இந்தப் பேரைக் கேட்டாலே சும்மா அதிரும்! அன்று கொச்சின் அதிர்ந்தது. காரணம், மஹிந்திரா நடத்தும் கிளப் சேலன்ஜ் மற்றும் தார் ஃபெஸ்ட் எனும் ஆஃப் ரோடு திருவிழா. ஆஃப் ரோடு பிரியர்களுக்கு ஜீப் பிடிக்கும். ஜீப் பிரியர்களுக்கு மஹிந்திரா நடத்தும் இந்த ஆஃப் ரோடு சேலன்ஜ் ரொம்பவும் பிடிக்கும். சேலன்ஜ் என்றால்... ஓர் இடத்துக்குச் சீக்கிரம் போய்விட்டு வருவது மாதிரி இல்லை. இது அதுக்கும் மேல!

FIFA கால்பந்துப் போட்டிபோல் மஹிந்திரா கிளப் சேலன்ஜுக்கு கொச்சினில் செம ரெஸ்பான்ஸ். மஹிந்திராவின் தார் ஜீப்கள் இரவும் பகலும் உறுமிக்கொண்டிருந்தன. எல்லாமே மாடிஃபைடு தார் ஜீப்கள்தான். கேரளா, கர்நாடகா, மேகாலயா என்று பல மாநிலங்களில் இருந்தும் தார் ஜீப் டிரைவர்கள் வந்திருந்தார்கள். மொத்தம் 12 கிளப்கள். அதாவது, 12 தார் ஜீப்கள் மட்டும்தான் இந்தப் போட்டியில் கலந்துகொண்டன.

பாதி இரவு வரை ஆடியன்ஸ் கூட்டத்துக்கு நடுவே தார் ஜீப்புகள் மேடு பள்ளங்களில் ஏறி இறங்கி சகதியில் குளித்துக் கொண்டிருந்தன. கேட்டால் ‘மட் தெரஃபி’ என்றார்கள்.

யானையைப் பிடிக்கத் தோண்டி வைத்துள்ளதுபோல் ஒரு குழி இருந்தது. போட்டியை இன்னும் கொஞ்சம் கடுமையாக்க வேண்டும் என்று, பாதி மணலை நிரப்பித் தண்ணீரை ஊற்றிப் புதைகுழிபோல் ஆக்கியிருந்தார்கள். இதில் இறங்கி, ஏறி, அங்கு நடப்பட்டிருக்கும் கொடிகளைக் கீழே இறங்காமல் எடுக்க வேண்டும். அதிகமான கொடிகளைக் கைப்பற்றுபவர் வெற்றியாளர். உதவிக்கு ஒரு கோ-டிரைவர் வைத்துக்கொள்ளலாம். ‘டர் புர்’ என்று சில தார் ஜீப்கள் தாறுமாறாக இறங்கி,ஏறி, ஏரியாவே அதகளப்படுத்தியது. அதனால் சில பார்வையாளர்களே சகதியில் குளிக்க வேண்டியிருந்தது.ஒருவேளை ஏமாற்றுகிறார்களோ என்று செக் செய்வதற்கு, ஒரு சேற்றுக் குழியில் கால் வைத்தேன். ‘சர்’ என நான்கு அடிக்கு மேல் இறங்கியது. ‘இதுல எப்படி’ என்று நான் யோசித்து முடிப்பதற்குள் ஹம்மருக்கு லிட்டில் பிரதர்போல் மாடிஃபை செய்யப்பட்டிருந்த தார் ஒன்று, தாறுமாறாக உறுமியபடி யானைக் குழிக்குள் இறங்கி, ஏறி அடுத்த டாஸ்க்குக்குத் தயாராக நின்றது. மேகாலயாவைச் சேர்ந்த டிரைவர் யூஜின் ஏதோ மார்க்கெட்டுக்கு டூவீலரில் போய்விட்டு வந்ததுபோல் ஜீப்பில் இருந்து ஜாலியாக இறங்கினார். ‘‘மஹிந்திரா கிளப் சேலன்ஜுக்காக ஒவ்வொரு வருடமும் காத்திருப்போம். போன வருஷம் கோவா வந்தீங்களா? அங்கேயும் நம்ம தார்தான் கிங்’’ என்று இந்தியில் சொன்னார். மறுநாள் நினைத்ததுபோலவே, முதல் பரிசு மூன்று லட்சத்தையும், ஆஃப் ரோடு டிராஃபியையும் வாங்கியது மேகாலயாவைச் சேர்ந்த ‘அஹோர் எஜாஸ்மா’ எனும் இந்த கிளப்தான்.

போட்டியில், சில தமிழ்நாட்டு நம்பர் பிளேட் தார் ஜீப்களையும் பார்க்க முடிந்தது. ‘தமிழ்நாடு ஆஃப் ரோடர்ஸ்’ டீமின் தலைவர் வருண், ‘‘நமக்கு ஜீப்னா உசுரு பாஸ். மஹிந்திராவோட கிளப் சேலன்ஜ் எதையும் நான் மிஸ் பண்றது இல்லை. ஒவ்வொரு வருஷமும் என் செல்லத்தை நீங்க இங்க பார்க்கலாம்’’ என்று தார் ஜீப்புடன் போஸ் கொடுத்தார். ‘‘கண்டிப்பா மேடை ஏறுவீங்க’’ என்று வாழ்த்துகள் சொன்னேன். வாவ்! சேலன்ஜ் பிரிவில் மேடையும் ஏறியது தமிழ்நாடு ஆஃப் ரோடர்ஸ் கிளப்.

மறுநாள். தார் ஃபெஸ்ட். அதாவது, தார் திருவிழா. முன்னது மாதிரியேதான் இதுவும். இது பகலில். டாஸ்க் கொஞ்சம் ரிஸ்க்கியானது. அதே யானைக் குழிகள்; நடுவில் இரண்டு தென்னைமரத் தண்டுகளின் மீது ஜீப்பை ஏற்றி, அப்பிடிப் போய் இப்படி வர வேண்டும். திடீரென நான்கு அடி சேறு வரும். நினைத்ததுபோல், எல்லா ஜீப்களும் டாஸ்க்கை ஃபினிஷ் செய்ய முடியவில்லை. காரணம், இதன் விதிமுறைகள். கோன்களை டச் செய்யக் கூடாது; ரிப்பன் லைனைத் தாண்டி ஜீப் போகக் கூடாது; ஜீப் தலைகீழாக நின்றாலும் டிரைவர் கீழிறங்கக் கூடாது. சில ஜீப்களை கிரேன் உதவியுடன்தான் இழுத்து வெளியே கொண்டுவந்தார்கள்.

‘இது என்ன அவ்ளோ பெரிய டாஸ்க்கா?’ என்று நான் நினைத்துக்கொண்டிருந்தபோது, நம்முடைய மைண்ட் வாய்ஸை கேட்ச் பண்ணினார்களோ என்னவோ மீடியா பிரிவில் நமக்கும் ஒரு தார் தரப்பட்டது. சும்மா ஆக்ஸிலரேட்டரை மிதித்து, ஸ்டீயரிங்கை நேராகப் பிடித்து ஓட்டுவதெல்லாம் டிரைவிங் இல்லை என்பது அப்போதுதான் புரிந்தது.

தார் ஜீப் இருந்தால், ‘நோ ரோடு... நோ ப்ராப்ளம்!’

நீங்களும் கலந்துகொள்ளலாம்

மஹிந்திராவின் ‘தார் ஃபெஸ்ட்’டில் கலந்து கொள்வதற்கு ஒரே ஒரு கண்டிஷன்தான். உங்களிடம் தார் இருக்க வேண்டும். நீங்கள் தார் ஓனர் என்றால், http://mahindraadventure.com/tharfest/register.html இந்த வலைதளத்துக்குச் சென்று, முன்பதிவு செய்து கொள்ளுங்கள். முதல் 450 ரெஜிஸ்ட்ரேஷன்களுக்குத்தான் முன்னுரிமை.