிங் பாயின்ட்லாம் கொடுக்க ஆரம்பிச்சாச்சு. இதில் அப்படி எந்த வசதியும் இல்லை.

மற்றபடி, பிரேக் பிடிக்கும்போது முன்பக்க ஹேண்டில் பார் லேசா ஜெர்க் ஆகுது. ஒருவேளை ஸ்கூட்டர் எடை குறைவுகூடக் காரணமா இருக்கலாம்னு சொன்னாங்க. இது ஸ்டீல் பாடியா இருந்தா நல்லா இருக்கும். எல்லாமே பிளாஸ்டிக்ஸ். செம லைட் வெயிட். இது எனக்குப் பிடிக்கலை. மற்றபடி விலை கொஞ்சம் அதிகமோனு தோணுது. 68,000 ரூபாயில் 125 சி.சி பைக்கே வாங்கிடலாம். இதில் வசதிகளும் கம்மி!

என் தீர்ப்பு

டிசைன், பெர்ஃபாமென்ஸ் இந்த ரெண்டும்தான் ரே ZR-ன் பெஞ்ச் மார்க். வசதிகள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை; பைக்குக்கு இணையா ரோட்ல பறக்கணும்னு நினைக்கிற பசங்களுக்கு, இந்த ஸ்டைலான ஸ்கூட்டரை நிச்சயம் நான் ரெக்கமென்ட் பண்ணுவேன்.