அலுவலகத்தில் புதிதாக நம்மைவிட திறமையான ஒருவர் சேரும்போது, வெளிப்படுத்த முடியாத ஒரு பதற்றம் ஏற்படும். அதே கதைதான் ஹோண்டா, யமஹா, சுஸூகி மூவருக்கும். கட்டுமஸ்தான உடம்பு, மில்லெனியல் டிசைன், பரபர பர்ஃபாமென்ஸ் என்று பார்த்தவுடன் லைக் போடும்படியான ஸ்டைலில் வந்திருக்கிறது பஜாஜ் பல்ஸர் NS160.

ஒரு ரேஸ் ட்ராக்கில் எல்லா ரைடர்களுமே திறமைசாலிகளாக இருந்தால், அந்தப் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும்தானே? 150-160 சி.சி செக்மென்ட்டில், இது அப்படிப்பட்ட சுவாரஸ்யமான நேக்கட் போட்டி.

ஸ்டைல், டிசைன்

NS160: பார்த்தவுடன் சொல்லிவிடலாம் - NS200 பல்ஸரின் தம்பி என்று. 2012-ல் இருந்து NS200, இளைஞர்களின் மனசை லவட்டிக் கொண்டிருக்கிறது. தம்பி என்றால், குட்டிக் குட்டி மாற்றங்கள் இருக்கும்தானே? மெக்கானிக்கலாகவும், எலெக்ட்ரிக்கலாகவும் ஏகப்பட்ட மாற்றங்கள். இன்ஜின், ஃபோர்க் அசெம்பிளி, ஸ்விங் ஆர்ம், டயர்கள் என்று எல்லாவற்றிலும் மாற்றங்கள். பாகங்கள் மாறியிருக்கின்றன. ஆனால், டிசைன் அதே. அதாவது, பழைய மொந்தையில் புது கள். டேங்க்குக்குக் கீழே அந்த 160 எனும் ஸ்டிக்கரிங் அம்சம்; இந்த நேக்கட் டிசைனில் இதன் ஹெட்லைட் அசெம்பிளியை முன்னால் சென்று உற்றுப்பார்த்தால், கறுஞ்சிறுத்தைபோல் இருக்கிறது. ஆனால், இந்தக் கட்டுமஸ்தான பைக்கில் டயர்கள் மெலிந்திருப்பதுபோல் தோன்றுகின்றன. இந்த நான்கில், பல்ஸரில் மட்டும்தான் டேக்கோ மீட்டர் அனலாக்கில் இருக்கிறது. மற்றவையெல்லாம் LCD டிஸ்ப்ளே.

CBஹார்னெட்: போட்டி அதிகமாகிவிட்டதால் விழித்துக் கொண்டுள்ளது ஹோண்டா. இப்போது ‘ஜிகு ஜிகு’ மற்றும் ஸ்போர்ட்டி கலர்களில் ஹார்னெட்டை அறிமுகம் செய்துள்ளது. நமக்குக் கிடைத்தது கறுப்பு மற்றும் சில்வர் நிற பைக். டிசைனில், இந்த நால்வரையும் நிறுத்திவைத்துப் பார்த்ததில், CB ஹார்னெட்தான் கண்ணைவிட்டு அகலவில்லை. இங்கிருக்கும் எல்லா பைக்குகளுமே 12 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொள்ளளவுதான். ஆனால், CB ஹார்னெட்டின் டேங்க் டிசைன் ‘கும்’மென்று இருக்கிறது. கால்களை நன்றாக வைத்து ஓட்ட வசதியாக இல்லாததுபோல் இருக்கிறது இதன் குழப்பமான டேங்க் டிசைன். இதன் ‘X’ வடிவ டெயில் லைட், புதுமை. ஹார்னெட்டின் டிஜிட்டல் மீட்டர், ஸ்டைல்தான். ஆனால், வெயிலில் கிளார் அடிக்கிறது. 150-160 சி.சி பைக்கின் ஃபேவரைட் வசதியான இன்ஜின் கில் சுவிட்ச் காலியானதை, ஹோண்டாவுக்கு மீண்டும் நினைவுபடுத்துகிறோம்.

FZ-S: அப்படியே FZ16 பைக்கின் பார்ட்-2. ஸ்போர்ட்டியான ஸ்டிக்கரிங்கில்தான் இதைக் கண்டறிய முடியும். இதன் LCD டிஜிட்டல் மீட்டர் டிசைன், ஸ்டைலிஷ். ஆனால், விஷயங்கள் குறைவுதான். கியர் இண்டிகேட்டர் இல்லை; கடிகாரம் இல்லை. யமஹாவில் அந்த பெட்ரோல் டேங்க்கின் மூடி டிசைனை மாற்றவே மாட்டார்களா? சாவியைப் போட்டுத் திறந்தால், மூடி கையோடு வந்துவிடுகிறது. இது ஒரு பெரிய குறை இல்லை என்றால், ஓகே.

ஜிக்ஸர்: டிசைன் டெர்மினாலஜியில், ஒரு வகையில் பார்த்தால் FZ பைக்கின் க்ளோனிங் போலவே இருக்கிறது ஜிக்ஸர். ஏகப்பட்ட ஒற்றுமைகள். யமஹாவைவிட கொஞ்சம் ‘ஸ்லிம் அண்டு ஸ்லீக்’ டிசைனில் கவனம் செலுத்தியிருக்கிறது சுஸூகி. உளியால் செதுக்கியதுபோல் செம ஷார்ப்பான கோடுகளில் ஜிக்ஸரை வடிவமைத்திருக்கிறது. கசகசவென குழப்பவில்லை. ‘இதுதான் நான்’ என்று ஸ்ட்ரெய்ட் ஃபார்வேர்டாகச் சொல்வதுபோல் இருக்கிறது. அதனால்தானோ என்னவோ, ஒரு ‘பிக் பைக்’ ஃபீல் ஜிக்ஸரில் மிஸ்ஸிங்.‘இதைத்தான் எதிர்பார்த்தேன்’ என்று ஜிக்ஸரை விரும்புபவர்களும் இருக்கிறார்கள். ‘ப்ச்’ என்று உச்சுக் கொட்டுபவர்களும் இருக்கிறார்கள். இங்கிருப்பதிலேயே சுஸூகியின் டிஜிட்டல் மீட்டர்கள்தான் படிப்பதற்கு ஈஸியாக இருக்கிறது. சுவிட்ச் கியர்களைப் பொறுத்தவரை சுஸூகியும் யமஹாவுக்கும் ஒரு பெரிய பொக்கே!

சீட்டிங், ரைடிங்

NS 160: ஃபெமிலியரான ரைடிங் பொசிஷன்தான் பல்ஸரில். ஆனால், சீட் உயரம் மற்ற எல்லாவற்றையும்விட இதில் அதிகம். 805 மி.மீ. நான்கில் கொஞ்சம் பல்க்கி பைக்கும் பல்ஸர்தான். 142 கிலோ. இதுதான் நீளமான வீல்பேஸைக்கொண்டிருக்கிறது. 1,363 மி.மீ. ஹேண்ட்லிங்குக்குத் தனித்திறமை வேண்டும். அதற்குப் பதில் ‘இந்தாங்க’ என்று அதிகமான கிரவுண்ட் கிளியரன்ஸை (170 மி.மீ) தந்திருக்கிறது பஜாஜ். ஆனால், பின்பக்க டிஸ்க் பிரேக் ஆப்ஷன் இல்லையா பஜாஜ்?

நாம் ஏற்கெனவே சொன்னபடி, பல்ஸரில் டயர்களும் ஃபோர்க்குகளும் கொஞ்சம் ஒல்லி பெல்லியாக இருக்கின்றன. இந்தக் குறையைச் சரிப்படுத்த ‘NS 200’-ல் இருக்கும் தடிமனான பெரிமீட்டர் ஃப்ரேமை, NS160-ல் கொடுத்திருக்கிறது பஜாஜ். நீளமான வீல்பேஸ் என்பதால், மிட்-கார்னர் ஸ்டெபிலிட்டி சூப்பர். அதாவது, உங்கள் பைக்கின் சென்டர் ஆஃப் கிராவிட்டி மிகச் சரியாக இருப்பதால், பயப்பட வேண்டியதில்லை. சஸ்பென்ஷன், ஸ்டிஃப்தான். ஆனால், மோசமான சாலைகளில் மோசமான அனுபவத்தைத் தரவில்லை பல்ஸர் NS160.

CB ஹார்னெட்: ஹோண்டாவின் சீட்டிங் பொசிஷன்தான் கொஞ்சம் குழப்பியடிக்கிறது. ஏன் இப்படி என்று உட்கார்ந்தபடித் தேடிப் பார்த்தால் ஃபுட் பெக்குகள். இது உயரமாக இருப்பதால், கால்களுக்கு ஒரு சரியான ரைடிங் கம்ஃபர்ட் கிடைக்கவில்லை. பிரேக்குகளைப் பொறுத்தவரை ஹார்னெட்டில்தான் பெரிய முன்பக்க டிஸ்க். 276 மி.மீ. பின்பக்கமும் டிஸ்க் ஆப்ஷன் இருக்கிறது. குட் ஹார்னெட். எனவே, பெஸ்ட் பிரேக்கிங் பர்ஃபாமென்ஸ் கிடைக்கிறது ஹார்னெட்டில். இந்த நான்கில் எதிலுமே ABS இல்லை. ‘அதற்குப் பதிலாக எங்களின் CBS இருக்கிறதே’ என்கிறது ஹோண்டா. அதாவது, கம்பைண்டு பிரேக்கிங் சிஸ்டம். இதில் இருப்பது சாஃப்ட் சஸ்பென்ஷன் செட்-அப். மிட் கார்னர் ஸ்டெபிலிட்டியில், போதுமான கன்ட்ரோல் கிடைக்கவில்லை.

FZ-S: உடைந்த சாலைகளைச் சமாளிப்பதில் கில்லியாக இருக்கிறது யமஹா. ஒரு விஷயத்தில் யமஹாவைப் புரிந்து கொள்ள முடியவில்லை. திருப்பங்களில் ஜிக்ஸர், பல்ஸர் அளவுக்குக் கனமாகவும் இல்லை; அதே நேரத்தில் ஷார்ப் ஆகவும் இல்லை. பல்ஸரைப்போலவே இதிலும் பின்பக்க டிஸ்க் ஆப்ஷன்... ப்ச்! சுஸூகியைப்போலவே 160 மி.மீ கிரவுண்ட் கிளியரன்ஸ்தான். மற்றபடி இதன் மோனோ ஷாக் சஸ்பென்ஷன், மிஸ்டர் பர்ஃபெக்ட்.

ஜிக்ஸர்: பல்ஸரைப்போலவே ஜிக்ஸரின் ஹேண்ட்லிங்கும் அபாரம். ஓட்டுதல் தரம் இறுக்கமாக இருப்பதால், மேடு பள்ளங்களில் கறார் ஆசாமியாக இருக்கிறது. அதாவது, ஸ்டிஃப் ஆக இருக்கிறது. பில்லியனில் வெயிட்டான ஆசாமிகளை உட்காரவைத்து, கொஞ்சம் உயரமான ஸ்பீடு பிரேக்கர்களில் ஏறினால் பைக்கின் அடிவயிற்றில் ஒரு உரசல் நடக்கிறது. அதேநேரம், கார்னரிங்கில் செம க்விக் ரெஸ்பான்ஸ் கிடைக்கிறது. கூடவே நம்பிக்கையும். MRF டயர்கள் நல்ல கிரிப். சேஸியும் டயர்களும் நல்ல பார்ட்னர்ஷிப். அதாவது எப்போதும் நம்முடன் தொடர்பிலேயே இருக்கின்றன. காற்றடிக்கும் நெடுஞ்சாலைகளில் ஹெல்மெட்டின் வைஸரைத் திறந்துவிட்டு ஜிக்ஸரில் பறக்கும்போது, நம்மை அறியாமலேயே முகத்தில் ஒரு புன்னகை தொற்றிக்கொள்கிறது. அதுதானே தேவை!

இன்ஜின்

NS160: இன்ஜின் விஷயத்தில் பல்ஸர் சர்ப்ரைஸ் கொடுக்கிறது. 4 வால்வ், ட்வின் ஸ்பார்க் பிளக், ஏர்-ஆயில் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின், 15.5 bhp பவர், 1.46 kgm டார்க். இதெல்லாம் பல்ஸரின் குணாதிசயங்கள். 160சி.சி செக்மென்ட்டில் அதிக பவர்கொண்ட முதல் பைக், அதிக டார்க் கொண்ட இரண்டாவது பைக் - பல்ஸர் NS160. 142 கிலோ எடையோடு நம்மையும் தூக்கிக்கொண்டு பறக்க, இந்த 15.5 bhp பவர், சூப்பர். சந்தோஷமாக ரெவ் ஆகிறது இன்ஜின். ஏனென்றால், 0-100 கி.மீ-யை மிகக் குறைந்த விநாடிகளில் (15.33) தொடுவது பல்ஸர்தான். டாப் ஸ்பீடும் 115 கி.மீ. இதன் 5 ஸ்பீடு ஷார்ட் கியரிங்குக்கு நன்றி. இதனால் டிராஃபிக்கிலும் `சட் சட்' என ரியாக்ட் செய்ய முடிகிறது. 9,000 ஆர்பிஎம்-மில்கூட ஹேண்டில் பாரில் அவ்வளவாக அதிர்வுகள் தெரியவில்லை. ‘பல்ஸரா... அது அதிருமே பாஸ்’ என்று இனி யாரும் சொல்ல முடியாது. அந்த அளவு ஸ்மூத்னெஸ்ஸை NS160-ல் கொடுத்த பஜாஜுக்கு பொக்கே!

CBஹார்னெட்: பல்ஸரைவிட இங்கே எதுவும் பவர்ஃபுல் இல்லை. ஆனால், பல்ஸரின் பவரைக் கிட்டத்தட்ட நெருங்குகிறது ஹார்னெட். 15.25bhp. FZ-யையும் ஜிக்ஸரையும்விட அதிகம்தான். ஆனால், பர்ஃபாமென்ஸில் கொஞ்சம் ஸ்லோதான். இத்தனைக்கும் இதில்தான் அளவில் பெரிய இன்ஜின். 162.7சி.சி. யூனிகார்ன் 160-ல் இருக்கும் அதே ஏர்கூல்டு இன்ஜின்தான். பவர் டெலிவரியில் ஹார்னெட் கொஞ்சம் வீக்தான். ஹோண்டா என்றாலே ஸ்மூத் இன்ஜின்தான் என்று சின்னக் குழந்தையும் சொல்லும். ஆனால், இதில் ஆர்பிஎம் எகிற எகிற, கை கால்களெல்லாம் அதிர ஆரம்பிக்கிறது. என்னாச்சு ஹோண்டாவுக்கு? கியர்பாக்ஸிலும் ஸ்மூத்னெஸ் கம்மி. ஓர் ஆறுதலான விஷயம் - 0-100 கி.மீ-யில் பல்ஸருக்கு அடுத்த இடம் ஹார்னெட்டுக்குத்தான் (16.51 விநாடிகள்).

FZ-S: ‘ஓல்டு இஸ் கோல்டு’ என்று சும்மாவா சொன்னார்கள். இங்கிருப்பதிலேயே இதுதான் பழைய இன்ஜின். ஆனால், ஃப்யூல் இன்ஜெக்ஷனுக்காகவே யமஹாவுக்கு ஒரு சபாஷ். இங்கே பவரும் டார்க்கும் குறைந்த பைக் FZ-Sதான். அதேநேரத்தில் பைக்கின் எடையையும் குறைவாக வடிவமைத்ததில் (132 கிலோ) யமஹாவின் சூட்சுமம் அடங்கியிருக்கிறது. அதற்காக 0-100 கி.மீ-யைக் கடக்க 21.77 விநாடிகள் எடுத்துக்கொண்டு, இவ்வளவு பொறுமையாகவா கடப்பது? டாப் எண்டிலும் ரொம்பவே பின்தங்குகிறது யமஹா. எந்த பைக்கிலும் இல்லாத ஒரு நல்ல விஷயம் ஸ்மூத்னெஸ். எந்த ஆர்பிஎம்களிலும் வைப்ரேஷன்-ஃப்ரீ மோடில்தான் இருக்கிறது FZ-S. அந்த அளவு ரிஃபைன்மென்ட். சிட்டியில் இதன் மைலேஜும் வாவ் ரகம்! அதாவது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, இந்த பைக் 46.5 கி.மீ தூரம் செல்கிறது.

ஜிக்ஸர்: பர்ஃபாமென்ஸைப் பொறுத்தவரை எப்போதுமே 160 சி.சி-யில் எல்லோருக்கும் டார்லிங், ஜிக்ஸர்தான். ஹார்னெட், பல்ஸரைவிட பவர் குறைவு; 0-100 கி.மீ-யிலும் பின் தங்குகிறது என்பதை விட்டுத்தள்ளுங்கள். ஓட்டும்போது உற்சாகம் தொற்றிக்கொள்ளும் ஒரே இன்ஜின் ஜிக்ஸர்தான். மிட் ரேஞ்சில் உறுமல் சத்தம் கேட்டாலும், ஆக்ஸிலரேஷன் டெஸ்ட்டில் ஈஸியாக யமஹாவை முந்திச் செல்கிறது. இதன் மிட் ரேஞ்ச்சும் க்விக் ரெஸ்பான்ஸ்தான், ஹார்னெட்டையும் முந்துவதுபோல் தெரிகிறது. ஆனால், 0-100 கி.மீ வேகத்தில் 0.8 விநாடிகளில் பின்தங்குகிறது ஜிக்ஸர். இது ஒன்றும் பெரிய குறையில்லை. ஆனால், ஸ்மூத்னெஸ்ஸில் யமஹாவிடம் போட்டி போட முடியாமல் தவிக்கிறது சுஸூகி. மைலேஜும் அப்படித்தான். யமஹாவை நெருங்குகிறது. நகரத்தில் யமஹாவைவிட 4.8 கி.மீ குறைவாகக் கிடைக்கிறது.

எது நம் சாய்ஸ்?

ஹோண்டா CB ஹார்னெட், பல்ஸரை ஒப்பிடுகையில் கொஞ்சம் வேகத்தில் சமமான பைக்தான். ஆனால், த்ரில்லிங்கான பைக் இல்லை. ஆல்ரவுண்டர் என்றும் சொல்ல முடியவில்லை. ABS இல்லாத குறையை CBS தீர்க்கும் என்கிறது ஹோண்டா. ரைடர்கள்தான் இதைச் சொல்ல வேண்டும். மேலும் இன்ஜின் கில் ஸ்விட்ச் இல்லையென்றும், இன்ஜின் சூடு காலில்பட்டு வெயில் நேரங்களில் அவஸ்தையை அனுபவிப்பதாகவும் கம்யூட்டர்கள் புகார் வாசிக்கிறார்கள். இதை ஹோண்டா கவனிக்க வேண்டும். CBS உடன் வரும் மாடலின் சென்னை ஆன் ரோடு விலை, 97,382 ரூபாய்.

FZ-S பைக்கைப் பொறுத்தவரை, ‘ஃப்யூல் இன்ஜெக்ஷன்’ என்ற ஒரு காரணத்துக்காகவே உயரத்தில் நிற்கிறது. சொகுசான இருக்கை, பக்கா ஸ்மூத் இன்ஜின், நல்ல மைலேஜ் என்று பாசிட்டிவ் விஷயங்கள் நிறைய. ஆனால், இதற்காக மற்ற பைக்குகளைவிட 2,000 முதல் 6,000 விலை அதிகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. இதன் சென்னை ஆன்ரோடு விலை 94,209 ரூபாய்.

புதுசுக்கு எப்போதுமே மவுசு உண்டு. அந்த வகையில் பல்ஸர் NS160 - டிசைன், பவர், டார்க் போன்ற விஷயங்களில் வாய் பிளக்க வைக்கிறது. விலைகூட பரவாயில்லை ரகம். ரூ.92,778. ஹார்னெட்டின் ஸ்டாண்டர்டு மாடலைவிட 200 ரூபாய்தான் அதிகம். இங்கிருப்பதிலேயே வேகமான பைக்கும் பல்ஸர் NS160தான். ஆனால், FZ அளவுக்கு ஒரு கம்யூட்டிங் ஃபீல், இந்த பல்ஸரில் கிடைக்கவில்லை. இந்த பைக் வெளிப்படுத்தும் சிறிய அதிர்வுகளும், ஒரு குட்டிக் காரணமாக இருக்கலாம்.

ஹேண்ட்லிங், ஒரு பைக்குக்கு ரொம்ப முக்கியம். பர்ஃபாமென்ஸும்தான். அந்த வகையில் கார்களில் ஃபோக்ஸ்வாகன், ஃபோர்டு போன்றவற்றைப்போல, ‘ஃபன் டு டிரைவ்’ பைக்காக அசத்துகிறது சுஸூகி ஜிக்ஸர். இதன் இன்ஜின் பன்ச்சுக்கு லைக். கம்யூட்டிங் பைக்காக அசத்துகிறது என்றால், ஸ்போர்ட்டினெஸ் அதைவிடத் தூக்கலாக இருக்கிறது. த்ரில்லிங்குக்காக உருவாக்கப்பட்ட பைக்கோ என்றும் தோன்றுகிறது சுஸூகியின் ரிஃபைன்மென்ட். பின்பக்க டிஸ்க் பிரேக்குடன் வரும் இந்த பைக்கின் சென்னை ஆன் ரோடு விலை 92,166 ரூபாய். ஜிக்ஸரை ஆன் செய்யும்போது, அதன் ஸ்பீடோ மீட்டரில் ‘கோ’ என்று இருக்கும். நிஜமாகவே ஜிக்ஸருக்குப் போகலாம்.